பதிப்புகளில்

”உலகில் அனைவரும் குறிக்கோளுடன் வாழவேண்டும்”- ஹார்வர்டில் கெளரவ பட்டம் பெற்ற ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க்!

YS TEAM TAMIL
26th May 2017
Add to
Shares
28
Comments
Share This
Add to
Shares
28
Comments
Share

மார்க் ஜூக்கர்பெர்க், ஃபேஸ்புக் நிறுவனர் மற்றும் சிஇஒ ஹார்வர்ட் பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு மற்றும் 366-வது தொடக்க தினமான நேற்று சிறப்பு பேச்சாளராக அழைக்கப்பட்டிருந்தார். ஹார்வர்ட் கல்லூரியில் இருந்து இடைநிற்றல் செய்த மார்க், ஹார்வர்ட் பல்கலையில் கெளரவ பட்டத்தை பெறவும் நேற்று வந்திருந்தார். 

குழுமியிருந்த மாணவ-மாணவிகள் மற்றும் பங்கேற்பாளர்களிடம் பேசிய மார்க், தற்போதுள்ள தலைமுறை பற்றி தான் கற்றுக்கொண்டதை பகிர்ந்து கொண்டார். அவரது சிறப்புரையில் இருந்து சில முக்கிய அம்சங்களில் தொகுப்பு:

மார்க் ஜுக்கர்பர்க் பெற்றோர்கள் உடன் கெளரவ பட்டம் பெற்றபோது

மார்க் ஜுக்கர்பர்க் பெற்றோர்கள் உடன் கெளரவ பட்டம் பெற்றபோது


2017 ஆம் ஆண்டு பட்டம் பெறும் மாணவ-மாணவிகளிடம் மார்க் ஜூக்கர்பெர்க் வேடிக்கையாக கூறினார், 

”உங்கள் மத்தியில் இருப்பதை நான் பெருமையாக நினைக்கிறேன், ஏனெனில் நான் செய்யமுடியாததை நீங்கள் இன்று செய்துள்ளீர்கள். இன்று நான் என் பேச்சை முழுமையாக முடித்துவிட்டால், ஹார்வர்டில் ஒரு விஷயத்தை முழுமையுடன் முடித்தது இதுவே முதல் முறையாகி விடும்,” என்றார் சிரித்துக்கொண்டே. 

படிப்பை பாதியில் விட்டிருந்தாலும், தானும் 2017-ல் பட்டம் பெறும் மாணவர்களின் தலைமுறையை சேர்ந்தவன் என்றார். 

“பத்தாண்டுக்கு முன்பு இதே இடத்தில் நாங்கள் நடந்து கொண்டிருந்தபோதும், இதே ஐடியாக்களை பற்றி படித்தோம், பல வகுப்புகளுக்கு இடையில் தூங்கிவிடுவோம்.”

பழைய நினைவலைகளில் இருந்து

கடந்த சில தினங்களாக பழைய நினைவுகள் என் மனதில் ஓடியது என்றார் ஜூக்கர்பெர்க். ஹார்வடில் இருந்து அட்மிஷன் கடிதம் கிடைத்தபோது, நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று உங்களில் எத்தனை பேருக்கு நினைவு இருக்கிறது என்று கூட்டத்தை நோக்கி கேட்டார் மார்க். 

தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்த அவர், அப்போது வீட்டின் மாடியில் வீடியோ கேம்ஸ் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், ஹார்வர்ட் அட்மிஷன் கடிதம் வந்தபோது கீழே இருந்து தன் அப்பாவின் முன் அதை படித்ததாகவும், அதை அவர் படம் எடுத்தார் என்றும் கூறினார். 

ஹார்வர்டில் தன் முதல் வகுப்பு பற்றி நினைவுக்கூறுகையில், 

“நான் வகுப்புக்கு டி-சர்ட்டை திருப்பி அணிந்து கொண்டு சென்றேன். என்னிடம் ஏன் யாரும் பேசவில்லை என்றும் குழம்பி போனேன். காங்-ஜிங்-ஜின் என்ற ஒரே ஒரு மாணவர் மட்டுமே என்னிடம் பேசினார். உங்களுக்கு ஒன்று தெரியுமா? ஜின் இன்று ஃபேஸ்புக்கில் பெரிய பதவியில் உள்ளார். அதற்குத்தான் சொல்கிறேன் நீங்கள் எல்லாரிடமும் அன்பாக இருங்கள்...“ என்றார் சிரித்தப்படி.

அதைவிட சுவாரசியமான ஒரு விஷயத்தை ஹார்வர்ட் எனக்கு அளித்தது. ஆம் என் மனைவி ப்ரிசில்லாவை நான் இங்கே தான் சந்தித்தேன் என்றார். 

“ப்ரிசில்லா எனக்கு கல்லூரியில் நண்பரனார். ஒருமுறை நண்பர்கள் பார்ட்டியில் அவரை சந்தித்தேன். ஃபேஸ்மாஷ் தயாரித்ததற்காக என்னை துரத்த இருந்தனர், என் நண்பர்கள் என் உடன் இருந்தனர். இங்கு கிடைத்த நண்பர்கள் அனைவரும் தற்போதும் என்னுடன் உள்ளனர். நாங்கள் குடும்பத்தை போல இன்றும் பழகுகிறோம். ஹார்வர்ட் ஒர் அற்புதமான இடம், இன்றும் இந்த இடத்துக்கு நான் கடமைப் பட்டிருக்கிறேன்.” 
மார்க் ஜுக்கர்பர்க் தங்கிய ஹாஸ்டல் அறை

மார்க் ஜுக்கர்பர்க் தங்கிய ஹாஸ்டல் அறை


வாழ்க்கையில் குறிக்கோள் கொள்வது

இன்று நான் குறிக்கொள் பற்றி பேசப்போகிறேன். ஆனால் எல்லாரும் சொல்வதை போல பொதுவான ஒன்றாக அது இருக்காது. நாம் அனைவருமே சாதனை செய்யக்கூடிய தலைமுறையை சேர்ந்தவர்கள், நம் உள்ளுணர்வில் இருந்து அதை செய்யத் துடிப்பவர்கள். நீங்கள் உங்கள் குறிக்கோளை கண்டுபிடிப்பது மட்டும் போதாது என்று சொல்ல விரும்புகிறேன். 

இவ்வுலகில் வாழும் அனைவரையும் ஓர் குறிக்கோளுடன் வாழவைப்பதே இன்றைய தலைமுறையினரின் சவாலாக இருக்கிறது. ஜேஎப்கே நாசா விண்வெளி மையத்துக்குச் சென்றதை பற்றி விவரித்தார் ஜூக்கர்பர்க். அப்போது அங்கிருந்த வாயிற்காவலர் ஒருவரை அழைத்து அங்கே என்ன நடக்கிறது என்று ஜேஎப்கே கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த காவலர், ”மிஸ்டர் ப்ரெசிடெண்ட், ஒரு மனிதனை நிலவுக்கு அனுப்பும் முயற்சியில் நானும் உதவி செய்கிறேன்” என்றார்.

நமது குறிக்கோள் என்பது ஒரு பெரிய விஷயத்தில் தனது பங்கு இருக்கிறது என்று நினைப்பதும் தான். “குறிக்கோள் தான் உண்மையான மகிழ்ச்சியை உருவாக்கும்.”

தலைமுறை மாற்றங்கள் பற்றி குறிப்பிட்ட மார்க், 

“கடந்த தலைமுறையினர் படித்து முடித்ததும் பணிக்கு செல்வதை, சிலர் சர்ச்சுக்கு செல்வதை, சமூகத்துடன் வாழ்வதை குறிக்கோளாக கொண்டிருந்தனர். ஆனால் தற்போது தொழில்நுட்பம் மற்றும் இயந்திரமயம் பணிகளை சுலபமாக்கிவிட்டது. சமூக ஒற்றுமை குறைந்துள்ளது, பலரும் ஒருவரோடு ஒருவர் தொடர்பில் இல்லாமல் மன உளைச்சலில் உள்ளனர்,” என்றார். 

நம் சமூகம் முன்னேற பல சவால்கள் உள்ளது. புதிய பணி வாய்ப்புகளை உருவாக்குவதோடு, அர்த்தமுள்ள குறிக்கோள்களை கொள்வதும் ஆகும். 

ஃபேஸ்புக்கின் ஆரம்ப நாட்களை குறிப்பிட்ட மார்க், ஹார்வர்ட் சமூகத்தை இணைத்தால், அதே போல் மற்றொருவர் உலகை இணைப்பார் என்று நினைத்தேன். 

“பெரிய தொழில்நுட்ப ஜாம்பவான் நிறுவனங்கள் தங்களிடம் உள்ள வசதிகளை கொண்டு இதை சாத்தியமாக்குவர் என்று எதிர்ப்பார்த்தோம்.”

தான் செய்த தவறை மீண்டும் செய்வது சுலபம் என்று கூறிய ஜூக்கர்பர்க், “குறிக்கோள் மட்டும் கொள்வது போதுமானதல்ல. பிறருக்கு உதவக்கூடிய அதற்கான ஒரு அர்த்தத்தை உருவாக்குவதும் முக்கியம். நான் கடினமான பாதையை தெரிவு செய்தேன். ஒரு நிறுவனத்தை தொடங்குவது என் கனவாக இல்லை, தாக்கத்தை ஏற்படுத்தவே நினைத்தேன். 

ஃபேஸ்புக்கில் பலரும் இணைந்ததும், நான் அவர்களுக்கு என் நோக்கம் புரிந்ததாகவே தவறாக எண்ணினேன் ஏனெனில் நான் நிறுவனத்தின் குறிக்கோளை சரிவர அவர்களிடம் விவரிக்கவில்லை என்று தெரிந்து கொண்டேன். சில வருடங்களுக்கு பின், ஒரு பெரிய நிறுவனம் ஃபேஸ்புக்கை கையகப்படுத்த கேட்டபோது, நான் பல மக்களை இதில் இணைக்க விரும்பினேன், அப்படி உருவானதே நியூஸ்ஃபீட் பிரிவு. ஆனால் பலரும் என்னை அப்போது நிறுவனத்தை விற்கவே சொன்னார்கள்.

”பெரிய குறிக்கோள் ஏதுமின்றி இதுவே ஒரு ஸ்டார்ட்-அப்பின் கனவு மெய்யாகும் வேளை என்று நினைத்தனர். அது எங்கள் நிறுவனத்தை கிழித்து எரிந்தது.” 

பல வழிகாட்டிகள் என்னை அந்த நிலையில் நிறுவனத்தை விற்க அறிவுறித்தனர். மேலும் நான் அவ்வாறு செய்யாவிட்டால் வாழ்நாள் முழுதும் அதற்காக வருத்தப்படுவேன் என்றும் சொன்னார்கள். அப்போது தான் நான் ஃபேஸ்புக்கை முன்னெடுத்து செல்ல சிரமப்பட்ட சமயம். 

“நாங்கள் செய்வதை நான் முழுவதுமாக நம்பினேன், ஆனால் அதில் தனிமையை உணர்ந்தேன்.”
image


இப்போது பார்த்தால், ஒருவர் ஒரு உயரிய குறிக்கோள் இல்லாமல் இருந்தால் இதுபோல் நடந்திருக்குமா என்று உணர்கிறேன் என்றார் மார்க். மேலும் பேசிய அவர், இவ்வுலகில் வாழும் அனைவருக்கும் குறிக்கோளின் முக்கியத்துவத்தை புரியவைக்க மூன்று முக்கிய வழிகளை பகிர்ந்து கொண்டார்:

1. பெரிய, அர்த்தமுள்ள ப்ராஜக்ட்களை கையாளுங்கள்

ஒவ்வொரு தலைமுறைக்கும் குறிப்பிடத்தக்க சாதனைகள் இருக்கும். சுமார் 3 லட்சம் பேருக்கு மேல் ஒரு மனிதனை நிலவுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர். உலகில் உள்ள குழந்தைகளை போலியோவில் இருந்து தடுக்க தடுப்பூசி போட லட்சக்கணக்கான தன்னார்வலர்கள் பங்கு கொண்டுள்ளனர். இது போன்ற ப்ராஜக்டுகளெல்லாம் ஒரு அர்த்தத்தை தருகிறது. இவை வெறும் வேலை மட்டுமல்ல ஒருவித மனநிறைவை தரும் செயல்கள். 

தொடக்கத்திலேயே முழு ஐடியாவும் வந்துவிடாது. அதில் பணிபுரியும் போதுதான் தெளிவு கிடைக்கும். ஆனால் தொடங்கவேண்டியதே முக்கியம். நான் மக்களை இணைக்கவேண்டும் என்று மட்டுமே நினைத்தேன், ஆனால் அது எப்படி என்ன என்று எல்லாவற்றையுமே ஆரம்பத்தில் யோசிக்கவில்லை. அப்படி எல்லாம் நினைத்திருந்தால் ஃபேஸ்புக் என்பதை தொடங்கி இருக்கவே மாட்டேன் என்றார் மார்க். 

2. சமத்துவத்தின் மறுவரையறை

நமது பெற்றோர்கள் தலைமுறையை சேர்ந்தவர்களுக்கு நிலையான வேலை இறுதி வரை இருந்தது. ஆனால் தற்போதுள்ள இளைஞர்கள் தொழில்முனைவு பாதையில் செல்கின்றனர். புதிய எண்ணங்களை செயல்படுத்த இது உதவுகிறது. தோற்பதில் சுதந்திரம் இருந்ததாலேயே தன்னைப் போல ஜேகே.ரெளலிங், பியான்ஸ் போன்றோர் இன்று அசாத்திய வெற்றியை அடைந்துள்ளனர் என்றார் மார்க். 

ஆனால் இன்றைய உலகில் உள்ள செல்வ சமத்துவமின்மை பலரை வேதனையில் ஆழ்த்துகிறது. அதை மேலும் விவரித்த ஜுக்கர்பர்க்,

“நாம் இதை சந்திப்போம். நமது அமைப்பு முறையில் தவறு இருக்கிறது. கல்லூரிப் படிப்பை பாதியில் விட்ட நான் பத்தாண்டுகளில் பில்லியன் டாலர்களை சம்பாதிக்க முடிகிறது, ஆனால் மறுபக்கம் மில்லியன் மாணவர்கள் தங்களின் கல்விக்கடனை கூட அடைக்கமுடியாமல் தவிக்கின்றனர். இதற்கு தீர்வு எல்லாரும் தொழிலில் இறங்குங்கள்.”

நான் பல தொழில்முனைவோர்களை அறிவேன், ஆனால் அதிகளவில் சம்பாதிக்கமுடியாது என்ற காரணத்தால் தொழிலை தொடங்காமல் போனவர்களை சந்தித்ததில்லை. ஆனால் தொழிலில் தோல்வியடைந்தால் கைக்கொடுக்க போதிய நிதி உதவி இல்லாததால் தங்கள் கனவுத் தொழிலை தொடங்காமல் போன பலரை தெரியும் என்றார். 

அவரவரின் விருப்பத்திற்கு ஏற்ப சுதந்திரமாக வாழவிடுங்கள். என்னை போன்றோர் உங்களுக்கு உதவுவார்கள், நீங்கள் அனைவரும் நன்றாக வருவீர்கள். இதற்காகத் தான் நானும் ப்ரிசில்லாவும் ‘ச்சான் ஜூக்கர்பர்க்’ முயற்சியை தொடங்கியுள்ளோம். இதன் மூலம் சமத்துவ முறையில் செல்வம் அனைவரையும் சென்றடையவேண்டும். இதுவே நம் தலைமுறையின் மதிப்பாக இருக்கும். 

3. சமூகம் கட்டமைத்தல்

இந்த கால இளைஞர்கள் மத்தியில் ஒரு சர்வே எடுத்தபோது, பலரும் தங்களின் ஜாதி, மதம், ஊர், இதையெல்லாம் தாண்டி தாங்கள் இவ்வுலகின் குடிமகன் என்றே பதிலளித்தனர். உலகம் ஒன்றுகூடியே ஒரு சமூகத்தை உருவாக்கமுடியும் என்று தான் நம்புவதாக கூறினார் மார்க் ஜுக்கர்பர்க். 

நம் தலைமுறை பல வாய்ப்புகளை உலக அளவில் ஏற்படுத்தும், வறுமையை ஒழிக்கும், பல நோய்களை முறியடிக்கும். உலக வெப்பமயமாக்கலை எதிர்த்து எந்த ஒரு நாடும் தனியாக போராட முடியாது. ஊர் அல்லது நாட்டை தாண்டி உலக அளவில் சமூகங்கள் ஒன்று கூடினால் மட்டுமே முன்னேற்றம் என்பது இனி சாத்தியம் ஆகும். 

”சமூகம் வாழ்வின் அர்த்தத்தை கற்பிக்கும். வீடு, விளையாட்டு, கடவுள், இசைக்குழு என்று எந்த சமூகமாக இருந்தாலும், நாம் தனியாக இல்லை ஒரு பெரிய குழுவாக உள்ளோம் என்ற உணர்வை தரும்.”

மாற்றம் உள்ளூரில் இருந்து தொடங்கவேண்டும். பெரிய இலக்கை அடைய, சிறிய முயற்சியாக உலக மக்கள் அனைவரும் ஒன்று கூடி, சமூகத்தை உருவாக்கி, குறிக்கோளுடன் கூடிய குடிமக்களை கொண்ட உலகை கட்டமைக்க வேண்டும் என்றார்.

பட்டம் பெறும் மாணவர்களை நோக்கி இறுதியாக பேசிய ஜுக்கர்பர்க், எனக்கு சவால்கள் வரும் போதெல்லாம் நான் இந்த வாக்கியத்தை நினைவுப் படுத்திக்கொள்வேன் என்று அதை கூறினார்,

“நமக்கு முன்பு வாழ்ந்தோரை வாழ்த்திய வலிமையின் ஆதாரம், நமக்கும் துணிவை கொடுத்து வழி கிடைக்க உதவி, ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்வை நமக்கும் அளிக்கட்டும்...!” 

நீங்களும் உங்கள் வாழ்வை துணிவுடன் எதிர்கொண்டு சிறந்த வாழ்க்கையை பெற விரும்புகிறேன் என்று தனது உரையை முடித்துக் கொண்டார் மார்க் ஜுக்கர்பர்க்.

ஜுக்கர்பர்கின் காணொளியை காண இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Add to
Shares
28
Comments
Share This
Add to
Shares
28
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக