பதிப்புகளில்

புதுத் தொழிலில் வெற்றி பெற கடைபிடிக்க வேண்டிய ஐந்து விதிகள்

26th Feb 2016
Add to
Shares
745
Comments
Share This
Add to
Shares
745
Comments
Share

புதிதாக ஒரு தொழிலை அடியிலிருந்து துவங்கி வளர்ப்பதென்பது ஒரு சவாலான, உற்சாகமான வேலை. கடந்த மூன்று வருடங்களாக ஒரு தொழில் முனைவராக இருக்கும் அனுபவத்தில் நான் கண்டறிந்த சில விஷயங்களை இங்கே பகிர்கிறேன். புதிதாக ஒரு தொழிலைத் தொடங்கும் அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய ஐந்து விதிகள் இதோ.

image


1. தெளிவாக விவரியுங்கள்: உங்கள் தொழில் முயற்சியைப் பற்றி தெளிவாக விவரிக்க தயார் செய்து கொள்ளுங்கள். இந்தக் கேள்விகளுக்கான விடைகளைத் தயார் செய்வதன் மூலம் உங்கள் தொழிலைப் பற்றிய சிறுகுறிப்பை உருவாக்கிவிட முடியும்.

* உங்கள் தொழில் முயற்சி எந்தப் பிரச்சனைக்கு தீர்வு என்று நினைக்கிறீர்கள்?   * யாரெல்லாம் இப்போது அந்த பிரச்சனையால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்?                * எப்படி அந்த சிக்கலை தீர்க்க யோசித்திருக்கிறீர்கள்?

ஒரு உதாரணம்: வளரும் நாடுகளில் உணவு பதப்படுத்துவதில் உள்ள சிரமங்களைப் போக்க வேண்டும் என்பதே என் குறிக்கோள். இங்கு விளைச்சலில் கிட்டத்தட்ட 40% வரை சரியானபடி சேமிக்காததால் வீணாகிறது. கிராமப்புறங்களில் விளைபொருட்களை பக்குவமாக சேமிக்க வசதிகள் இல்லாமல் போவதால்தான் உணவுப் பொருட்கள் மழையாலும், பூச்சிகளாலும் வீணாகின்றன. ஒவ்வொரு கிராமத்திலும் விளைபொருட்களை சேமித்து வைப்பதற்கான கிடங்குகளை நவீன வசதிகளுடன் திறப்பதே எனது நோக்கம்.

2. உங்கள் வாடிக்கையாளர் யார் என்பதை தீர்மானியுங்கள்: உங்கள் சேவையின் இலக்கு யார் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். உங்கள் வாடிக்கையாளர்களைப் பற்றி புரிந்து கொள்வதே உங்கள் வெற்றியின் அடிப்படை. எனவே உங்கள் வாடிக்கையாளர்கள் அனைவரும்

• ஒரே மாதிரியான தேவை உள்ளவர்களாக இருக்க வேண்டும்

• ஒரே கட்டணத்தில் அவர்களனைவருக்கும் உங்களால் சேவையளிக்க முடிய வேண்டும்.

• அவர்களின் வாங்கும் திறனும் ஒன்று போல இருக்க வேண்டும்

வாடிக்கையாளர்களின் நாடியை புரிந்து கொள்ளுங்கள்: ஒட்டுமொத்தமாக உங்கள் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இருக்கும் பொதுத்தன்மையை புரிந்து கொள்ளுங்கள். வாடிக்கையாளர்களைப் பற்றிய பின் வரும் தகவல்களை சேகரியுங்கள்.

* அவர்களின் வயது                                                                        * அவர்களின் பாலினம்                                                                    * தொழில்                                                                                 * அவர்களைத் தூங்க விடாமல் துரத்தும் முக்கியப் பிரச்சனை                               * வாழுமிடம் (கிராமம்/நகரம்/புறநகர்)                                                       * அவர்களின் பொருளாதார பின்புலம்

அவற்றை ஆராய்ந்து பார்ப்பதன் மூலம் உங்களின் ஒரு சராசரியான வாடிக்கையாளர் எப்படி இருப்பார், அவரது தேவை என்ன போன்றவற்றை மிகத் துல்லியமாக கணிக்க முடியும்.

ஈ.டி.எக்ஸ் தளத்தில் உள்ள இந்த கோர்ஸை நான் சிபாரிசு செய்கிறேன்

3. போட்டியை தவிருங்கள்: புதிதாகத் தொடங்கும் தொழிலில் ஏற்கனவே வளர்ந்து நிற்கும் நிறுவனங்களுடன் போட்டி போட முயல்வது புத்திசாலித்தனமானது அல்ல. அப்படி போட்டியிட்டே தீர வேண்டிய சூழல் என்றால் உங்களின் தயாரிப்பு போட்டியாளர்களின் தயாரிப்பை விட பத்து மடங்கு தரமானதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

4. ஏகாதிபத்ய (monopoly) மனநிலைக்கு மாறுங்கள்: பொதுவாக நம் சமூகத்தில் தனியுரிமை அடைய நினைப்பதை ஒரு குற்றச் செயலாகவே பார்ப்போம். ஏனென்றால் அங்கே சேவைக்கான விலை, தரம் போன்றவற்றை தீர்மானிக்கும் ஒரே சர்வாதிகாரியாக அந்நிறுவனம் இருக்கும் என்பதால். ஆனால் புதிதாக தொழில் தொடங்கும் போது நமது நிறுவனம் மட்டுமே சந்தையில் நிலைக்க வேண்டும் என்ற ஊக்கத்துடன் துவங்கினால் மட்டுமே மிகத்தரமான வாடிக்கையாளர் சேவையை வழங்க முடியும்.

- கூகிள் தேடுபொறி                                                                     - ஃபேஸ்புக்                                                                               - வாட்ஸ் அப்                                                                              - இந்திய ரயில்வே                                                                        - யுனிலீவர்                                                                               - மேஜைக் கணிணிக்கான மைக்ரோசாஃப்டின் விண்டோஸ் இயங்கு தளம்

ப்படி தன்னிகரில்லாமல் ஒற்றை நிறுவனமாக அற்புதமான சேவை அளிக்கும் பல்வேறு நிறுவனங்களைப் பார்த்து அவர்களின் வெற்றி ரகசியத்தை புரிந்து கொள்வது நலம்.

5. உங்களது தயாரிப்புக்கான முன் மாதிரியை வடிவமையுங்கள்: மனதில் தோன்றும் எல்லா யோசனைகளையும் குறித்து வையுங்கள். மிகவும் அற்பமாகத் தோன்றும் எண்ணங்களைக் கூட விட்டுவிடாதீர்கள். எல்லாவற்றையும் தொகுத்துப் பார்க்கையில் உங்களுக்கு ஒரு வரிவடிவம் கிடைக்கும். அதை அடிப்படையாகக் கொண்டு முதல் தயாரிப்பை ஆரம்பியுங்கள். 

image


குறை நிறைகளைப் பற்றிய வாடிக்கையாளர்களின் கருத்துக்களுக்கு காதுகளை திறந்து வையுங்கள். தொடர்ந்து பயனாளிகள் தரும் பின்னூட்டங்களை உங்கள் தயாரிப்பை இன்னும் நேர்த்தியாக்கப் பயன்படுத்திக் கொண்டே இருங்கள்.

image


வாடிக்கையாளர்களின் பாராட்டுக்களை அள்ளிக் குவிக்கும் வரை ஓயாது மேம்படுத்திக் கொண்டே இருங்கள். வெற்றி உங்களுடையதே! 

கீழ்காணும் நூல்கள் உங்களுக்கு உதவக்கூடும்...

image


ஆங்கிலத்தில்: Saurabh Singh | தமிழில்: எஸ்.பாலகிருஷ்ணன்

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

வெற்றி தலைக்கு ஏறக்கூடாது: நவீன் திவாரி

உங்கள் வர்த்தகம் வளர கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!

Add to
Shares
745
Comments
Share This
Add to
Shares
745
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக