பதிப்புகளில்

ரோபோடிக்ஸ் துறையில் இளம் பெண்களை ஊக்கப்படுத்தும் அதிதி, தீப்தி சகோதரிகள்!

14th Oct 2015
Add to
Shares
112
Comments
Share This
Add to
Shares
112
Comments
Share

ரோபோடிக்ஸ் மூலம் புதுமை படைக்க விரும்பும் நாளைய படைப்பாளிகளை ஊக்குவிக்கும் முயற்சியைத் தொடங்கியுள்ளனர் அதிதியும், தீப்தியும். சதோதரிகள் அதிதி பிரசாத்தும், தீப்தி ராவ் சுசீந்திரனும், "ரோபோடிக்ஸ் லெர்னிங் சொல்யூஷனில்" சிஓஓ மற்றும் சிஐஓவாக உள்ளனர். அவர்கள் ரோபோடிக்ஸை பயன்படுத்தி ஸ்டெம் STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணினி) திறனை முன்னேற்ற விரும்பினர். ஏனெனில் இந்தத் திறன் தொழில்நுட்பப் பாதையில் பயணிக்கவும், எதிர்காலத்தை தீர்மானிக்கவும் தேவையான தகுதிகள்.

இரண்டு சகோதரிகளும் கல்வி மற்றும் தொழில்நுட்பத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள். பிள்ளைப்பருவம் முதலே அவர்களுக்கு எழுந்த ஊக்கமே இதற்கு முக்கியக் காரணம். தொடக்க காலத்தில் விஞ்ஞானத்தை புதுமையாகவும், கேளிக்கையாகவும் கற்றுக்கொடுத்ததில் அவர்களின் தந்தை முக்கியப்பங்கு வகித்தார். உதாரணமாக அவர் பொம்மை பந்தை கீழே போட்டு புவியீர்ப்பு விசை பற்றி சொல்லிக்கொடுத்தார்; அவர்களை தோட்டத்துக்கு அழைத்துச்சென்று பட்டாம்பூச்சிகளைக் காண்பித்து, அவை எப்படி உருவாகின்றன, ஏன் அவை வெவ்வேறு நிறங்களில் உள்ளன, அவை என்ன உண்கின்றன உள்ளிட்ட பல்வேறு கேள்விகைளைக் கேட்பார். ஒரு ஆவலை அவர்களுக்குள் அவர் விதைத்ததோடு, இரண்டு பேரையும் கேள்விகள் கேட்க ஊக்கப்படுத்தினார். மேலும் எந்த ஒரு விஷயத்தையும் உற்று நோக்க வேண்டும் என்பதையும் அவர் கற்றுக்கொடுத்திருந்தார்.

ஒரு செடியை விதைப்பது அவை மரமாக வளர்ந்தபின் பிறருக்கு நிழலையும் பழங்களையும் தர வேண்டும் என்பதற்காக, அதேப்போல அவர்களின் இளமைக்காலம் அழகான உதாரணமாக விளங்கியது. அதிதி மற்றும் தீப்தியின் பெற்றோர் படிப்பின் தாகம் குறித்து அவர்களிடம் ஏற்றி வைத்த தீ அவர்களின் செயல்கள் மூலம் மற்ற இளைஞர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தந்தையின் வழியில் அதிதியும் தீப்தியும் அவரோடு இணைந்து இளம் தலைமுறையினரின் வாழ்வின் ஒரு அங்கமாக ரோபோடிக்ஸை உருவாக்கி வருகின்றனர். “குழந்தைகள் கண்களை அகல விரித்து ரோபோக்களுடன் விளையாடும் போது, இதற்கு முன் தெரியாத ஒரு விஷயத்தை கற்றுக்கொள்கிறார்கள் என்பதை காண முடிகிறது, இதுவே எங்களுக்கு முழு திருப்தி அளிக்கும் அனுபவம்” என்கிறார்கள் அவர்கள்.

image


ஸ்டெம் கல்வி முறை மற்றும் ரோபோடிக்ஸ் கீழ் பெரும்பாலான இளம் பெண்களை இணைப்பதற்கு இந்த சகோதரிகள் எடுத்து வரும் முயற்சிகள் குறித்து யுவர்ஸ்டோரியிடம் பேசினார்கள்.

யுவர்ஸ்டோரி: உங்களுடைய குழந்தைப்பருவம் மற்றும் உங்களை ஆளுமைப்படுத்த வடிவம் கொடுத்த அனுபவங்கள் பற்றிக் கூறுங்கள்.

அதிதி: பள்ளி கலைநிகழ்ச்சி போட்டிகளுக்கு தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்தது முதலே அது தொடங்கிவிட்டது. அதேபோன்று கூடைப்பந்து குழுவின் பள்ளி கேப்டனாக இருந்தது முதல் காமர்ஸ் கிளப்பின் தலைவராக இருந்தது வரை நான் தலைமைப் பண்பை கற்றுக்கொண்டேன், அனைத்துக்கும் என் தந்தைக்கு நன்றி சொல்ல வேண்டும்.

நான் சிறு பிள்ளையாக இருந்த போது என்னுடைய தந்தை எனக்கு புதுமையாகவும், கேளிக்கையாகவும் விஞ்ஞான தத்துவங்களைப் புரிய வைப்பார். எங்கள் கல்வி பற்றி அவர் கொடுத்த செயல்முறைகள் நிஜ உலகின் திட்டங்களை உணர்ந்து கொள்ள ஊக்குவித்ததோடு, எங்களை சுற்றி உள்ள உலகத்தை புரிந்து கொள்ளவும் உதவியது. அவர் எங்களுடைய எண்ணங்களையும் தூண்டிவிட்டார். எனக்கு இன்னும் நினைவிருக்கிறது ஞாயிற்றுக்கிழமைகளில் நானும் அவரும் டைம் நாளிதழில் வரும் கட்டுரைகளையும் அவற்றின் அடிப்படை, எண்ணம் மற்றும் உலகில் உள்ள பிரச்சனைகள் குறித்தும் படிப்போம். இந்தப் புரிதலே எனக்கு வரலாறு பற்றிய ஆர்வத்தைத் தூண்டியது என்று நினைக்கிறேன், அதிலும் குறிப்பாக இந்திய வரலாறு மற்றும் சட்டத்தை பற்றி அறிய ஆவலை ஏற்படுத்தியது. அது என்னை சட்டப்பள்ளி பக்கம் இழுத்ததால், புனேவில் உள்ள ஐஎல்எஸ் சட்டக் கல்லூரியில் படித்தேன். அதன் பின்னர் சிங்கப்பூரில் உள்ள பொது கொள்கைக்கான லீ குஅன் யீவ் பள்ளியில் மேற்படிப்பை படித்தேன். சரியாக என்னுடைய பட்டப்படிப்பை முடித்ததும், எனக்குப் பிடித்த கல்வியோடு பயணித்த பின்னர், பொதுகொள்கைக்கான லீ குஅன் யீவ் பள்ளியில் செயல் கல்வித்துறையில் பணியாற்றினேன்.

அதன் பின்னர் நான் இந்தியாவிற்கு வந்து, ஐஐடி மெட்ராசில் பணியாற்றிய போது சீனா கல்வி மையம் – ஒரு ஆராய்ச்சி மற்றும் திட்ட மேலாண்மையை நடத்தியது. அப்போது தான் ரோபோடிக்ஸ் லெர்னிங் சொல்யூஷனை தொடங்குவது பற்றி நான் முடிவு செய்தேன். தற்போது நான் தான் அதன் தலைமை செயல் அதிகாரி, ரோபோடிக்ஸ் கல்வித் திட்டம் பற்றி நான் பயிற்றுவிக்கிறேன் மேலும் இந்தியன் ரோபோடிக்ஸ் லீக்கில் ஆண்டுக்கொரு முறை நடைபெறும் ரோபோடிக்ஸ் போட்டியையும் நடத்துகிறேன்.

தீப்தி: என் தந்தை ஒரு அறிவியல் ஆர்வலர், எனக்கு ஐந்து வயது இருக்கும போது (அது தான் என் நினைவில் இருக்கும் வயது) அவர் எனக்கு அறிவியலை எளிமையாகவும், புரியும் வழிகளிலும் கற்பித்தார். உதாரணமாக அவர் எனக்கு ஐஸ் ஸ்கேட்டிங் பற்றி விளக்கத்தை ஒரு நூல் மற்றும் ஐஸ் கட்டி வைத்து செய்து காண்பித்தார். அவர் எப்போதுமே எனக்கும், என் தங்கைக்கும் தொழில்நுட்பத்தின் நுணுக்கங்கள் மற்றம் புதுமையை விளக்கி, அவை எவ்வளவு எளிமையானது என உணரவைத்தார்.

தொழில்நுட்பம் எவ்வாறு செயல்படுகிறது என்ற ஆர்வத்தையும், புதியதை கண்டுபிடிக்கவும் என் தந்தை விதைத்த விதையே காரணம் என நான் நினைக்கிறேன்.

12 வயதில் ஜாஸ் படத்தில் சுறாமீனை பார்த்து ஒரு வசீகரம் ஏற்பட்டது. அந்த வசீகரம் கவனமாக மாறியதால் நான் சுறாமீனின் வெவ்வேறு வகைகள் பற்றி ஆராய்ச்சி செய்தேன். என் ஆர்வத்தைப் பார்த்து என்னுடைய திட்டத்தை வகுப்பறையிலேயே விளக்கிக் காட்டச் சொன்னார்கள். இதுவே எனக்கு பள்ளி உயர் வகுப்பில் உயிரியல் பற்றி படிக்கும் பாதையை காண்பித்தது. கல்லூரியில் படித்துக் கொணடிருந்த போது என்னுடைய தந்தை, விஎஸ் ராமச்சந்திரனின் "பாந்தோம்ஸ் இந் தி பிரெய்ன்" என்ற புத்தகத்தை எனக்கு வாங்கிக் கொடுத்தார், அதனால் நான் நியூரோசயின்ஸோடு ஒன்றிப்போனேன். இதன் தொடர்ச்சியாக தேசிய பயாலஜிக்கல் சயின்ஸ் மையத்தில் நியூரோசயின்ஸ் பற்றி ஜுனியர் ஆராய்ச்சி செய்தேன். மேலும் சேப்பல் ஹில்-ல் வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் நியூரோபிசியாலஜியில் பிஎச்டியும் படித்தேன். பயோடெக்னாலஜியில் ஜெனோம் வரிசை முடிவில்லாதது என நான் கல்லூரியில் படித்த காலத்தில் புரிந்து கொண்டேன். நான் அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்டஸ்ட்ரியல் பயோடெக்னாலஜியில் இளநிலை பொறியியல் பயின்றேன்.

அதன் பின்னர் நான் எம்ஐடி பேராசிரியர் நடத்தி வந்த நியூரோசயின்ஸ் தொழில்நுட்பப்பிரிவில் சிறிது காலம் பணியாற்றினேன். அதன் பின்னர் எங்கள் குடும்பத்தோடு இணைந்து ரோபோடிக்ஸ் லெர்னிங் சொல்யூஷனில் புதுமை பயணத்தைத் தொடர முடிவு செய்தேன். தற்போது நான் அதன் தலைமை இன்னோவேடிவ் அதிகாரியாக உள்ளேன்.

யுவர்ஸ்டோரி: குறைந்த அளவிலான பெண்களே ஸ்டெம் துறையில் பிரகாசிக்கிறார்கள்; உண்மையான எண் விகித சதவீதப்படி பார்த்தால் அது குறைந்த அளவே உள்ளது. பெண்களை எது கல்வி மற்றும் குறிப்பாக ஸ்டெம் கல்வியில் இருந்து விலக்கி வைத்துள்ளது?

அதிதி: பாலின பாகுபாடு அவர்களை விலக்கி வைக்கிறது, அது 4 வயதில் இருந்தே தொடங்குகிறது, குறிப்பாக இந்தத் துறை ஆண் ஆதிக்கம் நிறைந்திருப்பதும் இளம்பெண்கள் இதைத் தேர்வு செய்யாமல் போவதற்குக் காரணம். பெண்களுக்கு ஸ்டெம் துறையை கையாளும் திறமை இருக்கிறதா? என்ற பாலின பாகுபாடு சமூகத்திலும் பிரதிபலிப்பது மற்றொரு காரணம்.

போதுமான அளவு முன்மாதிரியான பெண்களும், விரிவுரையாளர்களும் இந்த துறையில் இல்லாததால் இளம் பெண்களின் கவனத்தை ஈர்க்கவும், அவர்கள் பார்வையை திசை திருப்பவும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. ஒரு பொதுவான ஆய்வு நடத்தியதில் சில இளம் பெண்கள் ஸ்டெம்மை தங்கள் வாழ்க்கைப் பாதையாக தேர்ந்தெடுத்தாலும் குழந்தை பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால், சிறிது காலத்திலேயே பணியை விட்டுச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

யுவர்ஸ்டோரி: எப்படி இந்த பாலின இடைவெளியை இணைப்பது?

அதிதி&தீப்தி: இளம் வயது முதலே ஸ்டெம் பற்றி அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். அதாவது இரண்டு முதல் ஐந்து வயது முதலே கற்பிக்க வேண்டும், இது பெண்களுக்கு தன்நம்பிக்கை ஏற்படுத்துவதோடு, அவர்களால் எந்தத்துறையில் வேண்டுமானாலும் பிரகாசிக்க முடியும் என்ற உறுதியையும் அளிக்கும்.

இந்தத் திறமைகளை மேம்படுத்துவதன் மூலம் அதிவேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில், தொழில்நுட்பம் சாராத பணிகளில் கிடைப்பதைவிட பணிப்பாதுகாப்பு அளிக்க முடியும். இது பெண்களை கடினமான வாய்ப்புகளை நோக்கி மேலும் மேலும் செல்ல ஊக்குவிக்கும் அதோடு சவாலான பாதையை தேர்ந்தெடுக்கவும் வழிவகுக்கும். அதே போன்று மேல்தட்டு அளவிலும் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது, குறிப்பாக பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்கள் இந்தத்துறையை தேர்ந்தெடுக்கும் பெண்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்.

யுவர்ஸ்டோரி: ரோபோடிக்ஸ் லெர்னிங் சொல்யூஷன் என்றால் என்ன? இது பெண்களின் ஸ்டெம் கல்விக்காக என்ன செய்கிறது?

அதிதி: ஒரு பெண்ணாக ரோபோடிக்ஸ் நிறுவனத்தை முன்எடுத்துச் செல்லும் போது ஸ்டெம் துறையில் பாலின பாகுபாடு இருப்பதைக் காண முடிகிறது. நாங்கள் நிறைய பெண்கள் ஸ்டெம் தொடர்பான பணிகள் பக்கம் ஈர்க்கப்பட வேண்டும் என்று நினைக்கிறோம். பாலின பாகுபாட்டை புறம் தள்ளி, ஸ்டெம் துறை சுவாரஸ்யமானது, அதை ஒரு பணியாக தேர்ந்தெடுக்கலாம் என்ற எண்ணம், சிறு வயது முதலே வர வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம்.

image


எங்களுடைய ரோபோடிக்ஸ் கல்வி திட்டத்தை, நாங்கள் ஆறு வயதுக்கு முன்பிருந்தே கற்பிக்கத் தொடங்குகிறோம். எங்கள் திட்டத்தின் மீது அவர்களுக்கு இருக்கும் தனிப்பட்ட ஆர்வம் அதிகரித்து, ஐயப்பாடுகளை சரிசெய்து பெண்களை ஊக்குவித்து வருகிறோம். இந்தியன் ரோபோடிக்ஸ் லீக், ஐஆர்எல்-ல்(IRL) எங்கள் பெண்கள் குழு விருது வாங்கியுள்ளது.

ஏனெனில் கணினி அறிவியல் பணிகள் நன்கு வளர்ந்து வருகின்றன, அதில் இவை அதிக ஊதியம் பெறும் பணிகள். இதற்குத் தேவையான முக்கிய திறமையான கணினி பயிற்சியை இளம் தலைமுறையினரிடம் மேம்படுத்த வேண்டும். பெண்கள் அதிக அளவில் கணினி சார்ந்த பணிகளில் இல்லை என்கிறது ஒரு புள்ளிவிவரம், நாம் இந்த நிலையை மாற்ற வேண்டும். இந்தியன் கேல்ஸ் கோட் என்ற புதிய திட்டம், இளம் பெண்களுக்கு கோட் பற்றி கற்றுக்கொடுப்பதாகும். அதோடு நிஜ உலகின் திட்டங்களை, நிஜ உலகின் செயல்களுக்கு ஏற்ப மேம்படுத்தும் வகையில் கற்பிக்கவும், ஈர்க்கவும் வேண்டும் என்பதே இதன் சிறப்பு.

செயலிகளை அடிப்படையாகக் கொண்ட பிரிவுகளில் பெண்கள் ஆர்வத்தோடு இருப்பதை நாங்கள் காண்கிறோம். அவர்கள் நிஜ உலகில் தாங்கள் சந்திக்கும் பிரச்சனைகளை அதாவது வீடு, சமூகம், நாடு உள்பட பல்வேறு இடங்களில் சந்திக்கும் பிரச்னைகளை வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மூலம் சரி செய்ய முயன்றால் அது உலகுக்கு மதிப்பளிக்கத்தக்கதாக இருக்கும். அவர்களுக்கும் அது அர்த்தமுள்ளதாக இருக்கும், அது அவர்களை பல வழிகளில் மேம்படுத்தும்.

தென்இந்தியாவில் உள்ள சில k-12 பள்ளிகளின் பாடத்திட்டத்தில் ரோபோடிக்ஸ் கல்வி திட்டத்தை இணைக்க நாங்கள் கைகொடுத்துள்ளோம். பாடத்திற்கு வெளியில் கற்கக்கூடிய பல்வேறு திட்டங்கள் மற்றும் பயிற்சிப் பட்டறைகளையும் நாங்கள் வழங்குகிறோம். அதே போன்று ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் ரோபோடிக்ஸ் போட்டியான இந்தியன் ரோபோடிக்ஸ் லீக்கை நாங்கள் நடத்தி வருகிறோம்.

சமூக முன்னெடுப்புகளைத்தாண்டி, உலகத்தரம் வாய்ந்த ஸ்டெம் கல்வித்திட்டம் ஒவ்வொரு குழந்தைக்கும் எட்டும்படி அமைக்க விரும்புகிறோம். அதுவும், இலவசக்கல்வி மூலமாக இதை கொண்டு சென்றால்தான், இது சாத்தியமாகும். குறிப்பாக கிராமப்புற பெண்குழந்தைகளுக்கும், மாற்றுதிறன் கொண்ட குழந்தைகளுக்கும் இது சென்று சேரும்.

யுவர் ஸ்டோரி: இந்தியன் கேர்ல்ஸ் கோட் திட்டம் பற்றி சொல்லமுடியுமா?

தீப்தி: இந்திய இளம்பெண்கள் மத்தியில் கோட் உருவாக்கம் மற்றும் நிதர்சனமான உலகிற்கான செயலிகளை உண்டாக்குவது ஆகியவற்றை கற்றுகொள்ள ஈர்க்கும் திட்டம் தான் எங்களது இந்தியன் கேர்ல்ஸ் கோட் திட்டம். வீட்டில், சமுதாயத்தில், நாட்டில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கும், பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பயனுள்ள கண்டுபிடிப்புகளை உருவாக்க இந்த திட்டம் வழிகோலும். இது அவர்களின் வளர்ச்சிக்கும் பல வழிகளில் மேம்பட உதவும். திருச்சியில் உள்ள அன்னை ஆஸ்ரமத்தில் இந்த திட்டத்தை தொடங்கியுள்ளோம். விரைவில் விரிபடுத்தும் திட்டமும் உள்ளது.

யுவர் ஸ்டோரி: இந்த கல்வித்திட்டங்களில் பங்கேற்கும் பெண்களின் பெற்றோர்களை எப்படி அணுகுகிறீர்கள்?

அதிதி: பாலின பாகுபாடு சர்வசாதாரணமான ஒன்று. ரோபோடிக்ஸ் என்பது ஆண்பிள்ளைகளுக்கான ஒன்றாகவே கருதும் பெற்றோர்களை நாங்கள் எதிர்கொண்டுவருகிறோம். இந்த உலகத்திற்கு உபயோகப்படும் புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடிப்பதில் ஸ்டெம் கல்வித்திட்டம் எப்படி உதவும் என்பதை பெற்றோர்களுக்கு எடுத்துரைத்து வருகிறோம். இதன் மூலம் பெற்றோர்களையும், பெண்களையும் கவர்ந்திழுக்கும் என நம்புகிறோம். அதிகளவில் பெண்களை கவர்ந்திழுக்கும் ஐஆர்ல் திட்டத்தை அறிமுகப்படுத்தும் போது இன்னும் அதிக சவால்களைச் சந்திப்போம் என நம்புகிறோம்.

யுவர் ஸ்டோரி: உங்கள் திட்டங்களின் தாக்கத்தை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?

அதிதி: நாங்கள் எங்கள் திட்டங்களை அதிக குழந்தைகளிடம் கொண்டு சென்று மாணவர்களை ஈர்ப்பது தொடர்பான அளவீடுகளை சேகரிப்போம். உலகத்தரம் வாய்ந்த பாடத்திட்டத்தை உருவாக்கி அதிக பள்ளிகளுடன் இணைக்க இருக்கிறோம். இன்னும் அதிக சவாலான போட்டியை உண்டாக்கி அதன் மூலம் அதிக எண்ணிக்கையில் பெண்களுக்கு கல்வி கற்றுத்தருகிறோம். இதன் மூலம் பாலின பாகுபாட்டில் இருக்கும் இடைவெளியை குறைப்போம்.

யுவர் ஸ்டோரி: எது உங்களுக்கு உத்வேகம் அளிக்கிறது?

அதிதி மற்றும் தீப்தி: குழந்தைகள்தான். எளிதில், விரைவாக அனைத்தையும் புரிந்துகொள்ளும் நாளைய கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர்களான புதிய தலைமுறை குழந்தைகள்தான் எங்களுக்கு உத்வேகமாக இருக்கிறார்கள். குழந்தைகளின் வாழ்வில் சிறிய மாற்றத்தையாவது ஏற்படுத்தமுடியும் என்பதுதான் எங்களது நம்பிக்கையின் ஆதாரமாக உள்ளது.

Add to
Shares
112
Comments
Share This
Add to
Shares
112
Comments
Share
Report an issue
Authors

Related Tags