பதிப்புகளில்

போட்டி இன்றி தன்னிகரற்ற சிறப்பிடத்தில் உள்ள 10 இந்திய கோட்டீஸ்வர பெண்மணிகள்!

YS TEAM TAMIL
24th Oct 2016
Add to
Shares
433
Comments
Share This
Add to
Shares
433
Comments
Share

மாற்றத்தை சந்தித்து வரும் இந்தியாவில் வாழும் பெண்களும், மெல்ல அதிகார இடங்களை அடைந்து வருகின்றனர். பாரம்பரிய மரபுகளை உடைத்தெறிந்து தொழிலிலும் கால் பதித்து வெற்றிவாகை சூடி வருகின்றனர். ‘பணக்காரர் பட்டியலில்’ இடம்பெற்றுள்ளவர்களில் பெரும்பாலானோர் ஆண்களே. இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக பெண்களும் இந்த பட்டியலில் இடம்பெற தொடங்கியுள்ளது முன்னேற்றத்தை காட்டுகிறது. எப்போதும் பணக்கார ஆண்களின் பட்டியலை பார்த்து பழகிவிட்ட நாம் தற்போது இந்தியாவின் தலைசிறந்த ‘10 பணக்கார இந்திய பெண்கள்’ யார் என அறிவோம்... 

image


சாவித்ரி ஜிண்டல்

5.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு சொந்தக்காரரான சாவித்ரி ஜிண்டல், ஓ.பி.ஜிண்டல் குழுமத்தின் தலைவர். அவர் இந்தியாவில் பணக்கார பெண்மணி என்ற இடத்தை எப்போதும் தக்கவைத்து கொண்டுள்ளவர். உலகில் பணக்காரர்கள் பட்டியலில் 19ஆவது இடம்பெற்றுள்ளார் இவர். கடந்த ஆண்டு ஸ்டீல் துறை வீழ்ச்சியை சந்திந்தாலும், இவரது நிறுவனம் நிதானமாக அதில் இருந்து மீண்டு இவரை பட்டியலில் முதல் இடத்தை நீடிக்க உதவியுள்ளது. 

வினோத் குப்தா 

இறந்த இவரது கணவர் தொடங்கிய நிறுவனமான ‘ஹாவெல்ஸ்’ ஒரு மாபெரும் வளர்ச்சியை இந்த ஆண்டு சந்தித்துள்ளது. கணவருக்கு பின் அதனை ஏற்று நடத்தும் வினோத் குப்தாவின் நிறுவனத்தின் மதிப்பு 2.5 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். விளக்குகள் மற்றும் எலெக்ட்ரிகல் பிட்டிங்க்ஸ்’ இல் அதிகபட்ச விற்பனையை இந்த ஆண்டு சந்தித்தது ஹாவெல்ஸ். வீட்டு எலெக்ட்ரிக்கல்ஸ் மற்றும் சோலார் விளக்குகள் துறையில் ஈடுபட்டது நல்ல லாபத்தை ஈட்டித்தந்துள்ளது. 

சாவித்ரி ஜிண்டல், கிரண் மஜும்தார் ஷா, லீனா திவாரி

சாவித்ரி ஜிண்டல், கிரண் மஜும்தார் ஷா, லீனா திவாரி


கிரண் மஜும்தார் ஷா

பயோகான் நிறுவனர் கிரண் மஜும்தார் ஷா’வின் செல்வ மதிப்பு, கடந்த ஆண்டு இரண்டு மடங்காக அதிகரித்தது. அவரிடம் 1.8 பில்லியன் அமெரிக்க டாலர் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பயோகான், உலகின் அதிக இன்சுலில் உற்பத்தி செய்யும் நிறுவனம் ஆகும். உலக சந்தையில் 10 சதவீத பங்கை வகிக்க உழைத்து வருகின்றது. 

லீனா திவாரி

லீனா திவாரி, சர்வதேச பார்மா மற்றும் பயோடெக்னாலஜி நிறுவனம் USV, தலைமை தாங்கி நடத்துகிறார். 1.6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்டுள்ள இந்நிறுவனம், அவரது தந்தையால் நிறுவப்பட்டது. USV டயபெட்டிக் மற்றும் கார்டியோ வாஸ்குலார் ட்ரக்ஸ் தயாரிக்கும் நிறுவனம் ஆகும். 

இந்து ஜெயின்

மீடியா குழுமம் பென்னெட்-கால்மென் நிறுவனத்தை தலைமை வகிக்கும் இந்து ஜெயின், தொடர்ச்சியாக இந்திய பணக்காரர் பட்டியலில் இடம்பெற்று வருகிறார். இந்நிறுவனம், உலக அளவில் அதிக விற்பனை ஆகும் தினசரி பத்திரிகை டைம்ஸ் ஆப் இந்தியா’வை வெளியிடுகிறது. டிவி சானல்கள் டைம்ஸ் நவ் மற்றும் ஈடி நவ் ஆகியவையும் இவர்களுக்கு சொந்தமானது. 

ஸ்மிதா கிருஷ்ணா- காத்ரெஜ்

ஸ்மிதா கிருஷ்ணா- காத்ரெஜ், ஜம்செத் நவ்ரோஜி காத்ரெஜின் சகோதரி ஆவார். ஜன்செத்; காத்ரெஜ் மற்றும் பாய்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைவர். ஹோமி பாபா’விற்கு சொந்தமான, 60 மில்லியன் டாலர் மதிப்புள்ள பாரம்பரியமிக்க பங்களா ஒன்றை வாங்கி, ஸ்மிதா கிருஷ்ணா செய்திகளில் இடம்பெற்றார். 

அனு ஆகா, ஷோபனா பார்தியா, காவேரி கலாநிதிமாறன்

அனு ஆகா, ஷோபனா பார்தியா, காவேரி கலாநிதிமாறன்


அனு ஆகா

அனு ஆகா, தெர்மாக்ஸ் எனும் எஞ்சினியரிங் நிறுவனத்தின் 62 சதவீத பங்குகளை வகிக்கிறார். இந்நிறுவனம் இந்தியா மற்றும் பிரிட்டெனில் உள்ளது. அண்மை காலங்களில் அதிகபட்ச லாபத்தை சந்தித்து வெற்றிநடை போடுகிறது இவரது தொழில். தெர்மாக்ஸ், ஏஎஸ்.பதென்னா அதாவது அனுவின் தந்தையால் நிறுவப்பட்டு, பின் அவரது கணவர் ஆர்.டி.ஆகா அதை நடத்திவந்தார். அவர் இறந்தபின் அனு நிறுவனத்தை கையில் எடுத்து அதன் தலைவராக 2004 வரை இருந்துவந்தார். அதற்கு பின் தன் மகன் மெஹருக்கு அந்த பொறுப்பை தந்துவிட்டார் அனு. 

ஷோபனா பார்தியா

ஷோபனா பார்தியா, எச்டி மீடியாவின் எடிடோரியல் இயக்குனர் மற்றும் தலைவர். ஹிந்துஸ்தால் டைம்ஸ் மற்றும் மின்ட் பத்திரிகைகளை வெளியிடுகிறது இந்நிறுவனம். ஷோபனாவின் தலைமையில் இந்த நிறுவனம் தனது செயல்பாடுகளை விரிவடையச் செய்து பல தளங்களில் இயங்கத்தொடங்கியது. எப்.எம் ரேடியோ, இணையதளம், வேலைவாய்ப்பு தளம், சினிமா தளம், மற்றும் சமூக-டிஜிட்டல் மீடியா என்று பல பிரிவுகளை கொண்டு இயங்குகிறது. 2013 இல் ‘மிண்ட் ஏசியா’ எனும் பிசினஸ் வார இதழை சிங்கப்பூரில் அறிமுகப்படுத்தினார் பார்தியா. 

வித்யா முர்கும்பி

வித்யா முர்கும்பி, ஸ்ரீ ரேணுகா சுகர்ஸ் எனும் இந்தியாவில் அதிவேகமாக வளர்ந்து வரும் சர்க்கரை நிறுவனத்தின் சொந்தக்காரர். பெல்காமில் இயங்கும் இந்த நிறுவனத்தை தன் மகன் நரேந்திர முர்கும்பி உடன் நடத்தி வருகிறார் வித்யா. இவரது நிறுவனத்தில் ஒரு நாளைக்கு 4000 டன்கள் சர்க்கரையை சுத்தீகரிப்பு செய்யும் வசதி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

காவேரி கலாநிதி

சன் டிவி’ இன் நிர்வாக இயக்குனர் மற்றும் மீடியா ஜாம்பவான் கலாநிதி மாறனின் மனைவி காவேரி கலாநிதிமாறான். இன்றைய தினத்தின் அதிகபட்ச மாதச்சம்பளம் பெறும் இந்திய பெண்மணி இவர் என்ற பெருமையை கொண்டவர். தமிழ் சாட்டிலைட் டிவி குழுமமான சன் டிவி, இந்தியாவில் அதிக பார்வையாளர்களை கொண்ட கேளிக்கை சானல் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆங்கில கட்டுரையாளர்: சோலன் மிஸ்ரா

Add to
Shares
433
Comments
Share This
Add to
Shares
433
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக