பதிப்புகளில்

பிசினஸிலும் சிக்ஸர் விளாசும் விராட் கோலி!

YS TEAM TAMIL
29th May 2016
Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share

சின்னசுவாமி விளையாட்டு அரங்கமே நிசப்தத்தில் ஆழ்ந்திருந்தது... எதிரணியினர் வெற்றி இலக்கை அடைய சில ரன்கள் மட்டுமே இருந்தது... இந்திய அணியிடமிருந்து வெற்றிக்கனியை அவர்கள் பறித்துவிடப் போவதை எண்ணி, ரசிகர்கள் பதட்டத்துடன் அமைதியாக அந்த பரப்பரப்பு மேட்சை பார்த்துக் கொண்டிருந்தனர். ஒரு சில மணித் துளிகளில் ஓவர் முடிந்து, களத்தின் வீரர்களின் நிலைகள் மாற்றப்பட்டது... அதைக் கண்டவுடன் ரசிகர்கள் ஆர்ப்பரிக்கத் தொடங்கினர்... ஸ்கோர்போர்டில் ஸ்கோர் அதே எண்ணில் இருந்தது, ஆனால் ரசிகர்களிடையே ஒருவித தீராத நம்பிக்கை. ஆம் விராட் கோலி பவுன்டரியில் நிற்கவைக்கப்பட்டார்... அவரை அங்கு கண்டவுடனே ரசிகர்களின் நம்பிக்கை அதிகரித்தது... 

image


ஐபிஎல் இன் ஒன்பதாவது பதிப்பில், கோலி இதுவரை எடுத்த 919 ரன்கள் (இதுவரை எவரும் எடுக்காத அதிக ரன் எடுத்துள்ள பேட்ஸ்மேன் கோலி), இந்த ஆண்டு ஜனவரியில் ஆஸ்திரேலியாவில் தொடங்கி ஆசிய கோப்பையில் தொடர்ந்து, டி20 உலக கோப்பை என்று இன்றுவரை இவரது வெற்றிவாகை தொடர்கிறது.

இந்த ஆண்டு பல முக்கிய மேட்சுகளில், இந்தியா மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ், பெங்களுரு அணிகளின் முதுகெலும்பாக விராட் கோலி இருந்து அணியை வெற்றியை நோக்கி கொண்டு சென்றுள்ளார். பல வெற்றிகளின் தலையெழுத்தை எழுதியவர் போல மேட்சுகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இலக்கை அடைந்துள்ளார் கோலி. தற்போதைக்கு இந்தியாவின் ஹீரோ விராட், அவரின் தேவை இந்திய அணிக்கு வெகுவாக உள்ளது என்றே சொல்ல வேண்டும். 

கோலி- ஒரு தொழிலதிபராக

குறும்பான இளைஞராக இருந்த கோலி, இன்று பலருக்கு எடுத்துக்காட்டாக மாறி, வளர்ச்சி அடைந்துள்ள ஒரு பொறுப்புள்ள தலைவராகி, நம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஆனால் களத்தை தவிர அவரின் தொழில் முகம் பலர் அறியாதது. அவரின் பிசினஸ் மற்றும் முதலீடுகள் பற்றியும், அதில் அவரது பொறுப்பு மற்றும் வெற்றிகள் நாம் அறியாதவை. ஆம் கோலி தொழிலிலும் சிறந்து விளங்கிவருகிறார். 

2015 டிசம்பரில் ஃபோர்ப்ஸ் 'இந்திய 100 செலிப்ரிட்டி' பட்டியலில், ஆண்டு வருமானமாக ரூபாய் 104.78 கோடியுடன், கோலி 7ஆவது இடத்தைப் (கேளிக்கை, வருவாய் மற்றும் புகழ்) பிடித்திருந்தார். 2014 ஆண்டு முதல், கோலி பல தொழில்களில் முதலீடு செய்து வந்தார். இந்த முதலீடுகளை அவர் வாய்ப்புக்களாகவே பார்த்தார். 

image


2014 செப்டம்பரில் ஐஎஸ்எல் டீலிம் கோலி முதலீடு செய்து பேசும்போது, 

"இந்த முதலீடில் எனக்கு இருமுனை ஈடுபாடு உள்ளது. ஒன்று ஃபுட்பால் எனக்கு மிகவும் பிடித்த ஒரு விளையாட்டு, கிர்க்கெட்டை அடுத்து என்னை கவர்ந்த விளையாட்டு அது. கோவா ஃபுட்பால் அணியில் முதலீடு வாய்ப்பு வந்தபோது அதை உடனடியாக எடுத்துக்கொண்டேன். இது எனது பிசினஸ் முயற்சி, அதில் அனுபவம் பெற விரும்புகிறேன். மேலும், கிரிக்கெட் நிரந்தரம் கிடையாது எனவே இது ஒரு நல்ல வாய்ப்பு என நினைக்கிறேன்," என்றார்.

இந்தியன் சூப்பர் க்ளப்பில் 10% பங்கை வைத்துள்ளார் கோலி. Cornerstone Sport and Entertainment நிறுவனத்தின் நிறுவனர், சிஇஓ மற்றும் விராட்டின் நண்பர் மற்றும் மேனேஜர் பன்டி சஜ்தே, விராட் 8-10 பிசினஸ் ஐடியாக்களை பரீசிலித்து வருவதாகவும் அதில் 2-3 நிறுவனங்களில் முதலீடுகள் செய்வார் என்று கூறினார். 

விராட் பலவித பிசினசில் முதலீடு செய்கிறார், இருப்பினும் அவர் நன்கறிந்த தொழிலில் முதலீடு செய்வதை பழக்கமாகக் கொண்டுள்ளார். கடந்த சில வருடங்களில் கோலி முதலீடு மற்றும் தொடங்கியுள்ள நிறுவனங்களைப் பற்றிப்பார்ப்போம்:

1. Wrogn - நவம்பர் 2014 இல் துவக்கப்பட்ட இளைஞர்களின் ஃபேஷன் ப்ராண்ட். இந்நிறுவனத்தின் இணை பங்குதாரர் கோலி. இந்த ப்ராண்ட் தற்போது இந்தியா முழுவதிலுள்ள 75 ஷாப்பர்ஸ் ஸ்டாப் கடைகள் மூலம் விற்பனையை செய்து வருகிறது. மேலும் இந்த ஆண்டு 20 சொந்த கடைகளை துவக்க திட்டமிட்டுள்ளனர். 

image


2. Chisel– ஏப்ரல் 2015 இல் விராட் தொடங்கிய சொந்த ஜிம் மற்றும் உடற்பயிற்சி மையம் Chisel. Chisel fitness நிறுவனத்துடன் இணை உரிமையாளராக கோலி உள்ளார். நாடு முழுதும் 100 மையங்கள் தொடக்க, இலக்காக வைத்துள்ள இவர்கள், 2018க்குள் இவர்கள் சொந்த பிட்னஸ் கருவிகளையும் அறிமுகப்படுத்தவுள்ளனர். 

3. Sports Convo - விராட், தொழில்நுட்ப ஸ்போர்ட்ஸ் தொடக்க நிறுவனமான Sports Convo வில் முதலீடு செய்து, அதன் ப்ராண்ட் அம்பாசிடராக உள்ளார். இந்த நிறுவனத்தில், விளையாட்டு ரசிகர்கள் விளையாட்டு தொடர்பான செய்திகள், தகவல்களைப் பற்றி விவாதிக்கலாம். 

4. FC Goa - தனது 25 ஆவது வயதில் கோலி செய்த முதல் முதலீடு இது. ஐஎஸ்எல் FC Goa வில் விராட் முதலீடு செய்தது தலைப்பு செய்தியானது. 25% பங்குகளை வகிக்கும் கோலி அதில் வருடத்திற்கு சுமார் 1 கோடி முதலீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது.

5. UAE Royals - இந்தியன் ப்ரீமியர் டென்னிஸ் லீகில் இணைய விரும்பிய கோலி, UAE Royals அணியில் இணை உரிமையாளராக இணைந்தார். அது டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரரை தலைவராகக் கொண்டு இயங்கும் அணி. 2015ல் முதலீடு செய்து கோலி, 

"நான் ரோஜர் ஃபெடரரின் பெரிய ரசிகன், எனவே அவருடன் UAE Royals இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதில் இணையும் எனது முடிவு இறுதியானது" என்று கூறினார். 

இந்த லீக் டென்னிஸ் விளையாட்டின் மீதான வரவேற்பை அதிகரிக்கும் என்று விராட் நம்புகிறார்.

6. Bengaluru Yodhas – கோலி Pro Wrestling லீக்கின் இணை உரிமையாளராக டிசம்பர் 2015ல் ஆகியுள்ளார். 

மேற்கூறிய நிறுவனங்களைத் தவிர விராட், 13 ப்ராண்ட்களை அங்கீகரிக்கிறார். Privyplex என்ற நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறார் மற்றும் Fanbox எனும் நிறுவனத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இது ரசிகர்களை தங்கள் அபிமான செலிப்ரிட்டியுடன் இணைப்பைப் பெற்று கலந்துரையாட உதவும் ஒரு தளமாகும். 

உணவு, தூக்கம், பயிற்சி (தொடரும் அட்டவணை)

அண்மையில் ஒரு நேர்காணலில் பேசிய விராட், தனது போரான வாழ்க்கை முறையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். அதில், "உணவு, தூக்கம், பயிற்சி, மீண்டும் அதே அட்டவணையை தொடர்வது..." இதைத்தான் சில காலமாக தான் பின்பற்றிவருவதாகவும், அதுவே தனது நிலையான செயல்திறனுக்குக் காரணம் எனத் தெரிவித்துள்ளார். இவரது கடும் உழைப்பும், அர்ப்பணிப்பும் இவருக்கும் இவரது டீமுக்கும் நல்ல பலனை அளித்துள்ளது. அதையும் தாண்டி அவர் ஒரு நல்ல தொழிலதிபர் என்றும் நிரூபித்து வருகிறார். 

இத்தனை போதாதா?? இந்த 27 வயது இளைஞரை பின்பற்ற, ரசிக்க, புகழ்பாட... இவரது ஈடுபாடு மற்றும் இடைவிடாத உழைப்பே, இவரை ஒரு சிறந்த நபராக உலகம் பார்க்க வழிவகுத்துள்ளது. 

ஆக்கம்: அலோக் சோனி | தமிழில்: இந்துஜா ரகுநாதன்Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக