பதிப்புகளில்

’TiECON’ 2016: தமிழகத்தைச் சேர்ந்த தொழில்முனைவோர்கள் சங்கமித்த விழா!

YS TEAM TAMIL
6th Nov 2016
Add to
Shares
9
Comments
Share This
Add to
Shares
9
Comments
Share

டை சென்னை (TiE Chennai), ஒவ்வொரு ஆண்டு நடத்தும் ‘TiECON’, தமிழ்நாட்டில் உள்ள தலைச்சிறந்த தொழில்முனைவோர்கள் சங்கமிக்கும் விழாவாகும். இரண்டு நாள் நடைபெற்ற இவ்விழாவில், வெற்றி தொழில்முனைவோர்கள், முதலீட்டாளார்கள், பிரபல நிறுவனங்களின் சிஇஒ’க்கள் பலரும் கலந்துகொண்டு தங்களின் அனுபவங்களை பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்து கொண்டு சிறப்பித்தனர். சந்தைப்படுத்துதல், தலைமைப் பண்புகள், குழு மேலாண்மை, தொழில் வளர்ச்சி, உலக சந்தை பற்றிய புரிதல் என்ற பல தலைப்புகளில் கருத்தரங்குகள், குழு விவாதங்கள் இவ்விழாவில் நடைப்பெற்றது. TiECON விழாவில் இந்த ஆண்டிற்கான ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’, அரவிந்த் ஐ கேர் சிஸ்டெம்ஸ் கெளரவ தலைவர் டாக்டர்.நம்மபெருமாள் சாமி அவர்களுக்கு வழங்கப்பட்டது.  

திரு.நம்மபெருமாள் டை விருதை பெறுகிறார்

திரு.நம்மபெருமாள் டை விருதை பெறுகிறார்


டைக்கான் விழாவை துவக்கிவைத்து, சிறப்புரை ஆற்றிய ’ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் டெக்னாலஜீஸ்’ நிறுவனத்தின் நிர்வாக தலைவர் அஷோக் சூட்டா, தொழில்முனைவு இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருவதாகவும், தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக புதிய தொழில் வாய்ப்புகள் பெருகி வருவதாகவும் கூறினார்.

”தொழில்முனைவோர்களுக்கு ஏராளமான முதலீடு வாய்ப்புகள் இருக்கிறது. தற்போது முதலீடுகளை சுலபமாக பெருவதில் இந்தியா முதன்மை இடத்தில் இருக்கிறது. ஆனால் அதே சமயம் 70-80 சதவீதம் தோல்விகளையும் பார்க்கமுடிகிறது. அதனால் தொழில்முனைவோர் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நிதி பற்றாக்குறையே, ஒரு நிறுவனம் நஷ்டமடைவதற்கான முக்கியக் காரணம். அதனால் வளர்ச்சியை திட்டமிடும் போது, ஒரு நிறுவனம் விரைவில் லாபத்தை அடைவதற்கான வழிகளை கண்டுபிடிப்பது அவசியம்,” என்றார். 

மேலும் பேசிய அஷோக், ஒரு தொடக்க நிறுவனத்தின் தொழில் ஐடியா சரியில்லை என்றாலும் தோல்வி அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறினார். ஒரு தொழில்முனைவர், தனது ஐடியா சந்தையில் நீண்ட நாள் இருக்க வாய்ப்புள்ளதா என்பதை சிந்தித்து செயலில் இறங்கவேண்டும். மாற்றத்திற்கான வழியை அவர்களின் நிறுவனம் அளிக்கவேண்டும் அப்போதே நிலைத்து இருக்கமுடியும் என்றார். 

”ஒரு முயற்சியில் இறங்குவதற்கு முன், உங்கள் ஐடியா’வை சோதித்து பாருங்கள். அந்த எண்ணத்தை பற்றி கனவு காணுங்கள், அதனுடன் 6 மாதங்கள் வாழ்ந்து பாருங்கள். எல்லாரிடமும் உங்கள் ஐடியாவை பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள். விரைவில் வெற்றி உங்களைச் சேரும், முக்கிய பங்குதாரர்களையும் ஈர்க்கும்,” என்றார். 
சிடிஎஸ் துணைத்தலைவர் திரு.லஷ்மி நாராயணன் திரு.நீதி மோஹனுக்கு விருது வழங்குகிறார்

சிடிஎஸ் துணைத்தலைவர் திரு.லஷ்மி நாராயணன் திரு.நீதி மோஹனுக்கு விருது வழங்குகிறார்


டைக்கான் விருதுகள்

TiECON வருடாவருடம் தொழில்முனைவு தொடர்பான பல விருதுகளை வழங்கி அவர்களை ஊக்குவித்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ அரவிந்த் ஐ கேர் சிஸ்டெம்ஸ் கெளரவ தலைவர் டாக்டர்.நம்மபெருமாள் சாமிக்கு வழங்கப்பட்டது. YES சிஎம்டி மற்றும் வைகை அக்ரோ ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் திரு.நீதி மோஹன் அவர்களுக்கு ‘த்ரோனாச்சார்யா விருது’ வழங்கி கெளரவிக்கப்பட்டது. 

டைக்கான் விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதை விளக்கிய டை சென்னையின் தலைவர் நாரு ஆர். நாராயணன், 

“தமிழ்நாட்டை சேர்ந்த புதுமையான, வெற்றிகரமான தொழில்முனைவர்களை காட்சிப்படுத்துவதே இந்த ஆண்டு டைக்கானின் முக்கிய நோக்கம். இதன் மூலம், நம் மாநிலத்தையும், தொழில்முனைவையும் உலக அளவில் கொண்டு செல்லமுடியும். இளம் திறமையாளர்களை ஊக்கப்படுத்தி, அவர்களை தொழில்முனைவில் ஈடுபட வைப்பதே எங்களின் இலக்கு. வருங்காலத்தில் புதுமையான தொழில் ஐடியாவுடன் உலக சந்தையில் இடம் பெறக்கூடிய இளம் தொழில்முனைவர்களை எதிர்நோக்கி உள்ளோம்,” என்றார். 


இந்த ஆண்டிற்கான ‘ஸ்வச் பாரத்’ விருது சிறுதுளி அமைப்பிற்கு வழங்கப்பட்டது. ’மேக் இன் இந்தியா’ விருது டேட்டா பேட்டர்ன்ஸ் சிஇஒ எஸ்.ரங்கராஜன் அவர்களுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


Add to
Shares
9
Comments
Share This
Add to
Shares
9
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக