பதிப்புகளில்

சென்னையில் 'பிக்ஸ்நிக்ஸ் யூனிவர்சிட்டி'- மாணவர்களுக்கு தொழில்நுட்பத் திறன் பயிற்சி அளிக்கும் மையம்!

22nd Aug 2016
Add to
Shares
91
Comments
Share This
Add to
Shares
91
Comments
Share

ஜோஹோ பல்கலைகழகத்தைக் கண்டு ஊக்கம் பெற்ற பிக்ஸ்நிக்ஸ் நிறுவனம், சென்னையில் 'பிக்ஸ்நிக்ஸ் யூனிவர்சிட்டி', ஒன்றை கடந்த வாரம் துவங்கியுள்ளது. ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு இந்த பல்கலைகழகத்தை திறந்து வைத்தார். 

ஸ்ரீதர் வேம்பு மற்றும் சன்முகவேல் சங்கரன் பிக்ஸ்நிக்ஸ் குழுவுடன்

பாதுகாப்பான தயாரிப்பு திறன் குறித்த தகவல்கள் வழங்கல், மற்றும் அதே சமயம், சமூகத்தின் பலவாரியான மக்களை ஒருங்கிணைக்கும் முயற்சியே இந்த பல்கலைகழகம் என்று பிக்ஸ்நிக்ஸ் வெளியிட்டுள்ள செய்தித் தொகுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சிலிக்கான் வேலியில் தலைமை அலுவலகம் கொண்டுள்ள பிக்ஸ்நிக்ஸ் இன்க், ஒரு SaaS (Software as a service) GRC ( Governance,Risk & Compliance) தயாரிப்பு நிறுவனம், அண்மையில் தங்களுக்குக் கிடைத்த ப்ரீ சிரீஸ் ஏ நிதியான 5லட்சம் டாலர் முதலீட்டைக் கொண்டு சென்னையில் 55 பேர் அமரக்கூடிய அலுவலகத்தை நிறுவியது. இதில் பிக்ஸ்நிக்ஸ் பல்கலைகழகம் தொடங்கப்பட்டுள்ளது. 

பிக்ஸ்நிக்ஸ் யூனிவர்சிட்டி

கல்வி அல்லாத முயற்சியாக இந்த யூனிவர்சிட்டி நிறுவப்பட்டுள்ளது. இது பலவகையான திறன்களை வெளிக்கொண்டுவருவதில் முனைப்பாக இருந்து செயல்பட உள்ளது. 

"பிக்ஸ்நிக்ஸ் யூனிவர்சிட்டி பாதுகாப்பு மற்றும் தயாரிப்புக்கு தேவையான தொழில்நுட்ப அறிவை, சிறு ஊர்கள் மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு அளிக்கும். இதன் முதல் பகுதியாக 5 மாணவர்களைக் கொண்டு, வரும் செப்டம்பர் மாதம் முதல் வகுப்புகள் தொடங்கும். கடந்த ஜனவரி முதலே தனது பாடத்திட்டத்தை பரிட்சார்த்த முறையில் பட்டதாரி மாணவர்களைக் கொண்டு தொடங்கியது. அவர்களை ப்ராடக்ட் டெவலப்பர், செக்யூரிட்டி எஞ்சினியர் மற்றும் பிசினஸ் அனலிஸ்ட் பணிகளுக்கு தயார் படுத்தி வருகிறது."  

பிக்ஸ்நிக்ஸ் முதன்மை இயக்குனர் மற்றும் பேராசிரியர் சுப்ரா கூறுகையில்,

"நான் சில வருடங்களுக்கு முன்பே பிக்ஸ்நிக்ஸ்'க்கு எனது ஆதரவை தருவதாக உறுதி அளித்திருந்தேன். ஏனெனில், அவர்களின் உலகத்தரம் வாய்ந்த பாதுக்காப்பு தயாரிப்புகள், மற்றும் அவர்களது அதீத உழைப்பு என்னை கவர்ந்தது. தாங்கள் வந்த பாதையை நினைவில் வைத்து, சமூகத்துக்கு திருப்பித் தரவேண்டும் என்ற அவர்களது உயரிய எண்ணம் மகிழ்ச்சி தரக்கூடியது. ஜோஹோ யூனிவர்சிட்டியை போல தாங்களும் சமூக சிந்தனையுடன் செயல்பட நினைக்கும் பிக்ஸ்நிக்ஸ், கடந்து வந்த கடுமையான பாதை, சவால்கள் எல்லாம் தாண்டி, இன்று ஒரு மாற்றத்தை ஏற்படுத்த நினைப்பது ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கம்...",  என்றார். 

ப்ரீ சிரீஸ் ஏ முதலீட்டுக்கு பின்னர், பிக்ஸ்நிக்ஸ் அனுபவமிக்க, உயர்ந்த தலைவர்களை தங்களுடன் இணைத்துக்கொண்டது. டேட்டா ட்ராக்ஸ் நிறுவனத்தின் சிடிஓ, ராம் அருணாச்சலம்-ப்ராடக்ட் மேலாண்மை இயக்குனர், குல்லூஸ் கிட்சன் நிறுவனர் குல்ஷன் ஐயர்- முதன்மை நற்செயலாளர், ட்ரோன் ஸ்டார்ட் அப் நிறுவனர் முத்து- நிறுவன விற்பனைப் பிரிவு தலைவர், மார்கெட்டூனிஸ்ட் நிறுவனர் ராஷ்மி- அனாலிடிக்ஸ் தலைவர் என பலர் இந்நிறுவனத்தில் இணைந்து, பிக்ஸ்நிக்ஸை உலக சந்தையில் விரிவாக்கம் மற்றும் புதிய தயாரிப்புகளில் ஈடுபடுத்த, கவனம் செலுத்த உள்ளனர். 

அதேசமயம் பிக்ஸ்நிக்ச், இந்திய BFSI சந்தையிலும் நுழைய உள்ளட்து. IDRBT மற்றும் IFTAS உடன் இணைந்து, ஊரக மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு ஆர்பிஐ யின் விதிமுறைகளின் படி கொள்கைகள், பாதுகாப்பு மற்றும் GRC (ஆளுமை, இடர் மேலாண்மை) சேவைகளை வழங்க தயாரித்து தர உள்ளது. 

பிக்ஸ்நிக்ஸ் உலக அளவில் வங்கிகள், சிங்கப்பூர் அரசு உலக வங்கித்துறையில் உள்ள தயாரிப்புகள், வருங்கால தொழில்நுட்பங்கள் என்று பல செயல்பாடுகளுக்கு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். 

Add to
Shares
91
Comments
Share This
Add to
Shares
91
Comments
Share
Report an issue
Authors

Related Tags