பதிப்புகளில்

உலகின் பணக்கார மனிதர் ஆன அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்!

பில் கேட்ஸை பின்னுக்குத் தள்ளி உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்திற்கு வந்தார் ஜெஃப் பெசோஸ். 

19th Jul 2018
Add to
Shares
231
Comments
Share This
Add to
Shares
231
Comments
Share
ஷாப்பிங் இணையதளமான அமேசானின் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு தற்போது 150 பில்லியன் டாலர்கள் என ப்ளூம்பர்க் பில்லினியர் தெரிவித்திருக்கிறது. 

கடந்த பனிரண்டு மாதங்களில் அறுபது பில்லியன் டாலர்களாக உயர்ந்திருக்கும் ஜெஃப்ஃபின் சொத்து மதிப்பு, தற்போது அவரை உலகின் பணக்கார மனிதர் ஆக்கியிருக்கிறது. இதனால், பணக்காரர்கள் பட்டியலில் முதலில் இருந்த பில் கேட்ஸ் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

ஐம்பத்து நான்கு வயதான ஜெஃப் பெசோஸ் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்திருப்பது இது முதல் முறை அல்ல. 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், அமேசானின் பங்குகளின் மதிப்பு பங்குச் சந்தையில் ஏறிய போது, ஒரு குறுகிய காலத்திற்கு பில் கேட்ஸை கடந்து சென்று, முதலிடத்தில் இருந்தார். பிறகு பங்குகளின் மதிப்பு வீழ்ந்த போது இரண்டாம் இடத்திற்கு வந்தார். கடந்த ஏப்ரல் மாதத்தில், அமேசானின் பங்குகளின் மதிப்பு திடீரென கூடிய போது, ஒரு நாளிலேயே பனிரண்டு பில்லியன்களை தன் கணக்கில் சேர்த்துக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Image courtesy : Digg.com

Image courtesy : Digg.com


ஜெஃப்ஃபின் சொத்து கணக்கை விட பல நாடுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு குறைவானது. அதாவது, ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பைவிட மூன்று மடங்கு அதிகமானது. ஏர் பி.என்.பி, ட்விட்டர் போன்ற பல்வேறு நிறுவனங்களிலும் ஜெஃப் முதலீடு செய்திருக்கிறார்.

ந்யூ மெக்சிகோவில் பிறந்து, டெக்ஸாசில் வளர்ந்த ஜெஃப், பள்ளிக்காலத்திலும், கல்லூரி காலத்திலும் வகுப்பில் முதல் மாணவராகவே இருந்திருக்கிறார்.1994 ஆம் ஆண்டு, இணையம் வழியே புத்தகங்கள் விற்கும் ஒரு நிறுவனமாகவே பெசோஸ் அமேசானை தொடங்கினார். பிறகு படிப்படியே பல்வேறு வகையான பொருட்கள் விற்கும் நிறுவனமாக அமேசான் மாறியது. 

2015 ஆம் ஆண்டின் முடிவில், முந்நூற்று நான்கு மில்லியன் உறுப்பினர் கணக்குகள் அமேசானிற்கு இருப்பதாக, அமேசான் அறிவித்தது. 2018 ஆம் ஆண்டு, அமேசானின் பங்குகளில் அறுபதி சதவிகிதம் கூடியது. மேலும், அதன் சந்தை விலை 890 பில்லியன் டாலர்கள் ஆனது. பெசோஸுக்கு அமேசானில் 16% பங்குகள் இருக்கின்றன. வாஷிங்டன் போஸ்ட் மற்றும் ப்ளூ ஆரிஜின் ஆகிய நிறுவனங்களையும் ஜெஃப் பெசோஸ் பார்த்துக் கொள்கிறார்.

நாவலாசிரியான மெக்கன்சி பெசோஸ் 1993 ஆம் ஆண்டு ஜெஃப்ஃபை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இருவரும் தத்தம் வேலைகளை விட்டுவிட்டு , சியாட்டிலுக்கு சென்று அமேசான் நிறுவனத்தை தொடங்கினார்கள். தற்போது நாற்பத்தெட்டு வயதாகும் மெக்கன்சி, அமேசான் நிறுவனத்தின் முதல் ஊழியர்களில் ஒருவராகவே இணைந்தவர். இவர்கள் இருவருக்கும் நான்கு குழந்தைகள் இருக்கின்றன.

ஜூலை பதினாறாம் தேதி அன்று, அமேசான் தன்னுடைய பிரைம் டே சேலுக்கு தயாராகிக் கொண்டிருந்த போது தான், பெசோஸின் சொத்து மதிப்பு குறித்த இந்த செய்தி வெளியானது. ஜெர்மனி, ஸ்பெயின், போலாண்டு ஆகிய நாடுகளில் அமேசானின் ஊழியர்கள் தங்களுடைய வேலை நிலை மோசமாக இருப்பதாக போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

“ஊழியர்களின் ஆரோக்கியத்தை கணக்கில் கொள்ளாமல் அதிலிருந்து தான் அமேசான் பணத்தை சேகரிக்கிறது,” என்று ஜெர்மனியின் தொழிற்சங்கம் ஒன்றை சேர்ந்த ஸ்டெஃபனி நுட்ஸென்பெர்கர் தெரிவித்திருக்கிறார். இதற்கு பதிலளித்த அமேசான் தங்களுடைய ஊழியர்களுக்கு முறையாகவே சம்பளம் வழங்கப்படுவதாகவும், இரண்டு வருடங்களாக வேலை செய்து கொண்டிருக்கும் நிரந்தர ஊழியர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு பனிரண்டு யூரோக்கள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்திருக்கிறது.

Image courtesy : Getty Images 

Image courtesy : Getty Images 


இது மட்டுமில்லாமல், பில் கேட்ஸை போலவோ, மார்க் ஸுக்கர்பெர்க்கை போலவோ, ஜெஃப் பெசோஸ் தன்னார்வ தொண்டுகள் செய்வதில் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை எனவும் அவர் மீது விமர்சனம் பரவலாக வைக்கப்படுகிறது. ஜெஃப் தனியே ஸ்பேஸ் பயணங்கள் தொடர்பாக ஆய்வுகள் செய்து வருகிறார் என்றாலும், சமூக நலனை கருத்தில் கொண்டு தொண்டுகள் எதுவும் செய்வதில்லை.

அமேசானின் பெரும் போட்டியாளர்களான மைக்ரோசாஃப்டும், வால்மார்ட்டும் ஐந்தாண்டுகள் இணைய இருப்பதாக அறிவிக்கவிருக்கிறார்கள். இதனால், வால்மார்ட் மைக்ரோசாஃப்டின் கணினி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முன்னேறும் என்கிறது வால் ஸ்ட்ரீட் ஜர்னல். இதை எல்லாம் எப்படி அமேசான் கையாளப் போகிறது என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

Add to
Shares
231
Comments
Share This
Add to
Shares
231
Comments
Share
Report an issue
Authors

Related Tags