தொழில்முனைவோர் நிலைத்துள்ள முதலீட்டாளர்களின் நல்லெண்ணத்தை பெறுவது அவசியம்: க்ளாஸ் ஆஸ்காம்
சிக்னல் ஹில்லில் மத்தியதர சந்தை முதலீட்டு வங்கித் துறையில் 18 ஆண்டுகால விரிவான அனுபவம் உள்ளவர் க்ளாஸ் ஆஸ்காம் (Klaas Oskam). அவர் தொழில்நுட்ப வெளியில் நிறுவன மென்பொருள், ஐடி சேவைகள், இணையம் மற்றும் டிஜிட்டர் மீடியா, கல்வி தொழில்நுட்பம் உள்பட 25 ஒப்பந்தங்களை முடித்திருக்கிறார். அவற்றின் ஒட்டுமொத்த பங்கு மதிப்பு ஒரு பில்லியன் டாலர்.
பெங்களுருவில் நடந்த ஆறாவது டெக் ஸ்பார்க்ஸ் கருத்தரங்கில் சிக்னல் ஹில்லின் மேலாண்மை இயக்குநரான க்ளாஸ் ஆஸ்காம் கலந்துகொண்டு பேசினார். அப்போது, “இப்போது இந்தியாவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஏற்றம் வந்திருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், ஏறக்குறைய 80 முதல் 85 சதவிகிதம் முதலீடுகள் நுகர்வோர் இணைய வெளியில் செய்யப்பட்டிருக்கின்றன” என்று குறிப்பிட்டார்.
“இன்னும் கொஞ்சம் ஆழமாகப் போனால், கடந்துபோன 21 மாதங்களில் வந்த 11 பில்லியன் டாலர் முதலீடுகளில், 9.5 பில்லியன் டாலர் நுகர்வோர் இணைய சேவைக்குள் வந்திருக்கின்றன. அதில் முதன்மையான பத்து நிறுவனங்கள் 75 சதவிகித முதலீடுகளை ஈர்த்திருக்கின்றன” என்று சுட்டிக்காட்டுகிறார்.
டெலாட்டே அறிக்கையின்படி, இந்தியாவில் நுகர்வோருக்கான வணிக இணைய வழி சந்தை துணிகர முதலீடுகள் (PE/VC) மூலமாக அதிகமான முதலீடுகளை ஈர்த்துள்ளது.
தேவை மற்றும் விநியோகத்தின் நேர்மறையான வளர்ச்சியால் 2017ம் ஆண்டு இந்த சந்தை 60 பில்லியனை அடைந்துவிடக்கூடும். இணையவழி சேவைகள் எதிர்பார்ப்பதைவிட விரைவான வளர்ச்சியை அடையும். ஏற்கெனவே வளர்ந்த சேனல்கள் மொத்த சில்லறை வர்த்தகம் 2018ல் 10.1 சதவிகிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது 2013ம் ஆண்டில் 6.5 சதவிகிதத்தில் இருந்தும், 2008ம் ஆண்டின் 3.5 சதவிகிதத்தில் இருந்தும் உயர்ந்து வந்திருக்கிறது.
தாராள முதலீடு
இந்தியாவில் முதலீட்டை ஈர்க்கும் தற்போதைய நிலை பற்றி க்ளாஸ் விளக்கினார்.
“கடந்த ஆண்டு தொடக்க நிறுவனங்களுக்கு சிறந்த ஏற்றம் இருந்தது. அப்போது யுனிகார்ன் குறிப்பிடத்தக்க நிதியை பெற்றது. அதைத்தவிர ஆரம்ப நிலையில் இருந்த நிறுவனங்களும் பல்வேறு முதலீட்டாளர்களின் கவனத்தைப் பெற்றன. 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் நுகர்வோர் இணையவெளி சந்தையில் 45 நிறுவனங்கள் அடிப்படை நிதியைப் (seed and Series A funds) பெற்றன. இந்த முதலீட்டைப் பெற்ற நிறுவனங்கள் அனைத்தும் பெறிய கனவுகளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றன. அடுத்து பி, சி மற்றும் டி நிதியைப் பெறுவதற்கு தயாராக இருக்கின்றன” என்று கூறுகிறார்.
ஆரம்ப நிலையில் உள்ள நிறுவனங்கள் சிறந்த குழுவினரை வைத்திருக்க வேண்டிய தேவையை வலியுறுத்திய க்ளாஸ், மேலும் முதலீட்டாளர்களிடம் சிறந்த வணிக அளவீடுகளைக் காட்டி தங்களுடைய கனவை விற்கத் தெரிந்திருக்கவேண்டும் என்கிறார். நீங்கள் கடைசி நிலையை அடையும்போது, நீங்கள் வெற்றியாளராக இருப்பீர்கள். தோல்வியைச் சந்திக்க மிகப்பெரிய நிறுவனமாக இருப்பீர்கள்.
மத்திய நிலையில் இருக்கும்போது, நீங்கள் உங்கள் கனவை வெளிப்படுத்தவேண்டிய தேவை உள்ளது. வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் ஐந்தில் இருந்து ஆறு போட்டியாளர்களில் முதன்மையான இடத்தில் இருக்கவேண்டும். நிலையான மற்றும் உச்சபட்ட வளர்ச்சியை காட்டும் செயல்பாடுகளுடன் உங்கள் வணிகம் இருக்கவேண்டும்.
சந்தைகள் உருவாகியிருக்கின்றன
சந்தையில் நுழைய முயற்சிக்கும் வழிகாட்டிகள் அதிகரித்தாலும், முதலீட்டு வேறுபாடுகள் அற்றுப்போய் விடாது. நுகர்வோர் இணைய நிறுவனங்கள் வளர்ச்சிக்கான கூடுதல் முதலீட்டுக்கான தேவை இருக்கிறது. அவர்கள் அடுத்தகட்ட நிதிக்காக காத்திருக்கிறார்கள்.
பேரார்வம் கொண்ட தொழில்முனைவோர்களுக்கு க்ளாஸ் ஒன்றைச் சொன்னார். ஒவ்வொரு தொடக்க நிறுவனமும் சாப்ட் வங்கி அல்லது டைகர் குளோபல் ஆகியவற்றிடம் இருந்து நிதி பெற எதிர்பார்த்திருக்கின்றன என்கிறார். இவை இரண்டுமே இல்லாதபோது, ஏற்கெனவே நிலைத்துள்ள முதலீட்டாளர்களின் நல்லெண்ணத்தில் இடம்பெறவேண்டிய தேவை இருக்கிறது.
“இது தொடக்க நிறுவனங்களுக்கான நேரம். அவர்களுடைய வலிமையை காட்சிப்படுத்தவேண்டும். அது முதலீட்டுக்காக மட்டுமல்ல, அவர்கள் வளரவும்தான். ஆனால் அவர்களுடைய திட்டங்களை செயல்படுத்தவும், சந்தையில் தயாரிப்புகளை விற்கவும்கூட அதை பயன்படுத்தவேண்டும். கடினமான நேரத்தையும் எதிர்கொள்ள வேண்டி நேரலாம். 50 முதல் 100 முதலீட்டாளர்களைச் சந்தித்தால்தான் அது முடிவுக்கு வரும். 100 முதலீட்டாளர்களின் 50 பேரின் புறக்கணிப்பை சந்திக்கவேண்டியிருக்கும். அதனால் நீங்கள் கீழே போய்விடமாட்டீர்கள். தொழில்முனைவோர் இந்தக் காட்சியின் ஸ்டார்கள். எதிர்காலத்தில் நிறைய புதுமைகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று நம்பிக்கையுடன் உரையை முடிக்கிறார் க்ளாஸ் ஆஸ்காம்.