பதிப்புகளில்

2018-ல் இணைய உலகை ஆளப்போகும் 5 விஷயங்கள்...

18th Jan 2018
Add to
Shares
18
Comments
Share This
Add to
Shares
18
Comments
Share

2017 ஆம் ஆண்டு இணைய உலகிற்கு பல ஏற்றங்களையும் பல மாற்றங்களையும் பெற்றுத்தந்தது. 'இன்ஸ்டாகிராம்' இணைய பயனாளர்களை சென்றடைவதில் புதிய உச்சத்தை தொட்டது. அதே சமயம் 'பேஸ்புக்கின் திறனிலும் மிகப்பெரிய மாறுதல்கள் நிகழ்ந்தது.

இணைய உலகில் எவர் ஒருவருக்கு மிகுந்த செல்வாக்கு உள்ளதோ, எவர் ஒருவரை அதிகமாக மக்கள் பின்பற்றுகின்றனரோ அவர்கள் 'இன்ஃப்ளுயென்சர்ஸ்' என்ற நட்சத்திரங்களாக தற்போது மின்னுகின்றனர். ஒவ்வொரு நிறுவனமும் தங்களது பொருட்களை, தங்களது தயாரிப்புகளை சந்தைப்படுத்த இவர்களை நாடுகின்றன. அப்படிப்பட்ட அனைத்து திட்டங்களிலும் இவர்களுக்கு இடமுள்ளது. 

image


அடுத்ததாக தொலைதொடர்பு நிறுவனங்கள் குறைந்த கட்டணத்திற்கு பல திட்டங்களை அறிவித்ததால் அனைவராலும் எளிதாக இணையத்தை நாட முடிந்தது. இந்திய மக்கள் முன் எப்போதை விடவும் அதிகமாக காணொளிகளை கண்டுகளித்தனர். 

அப்படி இருக்க இணைய உலகை நம்பி இருப்பவர்கள் அடுத்து வரப்போகும் ஆண்டிற்கு தயாராவது எப்படி? எதன் மீது அவர்கள் கவனம் இருக்க வேண்டும்? காண்போம் வாருங்கள்.

1. கலக்கப்போகும் காணொளி

image


தொலைக்கட்சியில் வரும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியாக இருந்தாலும் அதனையும் காணொளி வடிவில் தான் பலர் கண்டுரசிக்கின்றனர். இணைய உலகில் மிகப்பெரும் சக்தியாக காணொளியும் அவற்றை உருவாக்குபவர்களும் மாறி வருகின்றனர். இப்போது யூ-டியுப்பிற்கு போட்டியாக ஒரு தளத்தை நிறுவும் முயற்சியில் ஃபேஸ்புக் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. கட்டணம் செலுத்தி தேவையான நிகழ்சிகளை திரைப்படங்களை கண்டுகளிக்கும் சேவையளிக்கும் ’நெட்ஃப்லிக்ஸ்’, ’அமேசான் பிரைம்’, ’வூட்’ போன்ற நிறுவனங்களும் நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ளன. நிறுவனங்களும் பாரம்பரிய விளம்பர யுத்திகளை விடுத்து காணொளிகள் பக்கமும், இணைய நட்ச்சத்திரங்கள் பக்கமும் திரும்பியுள்ளன. இப்படிப்பட்ட நிலையில், காணொளிகளை உருவாக்கும் திறமைகளை கற்றுக்கொள்வது முக்கியமானதாகின்றது.

2. சமுக வலைத்தளங்கள் தரும் சந்தர்ப்பங்கள் :

image


நடிகை ஷில்பா ஷெட்டி யோகா கற்றுத்தரும் காணொளியை கட்டாயமாக நீங்கள் பார்த்திருக்க வாய்ப்புள்ளது. அதேபோன்று மல்லிகா அரோராகான், கௌஹர்கான் போல மேலும் பல பிரபலங்களும் தங்களது ’யூ-டியூப்’ தளங்களை துவக்கியுள்ளனர். இத்தளங்கள் சிலசமயம் அவர்களால் அவர்களுக்காக துவக்கப் படுகின்றது, பல சமயங்களில் ஊடக நிறுவனங்களோடு இணைந்து துவக்கப்படுகின்றது. இத்தளங்கள் துணி, யோகா பயிற்சி பதியப்பட்ட குறுந்தகடுகள், என பல்வேறு பொருட்களை அவர்கள் சந்தைபடுத்த உபயோகப்படுகின்றது. தற்போது அனுஷ்கா ஷர்மா, தீபிகா படுகோன் போல மேலும் பலரும் அவர்கள் சொந்தபொருட்களை சந்தை படுத்த இருப்பதால், இந்த போக்கு தொடர்ந்து உயர, வாய்புகள் உள்ளது.

3. கதைகள் சொல்லும் பிராண்டுகள் : 

image


 எந்த பொருளையும் சந்தைப்படுத்த, தற்போது மக்களிடையே அதனை ஆழமாக கொண்டு சேர்க்கும் ஒரு தொடர்பு, அதாவது ஒரு கதை தேவைப்படுகிறது. இதன் காரணமாக ’பிடிஎஸ் (பிஹைன்ட் த சீன்ஸ்)’ எனப்படும் பெரிய பெரிய நிறுவனங்களுக்கு உள்ளே நிகழும் விஷயங்கள், எவ்வித அலங்காரமும் இன்றி சாதாரண மனிதனுக்கு தொடர்புடைய வகையில், அதே சமயம் தங்கள் நிறுவத்தின் பெயரும் மக்கள் மனதில் பதியும் வண்ணம் முன்னெடுத்து வைக்கப்படுகிறது.

சமிபத்தில் இடது கை பழக்கம் உள்ள குழந்தைகளுக்கு ’ஷார்ப்னர்’ பற்றிய ஒரு கடிதம் இணையத்தில் பலரால் வாசிக்கப்பட்டு பாராட்டப்படுள்ளது.

நான்கு வயது இடது கை பழக்கமுள்ள ஒரு குழந்தையின் தாய், தனது சமுக வலைத்தள பக்கத்தில், அனைத்து ’ஷார்ப்னர்களும்’ வலது கை பழக்கமுடைய குழந்தைகளுக்கு உருவாக்கப்படுவதாக ஒரு பதிவிட்டுருந்தார். அதனை பார்த்த ’ஹிந்துஸ்தான் பென்சில்ஸ்’ நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் துறை தலைவர், உடனடியாக இடது கை பழக்கமுடைய குழந்தைகளுக்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட 5 ’ஷார்ப்னர்களை அப்பெண்மணியின் இல்லத்திற்கு அனுப்பினார். அதனோடு விரைவில் இந்த சிக்கலுக்கு தீர்வு காணுவோம் எனவும் கூறி இருந்தார். இதன் மூலமாக வாடிக்கையாளருக்கு மேலும் நெருக்கமாக இருப்பதாக, அவர்களது வாழ்வில் ஒன்றியாதாக ஒரு பிம்பத்தை அவர்களால் உருவாக்க இயன்றது. இந்த போக்கு கட்டாயமாக இவ்வருடம் வளரும்.

4. கூகுள் அறிமுகப்படுத்தும் குரலை அடிப்படையாக கொண்ட தேடுபொறி :

image


இணையத்தை பயன்படுத்துபவர்கள் தற்போது எழுத்து வடிவிலான தகவல்களை தவிர்த்து, அதிகமாக ஒலி, ஒளி வடிவிலான தகவல்களை தேடுவதால், காணொளியை அடிப்படையாக வைத்து, அல்லது பயன்படுத்துபவர் குரலை அடிப்படையாகக் கொண்ட தேடு பொறி உருவாக வாய்ப்பு உள்ளது. இவ்வருடம் இதனை மையமாகக் கொண்டு கூகுள் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. தற்போது ஒரு காணொளியை அதற்கு வழங்கப்பட்டுள்ள விவரத்தை வைத்து தேடு பொறி தேடுகிறது. ஆனால் விரைவில் அந்த காணொளியில் உள்ள குரலின் தன்மை, காணொளியின் தன்மை ஆகியவை வைத்தும் தேட வாய்புகள் உள்ளன. இது மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் வல்லமை படைத்தது.

5. இன்ஸ்டாகிராமில் விளம்பரங்களின் ஆதிக்கம் :

image


சென்ற வருடம் இன்ஸ்டாகிராமின் வருடம் என்று கூறும் அளவிற்கு தினசரி பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 150 மில்லியனில் இருந்து 500 மில்லியனிற்கு சென்றது. எவ்வித சிரமமும் இன்றி இத்தளத்தின் மூலம் அதிக அதிக பிரபலம் அடைய பலரால் முடிந்துள்ளது. மேலும் அதன் காரணமாக அதிகப்படியான விளம்பரங்களும் இங்க உலவத் துவங்கியுள்ளன. இதற்கு மேல் முன்பு போல் இத்தளத்தில் பிரபலமடைவது இயலாது எனவும் வல்லுனர்கள் கணித்துள்ளனர். அதன் காரணமாக மிகப்பெரிய உழைப்பை கொடுத்தால் மட்டுமே இதில் நாம் தனித்து தெரிவோம் எனவும் கூறப்படுகின்றது.

ஆங்கில கட்டுரையாளர்: கரிமா ஜுனேஜா

Add to
Shares
18
Comments
Share This
Add to
Shares
18
Comments
Share
Report an issue
Authors

Related Tags