பதிப்புகளில்

IICA குறித்த திட்டத்தின் 12-வது திட்ட காலம் தொடரப்படும் என்று மத்திய அமைச்சரவை முடிவு!

YS TEAM TAMIL
23rd Nov 2017
Add to
Shares
1
Comments
Share This
Add to
Shares
1
Comments
Share

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான இந்தியன் இன்ஸ்டிடியூட் (IICA) குறித்த திட்டத்தை 12-வது திட்ட காலத்திற்குப் பிறகும் மேலும் மூன்று நிதியாண்டுகளுக்கு (நிதியாண்டு 2017-18 முதல் 2019-20 வரையில்) தொடர்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த நிறுவனத்திற்கு மானிய உதவியாக ரூ.18 கோடி அளிக்கவும் ஒப்புதல் தரப்பட்டது. 2019-20 நிதியாண்டிற்குப் பிறகு இந்த நிறுவனம் தற்சார்புள்ளதாக மாறுவதற்கு இது வழிவகை செய்யும்.

image


தாக்கம் :

* மக்கள் மற்றும் தனியார் துறையினரின் பங்களிப்புடன் கார்ப்பரேட் நிர்வாகம் என்ற முக்கிய துறையில் இந்த நிறுவனம் மேற்கொண்டுள்ள பயிற்சித் திட்டங்கள், ஆராய்ச்சி செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் திறன் தொகுப்புகளை மேம்படுத்தி, மாணவர்கள் மற்றும் தொழில் சார்ந்தவர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யும்.

* தனது நிதி ஆதாரவளங்கள் மற்றும் வருவாய்களை மேம்படுத்தும் அதேசமயத்தில், கார்ப்பரேட் சட்டங்கள் துறையில் பெருமைக்குரிய கல்வி நிலையமாக மாறுவது என்பது இந்த நிறுவனத்தின் முக்கிய நோக்கமாக மாறும்.

* IICA தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இன்ஸ்டிடியூட் ஆக மாறும் என்று தொலைநோக்கில் எதிர்பார்க்கப் படுகிறது. அதிகரிக்கும் பொருளாதார செயல்பாடுகளில் வளர்ச்சிக்கான என்ஜினாக இது மாறும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

* தொழில்முறை திறமையை மேம்படுத்துவதன் மூலம், கார்ப்பரேட் துறைகளில், வெளிநாடுகள் உள்பட, வேலைவாய்ப்புகளை கண்டறிவதில் தொழில்சார்ந்தவர்களுக்கு இது உதவும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

பின்னணி :

IICA -வில் உள்ள கார்ப்பரேட் சமூக பொறுப்புக்கான தேசிய அறக்கட்டளை (NFCSR), கார்ப்பரேட் பொறுப்பு (CSR) முன்முயற்சிகளுக்கு பொறுப்பானதாக இருக்கிறது. கம்பெனிகள் சட்டம், 2013-ல் உள்ள புதிய விதிகளை ஒட்டி இந்த அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. கார்ப்பரேட்களின் பங்கேற்புடன், CSR துறையில் சமூக பங்கேற்பை நோக்கமாகக் கொண்ட பல்வேறு செயல்பாடுகளை NFCSR நடத்துகிறது.

கார்ப்பரேட் துறை தொடர்பான விஷயங்களில் கொள்கை உருவாக்குபவர்கள், ஒழுங்காற்றுநர்கள் மற்றும் அதில் பணியாற்றும் தொடர்புடையவர்களுக்கு அறிவார்ந்த முடிவுகள் எடுப்பதற்கு உதவும் வகையில் IICA சிந்தனை மையமாகவும், தகவல் மற்றும் விவரங்கள் அளிப்பதாகவும் இருக்கிறது. கார்ப்பரேட் சட்டங்கள், கார்ப்பரேட் நிர்வாகம், CSR, கணக்கியல் தர நிலைகள், முதலீட்டாளர் கல்வி போன்ற துறைகளில் தொடர்புடையவர்களுக்கு இந்த அமைப்பு சேவைகள் அளிக்கிறது. 

முதல் தலைமுறை தொழில்முனைவோர் மற்றும் சிறு தொழில் முனைவோருக்கும் IICA உதவியாக இருக்கிறது. மேலாண்மை, சட்டம், கணக்கியல் போன்றவற்றுக்கு தனித்தனி நிபுணர்களை அமர்த்திக் கொள்ள அவற்றுக்கு வசதி இருக்காது என்பதால் பன்முக திறன்களை கற்றுத் தருவதில் இது உதவிகரமாக இருக்கிறது.

Add to
Shares
1
Comments
Share This
Add to
Shares
1
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக