பதிப்புகளில்

கட்டை விரல் ரேகையை பதித்துவிட்டு விமான நிலையத்தில் இனி நீங்கள் செக்-இன் செய்ய முடியும்!

YS TEAM TAMIL
27th Dec 2016
Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share

விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகள் செக்-இன் செய்து போர்டிங் பாஸ் பெற, இனி விமான நிலையத்தில் நீண்ட வரிசைகளில் நிற்கத் தேவை இருக்கிறது. மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம், பயோமெட்ரிக் முறையில் பயணிகளின் அடையாளத்தை பரீசிலனை செய்து, செக்-இன் செய்ய காத்திருக்கும் நேரத்தை குறைக்க முடிவெடுத்துள்ளனர்.  

image


இனி செக்-இன் செய்ய பயணிகள் செய்யவேண்டிய ஒரே ஒரு வேலை, அவர்களது கைவிரல் ரேகையை பதிவு செய்வதே ஆகும். டிகெட் மற்றும் அதற்குரிய அடையாள ஆவணங்களை காண்பித்து விமான நிலையத்தில் நுழைவதற்கு பதிலாக, கை கட்டைவிரல் ரேகையை பதித்துவிட்டு உள்ளே சென்றுகொண்டே இருக்கலாம். ஆன்லைன் தளங்கள் மூலம் பயணிகள் விமான சேவையை புக் செய்யும்போது ஆதார் அட்டை எண்ணை பதிவு செய்வதனால் டிஜிட்டலாக எல்லா விவரங்களும் இணைக்கப்படுகிறது. இதுவரை 100 கோடி ஆதார் அட்டைகள் அளிக்கப்பட்டுள்ளது. அதை பெற ஒவ்வொருவரும் தங்களின் கருவிழி மற்றும் கட்டை விரல் ரேகையை பதிவிட்டுள்ளனர். இந்த விவரங்கள் தேசிய டிஜிட்டல் பதிவேட்டில் சேர்க்கப்பட்டுள்ளது. ஒருவர் தங்களின் கைவிரல் ரேகையை பதிந்தவுடன் இந்த விவரங்கள் உடனடியாக வந்துவிடும். 

இந்த திட்டத்தின் மாதிரி ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பரிச்சார்த்த முறையில் செய்யப்பட்டு வெற்றி காணப்பட்டுள்ளது. இது குறித்து விமான போக்குவரத்து அமைச்சக மூத்த அதிகாரி இந்தியா டைம்ஸ்க்கு பேட்டி அளிக்கையில்,

“விமான டிக்கெட் புக் செய்யும் போது பயணிகளின் ஆதார் அட்டை எண்ணை கேட்பதில் உள்ள தொழில்நுட்ப முறைகளை ஆராய்ந்து வருகிறோம். விமான நிலையங்களில், வெறும் கட்டை விரல் ரேகையை பதித்துவிட்டு எந்த ஒரு டெர்மினலுக்கும் சென்று அவர்கள் செல்லவேண்டிய உள்நாட்டு விமானத்தில் ஏறி பயணிக்கமுடியும்,” என்றார்.

வெளிநாட்டு பயணங்களுக்கு பாஸ்போர்ட் தேவை இருக்கிறது எனவே இந்த முறை உள்நாட்டு விமான பயணங்களுக்கு மட்டுமே. தி ஹிந்து வெளியிட்டுள்ள செய்தியின் படி, ஹைதராபாத் சர்வதேச விமான லிடட் சிஇஒ எஸ்ஜிகே.கிஷோர் கூறுகையில்,

“ஹைதராபாத்தில் இந்த முறையில், பயணிகளின் அடையாள விவரம் சரிப்பார்க்கப்பட்டதன் வெற்றியை தொடர்ந்து, நாங்கள் UIDAI இடம் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பயண ஏஜென்சியை அடையாளம் கண்டு தர கேட்டுள்ளோம்,” என்றார். 

இந்திய விமான பயணிகள் இந்த முறையை வரவேற்றுள்ளனர். கூட்டம் நிறைந்த விமான நிலையங்களான ஹைதராபாத், பெங்களுரு, சென்னை, டெல்லி மற்றும் மும்பையில் இந்த முறையில் செக்-இன் செய்வதனால் கவுண்டர்களில் நெரிசல் ஏற்படாமல் சுலபமாக இருக்கும் என்று தெரிகிறது. 

கட்டுரை: Think Change India

Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக