பதிப்புகளில்

"நான் இளைஞர்களிடமிருந்து கற்று கொண்டிருக்கிறேன் "- ரத்தன் டாடா

எனது ஐடியாக்கள் கேட்கப்படும் ஒரு சூழல் எனக்கு கிடைக்க வேண்டும் என்று எனது 26 வயது காலக்கட்டத்தில் ஏங்கினேன். 

23rd Feb 2016
Add to
Shares
264
Comments
Share This
Add to
Shares
264
Comments
Share

கலாரி கேப்பிட்டல் நிறுவனத்தின் கேஸ்டார்ட் திட்டத்தின் துவக்க நிகழ்ச்சியில், இந்தியாவின் சக்தி வாய்ந்த தொழிலதிபர்களுள் ஒருவரான ரத்தன் டாட்டாவின் வெளிவராத சில தகவல்களை அறியும் வாய்ப்பு கிடைத்தது. கலாரி கேப்பிட்டல் நிறுவனத்தின் வாணி கோலா, ரத்தன் டாட்டாவின் வெற்றியின் பின்னணிகளையும், அவர் சந்தித்த தோல்விகளை பற்றியும், கம்யுனிகேஷனின் முக்கியத்துவத்தை பற்றியும், 26 வயதில் அவர் வித்தியாசமாக செய்தவைகளை பற்றியும் பகிர்ந்து கொள்ள அவரிடம் கேட்டுக் கொண்டார். அந்த நிகழ்வில் கலந்து கொண்ட பார்வையாளர்கள் அவரது ஒவ்வொரு வார்த்தையையும் கவனத்துடன் கேட்டு தெரிந்து கொண்டனர். அவரது பேச்சின் சிறப்பம்சங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

image


தனக்கு உருவாகும் சிந்தனைகளை தொடர்ந்து செல்லும் போது...

என்னை பொறுத்தவரை, ஏதேனும் ஒன்று சரியாக வேலை செய்யவில்லை என்றால் அதனை குறித்த சிந்தனை எனக்கு வந்து விடும். ஒருவேளை நீங்கள் போதுமான தீர்வை கொண்டிருந்தால், பிறகு நீங்கள் அமைதியாக அமர்ந்திருந்து, தற்போது இருப்பதை விட அதனை எப்படி சிறப்பாக செயல்பட வைக்க முடியும் என்றோ அல்லது இன்னும் வேகமாக அல்லது இன்னும் குறைந்த செலவில் எப்படி உருவாக்குவது என்றோ சிந்திக்க துவங்குவீர்கள். மனதில் தோன்றும் அப்படிப்பட்ட சிந்தனைகளை அப்படியே விட்டுவிட்டு செல்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் சிலர் அப்படிப்பட்ட சிந்தனைகளை வளர்த்தெடுத்து, தங்கள் வியர்வையையும், ரத்தத்தையும் சிந்தி நடைமுறைபடுத்துகிறார்கள்.

தொழில் துவங்க அவரை ஈர்த்தது என்ன?

புதியதாக துவங்கப்படும் தொழில், அது செயல்படுவதற்கு போதிய இடவசதியுடன் கூடிய தளம் இல்லாமலிருந்தால் கூட, அதனை வைத்து சிந்தனைகளை கட்டமைக்க முடியும். ஆனால் நான் 20, 30 ஆண்டுகளுக்கு முன்னரே, சின்ன துவக்கத்தை நிகழ்த்த, பல மில்லியன் டாலர்கள் தேவைப்பட்ட உற்பத்தித் துறைகளில் வேலை செய்திருக்கிறேன். இன்றைய காலகட்டத்தில், ஆச்சரியம் என்னவெனில், ஒரு புதிய தொழில் முனைவை, நீங்கள் உங்கள் சிந்தனையை பயன்படுத்தி, வேகமாக நடைமுறைபடுத்த முடியும் என்பது தான். மென்பொருட்களும், சிப்செட் வடிவமைப்புகளும், உலக சந்தையை ஒரு குறிப்பிட்ட பகுதியில் பார்க்கும்படியாக மாற்றி இருக்கிறது. இது ஆச்சரியத்துடன் எழுச்சியையும் உற்சாகத்தையும் தருகிறது.

பல முறை, ஏதேனும் ஒன்று நன்றாக செயல்படவில்லை என நான் நினைக்கும் போதெல்லாம், அது மிகப்பெரிய வெற்றியை தரும் வகையில் அமைந்துள்ளது என்பதை தன்னடக்கத்துடன் கூறிக் கொள்கிறேன்.

தொழில்நுட்பத்தை கொண்டு ஒன்றையொன்று முக்கியமானவற்றை கூட்டி , இளைஞர்களும், புத்திசாலியான மக்களும் என்ன செய்கிறார்கள் என்பதை கற்பதில் தீவிரமாகவே நான் உள்ளேன்.

ஸ்மார்ட்போன்களை எடுத்து கொள்வோம். அதனால் ஏற்பட்டுள்ள தாக்கம் புதிய தளத்தை உருவாக்கியுள்ளது. உங்களிடம் ஸ்மார்ட்போன் இல்லையெனில் பல சிந்தனைகள் உருவாகவே முடியாது.

வணிகத்தின் அடிப்படை தத்துவம்

தனிப்பட்ட முறையில் எனக்கு சமூக சேவை சார்ந்த பணிகளில் என்னை ஈடுபடுத்திக் கொள்வதில் ஆர்வம் உள்ளவன். அவ்வகையில் எனது ஒரு சிந்தனை சமூகத்தில் வித்தியாசத்தை குறிப்பாக செழிப்பையும் வாழ்க்கையின் தரத்தை அதிகரிக்கும் போதும் உற்சாகத்தைத் தருகிறது.

பொதுமக்களின் சிந்தனை, வாழ்க்கை முறையையும், தங்களைத் தாங்களே நிலை நிறுத்தி கொள்ளும் முறை இவற்றில் மிக முக்கியமான நல்லவித மாற்றத்திற்கு நீங்கள் காரணமாக இருந்தால், அதனால் இயல்பாகவே கிடைக்கும் பலனை விட, அதிகம் உற்சாகமும் எழுச்சியும் உங்களுக்கு கிடைக்கும்.

ஒரு முதலீட்டாளர் எதை போன்று இருக்க வேண்டும்?

முதலீட்டாளரை பற்றி நினைக்கும்போது எனக்கு பளிச்சென்று தோன்றியது ஒரு மியூசிக் கம்பெனியின் ஸ்கவுட்டை போன்றவர். அந்த ஸ்கவுட்டை ஈர்க்க, இசை குழுவினர் தங்களால் இயன்ற அளவு சிறப்பாகச் செயல்படுவர். அவர் எப்போதுமே அந்த குழுவினர் எவ்வாறு சிறப்பாக செயல்படுவர் என்பதை கணித்து கொள்வார். அதனடிப்படையில், இந்த குழு ரிக்கார்டிங்குக்கும், கச்சேரிகளுக்கும் பொருத்தமாகவே இருக்கும் என தனது மனதில் நினைத்து கொள்வார். முதலீட்டாளரை தேடி கொண்டிருக்கும் ஒரு கம்பெனியும் இதனையே செய்யும். அந்த முதலீட்டாளர், தனது பணத்திற்கான ரிஸ்கை மட்டுமல்லாது, தனது தொடர்புகளை பயன்படுத்தியும், தனது வழிகாட்டுதல்களை அளித்தும் அந்த கம்பெனியுடன் சேர்ந்தே பயணிக்கவும் செய்வார். வெறும் கணிப்புகள் மட்டுமல்ல. 

பெரும்பாலான நமது உள்ளுணர்வுகளுக்கு நாம் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால், நாம் சில உள்ளுணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்போமெனில், சில தீர்மானங்களுக்கு வந்து, ஒரு எழுச்சி மிக்க புதிய முயற்சியை மேற்கொண்டு விட முடியும்.

நிதி திரட்டலில் புதிய தொழில் முனைவோர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்: வளர்ச்சியும், லாபவிகிதமும்.

இதற்கென தனி பார்முலா ஒன்றும் இல்லை. கடந்த இரண்டும், மூன்று வருடங்களுக்கு முன், நான் முதலீடு செய்த கம்பெனிகள், நானே எதிர்ப்பார்க்காத அளவுக்கு வளர்ச்சியை பெற்றுள்ளன. கேள்வி என்னவென்றால், வளர்ச்சி விகிதத்தை நிலையாக தக்க வைத்து கொள்ள முடியுமா? என்பது தான். ஏனென்றால், துவக்கத்தில் செலவு விகிதம் அதிகமாக இருக்கும். இன்றும் சில கம்பெனிகள், புதிய மாற்றங்களுடன் தங்கள் வளர்ச்சியை தக்க வைத்து கொண்டே முன்னேறி செல்கின்றன. ஆனால் சில தாக்கு பிடிக்க முடியாமல் வீழ்ந்து விடுகின்றன. இன்னும் சொல்லப் போனால், நீங்கள் இதனை எப்படி நடைமுறைப்படுத்த போகிறீர்கள் என்ற சிந்தனையையும், என்ன நடக்கிறது என அருகிலிருந்து கண்காணிக்க போகிறீர்கள் என்பதனையும் பொறுத்தது.

சிஇஓக்களின் தனிப்பட்ட பிராண்ட் கட்டமைப்புகளின் முக்கியத்துவம்

நான் ஒரு கூச்ச சுபாவம் உள்ள மனிதன். ஆகவே எனக்கென தனிப்பட்ட பிராண்ட்களை நான் கட்டமைக்க விரும்பவில்லை. ஆனால் ஒரு கார்ப்பரேட் பிராண்ட் கட்டமைக்கப்பட வேண்டும். சிலர் தங்கள் தனிப்பட்ட பிராண்டுகளை கம்பெனிகளே கட்டமைக்க விட்டுவிடுகின்றனர். ஒருவேளை இது சிலருக்கு கைகொடுக்கலாம். ஆனால் மற்ற எல்லாருக்கும் பலனளிப்பதில்லை.

விற்கவோ அல்லது மரபுரிமையை உருவாக்கும்போது முடிவெடுப்பது எப்படி?

இதற்கு எனது சொந்த அனுபவத்திலிருந்தே ஒரு உதாரணத்தை கூற முடியும். டாடா குழுமத்தின் பொறுப்பை நான் ஏற்ற போது, ஊடகங்கள் எங்கள் முக்கியமான தொழிலுக்கு கவனம் கொடுக்காமல், எங்களுக்கு எப்படி 80 க்கும் மேற்பட்ட கம்பெனிகள் இருந்தன என்பதையே கவனம் கொடுத்து செய்தி வெளியிட்டன. அப்போது நான், டாடா குழுமத்தின் வணிகங்களை சிறு பிரிவுகளாக பிரித்து, அவற்றில் அதிகம் பயனில்லாதவற்றை விற்க திட்டமிட்டேன். அவற்றில் டாய்லட்றீஸ் பிசினசும் அடக்கம். எங்கள் போட்டியாளரான யுனிலீவர் சந்தையில் கோலோச்சியிருக்கும் போது, 25 % சதவீத பங்குகளை எங்கள் நிறுவனம் சந்தையில் கொண்டிருந்தது. நான் அதனை விற்பதற்காக யுனிலீவரிடம் கலந்து பேசினேன். அதன்பலனாக கணிசமான அளவில், பங்குகளை வாங்குவதற்கான ஷேர் ஹோல்டர்களை அவர்கள் கொடுத்தார்கள். அத்துடன் மூன்று ஆண்டுகளுக்கு எந்த ஊழியரையோ அல்லது விநியோகஸ்தரையோ வெளியே அனுப்பக் கூடாது என்றும் முடிவு செய்யப்பட்டது.

நான் இது ஒரு சிறந்த ஒப்பந்தம் தான் என்று நினைத்தேன். ஆனால் மறு நாள் ஊடகங்களும், பங்கு சந்தையும், ஊழியர்களும் (அவர்களில் பெரும்பாலானோர் இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறையினர்) என் மீது விழ ஆரம்பித்தார்கள். எனது பகுத்தறிவுத் திட்டம் என்னை விட்டு போனதை போன்று உணர்ந்தேன். எனது தன்னம்பிக்கை மறைந்து போனது. இது ஒரு எளிமையான காரியம் அல்ல என்பதை இந்த நிகழ்வு மூலம் புரிந்து கொண்டேன். நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதனை குறித்து வெளிப்படையாக நீங்கள் பேச வேண்டும்.

ஆரம்ப கால கம்பெனிகள் தங்கள் நிர்வாகிகளையும், ஆலோசகர்களையும் எப்படி அமைக்க வேண்டும்?

வெற்றிகரமான கம்பெனிகள், தங்கள் ஷேர் ஹோல்டர்களை தொடர்பு கொள்ளுவதில் அதிக சிரத்தை எடுத்துக் கொள்ளுகின்றன. இது நிர்வாக இயக்குனர்களுக்கு மட்டுமல்ல அந்த கம்பெனியில் சம்பந்தப்பட்டிருக்கும் அனைவருக்கும் பொருந்தும்.

ஷேர் ஹோல்டர்களிடம், ஒரு விவேகமுள்ள, அதே வேளை செயலூக்கமுள்ள ஒரு தொடர்பை உருவாக்கி கொள்ளுதல் ஒரு சிறந்த அம்சமாகும். வெற்றிகரமான சிஇஓக்கள் அதனை திறம்பட செய்கின்றனர். உலகம், நீங்கள் உலகத்துடன் எவ்வாறு தொடர்பு கொள்ளுகிறீர்கள் என்பதை கவனிக்கிறது.

வெற்றியை அவர் எப்படி கொண்டாடுகிறார்?

எனது வெற்றிக்கான கணம், நான் நேனோவை அறிமுகப்படுத்திய போது தான் ஏற்பட்டது. பெங்களூருவில் நடந்த நீண்ட நிர்வாக கூட்டத்தில் வைத்து தான் நேனோவின் துவக்கம் இருந்தது. ஒரு குடும்பத்தின் 4 பேர் ஒரு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த போது, அவர்கள் வழுக்கும் ரோட்டில் கீழே விழுந்து விபத்துக்குள்ளாவதை பார்த்தேன். அந்த நிகழ்வு ஒரு சாதாரண குடும்பத்தினருக்கு தக்கதான காரினை உருவாக்குவதை பற்றி என்னை சிந்திக்க வைத்தது.

தொடர்ந்து, நிர்வாக குழு கூட்டத்தில் ஒரு ஸ்கூட்டரை எப்படி பாதுகாப்பானதாக மாற்ற முடியும் என விவாதித்த போது, காரை பற்றிய எனது கருத்தினை முன்வைத்தேன். நான் என்ன சொன்னேனோ, அதனை அடிப்படையாக கொண்டு குழுவினர் காரை வடிவமைத்து, அதனை உருவாக்கினர். பின்னர் அதனை டெல்லியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் வைத்து நான் அதனை ஓட்டினேன். அன்று ஓட்டும்போது எனக்கு சிரமமாகவே இருந்தது. அதில் லைட் இல்லாததால், மேடை எங்கு முடிகிறது எங்கு பார்வையாளர்கள் இருக்கும் பகுதி எங்கு துவங்குகிறது எனக்கு தெரியாமல் இருந்தது.

அந்த கணம், கொஞ்சம் பயம் இருந்தாலும் , 100 ஆண்டுகள் கடந்த இந்த குழுமத்தின் படைப்பு மகிமையை உயர்த்தி சொல்லத்தக்க வகையில் அமைந்தது என்றே கருதுகிறேன்.

26 வயதாக இருக்கும் போது அவர் செய்ததை பற்றி...

நான் ஜாம்செட்பூரில் இளந்தொழிலாளியாக இருந்த போது, எனக்கு ஏதேனும் புதிய சிந்தனை தோன்றினால், அதனை என்னுடைய முதலாளிகளிடம் போய் சொல்லுவது வழக்கம். அவர்கள் என்னிடம் ரொம்ப எல்லாம் ஆர்வமாக இருக்காதே என்றும் ஏற்கனவே 30 ஆண்டுகளுகாக செய்து முடிக்கப்பட்டதையே தொடர்ந்து செய் என்றும் கூறினர். அவ்வாறு அவர்கள் கூறும்போது நான் அமைதியாக திரும்பி போய்விடுவது வழக்கம். 

எனது சிந்தனைகள் கேட்கப்படும் ஒரு சூழல் எனக்கு கிடைக்க வேண்டும் என்று அக்காலத்தில் ஏங்கினேன்.

பெண்கள் தலைமை பதிவிகளில்?

மற்ற நாடுகளை விட பெண்கள் இந்தியாவில், அரசியல் ரீதியாக வேகமாக மேல் நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். நிர்வாக அறைகளிலும், தொழில் நிறுவனங்களிலும் பெண்கள் தலைநிமிர்ந்து நிற்க துவங்கியுள்ளனர். ஆனால், இந்த எண்ணிக்கை நாம் எதிர்பார்ப்பதை விடக் குறைவு தான். வருங்காலத்தில் இன்னும் பல பெண்கள் கம்பெனிகளில் முக்கிய பொறுப்புகளில் வருவார்கள் என நினைக்கிறேன்.

(குறிப்பு: ரத்தன் டாட்டாவும், காலரி கேப்பிட்டல் நிறுவனமும் யுவர் ஸ்டோரியின் முதலீட்டாளர்கள்)

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

ரத்தன் டாடா தொடர்பு கட்டுரைகள்:

'ரத்தன் டாடா'- ஸ்டார்ட் அப்களின் காதலர்! 

அடுத்த மாபெரும் புரட்சி? கல்வியை இலவசமாக்க, கான் அகாடமியுடன் கைகோர்க்கும் ரத்தன் டாடா

Add to
Shares
264
Comments
Share This
Add to
Shares
264
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக