பதிப்புகளில்

உங்கள் நகரில் புதிதாக என்ன உள்ளது? விடை இவர்களிடம்!

டெல்லியை சுற்றிப்பார்க்க உதவும் தளம்

YS TEAM TAMIL
13th Jan 2016
Add to
Shares
1
Comments
Share This
Add to
Shares
1
Comments
Share

டில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள், மும்பை போன்ற பெருநகரங்களில் வசிப்பவர்கள் தங்கள் வார விடுமுறையை திட்டமிட தயங்காமல் நாடும் இடம் "லிட்டில் பிளாக் புக்" (Little Black Book) சுருக்கமாக LBB. இந்நிறுவனத்தை வடிவமைத்த சுஜிதா சல்வான், 2012ல் தான் டில்லியில் வசிக்கத் துவங்கியபோது, வார இறுதிகளில் என்ன செய்யலாம் என்று கண்டுபிடிக்க, செலவிட்ட நேரத்தை மற்றவர்களுக்கு மிச்சம் செய்யவும், டில்லி எனும் பெருநகரின் பல்வேறு பரிணாமங்களை மற்றவர்கள் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாகவுமே எல்.பி.பியை தான் வடிவமைத்ததாகக் கூறுகிறார்.

image


டில்லி பல்கலைக்கழகத்தின் பொருளாதார பட்டதாரியான சுஜிதா இதற்குமுன் விஸ்கிராஃப்ட்(Wizcraft) மற்றும் பிபிசி(BBC) போன்ற நிறுவனங்களின் விளம்பரத் துறையில் பணியாற்றி அனுபவம் பெற்றவர். பிபிசியின் இந்தியப் பிரிவு தொடங்கப்பட்டபோது அதில் பணியாற்றி அனுபவம் பெற்றவர் சுஜிதா. அந்த அனுபவம் நிகழ்ச்சித் தயாரிப்பில் திட்டமிடலும், ஒழுங்கு முறைகளும் எந்த அளவுக்கு சக்தி வாய்ந்தவை என்பதை தனக்குப் புரிய வைத்ததாகக் கூறும் சுஜிதா, 2012 வருட இறுதியில் பிபிசியிலிருந்து வெளியேறி எல்.பி.பியை துவங்க முடிவு செய்தார்.

பல்வேறு வகை சேவைகள்

எல்.பி.பியின் சக போட்டியாளர்களான திரில்லோஃபியா (Thrillophilia), ஹாலிடிஃபை (Holidify) போன்ற நிறுவனங்கள் உணவு வகைகள், பயண ஏற்பாடுகள், சாகசப் பயணங்கள் என ஏதேனும் குறிப்பிட்ட விஷயங்களை மட்டும் கவனிக்கையில் எல்.பி.பியோ உணவு, பயணம், ஷாப்பிங்க், சாகசப்பயணங்கள் என பல்வேறு தளங்களை கையாள்கிறது. பல்வேறு வயதுடையோரும் இவர்களில் வாடிக்கையாளர் பட்டியலில் இருந்தாலும் குறிப்பாக 18-35 வயதுடையோரின் எண்ணிக்கையே அதிகம்.

நிதி ஆதாரங்கள்

மூன்று சக அலுவலர்களுடனும், சில பயிற்சியாளர்களுடனும் சேர்ந்து 2013-2014ல் சுஜிதாவால் ஆரம்பிக்கப்பட்டது இந்நிறுவனம். 2014ல் மாதத்திற்கு 80000 பயனாளர்களை எட்டியது. 2015ல் எல்.பி.பி தனியாகவும் வேறு நிறுவனங்களோடு இணைந்தும் நடத்திய நிகழ்வுகளில் பங்கு பெற்றோர் எண்ணிக்கை 2,00,000.

2015 ஏப்ரலில் ராஜன் ஆனந்தன், சச்சின் பாட்டியா மற்றும் ஒரு சிங்கப்பூர் நிதிக்குழுமம் ஆகியோரின் முதலீடுகள் கிடைக்கப் பெற்றவுடன் எல்.பி.பியின் வளர்ச்சி ஏறுமுகமானது. அடுத்த ஆறு மாதத்தில் நிறுவனம் 30க்கும் மேற்பட்ட பணியாளர்களோடு விரிவடைந்தது. பெங்களூருவில் கிளையொன்றும் துவக்கப்பட்டது. அவ்வருடத்திய நவம்பர் மாதத்தில் அவர்களின் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஒஎஸ் செயலிகளும் வெளியிடப்பட்டன.

சுஜிதாவின் கூற்றுப்படி அவர்களின் வலைத்தளம் மூலம் மட்டும் மாதமொன்றுக்கு 6,00,000 வாடிக்கையாளர்கள் எல்.பி.பியை உபயோகிக்கிறார்கள்.

துருவ் மாத்தூர்

துருவ் மாத்தூர்


தொழில்நுட்பப் பிரிவு

இந்நிறுவனத்தின் தொழில்நுட்பப் பிரிவின் தலைவராக திரு. துருவ் மாத்தூர் கடந்த வருட துவக்கத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். இவரைப் பற்றி சுஜிதா குறிப்பிடுகையில் நிறுவனத்தின் தொழில்நுட்ப பொறுப்புகளைக் கையாள துருவை விட சிறந்தவர் வேறு யாருமில்லை என்கிறார்.

கார்னகி மெலன் பல்கலைக்கழக பட்டதாரியான துருவும் தன்னளவில் ஒரு தொழில்முனைவர்தான். அமெரிக்காவில் டிலாய்ட் நிறுவனத்தில் பணியாற்றிப் பின் இந்தியா திரும்பிய துருவ் getFbPay.in எனும் முயற்சியை துவக்கினார். இப்போது சுஜிதாவுடன் கைகோர்த்து எல்.பி.பியின் வளர்ச்சிக்கு உழைக்கத் தயாராகியுள்ளார்.

விளம்பரங்கள்

எல்.பி.பியின் முக்கிய வருவாய் விளம்பரங்கள்தான். பெரிய நிறுவனங்கள் மட்டுமல்லாமல் சிறிய உணவகங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களை வாடிக்கையாளர்களுக்கு சேர்க்க எல்.பி.பியினை உபயோகிக்கிறார்கள். 2015 மார்ச்சிலிருந்து டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் நிறுவனத்தின் விளம்பர வருவாய் 500% அதிகரித்திருப்பதாக சுஜிதா கூறுகிறார்.

எதிர்கால திட்டங்கள்

தங்களது பெங்களூர் கிளைக்கு கிடைத்திருக்கும் உற்சாக வரவேற்பினால் ஊக்கமடைந்துள்ள இந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு இன்னும் பல புது வசதிகளை அறிமுகப் படுத்த உள்ளது. தங்களது மொபைல் செயலியில் திட்டமிடும் வசதி சேர்க்கப்பட உள்ளதாகவும், இதன் மூலம் நண்பர்களுடன் சாட் செய்ய முடியும் என்றும் எல்.பி.பி தெரிவிக்கிறது.

வெற்றியின் ரகசியம்

சரியான திட்டமிடலே தங்கள் வெற்றியின் தாரக மந்திரம் என்று சுஜிதா சொல்கிறார். மிகவும் பரபரப்பாகவும், குறுகிய கால அவகாசத்திலுமே தொடர்ந்து வேலை செய்யும் படி இருப்பதாகவும், ஆனாலும் தெளிவான திட்டமிடல் இருப்பதால் தங்களால் இலக்குகளை எட்ட முடிவதாகவும் துருவ் தெரிவிக்கிறார்.

சவால்கள் நிறைந்த இந்தத் துறையில் ஒரு நாளைக்கு 16 மணி நேர உழைப்பெல்லாம் சர்வ சாதாரணம். ஆயினும் வாடிக்கையாளர்களுக்கும் , நிறுவனங்களுக்கும் நம்முடைய சேவை தரமானதாக இருக்க வேண்டும் என்கிற ஒரே நோக்கமே எங்களை தளர்வடையாமல் உற்சாகமாக இயங்க வைப்பதாக இவர்கள் கருதுகிறார்கள்.

எல்.பி.பி.யின் குழு

எல்.பி.பி.யின் குழு


யுவர் ஸ்டோரி கருத்து

ஒரு பெரிய நகரின் பல்வேறு வசதிகளையும், வாய்ப்புகளையும் அலசி ஆராய எல்.பி.பி சரியான தேர்வாக இருக்குமென்றாலும் குறிப்பிட்ட வகைமையில் நிறைய வாய்ப்புகளை பார்க்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஜோமாட்டோ(Zomato) அல்லது ஹாலிடிஃபை( Holidify) போன்று ஒரு துறையில் பிரதானமாக இயங்கும் நிறுவனங்களே சரியான தேர்வாக இருக்குமென யுவர் ஸ்டோரி நிறுவனம் கருதுகிறது.

இணையதள முகவரி: LittleBlackBook

ஆங்கிலத்தில்: Tanvi Dubey | தமிழில்: எஸ்.பாலகிருஷ்ணன்

Add to
Shares
1
Comments
Share This
Add to
Shares
1
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக