பதிப்புகளில்

ஃபோர்ப்ஸ் ’40 வயதுக்குட்பட்ட அமெரிக்க பணக்காரர்கள்’ பட்டியலில் இடம் பெற்ற 2 இந்தியர்கள்!

YS TEAM TAMIL
26th Dec 2016
Add to
Shares
5
Comments
Share This
Add to
Shares
5
Comments
Share

ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட, அமெரிக்காவில் 40 வயதுக்குட்ப்பட்ட பணக்கார தொழில்முனைவோர் பட்டியலின் இரண்டாவது பதிப்பில் இரண்டு இந்தியர்கள் இடம்பெற்று பெருமை சேர்த்துள்ளனர். ஃபேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஜுக்கெர்பெர்க் பட்டியலின் முதல் இடத்தை பிடிக்க, விவேக் ராமசுவாமி, 24 ஆவது இடத்திலும், அப்பூர்வ மெஹ்தா 31 ஆவது இடத்திலும் இடம் பெற்றுள்ளனர். விவேக் ராமசுவாமி, பயோடெக் தொழில்முனைவில் வெற்றியாளராக உள்ளார். இவரது சொத்து மதிப்பு 600 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். அப்பூர்வ மெஹ்தாவின் சொத்த மதிப்பு 360 அமெரிக்க டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது. 

இடது: அப்பூர்வ மெஹ்தா, வலது: விவேக் ராமசுவாமி

இடது: அப்பூர்வ மெஹ்தா, வலது: விவேக் ராமசுவாமி


31 வயதாகும் ராமசுவாமி, ஹார்வர்ட் பல்கலைகழகம் மற்றும் யேல் மேலாண்மை பள்ளியில் பயின்றவர். இவர் பயோடெக் துறையில் தொடர்ந்து அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் ஒரு சிறந்த தொழில்முனைவர். மருந்து தயாரிப்பு திட்டங்களில் இவரது நிறுவனம் கவனம் செலுத்திவருகிறது என்று ஃபோர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டில் பயோடெக் துறையில் வெளியிடப்பட்ட மிகப்பெரிய ஐபிஓ, அதில் Myovant Sciences எனும் நிறுவனம் 218 மில்லியன் அமெரிக்க டாலர்களை எழுப்பி நாஸ்டாக்கில் அக்டோபர் மாதம் தனது பங்குகளை லிஸ்ட் செய்தது குறிப்பிடத்தக்கது. 

அதே போல், ராமசுவாமியின் வழிகாட்டுதலின்படி, மற்றொரு அமெரிக்க பயோடெக் நிறுவனமான Axovant, ஐபிஓ வெளியிட்டு பங்குகளை லிஸ்ட் செய்தது அமெரிக்க பயோடெக் வரலாறில் பெரிதும் பேசப்பட்டது. இந்நிறுவனம் அல்சீமர் நோய்கான மருந்துகளை தயார் செய்கிறது. இவர்களின் நிதி மேலாண்மை விவேக் ராமசுவாமியால் புதுவிதமாக வடிவமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

அடுத்து, பட்டியலில் இடம்பெற்ற அப்பூர்வ மெஹ்தாவை, ஃபோர்ப்ஸ் சிலிக்கான் வேலியின் இளம் குடிபெயர்ந்த வெற்றியாளர் என்று குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் பிறந்த அப்பூர்வா தனது குடும்பத்துடன் கனடாவிற்கு 2000 ஆம் ஆண்டு குடிபெயர்ந்தார். அங்கே வாட்டர்லூ பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, ப்ளாக்பெரி, க்வால்காம் மற்றும் அமேசானில் பணிபுரிந்துள்ளார். 2012 இல் Instacart எனும் வீட்டு மளிகைப்பொருள் விநியோக சேவை நிறுவனம் ஒன்றின் இணை நிறுவனராக ஆனார். 

இந்நிறுவனம் மூலம் வாடிக்கையாளர்கள், ஆப்பை பதிவிறக்கம் செய்து, அதற்கான கட்டணத்தை செலுத்தி மளிகைப் பொருட்களை ஒரு மணிநேரத்துக்குள் வீட்டுக்கே பெறமுடியும். இந்த நிறுவனம் சுமார் 2 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. அண்மையில் இது Whole Foods Market இடமிருந்து நிதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஃபேஸ்புக்கின் பங்குகள் மற்றும் மதிப்பு மிக உயர்ந்து மார்க் ஜுக்கர்பெர்கை பட்டியலின் முதல் இடத்துக்கு கொண்டு சென்றுள்ளது. அவர் தற்போது 50 பில்லியன் டாலர் மதிப்புடன், கடந்த ஆண்டை விட 2.9 பில்லியன் டாலர் அதிகரித்து டாப்பில் உள்ளார். புதிய முகங்கள், என்பிஏ நட்சத்திரங்கள் கோப் ப்ரையண்ட் மற்றும் லேப்ரான் ஜேம்ஸ், குத்துச்சண்டை வீரர் ப்ளாய்ட் மேவெதர், பாப் பாடகர் பியான்ஸ், நடிகர் மற்றும் தொழில்முனைவர் ஜெசிக்கா ஆல்பா போன்றோர் பட்டியலில் இணைந்துள்ளனர். 40 வயதுக்குட்பட்டவர்கள் பட்டியலில் இடம்பெற்ற இரண்டே பெண்கள் பியான்ஸ் மற்றும் ஜெசிக்கா ஆல்பா மட்டுமே. 

மேற்கூறிய ஐந்து நட்சத்திரங்களின் மொத்த மதிப்பு 275-350 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் என்று ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது. புதிய முகங்களின் அதிக பணக்காரராக ப்ரையன் செப்பீல்ட் இருக்கிறார். இவரது மதிப்பு மட்டும் 1.45 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இன்ஸ்டாக்ராமின் இணை நிறுவனர் கெவின் சிஸ்ட்ரோம், மற்றொரு புதிய பில்லியனராக பட்டியலில் இடம் பெற்றுள்ளார். 

இந்த பட்டியலில் இடம்பெற 40 வயதுக்கு உட்பட்டவராக இருந்து, அமெரிக்காவில் இருந்து அங்கேயே தொழில் நடத்தி சம்பாதித்திருக்கவேண்டும் என்று ஃபோர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது. 

யுவர்ஸ்டோரி குழு

Add to
Shares
5
Comments
Share This
Add to
Shares
5
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக