பதிப்புகளில்

குமரி முதல் லே வரை ராயல் என்பீல்ட் புல்லட்டில் பயணம் மேற்கொண்ட கேரள பெண்!

YS TEAM TAMIL
9th Sep 2017
Add to
Shares
6
Comments
Share This
Add to
Shares
6
Comments
Share

35 வயதான ஷைனி ராஜ்குமாருக்கு பல பெருமைகள் உள்ளது. கேரளாவில் இருந்து ஹிமாலய மலைக்கு தன் ராயல் என்பீல்டு பைக்கில் பயணித்த முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவர். அதன் பின் பெண்கள் குழுவாக பல இடங்களுக்கு பைக்கில் பயணம் மேற்கொண்டு பல ஆச்சரியங்களை நிகழ்த்தியவர். தற்போது தனது பைக்கில் கன்னியாகுமரி முதல் லே வரை பயணித்து, மக்களிடம் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். இந்தியாவிலேயே இவர் தான் இந்த பைக் பயணத்தை மேற்கொண்டுள்ள முதல் பெண்மணி ஆவார்.

image


திருவனந்தபுரத்தில் இருந்து 16-ம் தேதி ஜூலை மாதம் பைக்கில் பயணத்தை தொடங்கிய ஷைனி, சுமார் 12 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் ‘‘Azadi – Stop Violence Against Women’ (பெண்களுக்கு எதிரான வன்முறையில் இருந்து விடுதலை) என்ற வாசகத்துடன் பயணித்தார். ஒரு விளையாட்டு வீராங்கனை மற்றும் கிரிக்கெட் வீரரான ஷைனி, இளம் வயது முதலே பைக் ஓட்டுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். இது பற்றி தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பேட்டியில்,

“என் மாமா ஒரு போலீஸ்காரர். அவர் ராயல் என்பீல்டு புல்லட்டில் செல்வதை பார்த்து மெய் மறந்து போய் இருக்கிறேன். அப்போதில் இருந்து எனக்கு அந்த பைக்கை ஓட்டப் பிடிக்கும், சொந்தமாக வைத்துக்கொள்ளவும் ஆசை அதிகமானது.” 

ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஷைனி தன் பயணத்தின் முதல் நாளே ஒரு விபத்தை சந்தித்தார். அதில் சற்று சோர்வடைந்தாலும், தன்னைச் சுற்றியுள்ளவர்களின் அன்பினால் தன் பயணத்தை தொடர்ந்தார். 

“என்பீல்டு மாநில சேவை மேலாளார் பினு ஜாப், ஷைனிக்கு உதவ முன்வந்தார். அவர் உடனே விபத்துப் பகுதிக்கு இரண்டு சேவை ஊழியரை அனுப்பி வைத்தார். அருகில் இருந்த கிராமத்துக்கு சென்று ஒரு ஆட்டோவை அழைத்து வந்து புல்லட்டை சேவை மையத்துக்கு எடுத்துச் சென்றனர்.”

30 ஆயிரம் ரூபாய் செலவு ஆனாலும், ஷைனியிடம் அவர்கள் பணம் எடுத்துக்கொள்ளவில்லை. ஷைனியுடன் இரண்டு நண்பர்கள் லே வரை பயணித்தனர். இந்த மூவரும், மும்பை டெர்மெனசில் பெண்கள் வன்முறைக்கு எதிரான வாக்கியங்கள் அடங்கிய பாததைகளை காட்டினர். மக்கள் இவர்களை பார்த்து ஆரவாரப்படுத்தி, உற்சாகப்படுத்தினர். 

லே அடைந்தவுடன் ஷைனியின் கணவர் அவரை சந்தித்தார். ஷைனியின் குடும்பம் தொடக்கத்தில் அவரின் பயணத்தைப் பற்றி தயக்கமாக இருந்தாலும், பின்னர் ஆதரவாக இருந்தனர். தன் தீவிர ஆர்வம் மற்றும் முயற்சியால் பயணங்களை தொடர்கிறார். கேரள சுற்றுலாத்துறை இவரது பயண முழுச்செலவை ஏற்றுக்கொண்டு ஷைனியை ஊக்குவித்துள்ளனர். 

கட்டுரை : Think Change India

Add to
Shares
6
Comments
Share This
Add to
Shares
6
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக