பதிப்புகளில்

கோவையில் இரண்டு புதுமையான ஸ்டார்ட்-அப்களை நடத்தும் அறிவியலாளர்!

கோவையில் உருவாகியிருக்கும் ஆரோக்கியமான ஸ்டார்ட்-அப் சூழலில், நிச்சயம் தவிர்க்க முடியாத ஒரு தொழில்முனைவராக இருப்பவர் விமல் வீரேஷ்வரய்யா.

sneha belcin
19th Apr 2018
Add to
Shares
34
Comments
Share This
Add to
Shares
34
Comments
Share

விமல், மதுரை அருகில் இருக்கும் போடிநாயக்கனூரில் பிறந்தவர். போடியில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, திருநெல்வேலியின் சேவியர்ஸ் கல்லூரியில் பி.எஸ்.சி பட்டம் பெற்றிருக்கிறார். அண்ணா பல்கலைகழகத்தில் இருந்து எம்.எஸ்.சி படிப்பை முடித்திருக்கிறார். பிறகு, மெட்ராஸ் பல்கலைகழக்த்தில் பி.ஹெச்.டி முடித்துவிட்டு அமெரிக்காவிலும், ஜெர்மனியிலும் ஆய்வு மேற்கொண்டிருக்கிறார் விமல் வீரேஷ்வரய்யா. பயோ டெக்னாலஜி மருந்துக்களை உருவாக்கம் (drug-development), மற்றும் அதை சந்தைக்கு கொண்டு வருவது தான் அடிப்படையில் விமலின் களம். 

இருபது வருடங்களுக்கு முன்னர் பி.ஹெ.டி முடித்திருந்த அந்த காலத்தில் என்னுடைய துறையில் இங்கு பெரிய வேலை வாய்ப்புகளோ புதுமைக்கான இடமோ இல்லை. அதனால் தான் வெளிநாட்டிற்கு போனேன். அங்கு போன பிறகு இந்தியாவிற்கும் அந்த நாடுகளுக்கும் இருக்கும் வித்தியாசத்தை கண்டு உணர்ந்த பிறகு, இந்தியாவிற்கு திரும்பி வந்து எதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன், என தன் கடந்த காலத்தை பகிரத்தொடங்கினார் விமல்.

image


“சின்ன வயதிலிருந்தே எனக்கு பிசினஸ் செய்ய வேண்டுமென்ற ஆசை இருந்துக் கொண்டே இருந்தது. ஆனால், சில சூழ்நிலைகளால் அந்த ஆசையை நிறைவேற்ற முடியவில்லை,”

என்று சொல்லும் விமல் தற்போது கிராட்வேலி டேட்டா சயின்ஸ் (Gradvalley Data Science) மற்றும் இன்னோவ் ஸ்பேஸ் (InnovSpace) என இரண்டு ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்.

Gradvalley தோன்றிய கதை :

இவர் ஒரு சயிண்டிஸ்ட் என்பதால், ஆய்வு தொடர்பான நிறுவனம் ஒன்றை இந்தியாவில் தொடங்க வேண்டும் என்பது கடந்த பத்து, பதினைந்து வருடங்களாகவே இவருக்கிருந்த ஆசை. ஆனால், சராசரியாக ஒரு இன்ஸ்டிட்டியூட்டோ கல்லூரியோ தொடங்குவதில் நாட்டம் இல்லை.

”எனக்கு ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கம் இருந்தது. எதிர்காலத்தை கணித்து அதற்கு உதவும்படியான புரோக்ராம்களை கொண்டு வருவது தான் கிராட்வேலியின் சாரம். அடுத்த பத்து வருடங்களுக்கு நிச்சயமாக டேட்டா சயின்ஸ் தான் நம்முடைய எதிர்கால தொழில்நுட்பமாக இருக்கப் போகிறது.”

ஆனால், இது தொடர்பான படிப்புகளுக்கு பெங்களூர் போன்ற மெட்ரோ நகரங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வாக கிராட்வேலி நிறுவனத்தை நிறுவினார் விமல். Gradvalley 2018 ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது.டேட்டா சயின்ஸ் குறித்து விரிவாக பேசிய விமல், 

“ஒரு சராசரியான சாஃப்ட்வேர் டெவலப்பர் போல அல்லாமல், ஆய்வுத் திறனும் கணிதமும் புள்ளியியலும் வியாபாரமும் தெரிந்திருக்க வேண்டிய களம் தான் டேட்டா சயின்ஸ். எனக்கு மருந்து உற்பத்தியில் அனுபவம் இருப்பதனால், டேட்டா சயின்ஸை உபயோகித்து இருக்கும் டேட்டாவை கொண்டு புதிய மருந்துகளை தயாரிப்பது, மருந்து உற்பத்தியை எப்படி வேகப்படுத்துவது போன்றவற்றிற்கு பதில் கொண்டு வர என்னுடைய ஆய்வகத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறோம். டேட்டா சயின்ஸ் எனும் களம் புதிது என்பதால், அதில் வேலை செய்வதற்கான வளங்கள் குறைவாக இருக்கின்றன. எங்களுடைய பிராஜெக்டுகளில் வேலை செய்ய ஆட்களை வேலைக்கு எடுத்து, அவர்களை ட்ரெயின் செய்து பிறகு தான் பிராஜெக்டுகளுக்கு அனுப்ப முடியும்,” என்கிறார். 

கிராட்வேலியின் குழு அமைப்பு : 

இங்கு நிர்வாக இயக்குனராக விமல் இருக்கிறார். அவருக்குக் கிழே அட்மிஷன் குழு, அகாடெமிக்ஸ் குழு என பழ குழுக்கள் இருக்கின்றன. Gradvalley குழுவில் தற்போது பதினாறு பேர் இருக்கிறார்கள். “ஒவ்வொரு குழுவிற்கும் தலைவர்கள் இருக்கிறார்கள். மற்றபடி, ஃப்ளாட் படிநிலை (flat hierarchy) கோட்பாட்டில் தான் உறுப்பினர்கள் இயங்குகிறார்கள். சொல்லப்போனால், வேலை செய்பவர்களின் ஆர்வத்தை பொறுத்து தான் அவர்களுக்கு வேலை வழங்கப்படும். ரிசப்சனுக்கு என்று ஒருவரை வேலைக்கு எடுத்துவிட்டு பின் அவருக்கு மார்க்கெட்டிங்கில் நல்ல திறன் இருப்பது தெரிந்தால், அதில் வேலை செய்ய ஆர்வம் இருந்தால், அவர் உடனடியாக மார்க்கெட்டிங்கிற்கு மாற்றப்படுவார். பெரும்பாலான நேரங்களில் பணியாளரின் கோரிக்கையை விடவும் அதிகமான தொகையை தான் சம்பளமாக கொடுக்கிறோம்,” என்று நிறுவனத்தின் இயக்கத்தைப் பற்றி விவரித்தார்.

InnovSpace பின்னணி 

விமல் InnovSpace நிறுவனத்தை தொடங்கியக் காரணமும் சுவாரசியமானது.

“கிராட்வேலி டேட்டா சயின்ஸ் தான் எனக்கிருந்த ஸ்டார்ட்-அப் ஐடியா. அதைத் தொடங்க ஒரு அலுவலகம் தேடி, இண்டீரியர் செய்து எல்லாம் செட் பண்ணவே ஒரு வருடம் ஆகிவிடும் போல இருந்தது. அப்போது கோவையில் கோ வொர்க்கிங் ஸ்பேஸ்கள் (அலுவலக பகிர்விடம்) பெரிய அளவில் இருந்திருக்கவில்லை. இருந்த ஒன்றும் மிக காஸ்ட்லியாக இருந்தது. அப்படி, அப்போது தான் 'InnovSpace’ எனும் கோ-வொர்க்கிங் ஸ்பேஸ் நிறுவனத்திற்கான ஐடியா வந்தது,” என்றார்.

வீட்டில் இருந்து வேலை செய்யும் போது, ஒரு ஆஃபிஸ் அமைப்பு தேவைப்படுகிறது. ஒருத்தர், இரண்டு பேருக்காக அலுவலகம் அமைப்பதும் சிரமம். அதற்கான செலவும் அதிகமாகும். ஒரு கிளையண்டை சந்திக்க மீட்டிங் ரூம் தேவைப்பட்டால் இந்த மாதிரியான ஒரு கோ-வொர்க்கிங் ஸ்பேஸில் ஒரு மீட்டிங் ரூம் புக் செய்துக்கலாம். 

”ஒரு ஸ்டார்ட்-அப்பிற்காக ஆஃபிஸ் அமைக்க பத்து லட்சம் ஆகுமென்றால், இங்க முப்பதாயிரம் ரூபாய் வாடகை கொடுத்து ஆஃபிஸை யூஸ் பண்ணிக்கலாம். இப்படி தான் ஒரு கோ-வொர்க்கிங் ஸ்பேஸா இன்னோவ்ஸ்பேஸ் இயங்குது. ஆனா, இன்னோவ்ஸ்பேஸ் இது மட்டுமே கிடையாது. நல்ல ஐடியாக்களோடு வரும் ஸ்டார்ட்-அப்களை முதலீட்டாளர்களுக்கு பரிந்துரை செய்வோம். எங்களாலே முதலீடு செய்ய முடியும் என்றால் நாங்களே இன்வெஸ்டும் செய்வோம்,” என்கிறார்.

இன்னோவ்ஸ்பேஸ் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. 

image


சவால்கள்:

இரண்டு நிறுவனங்களையும் தொடங்கி, நடத்துவதில் இருந்த சிக்கல்கள் குறித்து கேட்ட போது,

“இன்னோவ் ஸ்பேஸ் கோவை விமான நிலையம் அருகில் அமைந்திருக்கிறது. கோவையில் இந்த கோ-வொர்க்கிங் ஸ்பேஸ் எனும் கான்செப்டே புதிதாக இருப்பதாலும், எல்லாரும் ‘இது எப்படி வொர்க்-அவுட் ஆகும்? இது ரொம்ப தள்ளி இருக்கு, ஊருக்கு வெளிய இருக்கு என்றெலாம் சொன்னார்கள். ஆனால், நான் நம்பிக்கையாக இருந்தேன். 

கிராட்வேலி தொடங்கும் போது சந்தித்த சவால்கள் அளவு இன்னோவ்ஸ்பேஸ் தொடங்கும் போது சிக்கல்கள் இல்லை. கிராட்வேலி தொடங்குவதில் முக்கியமான சவாலே விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது தான்.

“டேட்டா சயின்ஸ் எனும் துறை பற்றி பலருக்கும் தெரிவதில்லை. அப்படியே தெரிந்திருந்தாலும் அந்த வார்த்தைத் தவிர அதன் அர்த்தம் பலருக்கு தெரிவதில்லை. அடிப்படையை பற்றிய விழுப்புணர்வை உண்டாக்கவே நேரம் பிடித்தது. எந்த ஒரு புது துறையுமே அறிமுகம் ஆகும் போது சந்திக்கக் கூடிய தடையாகத் தான் நான் இதைப் பார்க்கிறேன்.”

இரண்டாவது பெரிய சவாலாக டேட்டா சயின்ஸ் புதிய துறை என்பதால், அதில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் கோவையில் கிடைப்பது கடினமாக இருந்தது. எனவே, பிற நகரங்களில் இருந்து வந்து பாடம் நடத்திவிட்டு செல்பவர்களையோ அல்லது ஆன்லைனில் பாடம் எடுப்பவர்களையோ வைத்து தான் மாணவர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டியிருக்கிறது,” என்று சொல்கிறார். 

தொழில்நுட்ப ரீதியாக கிராட்வேலியின் எதிர்காலம் குறித்து விவரித்த விமலிடம் இன்னோவ்ஸ்பேஸின் எதிர்காலம் பற்றிக் கேட்ட போது,

“கோ வொர்க்கிங் ஸ்பேஸ் எனும் கான்செப்ட் வெளிநாடுகளில் பத்து வருடங்களாகவே இருக்கிறது. இந்தியாவில் தில்லி, மும்பை, பெங்களூர், சென்னை போன்ற நகரங்களில் கடந்த இரண்டு வருடங்களாக வளர்ந்து வருகிறது. கோவை மாதிரியான இரண்டாம் அடுக்கு நகரங்களில் கோ வொர்க்கிங் ஸ்பேஸ்கள் இல்லை. சொல்லப்போனால் இரண்டாம் அடுக்கு நகரங்களில் நிறுவப்பட்ட முதல் கோ-வொர்க்கிங் ஸ்பேஸ் இன்னோவ்ஸ்பேஸ் தான், என்கிறார்.” 

இதற்கு எதிர்காலம் பெரிய அளவில் இருக்கும். ஏனென்றால், எல்லாருக்குமே இடம் பகிர்வதின் தேவை இருக்கிறது. தனி வீடுகளில் இருந்து அபார்ட்மெண்டுகளுக்கு எப்படி மாறினோமோ அது போலத் தான் இதுவும். இங்கு பல நிறுவனங்களின் கூட்டு செயல்பாடு சாத்தியமாகிறது. நான் ஒரு தயாரிப்பு நிறுவனம், எனக்கென மார்க்கெட்டிங் செய்ய வேண்டும் எனும்போது, கோ வொர்க்கிங் ஸ்பேஸில் உள்ள மார்க்கெட்டிங் நிறுவனத்தை அணுகமுடியும். இப்படி இரண்டு நிறுவனங்களுக்குமே வாய்ப்புகளும் வசதிகளும் அதிகமாகும். நாம் இப்போது ஆரம்பக்கட்டத்தில் இருக்கிறோம். இன்னும் நான்கைந்து வருடங்களில் தனி ஆஃபிஸ் என்கிற கான்செப்ட் மாறி, ஷேர்ட் ஆஃபிஸ் என்கிற ஐடியா பிரபலமாகும்,” என்கிறார்.

இந்த இரண்டு நிறுவனங்களுமே, சுய-முதலீட்டில் தொடங்கப்பட்டவையாகும். வழக்கமாகவே ஸ்டார்ட்-அப்பிற்கு மெட்ரோ நகரங்களை மக்கள் தேர்ந்தெடுக்கும் போது கோவையை தேர்ந்தெடுத்திருப்பதன் காரணத்தை விமல் பகிர்கையில்,

“பிற நகரங்களோடு ஒப்பிடும் போது கோவை மிக வைப்ரண்டான ஒரு நகராக இருப்பதாக நான் நினைக்கிறேன். பிற மெட்ரோ நகர்களில் உள்ள அவ்வளவு திறனும் கோவையிலும் இருக்கிறது. இன்றைக்கு சென்னையிலும், பெங்களூரிலும் என்னவெல்லாம் நடக்கிறதோ அவை எல்லாவற்றையும் கோவையிலும் நடத்திக் காட்ட முடியும்” என்பதுவே.

இறுதியாக, ஒரு 9-5 மணி வேலையில் மாட்டாமல், சுயமாக தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு விமல் தரும் அறிவுரை,

“உங்களுடைய பிசினஸ் ஐடியா என்னவாக இருந்தாலும் அதன் சாரத்தை ஆராய்ந்து, அறிந்து பார்க்க வேண்டும். இது ஒரு பிரச்சினை, இதற்கான தீர்வு தான் என்னுடைய ஸ்டார்ட்-அப் எனும் போது, அந்த பிரச்சினை உங்களுக்கு மட்டும் தான் இருக்கிறதா அல்லது பொதுப் பிரச்சினையா என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். பெரும்பாலான மக்களுக்கு இருக்கும் பிரச்சினைக்கு உண்டாக்கும் தீர்வை தான் ஒரு பிசினஸாக மாற்ற முடியும்,” என சுருக்கமாக சொல்கிறார்.

சுவாரசியமான, வலிமையான ஸ்டார்ட்-அப் ஐடியாக்கள் இருக்கும் இளைஞர்கள் எப்போது வேண்டுமானாலும் இன்னோவ்ஸ்பேஸையும், விமலையும் அணுகலாம் என்பது உறுதி. "

Add to
Shares
34
Comments
Share This
Add to
Shares
34
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக