முதல் முறை பறந்த 70 அரசுப்பள்ளி மாணவர்கள்: வானில் வெளியான ‘வெய்யோன் சில்லி’

சூரரைப் போற்று பாடல் வெளியீட்டை நெகிழ்ச்சியானதாக்கிய சூர்யா டீம்.

14th Feb 2020
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படம் சூரரைப் போற்று. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தத் திரைப் படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சூரரை போற்று

இந்தத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், போஸ்டர்கள் மற்றும் ஊர்க்குருவி பருந்தாகுது என்ற முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தின் 2வது பாடலை வித்தியாசமான முறையில் வெளியிட தயாரிப்புக்குழு திட்டமிட்டது. அதே போல,

‘வெய்யோன் சில்லி’ பாடலானது ஸ்பைஸ்ஜெட் போயிங் 737 விமானத்தில் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியானது.

இந்தப்பாடல் வெளியீட்டை மேலும் அழகானதாக்க 70 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முதல் விமானப் பயண அனுபவத்தைத் தரவும் படக்குழுவினர் முடிவு செய்தனர். சூர்யாவின் அறக்கட்டளையான அகரம் பவுண்டேஷன் மூலம் மாணவர்களைத் தேர்வு செய்ய கட்டுரைப் போட்டிகளும் நடத்தப்பட்டன.

விமானத்தில்

தங்களது முதல் மிகப்பெரிய கனவு பற்றி அழகான வரிகளில் எழுதி வெற்றி பெற்ற 100 பல்வேறு அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் முதல் விமானப் பயணத்திற்காக தேர்வு செய்யப்பட்டனர்.

பிப்ரவரி 13ம் தேதி ஸ்பைஸ்ஜெட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான அஜய் சிங் உடன் 70 மாணவர்கள் மற்றும் சூரரைப் போற்று படக்குழுவினர், நடிகர் சூர்யா உள்ளிட்டோர் விமானத்தில் பயணித்தனர்.

மகிழ்ச்சி, குதூகலத்துடன் மாணவர்கள் தங்களது முதல் விமான பயணத்தை அனுபவித்தனர். 45 நிமிடங்கள் வானில் பறந்த விமானத்தில் வெளியான வெய்யோன் சில்லி பாடலை மாணவர்களுடன் நடிகர் சிவக்குமார், சூர்யா, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் அஜய் சிங் உள்ளிட்டோரும் கண்டு ரசித்தனர்.


இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா,

“இந்தியாவில் உள்ள மக்கள் தொகையில் 1% குறைவான மக்களே விமானத்தில் பறக்கும் வசதியை பெற்று இருந்தனர். இதனை கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத் மாற்றியமைத்து ஒரே ரூபாய் செலவில் விமானத்தில் பறக்க வைத்தார். அவரின் கதையை தான் படமாக்கியிருக்கிறோம்.”

இந்தப் படத்தில் நடித்துள்ள மோகன் பாபுக்கு நான் நிச்சயம் நன்றி சொல்லியே ஆக வேண்டும். அவரின் ஒத்துழைப்பு மறக்க முடியாது. என் 20 வருட சினிமா கேரியரில் இதுதான் பெஸ்ட் டைம் என்பேன்.

soorarai potru

மாணவருடன் சுர்யா மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிர்வாக இயக்குனர் அஜய் சிங்

இந்த விமானத்தில் 70 குழந்தைகளை பயணிக்க வைத்துள்ளோம். அவர்களுக்கு இதுதான் முதல் விமானப் பயணம். இதற்காக ஒரு சின்ன தேர்வு போல வைத்து அவர்களை தேர்வு செய்தோம் என்று தெரிவித்தார்.

முதல் முறையான விமானத்தில் வெளியான பாடல் வெளியீடு + முதல் முறை விமானத்தில் பயணித்த மாணவர்கள் என நெகிழ்ச்சி மேல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் வெய்யோன் சில்லி பாடலை சூர்யா ரசிகர்கள் ட்ரெண்ட்டாக்கி வருகிறார்கள்.

How has the coronavirus outbreak disrupted your life? And how are you dealing with it? Write to us or send us a video with subject line 'Coronavirus Disruption' to editorial@yourstory.com

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

Our Partner Events

Hustle across India