பதிப்புகளில்

உறவினரால் பலாத்காரம்; பிங்கி ஷேக் தடைகளைத் தகர்த்து தோள் நிமிர்ந்து நிற்கிறார்

Gajalakshmi Mahalingam
1st Nov 2015
Add to
Shares
1
Comments
Share This
Add to
Shares
1
Comments
Share

பிங்கி, கிரேந்தி தலைநகரின் அனைத்து இடங்களிலும் சாதாரணமாக நடந்து செல்கிறார். அவர் தன்னுடைய முடியை பையன் போல சிறிதாக வெட்டிவிட்டார். எனக்கு நன்கு நினைவிருக்கிறது, சில காலங்களுக்கு முன்னர் அவருடைய கூந்தல் முகம் முழுதும் சரிந்து சந்திரமுகி போல காட்சியளிக்கும். ஆனால் இப்போது அவள் வைத்திருக்கும் கூர்மையான இந்த சிகை அலங்காரம் அவளுடைய செறிவையும், மனஉறுதியையும் காட்டுகிறது. நீண்ட கூந்தலையும் அதே போன்று குறுகிய முடியையும் சமமாக பாவிக்கும் பெண்களை நான் அரிதாகவே பார்த்திருக்கிறேன். அவள் என்னைப் பார்த்து நான் அவளுடைய புன்னகைக்கு மதிப்புடையவள் என்பதை தன் புன்னகை மூலம் வெளிப்படுத்தினாள். அந்தப் புன்னகைக்கு அதிர்ஷ்டத்தையும், உறுதியையும் வாங்கும் தன்மை இருப்பதாக நான் நினைத்தேன். அந்த அழகி போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவள்.

image


கிரேந்தி தான் அவருடைய வீடு. குறிப்பாக இந்த வீடு மட்டுமல்ல – இது அவருடைய நான்காவது வீடு, அவள் கிரேந்தியில் 5 ஆண்டுகளுக்கு முன்பு வந்து சேர்ந்தார். அவளது கடந்த காலத்தை உற்றுபார்க்க வேண்டும், அவர்கள் தங்கியிருந்த நிலத்தின் சொந்தக்காரர் தன்நிலை மறந்து, அவர்களை மரியாதை இல்லாமல் அழைப்பார் எந்த மனிதனும் அது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தமாட்டார். எந்த ஒரு மரியாதைக்குரிய ஆணும் ஒரு பெண்ணைப் பற்றி இவ்வளவு கீழ்த்தரமாக நினைத்திருக்க மாட்டான். ஆனால் வரலாறு அவர்களை நினைத்துப் பார்க்க வைக்கிறது, பெண்களை வெறுக்கும் குறுகிய மனம் படைத்தவர்கள் தங்களுக்குள்ளாகவே மன்னிப்பு கேட்டுக் கொள்கிறார்கள். ஆம், இந்த சான்ட்டாகுரூஸ் இடம் அவருக்கு வீடு இல்லை. ஆனால் கிரேந்தி - பிங்கிக்கு எல்லாமுமாக இருக்கும்; கிரேந்தி என்பது மனதின் நிலை. அதனால் நிச்சயம் அது அவளுக்கு ஒரு வீடு போன்ற நெருக்கத்தைத் தந்தது.

பிங்கி தன்னுடன் தங்கும், ஸ்ரதாவை சந்தித்தார். ஸ்ரதா மணலியில் இருந்து தன்னுடைய நீண்ட பயணத்தை முடித்து திரும்பி இருந்தார். அவர்கள் டிடிஎல்ஜே பாணியில் ஒன்றிணைந்திருந்தார்கள், அவர்கள் ஒரு வாரத்திற்கு பின்னர் சந்தித்தனர். பிங்கி தன் தலையணையில் சாய்ந்து கொண்டே, ஸ்ரதாவின் பயணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டும், ஸ்ரதாவுடன் சுற்றித் திரிந்தவர்களில் இரண்டாம் முறை டேட்டிற்கு யார் வருவார் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். எல்லா விதத்தையும் கணக்கில் கொண்டு மனோ ரீதியாக அவர்களுக்கு மதிப்பெண் போட்டு விளையாடினார்கள், காலை வரை இந்த விளையாட்டு நீடித்தது. நான் மறைந்திருந்து ஒட்டுகேட்பதை கூட அவர்கள் கண்டபிடிக்கவே இல்லை. நான் அவர்களைக் குற்றம் சொல்லவில்லை; நான் அவர்களுக்கு இடையில் சென்றதாக இருக்கக் கூடாது. உண்மையில் சொல்ல வேண்டுமெனில் நான் அங்கு அவர்களின் வலி, போராட்டம் மற்றும் இன்னல்களை படம்பிடிக்க வந்தேன் என்பதையே மறந்துவிட்டேன். இது வரை நான் அங்கு கண்ட காட்சிகள் சராசரியாக மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் இரு தோழிகளின் இயல்பு நிலையையே.

image


ஆனால் துரதிஷ்டவசமாக அங்கு ஒரு சோகக்கதை இருந்தது. அது தர்மசங்கடமான கதை மட்டுமல்ல, வெற்றியின் கதை. மனதை உருக்கும் தன் கதையை சொல்லத் தொடங்கினாள் பிங்கி.

நான் கொல்கத்தாவில் பிறந்தேன். என்னுடைய தாயார் ஒரு பாலியல் தொழிலாளி. எனக்கு கொல்கத்தா பிடிக்காது, அதனால் அடிக்கடி அங்கு செல்லமாட்டேன். என்னுடைய குடும்பத்தை சந்திக்கவும் விருப்பமில்லை. நான் அவர்களால் மிகவும் வெறுத்துப் போய்விட்டேன். என் அத்தை, மாமா, தாத்தா, பாட்டியை பார்க்க அம்மா அடிக்கடி அங்கு வருவார்.

நான் அங்கு பார்க் சர்க்கஸில் இருந்த ஒரு குடிசைப்பகுதியில் சிறிய இடத்தில் வசித்து வந்தேன் – அது ஒரு சரியான வீடு அல்ல. எனக்கு சாப்பிடக் கூட போதுமான உணவு இருக்காது, என் தந்தையும் உயிர் பிரிந்துவிட்டார். எனக்கு ஆறு வயது இருக்கும் போது, குப்பையில் கிடந்த பொருட்களை சேகரித்து, அவற்றில் எதை எல்லாம் பணமாக்க முடியுமோ அவற்றை எல்லாம் விற்று என் குடும்பத்திற்கு பணம் கொடுப்பேன்.

என்னுடைய தாயார் மும்பைக்கு சென்றுவிட்டார், அங்கு சென்று அதிக பணம் சம்பாதிக்க அவர் நினைத்தார். அதனால் என்னையும் என் சகோதரனையும் கொல்கத்தாவிலேயே விட்டுவிட்டு சென்றுவிட்டார்.

குடிசைப்பகுதியை ஒட்டி இருந்த ரயில்வே பாதைக்கு தினமும் பொருட்களை சேகரிக்கச் செல்வோம். எனக்கு காதில் அடிக்கடி அரிப்பு மற்றும் வலி ஏற்பட்டதால் என்னுடைய செவிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருந்தன. ஒரு நாள் இரவு நான் எப்போதும் போல வியாபாரத்திற்கு சென்றிருந்தேன். அப்போது நான் சென்று கொண்டிருந்த பாதையில் ஒரு ரயில் வந்து கொண்டிருந்ததை கவனிக்கவில்லை, என் தம்பி இதைக் கண்டு என்னை நோக்கி கத்தியுள்ளான் அப்போதும் எனக்கு கேட்கவில்லை. செய்வதறியாது அவன் உடனே ஓடி வந்து என் காதில் ஒரு அறை அறைந்து என்னை பாதையை விட்டு நகர்த்தினான்.

அந்த சம்பவத்திற்கு பிறகும் பல ஆண்டுகள் எங்கள் தாயார் எங்களைப் பார்க்க வரவேயில்லை. நாங்கள் இனியும் பொறுத்திருக்க வேண்டாம் என நினைத்து மும்பைக்கு செல்ல முடிவு செய்தோம்.

என் தாயாரை சந்திக்க கிரான்ட் சாலையில் உள்ள ரெட்-லைட் மாவட்டத்துக்குச் சென்றோம், எனக்கு அப்போது வயது 12. நான் ரொம்ப காலம் அங்கு வசிக்கவில்லை, என் தாயாரும் என்னை அங்கு இருக்க விடவில்லை.

எனக்குத் தங்க இடம் இல்லாததால் நான் ஒரு என்ஜிஓவில் இணைந்து அவர்களோடு வசித்து வந்தேன். என் தாயார் தினமும் இரவில் அங்கு சென்றுவிடுவார், நான் இரவுப் பள்ளிக்குச் சென்றுவிடுவேன்.

முதலில் என் தாயார் என்ன செய்கிறார் என்று எனக்குப் புரியவில்லை, ஒவ்வொரு நாள் இரவும் அவர் வெளியே செல்லும் போதும் எங்கே செல்கிறார் எனக் கேட்பேன். ஒரு நாள் என் தாயார் என்னை அடித்து விட்டு எனக்காகத் தான் இதை செய்வதாக கூறினார். இப்போதிலிருந்து உன் வேலையை நீ பார்த்துக் கொள் என்றார் என் தாயார்.

இந்த நேரத்தில் என் தாயாருக்கு நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நீங்கள் ஒரு விஷயம் செய்கிறீர்கள் என்றால், அது உங்களின் உரிமை, உங்கள் வேலையை யாரும் தொந்தரவு செய்யவில்லை அல்லது செய்து தான் தீர வேண்டும் என்று யாரும் உங்களை கட்டாயப்படுத்தவும் இல்லை என்கிறார் பிங்கி.

நான் ஜோதி கைலாஷ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் இருந்தேன். அங்கு இருந்த ஆசிரியர் என்னையும் என் தம்பியையும் மிகவும் நேசித்தார். அந்த என்ஜிஓவின் நிலை சராசரிக்கும் குறைவாகவே இருந்த போதும் நான் அதைப் பற்றி குறைத்துக் கூற மாட்டேன், அந்த அளவு அந்த ஆசிரியர் எங்கள் மீது பற்று வைத்திருந்தார்.

image


ஆனால் விரைவிலேயே அங்கிருந்து எங்களை வீட்டுக்கு அழைத்து வந்து விட்டார் என் தாயார். எங்களை எங்கும் நீண்ட நாட்கள் தங்கவிட மாட்டார் அவர், எங்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலை என்று எப்போதும் நான் கேட்பேன். எனக்கு நிறைய நம்பிக்கை உண்டு, ஆனால் படிப்பின் மீது ஆர்வமில்லை. என் தம்பி எனக்கு உற்ற துணையாக இருப்பான். அவனிடம் இருந்தே நான் ஆங்கிலம் கற்றுக் கொண்டேன். நான் இங்கு வந்த பிறகு என் தம்பியிடம் நான் ஏதாவது சாதிக்க விரும்புவதாகக் கூறினேன்.

படிப்பை கடந்து எனக்கு சில குறிக்கோள்கள் இருந்தது, அவன் எனக்கு கிரேந்தி பற்றிக் கூறினான். பின்னர் நானும் எனது தாயாரும் ராபின் டி யை (சகோதரி என்று அர்த்தம்) இங்கே சந்தித்தோம். நான் அப்போது நீண்ட கூந்தலுடன் மஞ்சள் நிற குர்தி அணிந்திருந்தேன். என்னைப் பார்த்து ‘நீ பார்க்க எவ்வளவு அழகாக இருக்கிறாய்!’ என்று அவர் சிரித்தார்.

நான் உடனே கிரேந்தியில் சேர்ந்து கொண்டேன். ஆனால் இந்த முறை நான் கிரேந்தியில் சேர்ந்த போது இந்த விலாசத்தை என் தாயாருக்குக் கொடுக்கக் கூடாது என்று முடிவு செய்தேன். நானே 6 மாதத்திற்கு ஒரு முறை சென்று அவரை பார்த்து வரலாம் என்றும் நினைத்தேன்.

ஏனெனில் உண்மையில் என் தாயார் என்னை விற்று விடுவார் என்று நான் மிகவும் பயந்தேன்.

எனக்கு ஏற்பட்ட சூழ்நிலைகள் என்னை அவ்வாறு நினைக்கச் செய்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு 14 வயது இருக்கும் போது என் தந்தையின் சகோதரர் என்னை பலாத்காரம் செய்தார். அதனால் நான் கர்ப்பம் அடைந்தேன், பின்னர் அனைவருக்கும் தெரிந்து கருக்கலைப்பு செய்தார்கள். நான் என் தந்தையிடம் இது பற்றி கூறிய போது அவர் அந்த மாமாவை நன்கு உதைத்து ஜெயிலுக்கு அனுப்பினார். அந்த மாமா ஜெயிலுக்கு மட்டும் போகவில்லை, இப்போது இறந்தும் போய்விட்டார். நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் மிகக் கடுமையான வலியின் காரணமாக உயிரிழந்தார்.

அவர் இறந்து போனாலும் என்னால் அந்த சம்பவத்தை மறக்க முடியவில்லை. எனக்கு மட்டும் ஏன் இந்த நிலை, கடவுள் ஏன் என்னை தண்டித்தார் என்று நான் யோசித்துக் கொண்டே இருந்தேன். நான் ஏதாவது தவறு செய்தேனா? என்னை நானே தண்டித்துக் கொண்டேன், வலியை மறக்க குடித்தேன். எனக்கு மன நிலை பாதிப்பும் ஏற்பட்டது – ஆனால் கிரேந்தியில் நான் நோய்க்கு சிகிச்சை அளிபிபவரைக் கண்டேன் இப்போது முன்பை விட குணமடைந்து விட்டதாக உணருகிறேன்.

ஆனால் இந்த சமூகம் நம்முடைய பின்னணி பற்றி நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும். நாங்கள் கண்டிவளியில் இருந்த போது, நாங்கள் குட்டைப் பாவாடை போன்ற ஆடைகளை அணியும் போது அவர்கள் எங்களை ரண்டி, ரண்டிகி பச்சி என்று அழைப்பார்கள். ‘எங்களுக்குத் தெரியும் நீங்கள் யார்? நீங்கள் என்ன செய்வீர்கள்? என்று, இங்கிருந்து வெளியேறுங்கள்!’ என்றும் கூறுவார்கள். அவர்களுக்குத் தெரியும் நாங்கள் பாலியல் தொழிலாளியின் மகள் என்று, எனவே எங்களையும் அவ்வாறே நினைத்துக் கொள்கிறார்கள். நாங்கள் இப்போது இருக்கும் பகுதியில் உள்ள ஆண்கள் கூட நீங்கள் ஏன் குட்டைப் பாவாடை அணிகிறீர்கள்? நீங்கள் பார் டான்சர்களா என கேட்கிறார்கள். நான் அவர்களைப் பார்த்து ‘உங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு இருங்கள், எனக்கு என்ன அணிய பிடிக்கிறதோ அதை அணிகிறேன், இது என்னுடைய உடம்பு, நான் அணிவதைக் கண்டு நீ வியக்கத் தேவையில்லை’ என்று அவர்களிடம் சொல்வேன்.

கிரேந்தியில் இருப்பது எனக்கு பெருமையாகவும், சக்தி அளிப்பதாகவும் இருக்கிறது. இது என்னுடைய ஐந்தாம் ஆண்டு என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. எனக்கு டிஸ்லெக்சியா உள்ளது, அதனால் நான் பள்ளிப் படிப்பில் தோல்வியடைந்து கொண்டே இருந்தேன். என்னால் முடிந்தவற்றை நான் செய்தேன், ஆனாலும் தோல்வி விடவில்லை. இப்போதும் நான் முயன்று கொண்டிருக்கிறேன். நான் விலங்கு நல ஆலோசகராக விரும்புகிறேன் – எனக்கு விலங்குகள் மிகவும் பிடிக்கும். அதே போன்று பாடகர் அல்லது நடனக் கலைஞராகவும் விருப்பம் இருக்கிறது.

நான் நோய் சிகிச்சையாளரிடம் செல்லும் போது, அவரிடம் உங்களால் இதை எப்படி செய்ய முடிகிறது, நானும் எப்படி இதைத் செய்வது என்று கேட்பேன். நான் அவருடைய கண்களின் அசைவுகள், அவர் எவ்வாறு அமர்கிறார், எவ்வாறு உரையாற்றுகிறார் என்றெல்லாம் கவனிப்பேன். அவர் எனக்கு சிகிச்சைக்காக வருபவர்களை பற்றி தீர்மானிக்காமல் அவர்களுக்கு எப்படி சாதகமான சக்தியை அளிப்பது என்று கற்றுக் கொடுத்தார்.

பிங்கி தன்னுடைய நற்செயல்களை கிரேந்தி இல்லம் முழுதும் பரப்பியுள்ளார். மஞ்சள் நிற குர்தி அணிந்த இந்த துருதுரு பெண் கிரேந்தி இல்லம் முழுதும் சூரியஒளியை நிரப்புகிறாள். அவள் பொழுதுபோக்காக பேசுகிறாள், இனிமையாகப் பாடுகிறாள், மனதை உருக்கும் வகையில் சிரிக்கிறாள். அவள் எப்போதும் எப்படி விளையாட்டாக இருக்கிறாள் எனக் கேட்டேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சந்தோஷத்தைக் கண்டுபிடித்துள்ளதாக பிங்கி நினைக்கிறாள்.

Add to
Shares
1
Comments
Share This
Add to
Shares
1
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக