பதிப்புகளில்

கைவிடப்பட்ட, காயப்பட்ட வாயில்லா ஜீவன்களை உரிய இடத்தில் சேர்த்து காத்திட உதவும் ‘AnimApp' செயலி

Induja Raghunathan
21st Oct 2016
Add to
Shares
10
Comments
Share This
Add to
Shares
10
Comments
Share

இரண்டாம் ஆண்டு பொறியியல் படித்துவந்த மாணவர் ஒருவர், தனது கல்லூரி வளாகத்தில் நாய்க்குட்டி ஒன்று காயங்களோடு அழுது கொண்டிருந்ததை கண்டு, அதை உடனடியாக காப்பாற்றி, தகுந்தவர்களை உதவிக்கு அழைத்து சிகிச்சைக்கு அனுப்பிவைத்தார். வாயில்லா பிராணிகள் ஊரெங்கிலும் அவதிப்படுவதை பார்த்தும், அதை பற்றிய போதிய விழிப்புணர்வு மக்களிடையே இல்லாததையும் உணர்ந்த அந்த மாணவர், மிருகங்கள் பாதுகாப்பு சம்பந்தமான ஒரு தொழிலை தொடங்கவேண்டும் என்று அப்போதே முடிவு செய்தார். அதற்கான பணிகளையும் தொடங்கினார். எஸ்ஆர்எம் பல்கலைகழகத்தில் சிவில் எஞ்சினியரிங் முடித்துள்ள சாகர் சேத் என்ற அந்த மாணவர் பட்டம் பெற்றப் பின்னர் தனக்கு தோன்றிய அந்த எண்ணத்தை கைவிடாமல், ‘அனிமல் ஆப்’ 'AnimApp' என்ற விலங்குகளை காப்பாற்ற உதவும் செயலி ஒன்றை உருவாக்கியுள்ளார். 

image


சென்னை போன்ற பெருநகரத்தில் நாய், பூனை போன்ற சிறு மிருகங்கள் பலமுறை அடிப்பட்டும், கைவிடப்பட்டும், காயப்பட்டும் ரோட்டில் கிடப்பதை நாம் எல்லாருமே கண்டுள்ளோம். அந்த நிலையில் அந்த பிராணிகளை பார்த்தும் அடுத்து செய்வதறியாது கடந்து செல்வதே பெரும்பாலோரின் வழக்கம். இது போன்ற பிராணிகளை காப்பாற்றும் வழிமுறைகள் மற்றும் அவை பாதுகாப்பாக அனுப்பக்கூடிய இடங்கள் பற்றி நாம் அறியாததே இதற்கு காரணம் ஆகும். இந்த பிரச்சனையை தீர்க்க நினைத்து தொழில்நுட்பத்தின் உதவியை நாடினார் சாகர் சேத். 

2015 இல் சென்னை ஐஐடி’யில் நடந்த ஒரு மராத்தான் ஓட்டத்தில் நானும் கலந்து கொண்டேன். அப்போது அங்கே ஒரு சின்ன நாய்குட்டி காயத்துடன் நடுவில் படுத்து கிடந்தது. அதனை தாண்டியே ஆயிரக்கணக்கானோர் ஓட்டத்தை தொடர்ந்தனர். இதில் வேடிக்கை என்னவென்றால் கான்சர் நோய் விழிப்புணர்வு மாரத்தான் அது. ஆனால் ஒருவர் கூட அந்த குட்டியை காப்பாற்ற நினைக்காதது என் மனதை பெரிதும் பாதித்தது,” என்றார். 

அந்த நாய்குட்டியை காப்பாற்றி அதற்கு லிட்டிள் டெர்ரி என்று பெயரிட்டு பூரண சிகிச்சை கொடுத்தேன். AnimApp போன்ற ஒரு செயலி அப்போது இருந்திருந்தால், அதற்கு உதவிட யாரெனும் ஒருவராவது பாதுகாப்பு மையத்தை அழைத்திருப்பார்கள் என்று எனக்கு தோன்றியது என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். 

பாதிக்கப்பட்ட பிராணியை தகுந்த இடத்தில் உள்ளோரிடம் கொண்டு சேர்க்க உதவும் செயலி ‘AnimApp'. ஆனால் இது அவ்வளவு சுலபமாக நடக்கவில்லை என்று கூறும் சாகர், 

“நம் எல்லாருக்குமே கஷ்டத்தில் வாடும் பிராணிகளை காப்பாற்றும் கடமை இருக்கிறது. தொழில்நுட்பத்தின் உதவியுடன் இதற்கு தீர்வு காண்பது அவ்வளவு சுலபமாக இல்லை. அதற்கு பல ஆராய்ச்சிகளும், உதவிகளும் எனக்கு தேவைப்பட்டது. பலர் என் முயற்சியை கேலி செய்தனர், ஆனால் என் குடும்பம் எனக்கு ஆதரவாக இருந்தது,” என்றார்.  

இணை நிறுவனர்கள் என்று யாரும் இல்லாமல் தனியாகவே இந்த செயலியை உருவாக்கியுள்ளார் சாகர். மக்களுக்கு இது போன்ற ஒரு தொழில்நுட்ப வசதியை ஏற்படுத்திக் கொடுத்தால் அவர்கள் வாய் பேசமுடியாத மிருகங்களுக்கு உதவி புரிவர் என்று நம்பிக்கை இருப்பதாகவும் கூறுகிறார். 

image


தொழில்நுட்ப பகுதியை வெற்றிகரமாக உருவாக்கினாலும் அதை சரியான இடத்தில் கொண்டு சேர்க்க விலங்குகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு அமைப்புகளின் ஆதரவும் இந்த முயற்சிக்கு இன்றியமையாததாகும். அதைப்பற்றி மேலும் விளக்கிய சாகர்,

“ப்ளூ க்ராஸ் அமைப்பை சேர்ந்த சத்யா ராதாகிருஷ்ணன் எனது இந்த முயற்சி விதையில் இருந்து உருப்பெறுவதற்கு முழு ஊக்கமளித்து ஆதரவளித்தார். எனது செயலியை அறிமுகப்படுத்துவதற்கும் அவர் எனக்கு எல்லா உதவிகளையும் செய்தார்,” 

என்று தன் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார் சாகர். இந்தியாவை பொறுத்தவரை விலங்குகள் பாதுகாப்பு செயலற்று இருந்தது. ஆனால் தற்போது அது வளர்ந்து வருகின்றது. மக்களில் சிலரும் வாயில்லா ஜீவன்களின் நலனுக்காக குரல் கொடுக்கத்தொடங்கியுள்ளதாக சாகர் கூறினார். 

’AnimApp’ செயலியை பற்றி

2016இல் தொடங்கப்பட்ட ’AnimApp’ நான்கு கால் மிருகங்கள், பறவைகள் என்று எல்லாவகை வாயில்லா ஜீவராசிகளை காப்பாற்றவும், ஆபத்து நிலைகளில் இருந்து மீட்கவும் உதவும் ஒரு ஆப் ஆகும். இதன் மூலம் ஒருவர் சுலபமாக உதவியை அழைக்கமுடியும். இதைப் பற்றி விளக்கிய சாகர்,

image


“ஒருவர் காயப்பட்ட அல்லது உடல்நிலை சரியில்லாத பிராணியை நகரத்தில் எங்கு பார்த்தாலும் உடனடியாக AnimApp செயலியின் மூலம் உதவியை பெறலாம். மூன்றே வழிகளில் இதை செய்துவிடமுடியும்,” என்றார்.

1. முதலில் பாதிக்கப்பட்ட அந்த பிராணியை படம் பிடிக்கவேண்டும், 

2. நீங்கள் இருக்கும் இடத்தை மேப்பில் அடையாளப்படுத்தி குறிப்பிடவேண்டும்,

3. அந்த பிராணிக்கு இருக்கும் பிரச்சனையை செயலியில் பட்டியிலடப்பட்ட காரணங்களில் ஒன்றை தேர்வு செய்யவேண்டும். 

மேற்கூறிய மூன்றை செய்தாலே போதும் தகுந்த உதவி நீங்கள் இருக்கும் இடத்தை தேடி வரும் என்றார் சாகர். அண்மையில் முழு உருவை பெற்றுள்ள இவரது ஆப், விரைவில் மேம்படுத்தப்பட்டு இந்தியா முழுதும் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். 

முதலீடு மற்றும் குழு

குடும்பத்தாரின் ஆதரவோடு இதை தொடங்கிய சாகர், தன் தந்தையிடம் இருந்து முதலீடும் உதவிகளும் பெற்றார். அவரது வழிகாட்டுதலும் சாகருக்கு தன் தொழிலை நடத்தி செல்ல உறுதுணையாய் இருக்கிறது. ஒரு சிறிய தொழில்நுட்பக்குழு, பிசினஸ் மற்றும் மார்க்கெடிங் குழுவை கொண்டு தன் நிறுவனத்தை நடத்துவதாக சாகர் கூறினார். பிராணிகள் விரும்பியான காதம்பரி நரேந்திரன், மார்க்கெடிங் பணிகளை பார்ப்பதாகவும் கூறினார். கடந்த டிசம்பர் மாதம் சென்னை வெள்ளத்தின்போது பிராணிகளை மீட்பதில் இவர்கள் செயல்பட்டுள்ளனர். மேலும் தற்போது மீட்கப்படும் விலங்குகளை பராமரிக்க தேவையான பணிகளையும் செய்து வருவதாக கூறினர். 

ஸ்டீவ் ஜாப்ஸ் தனது முன்மாதிரி என்று கூறிய சாகர், “வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து பணிகளை தொடங்கி, பின்பு தொழில்நுட்பத்தை அதற்கேற்ப உருவாக்கவேண்டும்,” என்ற அவரது பொன்மொழிகளின் பின்பற்றி பணியாற்றுவதாக கூறி முடித்தார். 

AnimApp பதிவிறக்கம் செய்ய 
Add to
Shares
10
Comments
Share This
Add to
Shares
10
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக