பதிப்புகளில்

தொடக்கநிலை ஸ்டார்ட்-அப்’களுக்கு உதவும் 200 கோடி ரூபாய் விதைநிதி உதவி திட்டம் அறிமுகம்!

YS TEAM TAMIL
14th Jun 2018
Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share

க்ரிஷ் கோபாலகிருஷ்ணன் மற்றும் எஸ்டி ஷிபுலால் பின்னணியில் நடைப்பெறும் ஆக்சிலார் வென்சர்ஸ், தொடக்க நிலை ஸ்டார்ட்-அப்களுக்கு விதை நிதியாக ‘ஆக்சிலார் டெக்னாலஜி ஃபண்ட்’ என்ற பெயரில் 200 கோடி ரூபாய் முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

ப்ரீ சிரீஸ் ஏ மற்றும் சிரீஸ் ஏ முதலீடுகளை திறன்மிக்க ஸ்டார்ட்-அப்கள் பெற தங்களின் விதை நிதி உதவிகரமாக இருக்கும் என்று ஆக்சிலார் வென்ச்சர்ஸ் தலைவர் க்ரிஷ் கோபாலகிருஷ்ணன்.

ஆக்சிலார் வென்ச்சர்ஸ் தலைவர் க்ரிஷ் கோபாலகிருஷ்ணன்

ஆக்சிலார் வென்ச்சர்ஸ் தலைவர் க்ரிஷ் கோபாலகிருஷ்ணன்


“ஆரம்பக்கட்டத்தில் இருக்கும் ஸ்டார்ட்-அப்’களின் சவால்களை களையவே முயற்சிக்கிறோம். ஆக்சிலார் டெக்னாலஜி ஃபண்ட் நிறுவனர்களுக்கு ஒரு கூடுதல், முக்கிய தளமாக அமையப்போகிறது,” என்றார்.

ஆக்சிலார் டெக்னாலஜி ஃபண்ட் முதல் பிரிவான ‘ஆல்டர்னேட் இன்வெஸ்ட்மெண்ட் பண்ட்’ Alternative Investment Fund (AIF) சுமார் 3 கோடி அளவில் முதலீடு செய்ய உள்ளது. இது விதைநிதிக்கு முன்னதான ஒரு முதலீடாகவும், விதை நிதி அளவிலும் இருக்கும். 10 ஆண்டு கால முதலீட்டில், ஆக்சிலார் ஐந்து முதல் ஏழு விதை நிதி முதைலீட்டை ஒவ்வொரு ஆண்டும் செய்யும்.

மீடியா/உள்ளடக்கம், நுகர்வோர் தொழில்நுட்பம், எண்டர்பிரைஸ், தீவிர தொழில்நுட்பம்/ ஏஐ, ஃபிண்டெக் மற்றும் ஹெல்த்கேர் ஆகிய துறைகளில் முதலீடு செய்யப்படும் என்று க்ரிஷ் கோபாலகிருஷ்ணன் கூறினார். 

“இந்த முதலீடு டெக் ஸ்டார்ட்-அப்’களை அதன் குறிப்பிட்ட துறையில் வருங்காலத்தில் ஒரு தலைச்சிறந்த நிறுவனமாக்க வழி செய்யும்,” என்றார்.

இந்திய ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழல் பற்றி விவரித்த க்ரிஷ், ஃப்ளிப்கார்ட்-வால்மார்ட் டீலை அடுத்து பார்த்தால், வெற்றி மென்மேலும் வெற்றியை கொண்டுவரும் என்றார்.

“ஒரு சிறந்த தொழில்முனைவர்களால் மட்டுமே சிறந்த விசி முதலீட்டாளர்கள் ஆகமுடியும். அவர்கள் தங்களின் சேமிப்பை தாங்கள் உள்ள அதே தொழில்முனைவுச் சூழலில் முதலீடு செய்கின்றனர். முதற்கட்டத்தில் ஐடி துறையை சேர்ந்தவர்களே முதலீட்டாளர்களாக இருந்தனர். பின்னர் ஃப்ளிப்கார்ட் நிறுவனர்கள் போன்றவர்களிடம் இருந்து முதலீடு கிடைக்கும். அவர்களின் வெளியேற்றம் ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழலில் ஒரு அலையை ஏற்பத்தி மேலும் வெற்றிக்கதைகளை கொண்டு வரும். நாம் செல்லும் இப்பாதை சரியானதே,” என்றார். 

கடந்த ஆண்டு 37 புதிய முதலீடுகளை ஏற்கனவெ உள்ள மற்றும் புதிய விசி நிறுவனங்களிடம் இருந்து ஸ்டார்ட்-அப்கள் பெற்றும் சிரீஸ் ஏ நிதி இல்லாமை நிலவுகிறது. 

ஆக்சிலார் வென்ச்சர்ஸ் இணை நிறுவனர் மற்றும் சிஇஒ கணபதி வேணுகோபால் கூறுகையில்,

“ஆக்சிலார் டெக்னாலஜி பண்ட்; உயர்தர ஸ்டார்ட்-அப்களிடையே நிலவும் பிரச்சனைகளுக்கு உதவும். அதுவே சிரீஸ் ஏ நிதி. அது 12 மாத நேரத்தில் ரெடியாகிவிடும்,” என்றார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் 38 முதலீடுகள் செய்து, தற்போது 20 ஸ்டார்ட்-அப்கள் அடங்கிய ஏழாவது பேட்சை ஆக்சிலார் திட்டம் பெற்றுள்ளது. இரண்டாம், மூன்றாம் கட்ட நகரங்களில் உள்ள சிறந்த ஸ்டார்ட்-அப்களை கண்டறிய, ஹெட்ஸ்டார்ட் எனும் கூழுவுடன் இணைந்து ஆக்சிலார் விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளது. 

”எங்கள் திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் 90% ஸ்டார்ட்-அப்கள் மெட்ரோ நகரங்களில் உள்ளன. 50% பெங்களுருவிலும் மீதி மற்ற நகரங்களில் இருக்கின்றது. ஜெய்பூர் போன்ற சிறிய நகரங்களில் இருந்தும் பல ஸ்டார்ட்-அப் கள் ஆக்சிலார் திட்டத்துக்கு வருகின்றனர்,” என்றார் வேணுகோபால். 

ஆங்கில கட்டுரையாளர்: தீப்தி நாயர் | தமிழில்: இந்துஜா ரகுனாதன்

Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக