பதிப்புகளில்

இந்தியாவின் முதல் வசீகர பயிற்சியாளர்: டேனிஷ் ஷேக்

21st Nov 2015
Add to
Shares
93
Comments
Share This
Add to
Shares
93
Comments
Share

டேனிஷ் ஷேக்கிடம் இந்தியாவின் முதல் வசீகர பயிற்சியாளராக இருப்பதற்கு தேவையான அனைத்தும் இருக்கின்றது. பார்த்தவுடன் கவர்கின்ற புன்னகை, நமக்கும் தொற்றிக்கொள்ளும் அளவு துருதுருப்பு, கண்டிப்பாக வெற்றி பெரும் சில யோசனைகள் மேலும் தான் செல்ல வேண்டிய பாதை எது என்பதில் அவருக்கு இருக்ககூடிய தெளிவு. அவர் மற்றவர்களை போன்று "என்னால் முடிகின்றது, ஏன் உங்களால் இயலாது???" என்று கேட்பதில்லை. அவர் வாழ்வே அவர் கூற்றுக்கு சான்றாக திகழ்கின்றது : அது "வசீகரம் என்பது அனைவரும் கற்றுக்கொள்ளகூடிய ஒரு திறமை" என்பதே.

இந்தூரில் பிறந்திருந்தாலும், படித்தது கான்வென்ட் பள்ளியில். அவருக்கு மிகவும் பிடித்தமான ஆசிரியர்கள் கூட, இவரது எதிர்காலம் இவருக்கு என்ன வைத்துள்ளது என்பதில் ஐயம் கொண்டிருந்ததனர். பத்தாம் வகுப்பில் குறைந்த மதிப்பெண்கள் காரணமாக வேறு பள்ளிக்கு சென்று படிப்பை தொடர்ந்தார். மேலும் 12ஆம் வகுப்பின் இறுதித் தேர்வில் இரண்டாம் முறை தான் தேர்ச்சி பெற்றார்.

image


"புத்தகங்கள் மட்டுமே அப்போது எனது நண்பர்கள். அப்படித்தான் டானியல் கார்நேகியின் " நண்பர்களை சம்பாதிப்பது மற்றும் அவர்களிடம் செல்வாக்கு பெறுவது எப்படி" என்ற புத்தகத்தை படித்தேன். அது என்னையே எனக்கு அறிமுகப்படுத்தியது." என்கிறார் டேனிஷ். விரைவிலேயே, தான் படித்தவற்றை நிஜ வாழ்வில் செயல்படுத்திப் பார்த்தார்.

நாள் ஒன்றிற்கு ஒரு அறிமுகமற்ற நபரிடம் பேசுவது என்பதை தனது குறிக்கோளாக கொண்டார். அவ்வாறு கடந்த 12 வருடங்களில் 5000 நபர்களிடம் உரையாடி உள்ளதாக அவர் கூறுகிறார்.

அப்படி முகம் அறியாத நபரிடம் பேசும் பழக்கத்தை நான் கொண்டிராவிட்டால், என் மிகச்சிறந்த நண்பனை சந்தித்திருக்க இயலாது" என்பதை மும்பையின் ஜெய் ஹிந்த் கல்லூரியில் "டெட்" கலந்துரையாடலின் போது தெரிவித்தார். அவர் பேச்சிற்கு மாணவர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது.

"எனக்கு மற்றவர்களை கவனிக்க பிடிக்கும். மனித உளவியல் நம்மை சுற்றியே உள்ளது. நாம் நின்று கவனித்தால் போதும் என்கிறார் டேனிஷ். அவர் வசீகரத்தின் அளவுகோலை, மக்களை உற்றுநோக்குவதன் மூலமும், புத்தகங்ககள் மற்றும் வெளியிடப்பட்ட அறிவியல் ஆராய்ச்சி கட்டுரைகளை படிப்பதன் மூலமும், தருவித்துள்ளார்.

டேனிஷின் தற்போதைய பயணம் அவர் 18 வயதாக இருக்கையில் துவங்கியது. மனதில் எழுந்த ஒரு உந்துதல் காரணமாக, இந்தூரில் இருந்த வெப்துனியா என்ற நிறுவனத்திற்கு ஆசிரியர் பணிக்கான நேர்முகத்தேர்வுக்கு சென்றார். அங்கு தன்னைக்காட்டிலும் திறமை வாய்ந்த, அனுபவம் வாய்ந்தவர்களை தோற்கடித்து அந்த வேலையை பெற்றார். அதன் பிறகு அவர் பெற்ற ஒவ்வொரு வெற்றியும் அவரது நம்பிக்கை மற்றும் வசீகரத்தை அதிகரித்தது. தனது 20தாவது வயதில் டேனிஷ் 100 பேர் கொண்ட குழுவை மைக்ரோசாப்ட்டின் கடினமான ஒரு திட்டத்தில் வழிநடத்திச் சென்றார். பின் தனது 21வது வயதில் "லயன்ப்ரிஜ்.இன்க்” என்ற நிறுவனத்தின் உலக திட்ட மேலாளராக இணைந்தார். நிறுவனத்தின் வரலாற்றிலேயே மிகக்குறைந்த வயதில் அந்த பதிவுக்கு வந்தவர் என்ற பெருமையும் அவரை சேர்ந்தது. அவரது 22வது வயதில் “யாஹூ” நிறுவனதில் சர்வதேச தயாரிப்பு மேலாளராக இணைந்தார். (யாஹூ மின்னஞ்சல், யாஹூ மேஸ்சன்ஜர்)

வசீகரதிர்க்கான அளவுகோள் :

டேனிஷின் வாழ்க்கையில் பல முரண்பாடுகள் உள்ளன. தயாரிப்பு மேலாண்மை என்பது அவரது கோட்டையாக இருந்தாலும் தகவல் பரிமாற்றம் மற்றும் பயிற்சி கொடுக்கும் துறையிலேயே அவர் பணிபுரிய விளைந்தார். தனது பெயரின் பின்னால் ஒரு எம்பிஏ பட்டம் இல்லாவிடினும், மிக உயர்ந்த கல்வி நிறுவனங்களில் இன்று கருத்தரங்குகளில் பேச்சாளராக கலந்து பேசி வருகிறார். மேலும் புத்தகங்கள் மீது அவருக்கு பெருவேட்கை உருவாகி உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அவர் தனது வலைதளத்தை துவங்கினர். டேனிஷ்ஷேக்.காம் என்ற அவரது தொழில் முனைவு மூலம், வசீகரக் கலையில் மக்களை பயிற்றுவிக்கின்றார்.

"வசீகரம் என்பது எப்போதும் என்னை ஈர்த்த ஒன்று. எனது ஓய்வு நேரத்தில் அதன் மீது ஆய்வுகள் மேற்கொண்டேன். அதன் மூலம் குறிப்பிடத்தக்க அளவு வசீகரத்தை பெரும் முறையை, மற்றவர்களுக்கு கற்பிக்கும் வழியை உருவாக்கினேன். அதன் பின் மேலாண்மை கல்வி நிறுவனங்களில் விருந்தினராக உரையாற்றினேன். பிறகு வசீகரப் பயிற்சி என்பது பொழுது போக்கில் இருந்து எனது பேரார்வமாக ஆனது என்கிறார் டேனிஷ்.

வசிகரங்களில் பல்வேறு வகைகள் இருப்பதாக அவர் கருதினாலும், அவர் தனது கவனத்தை குவிப்பது மூன்றின் மீதுதான். அவை "அதிகார வசீகரம், தொலைநோக்கு பார்வை வசீகரம், மற்றும் பச்சாதாப வசீகரம். "தற்போது உதாரணாமாக ஸ்டீவ் ஜாப்சை நீங்கள் எடுத்தால் அவருக்கு இருந்தது, தொலைநோக்கு பார்வை வசீகரம். அதற்கு காரணம் அவரது எதிர்காலம் சார்ந்த சிந்தனை. அன்னை தெரசாவை உதாரணம் கொண்டால், அவரிடம் இருந்தது பச்சாதாப வசீகரம். அதற்கு காரணம் மக்களோடு அவர் ஏற்படுத்திய தொடர்பு. ஆனால் நான் முயல்வது அனைத்து சூழ்நிலைகளிலும் ஒத்துப்போகும் ஒரு வசீகரத்தைப் பற்றி என்கிறார் டேனிஷ்.

எதார்த்த அணுகுமுறையையே அவர் கையாள்கிறார். "அனைத்து நேரங்களிலும் அனைத்து கேள்விகளுக்கும் என்னிடம் பதில் இராது என்பதை நான் அறிவேன். இருப்பினும் என்னிடம் ஒரு ஒழுங்கு முறை உள்ளது. ஒவ்வொரு முறையும் ஒருவரை நான் வித்தியாசமாகவே அணுகுகிறேன். விதிகளை விதிப்பதும், உடைப்பதும் நானே. மாந்தர் தனித்தன்மை வாய்ந்தவர்கள் அவர்களை அவ்வாறு நடத்துவதே சிறந்தது" என்கிறார் டேனிஷ்.

தனி ஒரு வழி :

தற்போது டேனிஷிடம் வேறு வேறு வகைப்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். மிஸ் இந்தியா போட்டியின் வெற்றியாளர் முதல், நிறுவனங்களின் தலைவர்கள், சட்டம் இயற்றுபவர்கள், புதிதாக தொழில் முனைவோர், தொழில் முனைந்து வெற்றி பெற்றோர் வரை அனைத்து வகைகளிலும் உள்ளனர். " ஒரு முறை ஒரு நிருபர் ஏன் உங்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டு உங்கள் கருத்து பகிரப்படுகிறது? பிரபலமானவர்கள் எவரோடு தாங்கள் பணிபுரிந்துள்ளீர்? எனக் கேட்டார். ஆனால் தொழில் தர்மம் காரணமாக எவர் பெயரையும் நான் வெளியிட இயலாது என்றேன். அந்த விதியை, நேர்காணல்கள் ரத்தாகும் என்ற நிலையிலும் கடைபிடித்து வந்துள்ளேன். மேலும் என் வாடிக்கையாளர்களில் மிகவும் பரபலமான ஒருவர் தற்போது என் நெருங்கிய நண்பராகியுள்ளார். அவரிடம், அவரது மாற்றத்தை, தொலைக்காட்சி விளம்பரங்கள் போல ஒளிப்பதிவு செய்யக்கோரியுள்ளேன் எனக் கூறி சிரிக்கின்றார் டேனிஷ்.

தற்போது டேனிஷ் தனது வசீகர பயிற்சியை யூஏஈ க்கு விரிவு படுத்தியுள்ளார், மேலும் அடுத்தாண்டு, யூகே வுக்கு விரிவு படுத்தவும் திட்டமிட்டுள்ளார். நான் எனது வாடிக்கையாளர்களுக்கு அவர்களது அனுபவத்தில் இருந்து பாடம் கற்று அவர்கள் வசீகரத்தை மேம்படுத்த கற்றுக்கொடுக்கின்றேன், என்கிறார் அவர்.

டேனிஷ் வழக்கமாக கொடுக்கப்படும் பயிற்சி முறைகளுக்கு எதிராக உள்ளார். "நான் வாழ்வியல் பயிற்றுனர்களை கவனித்துள்ளேன். அவர்களிடம் ஒரு கட்டமைக்கப்பட்ட முறை உள்ளது. ஆனால் நான் எனது வாழ்வை கட்டுக்குள் வைத்து வாழ்வதில்லை. எனவே அவ்வழி என்னால் பயிற்றுவிக்க இயலாது" என முடித்தார் டேனிஷ்.

ஆக்கம் : Mukti Masih| தமிழில் : கெளதம் s/o தவமணி.

Add to
Shares
93
Comments
Share This
Add to
Shares
93
Comments
Share
Report an issue
Authors

Related Tags