பதிப்புகளில்

இந்தியா முழுதும் 10 ஆயிரம் கிமி தூரம் பைக் பயணம் மேற்கொண்ட 50 பெண்கள்!

29th Aug 2017
Add to
Shares
154
Comments
Share This
Add to
Shares
154
Comments
Share

குஜராத்தின் ‘பைகிங் க்வீன்ஸ்’ ‘Biking Queens’ பிரதமர் நரேந்திர மோடியை தங்களது 10 ஆயிரம் கிமி தூரப்பயணத்தை முடித்துக்கொண்டு சந்தித்தனர். பைக் பயணத்தை சமூக விழிப்புணர்வுக்காக மேற்கொண்டனர் இந்த பெண்கள். ‘பேட்டி பச்சாவோ’ (பெண்களை பாதுகாப்போம்), ‘பேட்டி படாவோ’ (பெண்களுக்கு கல்வி அளிப்போம்) மற்றும் ‘ஸ்வச் பாரத்’ திட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 15 மாநிலங்களை 45 நாட்களில் கடந்து வந்துள்ளனர் குஜராத் பைக் பெண்கள். 

image


சுமார் 50 பெண்கள் அடங்கிய குழுவில், பலத்தரப்பட்ட சூழ்நிலைகளில் இருந்தவர்கள் அடங்கும். ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராவோர், வீட்டுப்பெண்கள், மருத்துவர்கள், எஞ்சினியர்கள் மற்றும் மாணவிகள் என்று பலர் பைக் பயணத்தில் கலந்துகொண்டனர். பல்வேறு பின்னணியுடன் பல போராட்டங்களை சந்தித்த இப்பெண்கள் இந்த சமூக பணிக்காக ஒன்றிணைந்தனர். ஹிந்துஸ்தான் டைம்ஸ் பேட்டியில் பேசிய பெண்மணி நான்சி பாடிவாலா,

“அரசு அறிவித்துள்ள பல திட்டங்கள் நகரங்களில் சென்று அடைந்து போதிய விழிப்புணர்வை பெற்றுள்ளது. ஆனால் ஊரகப் பகுதிகள் மற்றும் சிறு கிராமங்களுக்கு பல முக்கிய திட்டங்கள் சென்றடையவில்லை,” என்றார். 

கல்வி மூலம் இந்திய ஊரகப் பெண்களை மேம்படுத்தமுடியும் என்று நம்புகிறார் நான்சி. இவரைப் போலவே இக்குழுவில் இடம் பெற்ற ஒவ்வொரு பெண்ணும் தங்களால் முடிந்த வகையில் மாற்றத்தை கொண்டுவர முயற்சிக்கின்றனர். இதற்காக பைக் பயணம் செய்து இந்தியாவில் பல பகுதிகளை கடந்துள்ளனர். 

பைக் என்பது ஆண்களுக்கு மட்டும் என்பதை உடைத்து பெண்களால் எல்லாம் சாத்தியம் என்பதை காட்டவே இப்பெண்கள் பைக் பயணம் மேற்கொண்டனர். இதன் மூலம் பல பகுதி மக்களை சென்றடைய முடியும் என்று நம்பிக்கை கொண்டனர். 

image


10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரப் பயணம் செய்த பின், லடக்கில் கர்துங் லா என்ற பகுதியில் ஆகஸ்ட் 15-ம் தேதி தேசிய கொடியை ஏற்றி பயணத்தை நிறைவு செய்தனர். உயரமான பகுதியான அந்த இடத்தில் கொடியை ஏற்றியதன் மூலம் பெண்களுக்கு இச்சமூகத்தில் உயரிய இடம் கிடைக்கவேண்டும் என்பதை உணர்த்தியுள்ளனர். 

பெண் சிசுக்கொலை, பாலின சமன்பாடு, பெண்களுக்கு கல்வி என்று பல முக்கிய விஷயங்களை இந்த பயணம் மூலம் நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளனர் பைக் ராணிகள். 

கட்டுரை: Think Change India

Add to
Shares
154
Comments
Share This
Add to
Shares
154
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக