பதிப்புகளில்

நரேந்திர மோடியின் ஆடைகள் தயாரிக்கும் சகோதரர்கள்- ரூ.250 கோடி விற்றுமுதல் பெரும் நிறுவனம்!

YS TEAM TAMIL
25th Jul 2017
Add to
Shares
33
Comments
Share This
Add to
Shares
33
Comments
Share

ஒரு குடும்பத்தலைவர் திடீரென எல்லாவற்றையும் துறந்துவிட்டு சாமியாராக முடிவெடுத்தால் நிலைமை என்னவாகும்? சிந்தித்துப் பாருங்கள். இப்படியான நிலையில்தான் சகோதரர்கள் ஜிதேந்திரா மற்றும் பிபின் செளஹான் ஒரு நாள் தள்ளப்பட்டனர். அவர்களின் அப்பா திடீரென சாமியாராக முடிவெடுத்து, குடும்பத்தை விட்டுச்சென்றார். செய்வதரியாது தவித்த சகோதரர்கள், சவாலை தாண்டி வாழ்ந்து காட்டி, இன்று பிரதமர் நரேந்திர மோடியின் ஆடைகளை தயாரிக்கும் அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளனர். இவர்கள் நடத்தும் ஆடைத்தயாரிப்பு நிறுவனம் 250 கோடி விற்றுமுதல் பெருகிறது என்றால் அவர்களின் அசாத்திய வளர்ச்சியை புரிந்து கொள்ளமுடியும். 

image


JadeBlue என்று அழைக்கப்படும் பிரபல ஆண்கள் ஆடை தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஜிதேந்திரா மற்றும் பிபின். 1981-ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தில் தற்போது சுமார் 1200 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் பிரபல அரசியல்வாதிகளான சோனியா காந்தி, அஹ்மத் படேல் உள்ளிட்ட பலருக்கு ஆடை தயாரித்து தருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சன்னியாசியாகி போன செளஹான் ஒரு டெய்லர் என்பதால் அவரின் கடை மட்டும் இருந்தது. சபர்மதி ஆஷ்ரமத்திற்கு அருகில் இருந்த கடை மூலம் அவர்களுக்கு நல்ல வருமானம் கிடைத்துவந்தது. ஆனால் தந்தை திடிரென இவ்வாறு விட்டுச்செல்வார் என்று அந்த குடும்பம் கனவில் கூட நினைத்திருக்கவில்லை. 

தந்தை விட்டுச்சென்றதும், வாழ முடியாமல் சகோதரர்கள் அகமாதபாத்தில் உள்ள அவர்களது தாத்தா வீட்டிற்கு சென்றுவிட்டனர். அங்கே அவர்களது மாமாவும் டெய்லர் தொழில் செய்து கடை நடத்தி வந்தார். மக்வானா சகோதரர்கள் என்ற பெயரிலான அந்த கடை அந்த இடத்தில் பிரபலமாக இருந்தது. தினசரியில் 100 ஆடைகளுக்கான ஆர்டர்கள் அப்போது வரும். ஜிதேந்திரா மற்றும் பிபினும் மாமாவின் கடையில் பணிக்கு சேர்ந்து தொழில் கற்க ஆரம்பித்தனர். பள்ளியில் படித்துக்கொண்டே டெய்லரிங்கும் கற்றனர் அவர்கள்.

22 வயதான தினேஷ் என்பவர் ஒரு கடையை திறக்க முடிவெடுத்தார். 1975 தினேஷ் டெய்லர் என்ற பெயரிலான அந்த கடையில் பிபின் மற்றும் ஜிதேந்திரா உதவி புரிந்து வந்தனர். ஜிதேந்திரா நாள் ஒன்றுக்கு 15-16 மணி நேரம் துணிகள் தைத்து, சுமார் 16 சர்டுகளை ஒரே நாளில் ரெடி செய்வார். படிப்பை முடித்த சகோதரர்கள் குடும்பத்தொழிலான ஆடை தயாரிப்பையே எடுத்துக்கொள்ள முடிவெடுத்தனர். 

1981-ல் அகமதாபாத்தில் சுப்ரீம் க்ளோத்திங் மற்றும் மென்ஸ்வேர் என்ற பெயரில், 1.5 லட்சம் லோன் பெற்று 250 சதுர அடியில் ஒரு கடையை திறந்தனர். வளர்ச்சியை பற்றி அதிகம் சிந்திக்கும் ஜிதேந்திரா, தங்கள் வாடிக்கையாளர்கள் பட்டியலில் பிரபலங்கள் இருந்தால் தொழில் சிறக்கும் என்று எண்ணினார். குஜராத்தில் அப்போது இருந்து மோடிக்கு பாலி வகை துணியில் சிறந்த ஆடைகளை தயார் செய்து தருவார்கள். ஆர்.எஸ்.எஸ்-ல் இருந்த மோடி, இவர்களின் ஆடையை உடுத்தி வந்தார். இதன் காரணமாக மேலும் பல பிரபலங்கள் இவர்களின் கடையை தேடி வர ஆரம்பித்தனர். 

சிறிய கடையாக இருந்த இவர்களின் தொழில், 2800 சதுர அடி அளவிளான ஒரு பெரிய ரெடிமேட் ஷோரூம் கடையாக மாறி, JadeBlue என்ற பெயரில் அகமதாபாத்தில் மிகப்பிரபலம் ஆனது. தொழில் பலமடங்கு வளர்ச்சி அடைய, இன்று இவரகளுக்கு இந்தியா முழுதும் 51 ரிடெயில் கடைகளும், ஆண்டு விற்றுமுதலாக 250 கோடியும் கிடைக்கிறது என்றால் இது ஒரு அசாத்திய வளர்ச்சிதானே. 

கட்டுரை: Think Change India

Add to
Shares
33
Comments
Share This
Add to
Shares
33
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக