பதிப்புகளில்

80 சதவீத உடல் ஊனத்துடன் பன்முகக் கலைஞராகத் திகழும் இளைஞர்!

Mahmoodha Nowshin
19th Jul 2017
Add to
Shares
70
Comments
Share This
Add to
Shares
70
Comments
Share

பலர் வாழ்க்கை மெய் சிலிர்க்க வைக்கும், சிலர் வாழ்க்கை மட்டுமே அகம் தூண்ட வைக்கும்'

ஊனம் ஒரு குறை இல்லை என்று எடுத்துக்காட்டும் வகையில் தன் வாழ்க்கையில் முன்னேறி கொண்டுள்ளார் ஆந்திராவைச் சேர்ந்த சாயி கௌஸ்துவ் தாஸ்குப்தா. 26 வயதான சாய், 80 சதவீதம் உடலில் ஊனத்துடனே; கிராபிக் டிசைனர், பாடகர், இசையமைப்பாளர், எழுத்தாளர் மற்றும் பேச்சாளர் என்னும் பன் முகங்களை கொண்டுள்ளார்.

சாய் கெளஸ்துவ் தாஸ் குப்தா, Osteogenesis Imperfecta என்னும் அரிய வகை எலும்பு நோயால் பாதிக்கப்பட்டு 80% உடல் ஊனம் உற்றவர். தன் குழந்தை பருவத்திலிருந்து இதுவரை 50-க்கு மேற்பட்ட எலும்பு முறிவுகள் இவருக்கு ஏற்பட்டுள்ளது. சாதாரண குழந்தையாய் பிறந்த குப்தாவுக்கு மூன்றரை வயதில்; முதல் எலும்பு முறிவு ஏற்பட்டு Osteogenesis Imperfecta என்னும் எலும்பு நோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

ஆறு வருடங்களாக (2009-16) இவரால் சக்கர நாற்காலியால் கூட அசைய முடியாமல் படுக்கையில் இருந்தார். அதன் பின் அவர் அசைவற்று, மின்சார சக்கர நாற்காலி மூலமே நகர முடிந்தது. இருந்தாலும் உடல் ஊனம் அவரின் மனதை ஒரு நாளும் ஊனமாக்கவில்லை.

“நான் ஆறு வருடம் அசைவற்று இருந்த போது பெரும் மன உளைச்சலுக்கு ஆளானேன். இருந்தாலும் என்னைச் சுற்றி உள்ளவர்கள் எனக்கு தந்த ஊக்கத்தாலும், என்னுடைய மன தைரியத்தாலும் அதிலிருந்து மீண்டு வந்தேன்,” என்கிறார் சாய்.
image


“என்னைப்போல் பலரும் துவண்டு போகாமல் இருக்கவே, நான் படுக்கையில் இருந்தபோதே மற்றவர்களை ஊக்குவிக்கும் பேச்சாளர் ஆனேன்.”

தான் படுக்கையில் இருந்தபோது, நண்பர்களின் யோசனை மூலமே கிராபிக் டிசைனை தானே சுயமாகக் கற்றார். உடலில் எந்த பாகாமும் அசையாத நிலையில், இடது கையில் இரண்டு விரல்கள் மட்டுமே குப்தாவால் அசைக்க முடிந்தது. தனது இரண்டு விரல்களை மட்டுமே பயன்படுத்தி கணினி பயின்று பின்பு கிராபிக் டிசைனையும் சுயமாகக் கற்று தேர்ச்சி பெற்றார். அதன் பின் அதில் வல்லமை பெற்று உலகளவில் பல பெருநிருவனங்களுக்கு டிசைனிங் செய்துள்ளார்.

“நான் ஒரு மாற்றுத் திறனாளி என்பதைத் தாண்டி எனது வேலை பிடித்து பலர் என்னை தேடி வருகின்றனர்,” என்று உற்சாகமாய் பேசுகிறார்.

சாயி குப்தா vritual keyboard மூலமே டைப்பிங் செய்கிறார். இதன் மூலம் வேகமாக டைப்பிங் செய்யவும் கற்றுக்கொண்டார். இப்படியே தன் சுயசரிதை புத்தகத்தையும் எழுதி முடித்துள்ளார். My Life, My Love, My Dear Swami என்னும் ஆங்கில புத்தகத்தை எழுதியுள்ளார். இது தமிழ், தெலுகு, மலையாளம், ஒரியா, குஜராத்தி, மற்றும் ஹிந்தியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இந்த புத்தகத்தை பெற்று குப்தாவை அதற்காக பாராட்டியுமுள்ளார். 

image


இதைத் தாண்டி, தன் தாய் ஒரு பாடகர் என்பதால், சிறு வயதில் இருந்தே பாட்டின் மீது குப்தாவுக்கு ஆர்வம் இருந்தது. பாட்டை விட நடனத்தில் ஆர்வம் கொண்ட அவரால் தன் உடல் நிலை காரணத்தினால் ஆட முடியாமல் போயிற்று. இதிலும் துவண்டு போகாது, பாட்டின்மீது தன் கவனத்தை செலுத்தினார். 1997 மற்றும் 1999-ல் இரண்டு ஆடியோ ஆல்பத்தை வெளியிட்டுள்ளார்.

”1999-2000ல் வட வங்காளத்தின் சிறந்த குழந்தை பாடகர் என்னும் ’திஷரி விருதை’ பெற்றார். அது மட்டும் இன்றி இது வரை 150 பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார்.
image


இதைத் தவிர தன் பேச்சின் மூலம் பல இளைஞர்களை ஊக்கப்படுத்தி வருகிறார். அதிகம் நகர முடியாத காரணத்தினால் இருந்த இடத்திலிருந்தே ஆன்லைன் session மூலம் பல மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், இளைஞர்கள் என்று பல பேரை சந்தித்து பேசி வருகிறார். இதுவரை, இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் நேபாளம் என்று பல நாடுகளில் உள்ள பல்கலைகழகத்தில் ஆன்லைன் மூலம் செஷன் நடத்தியுள்ளார். 

தன் சாதனைக்காக ’CavinKare Ability Award 2017’ விருதை சாயி குப்தா பெற்றுள்ளார். அதை அடுத்து பயணத்தை அதிகம் விரும்பும் குப்தா 2016-க்கான் #WheelchairWandurlust போட்டியில் வெற்றி பெற்று கோவா போகும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

image


இதை தவிர உங்களுக்கு என்ன செய்ய விருப்பம் என கேட்ட போது அவர்,

“மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்றவாறு பொது இடங்களை அமைக்க வேண்டும். வங்கி, உணவகம், தபால் நிலையம் என நாம் அன்றாட பயன்படுத்தும் இடங்கள் வீல் சேரில் செல்லும் வசதிகளுடன் இல்லை. அதற்கான விழிப்புணர்வை ஏறபடுத்தவே விரும்பிகிறேன்,” என்கிறார்.
“நாங்கள் ஊனமுற்றவர்கள் அல்ல, மாற்றுத்திறனாளிகளே, ஊனம் உடலை சார்ந்தது அல்ல. என்னை போலவே ஒவ்வொருவரும் தம் திறமைகளை கண்டறிந்து வாழ்வில் முன்னேற வேண்டும். அதற்கான இடத்தையும் இந்த சமூகம் வழங்க வேண்டும் என்று முடிக்கிறார்,”

மிஸ்டர் நம்பிக்கையே வாழ்க்கையின் டானிக்காக கொண்டுள் சாயி கௌஸ்துவ் தாஸ்குப்தா.

Add to
Shares
70
Comments
Share This
Add to
Shares
70
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக