பதிப்புகளில்

சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்புவோருக்கு வழி அமைத்துக் கொடுக்கும் பெண்மணி!

நன்கொடை அளிப்பவரான ப்ரியா நாயக், நிறுவனங்கள் மற்றும் தனிநபர் நன்கொடையாளர்கள் பலனுள்ள காரணத்தை கண்டறியவும் அடிமட்ட நிறுவனங்களுடன் அவர்கள் கைகோர்க்கவும் உதவுகிறார்.

6th Aug 2017
Add to
Shares
159
Comments
Share This
Add to
Shares
159
Comments
Share

25 வயது நிரம்புகையில் 25 நாடுகளுக்கு பயணம் செய்திருந்தார் ப்ரியா நாயக். பல நாடுகளில் தங்கியுள்ளார். பணிபுரிந்துள்ளார். வலிமையானவர்களாகவும் நன்கு ஒருங்கிணைந்தவர்களாகவும் இருக்கும்போது ஆர்வம் ஏற்படலாம். ஆனால் நுட்பமான அறிவின் உறுதுணையின்றி உண்மையான நோக்கம் முறையாக நிறைவேறாது என்பதைத் தெரிந்துகொண்டார்.

நிறுவனங்களின் நல்ல நோக்கத்துடன் கூடிய முயற்சிகள், ஆர்வம், நெட்வொர்க் ஆகியவை இந்தியாவின் முக்கியப் பகுதிகளில் பணிபுரிபவர்களின் அறிவுடனும் நுட்பமான அணுகுமுறையுடனும் இணைக்கப்படவேண்டும் என்பதையே தனது தெளிவான நோக்கமாகக் கொண்டிருந்தார் ப்ரியா நாயக். இதற்காக அவர் இந்தியா திரும்பினார்.

image


மாற்றத்தை ஏற்படுத்துவதில் உலகளவில் முத்திரை பதித்தல்

ஒருவர் தன்னுடைய வாழ்க்கையையும் தனிச்சலுகைகளையும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்கிற அடித்தளத்தை அவரது குடும்பத்தினர் அவரது மனதில் ஆழப்பதிய வைத்தனர். அவரது தாத்தா யாருமின்றி ஒரு அனாதையாக மும்பைக்கு வந்தவர். அவரது அப்பா தெரு விளக்கின் உதவியுடன் படித்தவர். 

“நான் மற்றவர்களைவிட அதிர்ஷ்டசாலி என்கிற உண்மையை என்னுடைய குடும்பத்தினர் உணரவைத்தனர். இப்படிப்பட்ட உணர்வுதான் நீங்கள் பணி வாழ்க்கையை தேர்ந்தெடுத்தல், வாழ்க்கையை நடத்தும் விதம் என ஒரு சிறப்பான உலகை உருவாக்கிக்கொள்ள உதவும்.”

பட்டப்படிப்பை முடித்ததும் மும்பையின் ஆர்தர் ஆண்டெர்சன் நிறுவனத்தில் பணிபுரிந்தார். இருந்தும் ஒரு முழுமையான உணர்வு ஏற்படவில்லை. பிறகு மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பப்ளிக் பாலிசி படிக்க தீர்மானித்தார். இங்கு ஆப்ரிக்காவின் சர்வதேச நிதி நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. நான்கு நாடுகளிலுள்ள பிசினஸ் ஸ்கூல்களை மதிப்பிட்டு அமெரிக்கவிலுள்ள பிசினஸ் ஸ்கூல்ஸ் மூலம் பார்ட்னர்ஷிப் முறையில் பயிற்சியளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

வீடு திரும்பிய அவர், “அமெரிக்கா மற்றும் ஆப்ரிக்காவில் பணிபுரிந்துள்ளேன். 25 வயதிற்குள் 25 நாடுகளுக்குச் சென்றுள்ளேன். சமூகத்தின் நிலையை மாற்றும் முயற்சியில் ஈடுபட வேண்டுமானால் நான் சிறப்பாக புரிந்துகொண்ட நாட்டிற்கு திரும்பவேண்டும் என்று நினைத்தேன்.” என்றார்.

செயல்பாடு

இந்தியா போன்ற ஒரு நாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்த பலதரப்பட்ட பங்குதாரர்களை ஒன்றிணைக்கவேண்டும் என்பதை உணர்ந்தார் ப்ரியா. 

”வணிக பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கும் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கும் மட்டுமே நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளதென்றால், அவர்களது விருப்பத்தையும் அவர்களது பங்குதாரர்களின் விருப்பத்தையும் கருத்தில் கொண்டு சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக ’மதிப்பு’ என்கிற அம்சத்தையும் நம்மால் உருவாக்கமுடியுமா? பிரச்சனைகளுக்கான தீர்வு காண்பதில் அவர்களை எவ்வாறு ஈடுபடுத்த முடியும்? இந்த விதத்தில் பிரச்சனைகளை ஒரு முழுமையான பார்வையுடன் ஒவ்வொரு பங்குதாரரின் தனிப்பட்ட பங்களிப்பையும் வாய்ப்புகளையும் கண்டறியமுடியும்.” என்றார்.

இவ்வாறாக நிறுவனங்கள், ஃபவுண்டேஷன்ஸ், சமூக நிறுவனங்கள், தனிநபர் நன்கொடையளிப்பவர்கள் என ஒவ்வொருவரையும் அவர்களது வலுவான நோக்கங்களைக் கொண்டவர்களுடன் ஒன்றுசேர்க்கும் முயற்சியாக ப்ரியா உருவாக்கியதுதான் ’சம்ஹிதா’ (Samhita).

சமூகத்துடனான அவர்களது உறவு குறித்த விழிப்புணர்வு வேண்டும். இந்த உணர்வுடன் கூடவே அவர்களுக்கு பொறுப்புணர்வு கிடைக்கவேண்டும். அதன் பிறகு சமூகத்தினுள் இருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பதற்கான உத்தியை உருவாக்கவேண்டும். இந்த மூன்று விஷயங்களையும் நிறுவனங்கள் பின்பற்றவேண்டும் என்று அறிவுறுத்துகிறது சம்ஹிதா.

வலுவான பயனுள்ள பெருநிறுவன சமூக பொறுப்பு (CSR) ப்ரோக்ராம்களை செயல்படுத்த நிறுவனங்களுக்கு வழிகாட்டும் விதத்தில் ஸ்ட்ராடெஜி டெவலப்மெண்ட், ப்ரோக்ராம் மற்றும் பார்ட்னர் தேர்ந்தெடுத்தல், தேவை குறித்த மதிப்பீடு, ப்ராஜெக்ட் மேலாண்மை மற்றும் பலன் மதிப்பீடு உள்ளிட்ட சேவைகளின் தொகுப்பை சம்ஹிதா வழங்குகிறது.

சமூக பொறுப்பு முயற்சிகளை செயல்படுத்தும் நிறுவனங்கள் (implementation partners), அதாவது நிறுவனங்களையும் மற்ற நிதி வழங்குவோரையும் இணைக்கும் அடிமட்ட நிறுவனங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. மறுபுறம் அவர்கள் அதிக நிதி பெறுவதற்கான திறனை உருவாக்கிக்கொண்டு ப்ராஜெக்டுகளில் வளர்ச்சியடைய உதவும் வகையில் பணிபுரிய விரும்புகிறார் ப்ரியா.

வளர்ச்சி

பல நிறுவனங்கள் தங்களது சமூக பொறுப்பு உத்திகளை வகுத்தவண்ணம் உள்ளது. 

“பல முயற்சிகள் பரிசோதனை செய்யப்படுகிறது. முடிவெடுத்தல் தாமதகாமிறது. எனவே நாங்கள் ஆலோசனைகளையும் ப்ராஜெக்ட் மேலாண்மை சேவைகளையும் வழங்கத் தொடங்கினோம். கம்பெனிஸ் ஆக்ட் 2013-ல் இருந்த CSR விதிகள் எங்களுக்கு உதவியது,” என்றார் அவர்.

அவர்கள் வளர்ச்சியடைகையில் ஃபவுண்டேஷன்கள் மற்றும் சர்வதேச நன்கொடை ஏஜென்சிகள் ஆகியவற்றை ஒன்றிணைத்து தளங்களை உருவாக்கினர். இந்தத் தளங்கள் வாயிலாக நிறுவனங்கள், மற்ற நிதியளிப்பவர்கள், அரசு சாரா நிறுவனங்கள், அரசாங்கம் போன்றவை சமூக பிரச்சனைகளுக்கு பெரியளவில் கூட்டாக இணைந்து தீர்வுகாண உதவும். இந்த அனுபவத்தைக் கொண்டு Samhita GoodCSR என்கிற தனது ஆன்லைன் தளத்தை உருவாக்கினார். அதிக பலனடைவதற்காக சமூக பொறுப்பு நடவடிக்கைகளை சீரமைக்க இந்தத் தளம் உதவும்.

தற்போது 1500 க்கும் அதிகமான அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் 333 ப்ரோக்ராம்கள் உள்ளது. மேலும் SmartRPF என்கிற டூல் ஆய்வின் மூலம் நிறுவனங்கள் அரசு சாரா நிறுவனங்களைக் கண்டறிந்து எளிதாக தேர்ந்தெடுத்துக்கொள்ள உதவுகிறது.

”இண்டெர்ன்களாகவும் தன்னார்வலர்களாகவும் செயல்பட்ட நாங்கள் கடந்த ஏழு வருடங்களில் ப்ரொஃபஷனல்கள் குழுவாக வளர்ந்துள்ளோம். உலகம் முழுவதும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சமூக முயற்சிகளை செயல்படுத்துவதற்காக உலகின் பிரபலமான நிறுவனங்கள், நன்கொடை ஏஜென்சிகள், சமூக நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு ஆலோசனை வழங்கி உடன் பணிபுரிகிறோம்.“ என்றார் ப்ரியா.

உறுதிப்படுத்துதல்

க்ளையண்ட்கள் பரிந்துரைகள், வலைதளம் அல்லது நிகழ்வுகளில் பங்குபெறும் பிரதிநிதிகள் ஆகியவை மூலம் சம்ஹிதாவை அணுகுகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி தூய்மை இந்தியா திட்டத்தை அறிவித்தார். பொது இடங்களில் மலக்கழிவுகளற்ற இந்தியாவை உருவாக்குதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இதுகுறித்த விழிப்புணர்வை முதலில் ஏற்படுத்திய நிறுவனங்களில் சம்ஹிதாவும் ஒன்று. அத்துடன் நாடு தழுவிய இந்த திட்டத்தில் நிறுவனங்கள் பங்கேற்க ஏதுவாக செயல்பாட்டு வரைபடத்தையும் உருவாக்கியது. இப்போதும் தண்ணீர், துப்புரவு, சுகாதாரம் (Water, sanitation and hygiene (WASH)) அவர்கள் நிபுணத்துவம் பெற்ற பகுதிகளில் ஒன்றாகும்.

இவர்கள் முன்னணியில் இருக்கும் மற்றொரு துறை கிராமப்புற மின்சாரம், சூரிய ஒளி தீர்வுகள், சுய சார்பு ஆற்றல் போன்றவை. இதுவும் நாடு தழுவிய செயல்திட்டமாகும். உலகின் மிகப்பெரிய நன்கொடை வழங்கும் ஏஜென்சிகளுடன் கூட்டு சேர்ந்துள்ளனர். தேவை குறித்த புரிதல் மற்றும் அதற்கான உத்திகளை கையாளுதல், முயற்சியை கொண்டு சேர்த்தல் ஆகிய நடவடிக்கைகள் மூலம் ப்ராஜெக்டுகளுக்கு சமூக பொறுப்பு நிதிகளை இந்த நன்கொடை ஏஜென்சிகள் வாயிலாக வழங்குகிறது. சமூக பொறுப்பு முயற்சிகளை செயல்படுத்தும் நிறுவனங்களை (implementation partners) நன்கொடை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் நிதி வழங்குவோருடன் இணைவதற்கான ஒரு தளத்தை அமைக்கிறது.

”ப்ராஜெக்டுகளுக்கு முழு பொறுப்பேற்கிறோம். அதனால் ஏற்படும் தாக்கத்தை முக்கியமான ஒன்றாக கருதுகிறோம்,” என்று விவரித்தார் ப்ரியா.

திரைக்குப் பின்னால்….

மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்லூரியில் (MIT) வறுமையை குறைக்க செயல்படும் நெட்வொர்க்கான பாவர்டி ஆக்‌ஷன் லேப்பில் ஆராய்ச்சியாளராக பணிபுரிந்தபோது வறுமையை ஒழிப்பதற்கான தீர்விற்காக முயற்சித்து வந்த மாணவர் குழுவிற்கு வழிகாட்டியாக இருந்தார் ப்ரியா. அப்போது உருவானதுதான் ஏரோவாக்ஸ். ஊசிகளின்றி பாதுகாப்பாக சுவாசம் மூலம் உள்ளிழுக்கும் ஏரோசால் தடுப்பூசிகளை இந்நிறுவனம் தயாரித்தது. நுண் நிதி நிறுவனங்களின் செயல்திறன் அதிகரிப்பதற்காக புதுமையான குறைந்த செலவிலான தொழில்நுட்பத்தை வழங்கும் ’கல்பதரு’ நிறுவனத்துடன் இணைந்தார் ப்ரியா. பங்களாதேஷின் கிராமீன் வங்கியில் கல்பதருவின் செயல்பாடு சோதனை செய்யப்பட்டு நோபல் பரிசுபெற்ற டாக்டர் முகமது யூனுஸ் அவர்களிடம் முறையாக சமர்பிக்கப்பட்டது. இரண்டு சமூக நிறுவனங்களும் MIT-யில் பல்வேறு விருதுகளை வென்றது.

மக்கள் ப்ரியாவை சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்புபவராகவோ அல்லது கடுமையாக கருத்து தெரிவிப்பவராகவோ மட்டுமே அறிவார்கள். ஆனால் அவரும் பெரும்பாலான பெண் தொழில்முனைவோரைப் போலவே முதுகலை படிப்பு, திருமணம், குடும்பம் என பல இக்கட்டான சூழல்களையும் அனுபவங்களையும் கடந்து வந்துள்ளார். இருபதுகளில் பல சவால்களைக் எதிர்கொண்டுள்ளார். 

“நீங்கள் பங்குபெறும் அனைத்து நடவடிக்கைகளிலும் நீங்கள் ஒருமித்த கவனம் செலுத்த வேண்டும். எந்த பொறுப்புகளும் ஒன்றை மற்றொன்று பாதிக்கக்கூடாது. ஒரு பெண்ணாகவும் தொழில்முனைவோராகவும் நீங்கள் பலமுறை தனிமையாக உணர்வீர்கள். நீங்கள் உங்களுக்கான பாதையை அமைக்க முயல்வீர்கள். உங்களது தீவிர முயற்சியை புரிந்துகொள்ளும் நபர்கள் அமைவது கடினம். முதலீட்டாளர்கள், ஆலோசகர்கள், இயக்குனர்கள் போன்றோர் என்னுடைய நோக்கத்துடன் ஒன்றியும் நிறுவனத்தை தங்களுடைய நிறுவனமாக நினைத்தும் செயல்பட்ட நபர்கள் கிடைத்ததனால் மட்டுமே எனக்கு வெற்றி கிடைத்தது.” என்று கூறி விடைபெற்றார் ப்ரியா.

ஆங்கில கட்டுரையாளர் : பின்ஜால் ஷா

Add to
Shares
159
Comments
Share This
Add to
Shares
159
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக