பதிப்புகளில்

பாடல்களையும், பாடலின் வரலாற்றுக் கதைகளையும் தரும் 'தி சாங் பீடியா'

YS TEAM TAMIL
3rd Mar 2016
Add to
Shares
1
Comments
Share This
Add to
Shares
1
Comments
Share

பழைய பாடல்கள் வானொலியில் ஒலிக்கையில் அவற்றை கேட்கும் நமது தாத்தா பாட்டி, அந்த பாடல் வந்த வருடம், வந்த விதம், ஏற்படுத்திய தாக்கம் என பழைய நினைவுகளில் மூழ்குவது எல்லோர் இல்லத்திலும் நடக்கும் ஒரு நிகழ்வு. பின்னர் வானொலி சென்று கைபேசி வந்தது. தினம் ஒரு பாடல் நமக்கு பிடித்ததாக உள்ளது. எனவே இக்காலத்தில், அக்காலத்து பாடல்களை அவற்றின் நினைவுகளை நினைத்து ஏங்குவோரை காப்பாற்ற “தி சாங் பீடியா” வந்துள்ளது.

“நாங்கள் இசைப் பிரியர்கள். அதனை அலசி ஆராய்வது எங்கள் தினசரி வாழ்வின் ஒரு அங்கம் ஆகும். மேலும், இசை மேதைகளோடும், அவர்கள் குடும்பத்தினரோடும் பேசுவதும், அவர்கள் பற்றிய கதைகளை பேசுவதும் எங்கள் தினசரி நிகழ்வாகும். அப்போதுதான், நாங்கள் கேட்ட கதைகளை, மற்ற இசை ரசிகர்களோடு பகிர்ந்து கொள்ளவேண்டும், அதற்கு ஒரு தளம் வேண்டும் என்ற எண்ணம் மனதில் முளைத்தது,” 

என்கிறார் தீப்பா பட்டி, தி சாங் பீடியாவின் இனைநிறுவனர். இந்த வலைதளம், இசை ரசிகர்களுக்கு இசை பற்றியும், இசை தொடர்பான தொழில்முனைவுகள் பற்றிய விவரங்களையும் அளிக்கின்றது.

image


துவக்கம் :

ஒரு இசை சமந்தப்பட்ட நிகழ்ச்சியில், தீபா தனது இணைநிறுவனர் பால் கிருஷ்ணா பிர்லாவை, சந்தித்து தனது இசை பற்றிய சிந்தனைகளை பகிர்ந்து கொள்ள, இருவர்க்கும் இது சரியான ஒரு வாய்ப்பாக அமையும் என்பது புரிந்தது.

இசையின் நீள அகலங்களை தீபா சரிவர புரிந்து வைத்திருக்க, பிர்லா தனது தொழில்நுட்ப அறிவை நிறுவனத்திற்கு கொணர்ந்தார். பின்னர் நாடுமுழுவதிலும் இருந்து இசை பிரியர்களை தங்கள் வலைதளத்தில் எழுதுவதற்காக நியமித்தனர்.

பாடல்களின் பின்னணியில் உள்ள கதைகள், இசை வல்லுனர்கள் பற்றிய விவரங்கள், இசையை மையமாக கொண்டிருக்கும் தொழில்முனைவுகள் என பல விஷயங்கள் வலைத்தளத்தில் இருந்தாலும், இசை முக்கிய நோக்காக இருக்கின்றது. மேலும், வலைதளத்தில் வரும் விளம்பரங்கள் முக்கிய வருவாயாக இருக்கின்றது. ஏப்ரல் இறுதிக்குள் 5000 கட்டுரைகள் இவர்கள் தளத்தில் ஏற்றி, அதன் மூலம் ஒரு மில்லியன் வாசகர்களை பெறவேண்டும் என்பதே இவர்கள் குறிக்கோளாக உள்ளது.

image


போட்டி :

வாரஇதழ்கள் சில இருப்பினும், இணையத்தில் இவர்களுக்கென போட்டி தற்போது இல்லை. தி சாங் பீடியா தற்போது வாசகர்கள் மத்தியில் ஒரு தனி இடத்தை பெற்றுள்ளது. அதற்கு காரணம் இவர்களுக்கு துறை மீதுள்ள புரிதலே.

மேலும் வளர்ந்துவரும் இசை கலைஞர்களுக்கான ஒரு தளமாகவும் இது செயல்படுகின்றது. புகழ் பெறுவதை காட்டிலும் அதனை தக்கவைத்துக்கொள்வது கடினமாக இருக்கும் இக்காலத்தில், வளர்ந்து வரும் கலைஞர்கள் மேலும் அவர்களுக்கு சமந்தமான தொழில்முனைவுகள் ஆகியவற்றில் இவர்கள் கவனம் செலுத்துகின்றனர்.

image


இத்துறை எப்போதும் பாலிவுட் அல்லது ஆன்மிகம் சமந்தப்பட்ட இசை ஆகியவற்றையே எப்போதும் முன்னிருத்துகின்றது. ஆனால் அந்நிலையை மாற்றி, தனியாக இசை ஆல்பங்கள் உருவாக்குவோருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றோம். இக்கலைஞர்கள் இசையை உருவாக்குவதில் தங்கள் வாழ்நாள் முழுவதும் செலவிடுகின்றனர். ஆனால் கார்ப்ரேட் கம்பெனிகளோடு சரிவர அவர்களால் ஒப்பந்தங்கள் பெற இயலுவதில்லை. அதற்கென தங்களை அர்ப்பணித்துக் கொண்ட தரகர்கள் இங்கில்லை".

எனவே தனியாக இசை ஆல்பங்கள் உருவாக்குவோர் கார்ப்ரேட் நிருவனகளோடு சரியா ஒப்பந்தங்கள் புரிய உதவுகின்றனர். மேலும் இவர்களுக்கு சொந்தமான ஒலிப்பதிவு மையத்தில் அவர்கள் தங்கள் பாடல்களை பதிவு செய்ய வாயப்பளிக்கின்றனர்.

எதிர்கால திட்டம் :

பல்வேறு வகையான மக்கள் விரும்பும் வகையில் இவ்வலைத் தளத்தில் விஷயங்கள் அடங்கியுள்ளன. ஆனால் நிறுவனர்கள் கவனம் இருப்பது எங்கே?

நாங்கள் இசைத் துறையின், ஆன்லைன் மீடியா ஆகவேண்டும். அதாவது இசைத் துறையின் யுவர்ஸ்டோரி ஆகவேண்டும்” என்கிறார் தீபா.

இசைத் துறையும், இணையமும் மிகவேகமாக மாறிவரும் இவ்வேளையில், தி சாங் பீடியா, அவற்றின் இடையே ஒரு மாற்றுசக்தியாக நிற்கின்றது. மேலும் நமது பாட்டி தாத்தாக்கள் தங்கள் நினைவுகளை அசைபோட உதவுவது இதன் தனிச்சிறப்பு.

ஆக்கம் : ப்ரதீச்க்ஷா நாயக் | தமிழில் : கெளதம் s/o தவமணி

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

கைபேசியில் கர்னாடக இசை..! 24 மணி நேர சேவையை தொடங்கியது அகில இந்திய ரேடியோ

கலைஞர்களை புக் செய்ய ஆன்லைன் தளம்: எஸ்.பி.பி. உறுதுணையுடன் அறிமுகம்!

Add to
Shares
1
Comments
Share This
Add to
Shares
1
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக