பதிப்புகளில்

தன் கார் ஓட்டுனரை முனைவர் பட்டம் பெற்று பேராசிரியர் ஆக வழிகாட்டிய அப்துல் கலாம்!

YS TEAM TAMIL
3rd Jul 2017
Add to
Shares
9
Comments
Share This
Add to
Shares
9
Comments
Share

ஏபிஜே அப்துல் கலாமின் கார் ஓட்டுனராக 20 ஆண்டுகள் பணிபுரிந்த வி.கதிரேசன், அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் துணை பேராசிரியராக உள்ளார். இதில் இருந்து கலாமின் கனவும், அவரை பின்பற்றிய ஒருவரது வாழ்க்கை எந்த அளவிற்கு உயரமுடியும் என்பது தெளிவாகிறது.

கதிரேசன் 1979-ல் ராணுவத்தில் சேர்ந்து பயிற்சி பெற்ற எலக்ட்ரிக்கல் மெக்கானிக். போபாலில் பயிற்சி முடித்த பின் ஹைதராபாத்தில் உள்ள DRDL மையத்தில் பணியமர்த்தப் பட்டார். அங்கே கலாம் அவர்களின் கார் ஓட்டுனர் மற்றும் உதவியாளராக 80’களில் பணிபுரிந்துள்ளார். 1991 வரை அவருடன் இருந்துள்ளார் கதிரேசன். 

பட உதவி: Weekend Leader

பட உதவி: Weekend Leader


DNA பேட்டியில் பகிர்ந்துகொண்ட கதிரேசன்,

”நான் கலாம் அய்யா-விடம் டிரைவராக ஐந்தரை ஆண்டுகள் பணியாற்றினேன். அவர் நல்ல மனிதர். அவர் அளித்த ஊக்கமே நான் இந்த நிலையில் இருப்பதற்கு முக்கியக் காரணம்.”

தி ஹிந்து செய்திகளின் படி, கதிரேசனின் செய்தித்தாள்கள், புத்தகம் படிக்கும் பழக்கத்தினை கண்ட கலாம், அவர் கல்வியை தொடர ஊக்குவித்துள்ளார். மேலும் கதிரேசன் படிப்பதற்கு நிதியுதவியும் அளித்துள்ளார். பலரை அவர்களின் கனவை நோக்கி கடுமையாக உழைக்க உந்துதல் தருவார் என்று கதிரேசன் கூறியுள்ளார்.

“என் தந்தை இறந்ததன் காரணமாக படிப்பை பாதியில் விட்டிருந்தேன். அதை எப்படியும் முடிக்கவேண்டும் என்று ஆசை கொண்டிருந்தேன். கலாம் அய்யாவின் வழிகாட்டுதலால் என் கனவின் இறக்கையை நான் விரிக்கத்தொடங்கினேன்.”

அப்துல் கலாம் பின்னர் டெல்லிக்கு சென்றுவிட்டாலும், அவர் விட்டுச் சென்று தீப்பொறி கதிரேசனின் மனதில் கொழுந்துவிட்டு எரிந்தது. 10-ம் வகுப்பை முடித்தார். பின் பி.ஏ. வரலாறு, எம்.ஏ. வரலாறு என்று தொடர்ந்து படித்தார். மதுரை காமராஜ் பல்கலையில் முதுகலையை முடித்தப்பின்னர், தன் பணியை 1996-ல் விட்டார்.

திருநெல்வேலியில் முதன்மை கல்வி அதிகாரியாக பொறுப்பேற்றார். பொலிடிக்கல் சயின்சில் எம்.ஏ. முடித்து, வரலாறில் பிஎச்டி-யை நெல்லையில் முடித்தார் கதிரேசன். பின்னர் சேலத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரியில் துணை பேராசிரியராக சேர்ந்தார். 

”நான் DRDL-ல் பணியை விட்டது பற்றி கலாம் அய்யாவிற்கு கடிதம் எழுதினேன். அதற்கு அவர் பதில் கடிதம் எழுதியது என்னை ஆனந்தத்தில் ஆழ்த்தியது. அவர் அப்போது குடியரசுத் தலைவராக இருந்தார். அவர் எனக்கு அனுப்பிய கடிதம் இன்றும் என்னிடம் பொக்கிஷமாக உள்ளது,” என்கிறார் கதிரேசன். 

இரவு, பகல் பாறாமல் படித்தார் கதிரேசன். அவரின் மனைவியும் ஆதரவு அளித்தார்.

“என் தந்தையில் பெயரில் கொஞ்சம் நிலம் இருந்தது. அதை வைத்துக்கொண்டு குடும்பம் நடத்தினோம். என் சம்பளத்தை முழுதும் என் படிப்பிற்கு செலவு செய்தேன். காலை 10 முதல் மாலை 5 வரை டிரைவர் பணி செய்துவிட்டு, வீடு திரும்பியதும் படிக்கத்தொடங்கி விடுவேன்.”

கலாம் அய்யாவிடம் இருந்து பெற்ற வழிகாட்டுதல் என் வாழ்க்கையை மாற்றியுள்ளது. அவர் எப்போழுதும் தன்னைச் சுற்றியுள்ள ஊழியர்கள் மூது அக்கறையோடு இருப்பார் என்று நெகிழ்ச்சி பொங்க பகிர்கிறார் கதிரேசன். 

கட்டுரை: Think Change India

Add to
Shares
9
Comments
Share This
Add to
Shares
9
Comments
Share
Report an issue
Authors

Related Tags