பதிப்புகளில்

ஸ்டார்ட் அப்'களில் முதலீடு செய்ய ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ரூ.100 கோடி ஒதுக்கீடு...

6th Jun 2018
Add to
Shares
40
Comments
Share This
Add to
Shares
40
Comments
Share

நாட்டின் இரண்டாவது பெரிய வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்வதற்காக ரூ.100 கோடி ஒதுக்கியிருப்பதாக அண்மையில் அறிவித்தது. ஆறேழு மாதங்களுக்கு முன்னரே இதற்காக திட்டமிடப்பட்ட நிலையில் கடந்த சில மாதங்களில் தான் இந்த முயற்சி தீவிரமடைந்தது.

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் முதன்மை தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் அதிகாரி மதிவாணன் பாலகிருஷ்ணன், யுவர் ஸ்டோரியிடம் பேசும் போது, 

இந்த 100 கோடியில் ரூ.40 கோடி ஏற்கனவே ஆறு நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து முதலீடு செய்ய வாய்ப்புள்ள நிறுவனங்கள் (கடன் வழங்குதல், டிஜிட்டல் கேஓய்சி, செயற்கை நுண்ணறிவு) தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
மதிவாணன் பாலகிருஷ்ணன், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி சி.டி.டீ.ஓ

மதிவாணன் பாலகிருஷ்ணன், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி சி.டி.டீ.ஓ


இந்த ஆண்டு இறுதிக்குள் வங்கி எஞ்சிய தொகையை முதலீடு செய்து விடும் என்கிறார் அவர். ஆனால் இது தான் வரம்பு என்றில்லை என்றும், வங்கி ரூ.100 கோடிக்கு மேலும் முதலீடு செய்யலாம் என்கிறார் மதிவாணன். ஸ்டார்ட் அப்களில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி எதிர்பார்க்கும் விஷயங்கள் பற்றி கேட்ட போது, 

”உடன்பாடு நோக்கில் கருத்தாக்கத்திற்கான செயல் ஆதாரம் மற்றும் தனித்தன்மை வாய்ந்த தீர்வு ஆகிய இரண்டு அம்சங்களை மட்டும் எதிர்பார்க்கிறோம். உடன்பாடு செய்து கொள்ளும் நிலையில், எல்லா புதுமை முயற்சிகளும் வங்கிக்குள் நிகழ வாய்ப்பில்லை என புரிந்து கொண்டிருக்கிறோம். ஆனால் இத்தகையை தொழில்நுட்பங்களை உருவாக்கிய மற்ற நிறுவனங்கள் இருக்கின்றன. அவற்றை வளர்த்தெடுக்கலாம். இந்த கட்டத்தில் அந்த ஸ்டார்ட் அப்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்கிறோம்,” என்கிறார்.

காலாண்டிற்கு ஒரு முறை நடைபெறும் காட்சி நிகழ்ச்சி மூலம் வங்கி இந்த ஸ்டார்ட் அப்களை கண்டறிகிறது. கே.ஒய்.சி சார்ந்த முயற்சிகள், டிஜிட்டல் கடன் அல்லது டேட்டா அனல்டிக்ஸ் போன்றவை சார்ந்து இவை அமைகின்றன.

ஸ்டார்ட் அப்கள் தங்கள் சேவையை வங்கியின் அதிகாரிகள், வர்த்தக மற்றும் தொழில்நுட்ப தலைவர்களிடம் விளக்கம் அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி இந்த பிரிவில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. விசாகப்பட்டினத்தில் உள்ள நிதிநுட்ப ஆக்சிலேரேட்டரான பிண்டெக் வேலி ஆக்சிலரேட்டருடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் மேலும் புதிய ஸ்டார்ட் அப்களை கண்டறிய முடிகிறது.

பயோமெட்ரிக் முறையில் பண பரிவர்த்தனை செய்ய உதவும், ஃபிங்பே ஸ்டார்ட் அப்பில் வங்கி முதலீடு செய்துள்ளது. கிளவுட் நுட்பம் மற்றும் பண பரிவர்த்தனையில் தீர்வுகளை வழங்கும் பெங்களூருவைச்சேர்ந்த ஆர்டேரியா டெக்னாலஜிஸ் நிறுவனத்திலும் முதலீடு செய்துள்ளது.

இருப்பினும் டெமோ டேவிற்கு தேர்வு செய்யப்படும் எல்லா நிறுவனங்களிலும் வங்கி முதலீடு செய்வதில்லை. 14 முதல் 15 நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டிருந்தாலும் ஆறில் தான் முதலீடு செய்துள்ளதாக மதிவாணன் விளக்குகிறார்.

“எங்கள் அமைப்பை வலுவாக்கி கொள்ள அல்லது சொந்தமாக அமைப்புச் சூழலை உருவக்கிக் கொள்ள இந்த முதலீட்டை பயன்படுத்திக்கொள்கிறோம். தனியார் சமபங்கு போல நாங்கள் செயல்படுவதில்லை. டிஜிட்டல் தொழில்நுட்ப நோக்கில், எங்கள் சொந்த சூழலில் பயன்பாட்டிற்கு வாய்ப்பு உள்ள மற்றும் எங்கள் நலனை மேம்படுத்தி வளர்ச்சிக்கு உதவும் தொழில்நுட்பத்தை கண்டறியும் போது அவற்றில் முதலீடு செய்கிறோம்,” என்கிறார் அவர்.

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி நாடும் தொழில்நுட்பங்கள்

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) துறையில் வங்கி அதிக ஆர்வம் கொண்டிருப்பதாகவும், அரட்டை மென்பொருள்களில் இருந்து குரல் உதவியாளர்களை நோக்கி முன்னேற இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

”எந்திர தானியங்கமயமாக்கல், அரட்டை மென்பொருள் துறைகளில் செயற்கை நுண்ணறிவு அலுப்பூட்டினாலும், டெஸ்ட் டு வாய்சில் இத பயன்படுத்துவது அதிக ஆர்வம் அளிப்பதாக உள்ளது. மக்கள் டெக்ஸ்ட் செய்வதை அந்த அளவு விரும்பாத சீனாவில் இதற்கான உதாரணங்களை பார்க்கிறோம். இந்தியா டெக்ஸ்ட் சார்ந்த சந்தை என்றாலும், குரல்வழி சேவைகள் வேறு கட்டத்திற்கு கொண்டு செல்லும். இதில் செயற்கை நுண்ணறிவு சுவாரஸ்யமாக இருக்கும்,” என்கிறார் அவர் மேலும்.

ரோபோட்டிக் பிராசஸ் ஆட்டமேஷனை மேலும் சிக்கலான முடிவு எடுக்கும் முறைக்கு கொண்டு செல்வது இன்னொரு ஆர்வம் உள்ள துறையாக உள்ளது.

இரட்டை அணுகுமுறை

பாட்னர்ஷிப் தவிர, வங்கி ஐ.சி.ஐ.சி.ஐ இன்னோவேஷன் லேப்ஸ் எனும் மையத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஸ்டார்ட் அப் கேபிடல் புளோட் முதன்மை தொழில்நுட்ப அதிகாரியாக இருந்த ரோஹன் ஆங்ரிஷ் இந்த மையத்தின் தலைவராக இருக்கிறார்.

வலுவான வர்த்தக மாதிரிகளை உருவாக்கி, தரவுகள் மூலம் செலவுகளை குறைப்பதே இந்த மையத்தின் மைய நோக்கம் என்கிறார் மதிவாணன். மேலும், இத்தகைய ஆற்றலை வங்கிக்குள்ளேயே உருவாக்கி புதுயுக நிதிநுட்ப நிறுவனங்களுடன் போட்டியிடுவதும் வங்கியின் குறிக்கோள் என்கிறார்.

 ஆங்கிலத்தில்: தாருஷ் பல்லா / தமிழில்; சைபர்சிம்மன் 

Add to
Shares
40
Comments
Share This
Add to
Shares
40
Comments
Share
Report an issue
Authors

Related Tags