பதிப்புகளில்

வனப் பயண விரும்பிகளை ஒன்றிணைத்த எம்பிஏ பட்டதாரிகள்

siva tamilselva
12th Nov 2015
Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share

நான் தேசிய பூங்கா ஒன்றிற்குச் சென்ற போது காடுகளின் சத்தமும் நிசப்தமும் முதன் முதலாக என்னைத் தொட்டுச் சென்றன. வன உலகில் நீங்கள் நுழையும் போது ஏற்படும் எண்ணிலடங்கா அனுபவங்கள் உங்கள் உணர்வுகளைத் தட்டி எழுப்புகின்றன. அங்குள்ள வாசனையும் சத்தமும் புத்தம் புதிதாய் வித்தியாசமாய் இருக்கும். காற்றின் சுவை கூட அங்கு வித்தியாசமானதுதான்.

பெரும்பாலான நேரங்களில் அந்த அனுபவங்கள் வெறுமனே எழுதிவைப்பதுடன் அல்லது நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதுடன் முடிந்து போகும். ஆனால் பயணத்தில் உற்சாகமடையும் என்னைப் போன்ற சக பயணிகள் அல்லது நண்பர்களிடம் அந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பேன். காடுகள் மீதும் இயற்கை மீதும் உள்ள நேசத்தை பகிரும் அத்தகைய ஒரு பகிர்வைத்தான் எம்பிஏ பட்டதாரிகளான தன்மே கேசவும், மவுலிக் தேசாயும் பகிர்ந்து கொண்டனர். இவர்கள் இருவரும் 2006ம் ஆண்டில் இந்தியா முழுவதிலுமுள்ள 10 தேசியப் பூங்காக்களுக்குச் சென்று வந்தனர்.

அந்தப் பயணம் அனைத்தையும் மாற்றியது

“ஒவ்வொரு பயணத்தின் போதும், நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் வனப்பயண அனுபவங்களையும் நம்மைப் போன்ற பிற பயணிகளுடன் பகிர்ந்து கொள்ள முடியவில்லையே என்று குறைப்பட்டுக் கொண்டே இருப்போம். நம்மைப் போன்ற பயணிகளை ஒன்றிணைக்க ஒரு தளத்தை உருவாக்க வேண்டிய தேவையைப் பற்றி அடிக்கடி விவாதித்தோம். கடைசியாக 2013ல் கன்ஹா தேசியப் பூங்காவை மாலை நேரத்தில் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த போதுதான் ஒரு உறுதியான முடிவுக்கு வந்தோம். “தி சஃபாரிஸ்ட்” (The Safarist) என்ற பெயரில் ஒரு தளத்தை உருவாக்குவது என்று முடிவு செய்தோம். பயணிகள் சந்திக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண உதவுவதுதான் சஃபாரிஸ்ட்டின் நோக்கம்” என்கிறார் தன்மே.

முதலில் தாங்கள் கண்டறிந்த வளங்களைக் கொட்டி வைக்க இணையதளம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டனர். என்ன பெயரிடுவது என்பது பற்றி திரும்பத் திரும்பப் பேசி, கடைசியாக ‘தி சஃபாரிஸ்ட்’ என்ற பெயரை முடிவு செய்தனர் (சஃபாரிஸ்ட் என்றால் காட்டுக்குள் சாகசப் பயணம் மேற்கொள்ளுபவர் என்று அர்த்தம்).

பிராண்ட் பெயரை உருவாக்குவது சவாலாக இருந்தது என்கிறார் தன்மே. ஆனால் ஆரம்பத்திலிருந்தே அவர்கள் தங்களது பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கான வழிகளைத் தெரிந்து வைத்திருந்தனர். நம் அனைவரிடமும் இருக்கும் இயற்கை அல்லது வன விருப்பத்தைப் பூர்த்தி செய்யக் கூடியது ‘தி சஃபாரிஸ்ட்’. வனம் மற்றும் இயற்கைக் காட்சிகள் தொடர்பான, பொறுப்பான அதே சமயம் பாதுகாப்பான பயணத்தை ஏற்பாடு செய்தல் சஃபாரிஸ்ட்டின் பணி.

புகைப்பட உதவி ஷட்டர் ஸ்டாக்

புகைப்பட உதவி ஷட்டர் ஸ்டாக்


குழு என்ன செய்கிறது?

தி சஃபாரிஸ்ட்டை ஒரு வனப் பயணிகள் குழு என்று சொல்லலாம். அவர்கள் சேர்ந்து பயணம் செய்பவர்கள், தி சஃபாரிஸ்ட் மூலம் தன்மேவும் மவுலிக்கும் பின்வரும் பிரச்சனைகளைக் கையாள முயற்சிக்கின்றனர்.

  1. வனப் பிரியர்களை ஒன்று சேர்த்து அவர்களை சேர்ந்து பயணிக்கச் செய்யும் நம்பர் ஒன் தளம்: வனப் பயணம் பேரார்வத்தைத் தூண்டக் கூடியது அதே சமயம் அதிக செலவு பிடிப்பது. எனினும் பயணிக்கும் ஒவ்வொருவரும் செலவைப் பகிர்ந்து கொள்ளலாம் என்கிறார் தன்மே. இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்காகத்தான் வனப் பயணிகள் குழு ஒன்றை உருவாக்க வேண்டும் என நினைத்தோம். அந்தக் குழுவினர் சேர்ந்து வனப்பயணத்தை மேற்கொள்ளலாம். “நமது இணைய தள பயன்பாட்டாளர்கள் ஒரு பயணத்தை தாங்களே திட்டமிட்டு அதை தளத்தில் பதிவு செய்து விட்டால், விருப்பமுள்ள மற்றவர்கள் அந்தப் பயணத்தில் சேர்ந்து கொள்ளலாம். ஒருவர் தனக்கு விருப்பமான இடத்தை விருப்பப் பட்டியலாக இணையத்தில் பதிவு செய்து வைக்கலாம். வேறு யாரேனும் ஒருவர் அந்தப் பட்டியலில் உள்ள இடத்திற்குச் செல்ல நேரும் போது, அந்தத் தகவல் தானாக விருப்பப்பட்டியலை உருவாக்கியவருக்கு கொண்டு சேர்க்கப்படும். அவர் அதைப் பார்த்து, பயணத்தில் இணைந்து கொள்ளலாம்” என்று விளக்குகிறார் தன்மே.
  2. சஃபாரிஸ்ட்டின் சிறப்பம்சங்கள்: தி சஃபாரிஸ்ட்டுகளுக்கு ஒரு சில சிறப்பம்சங்கள் உண்டு. பயணிகள் தங்களுக்குள் புகைப்படங்களை பரிமாறிக் கொள்ளலாம். பலவிதமான இடங்களைத் தேர்வு செய்து பார்க்கலாம். ஒரு பயணத்தில் நன்கு அனுபவம் மிக்கவர்கள், புதிதாக அந்தப் பயணத்தை மேற்கொள்வோருடன் இணைந்து அவர்களுக்கு வழிகாட்டுகின்றனர். ”பயண அறிக்கை கொடுக்க ஒரு பிரிவு, விலங்குகளின் பட்டியல், பயணத்தில் முன் அனுபவம் மிக்கவர்கள் பயணக் குழுவுக்கு வழிகாட்டுதல் என தங்களிடம் உள்ள சிறப்பம்சங்கள் குறித்துக் கூறுகிறார் தன்மே.
  3. பயணத் தலங்கள் பற்றியும் டிக்கெட் முன்பதிவு பற்றியும் விபரப் பற்றாக்குறை: நாடு முழுவதும் 160 தேசியப் பூங்காக்கள் உள்ளன. 500 வனச் சரணாலயங்கள், எண்ணிலடங்கா மலைப்பிரதேசங்களும் பறவைகள் சரணாலயங்களும் உள்ளன. முக்கியமான இடங்கள் தவிர்த்து மற்ற இடங்கள் பற்றிய தகவல்கள் மற்றும் விழிப்புணர்வில் பற்றாக்குறை உள்ளது. ஒத்த கருத்துடைய பயண விரும்பிகளை ஒரு குழுவாக இணைப்பதன் மூலமும் பயணிகளின் அனுபவத்தின் வழியிலும் அறிமுகமில்லாத இடங்களைக் கூட சஃபாரிஸ்ட் தனது வரைபடத்தில் கொண்டு வந்துவிட முடிகிறது. “எங்கள் இடக் கண்டுபிடிப்பில் சுமார் 50 இடங்களைக் கண்டறிந்திருக்கிறோம். அந்த இடங்களைப் பற்றிய ஒருங்கிணைந்த தரவுகளை நுட்பமாக வழங்குகியிருக்கிறோம்” என்கிறார் தன்மே.

சவால்கள்

எனினும் இந்த யோசனையில் நம்பிக்கை கொண்ட அதைப் பரிசோதித்துப் பார்க்கக் கூடிய புதிய ஆட்களைச் சேர்ப்பது சவாலான விஷயம் என்கிறார் தன்மே. கூடுதலாக இந்தக் கருத்தை பெருவாரியான பார்வையாளர்களுக்குக் கொண்டு சென்று அது சரி என்று நிரூபிப்பதும் கடினமானது என்கிறார் அவர்.

“வெவ்வேறு விதமான விருப்பங்கள் மற்றும் பின்னணியில் இருந்து வரக் கூடியவர்களை பயணம் ஒன்றிணைக்கிறது. இத்தகைய ஒரு தளத்தில் நம்பிக்கையை ஏற்படுத்துவது அதிமுக்கியமான ஒன்று. இந்த யோசனையை வெற்றிகரமாக செயல்படுத்தும் போது அது ஏராளமான மாற்றங்களுக்கு உள்ளாகிறது. மறுபடி மறுபடி செய்து பார்க்க வேண்டியிருக்கிறது. செயல்பாட்டிற்கான எதிர்வினைகளை கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது” என்கிறார் தன்மே

இந்தச் சவால்களை எதிர்கொள்வதற்கு அந்த இரட்டையர்கள் ஒரு ஃபேஸ்புக் பக்கத்தை ஆரம்பித்தனர். தங்களது இலக்கு எந்தப் பிரிவோ அவர்களுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பை ஃபேஸ்புக் அவர்களுக்கு வழங்கியது. அதன் மூலம் அறிமுக நிலையில் இருந்து ஆரம்பிக்க முடிந்தது. ஃபேஸ்புக் பதிவர்களின் கருத்துக்களின் அடிப்படையில் சந்தையை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் ஒரு அறிமுக இணையதளத்தை பீட்டா வெர்சனில் (beta version) உருவாக்கினர்.

எதிர்காலத் திட்டங்கள்

“தற்போது எங்களிடம் 300 பயன்பாட்டாளர்கள் உள்ளனர். அன்றாடம் அந்த எண்ணிக்கை அதிகரித்துக கொண்டுமிருக்கிறது. முதல் மாதத்திற்குள் இந்தியா முழுவதிலும் 40 பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் 13 பயணங்களில் மற்ற பயணக் குழுக்களும் வெற்றிகரமாக இணைந்து கொண்டன. பல்வேறு இடங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட இந்தப் பயணங்களில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பல்வேறு வயதைச் சேர்ந்த ஆண் பெண் இருபாலாரும் கலந்து கொண்டனர்” என்று கூறுகிறார் தன்மே.

முதலில் பயன்பாட்டாளர்களைக் கையகப்படுத்துவதும், தளத்தை மேலும் மேலும் புத்தாக்கம் செய்வதும் தான் உடனடி திட்டம். தவிர தமது இலக்கு பிரிவினருக்கு மேலும் பல சிறப்பம்சங்களை வழங்க வேண்டும் என்றும் தி சஃபாரிஸ்ட் திட்டமிட்டுள்ளது.

“பயண விரும்பிகளைக் கொண்ட குழு மற்றும் அவர்களின் தளம் ஒரு முழுப்பயணத்தையும் மேற்கொள்ளும் போது, அது சுற்றுச் சூழலுக்கும் பலனளிக்கும் வருமானமும் வரும்” என்கிறார் தன்மே.

இப்படிப் பயண விரும்பிகளை குவிப்பதன் மூலம் சுற்றுலா தொடர்பான பலருக்கும் அது பயனளிக்கிறது. தங்கும் விடுதிகள், வன விடுதிகள், இயற்கை விரும்பிகள், புகைப்பட வழிகாட்டிகள், உபகரணங்களை வாடகைக்கு தருவோர், கார்களை வாடகைக்கு கொடுப்போர் என பல்வேறு பிரிவினருக்கும் பயன் தருகிறது. இந்த அனைத்து சேவைகளையும் ஒரு முழுமையான பேக்கேஜ் ஆகவோ அல்லது வழக்கமான விளம்பரங்கள் மூலமாகவோ புக் செய்ய முடியும்.

சந்தையும் வளர்ச்சியும்

ஹாலிடேஐக்யூவின் தலைமை செயல் அதிகாரியும் (சிஇஓ) நிறுவனருமான ஹரிநாயர் அனுபவ ஆர்வத்திற்கான பரிட்சார்த்த பயணங்கள் மற்றும் ஓய்வுப் பயணங்கள் இந்தியாவில் வெகு வேகமாக வளர்ந்து வருகின்றன என்கிறார். ஒவ்வொரு ஆண்டும் நூறு கோடி உள்ளூர் பயணங்களை இந்தியர்கள் மேற்கொள்கிறார்கள் என்கிறது ஹாலிடேஐக்யூவின் கணக்கு. ஓய்வு பயணங்கள் கிட்டத்தட்ட 25 கோடி என்கிறது அந்தக் கணக்கு. கடந்த சில வருடங்களில் இது 11 சதவீதம் வளர்ந்திருக்கிறது. “சீனாவுக்கு அடுத்தபடியாக, ஓய்வுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக வளர்ந்து வரும் நாடு இந்தியாதான்” என்கிறார் ஹரி.

திரில்லோஃபிலியாவின் 2014 கணக்கெடுப்பின் படி வனப் பயணங்கள் மற்றும் பறவைகள் சரணாலயங்களைப் பார்ப்பதும்தான் மொத்த சுற்றுலாவில் 38 சதவீதத்தைப் பிடித்துக் கொண்டிருந்தது. அந்த இடத்தை தற்போது அனுபவ ஆர்வத்திற்கான பரிட்சார்த்த பயணம் மேற்கொள்வோர் பிடித்துக் கொண்டதாகக் கூறுகிறார் தன்மே.

சுற்றுலாத் துறையில் வனச் சுற்றுலாவுக்கான சந்தை இந்தியாவில் வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போது அவர்களுக்கான ஒரு தளம் இந்தியாவிலோ அல்லது சர்வதேச அளவிலோ இல்லை. இந்தியாவில் உள்ள 20 முக்கியமான தேசியப் பூங்காக்களுக்கு ஆண்டு தோறும் வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்தைத் தாண்டுகிறது. இவற்றில் ஒரு சிலவற்றைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் நகர வாசிகளுக்கு இருக்கும் ஒரே பிரதானமான மார்க்கம் வனச்சுற்றுலாதான்.

இணையதள முகவரி: The Safarist

Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share
Report an issue
Authors

Related Tags