பதிப்புகளில்

உரிமைக் கோரப்படாத சடலங்களுக்கு இறுதிச் சடங்கு செய்யும் சமூக ஆர்வலர்!

posted on 22nd October 2018
Add to
Shares
66
Comments
Share This
Add to
Shares
66
Comments
Share

டெல்லி சாலைகளில் உரிமைக் கோரப்படாத சடலங்களைப் பார்க்கமுடியும். அவற்றைக் கண்டு முணுமுணுப்பதைத் தாண்டி யாரும் உதவ முன்வருவதில்லை.

சமூக ஆர்வலரான ரவி கால்ரா மட்டுமே களமிறங்கினார். இவர் சடலங்களுக்கு இறுதி சடங்குகளைச் செய்கிறார். இந்த நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு முன்பு வரை அவருக்கு இதுகுறித்து எதுவும் தெரியாது.

image


இவரது உதவி இத்துடன் நின்றுவிடவில்லை. The Earth Saviours Foundation (TESF) என்கிற லாப நோக்கமற்ற நிறுவனத்தின் நிறுவனரான இவர் இதுவரை உரிமைக் கோரப்படாத 6,000 சடலங்களுக்கு இறுதிச் சடங்கு ஏற்பாடுகளைச் செய்துள்ளார். 

சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற இவரது அரசு சாரா நிறுவனம் சாலைகளில் ஆதரவின்றி இருப்போர், குடும்பத்தால் நிராகரிக்கப்பட்ட முதியோர், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கு தங்குமிடமும் ஆதரவும் அளித்து வருகிறது. குருகிராமில் அமைந்துள்ள குருகிராமில் அமைந்துள்ள TSEF-ல் அப்படிப்பட்ட 500 முதியோர் தஞ்சமடைந்துள்ளனர்.

நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ரவி பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். 1987-ம் ஆண்டு Taekwondo தற்காப்பு கலையில் நான்காவது டான் ப்ளாக் பெல்ட் வாங்கியுள்ளார். சில ஆண்டுகள் கழித்து இவர் Indian Amateur Taekwondo Federation-ன் தலைவர் ஆனார். கலை வடிவத்தில் 43 நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கு பயிற்சியளித்துள்ளார். 

தற்காப்பு கலையில் சிறப்பான எதிர்காலம் இருந்தும்கூட ஒரு குழந்தை குப்பைத்தொட்டியில் உணவைத் தேடி அலைவதைப் பார்த்தபோது அவர் செயல்படவேண்டிய பகுதி குறித்த தெளிவு அவருக்குக் கிடைத்தது. இந்த சம்பவத்தால் மனம் வருந்திய ரவி சமூக நலனில் பங்களிக்க அரசு சாரா நிறுவனத்தை நிறுவினார்.

TESF முதியோர்களுக்கு மட்டுமின்றி நலிந்த பிரிவினைச் சேர்ந்த குழந்தைகளுக்கு மறுவாழ்வளிக்கும் பள்ளியாகவும் செயல்படுகிறது. உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டவர்கள், சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளிட்டோருக்கு மருத்துவ உதவியும் பொருளுதவியும் வழங்குகிறது.

90 வயது பாட்டி அவரது குடும்பத்துடன் இணைய உதவிய சம்பவம் குறித்து சமீபத்தில் இந்த லாப நோக்கமற்ற நிறுவனம் முகநூலில் பதிவிட்டிருந்தது. அதில்,

“2018-ம் ஆண்டு முதியோர் தினமான அக்டோபர் மாதம் 1-ம் தேதி ஆனரோ தேவி என்கிற 90 வயது பாட்டியை அவரது குடும்பத்துடன் வெற்றிகரமாக இணைத்தோம். அவர் ஆகஸ்ட் மாதம் 19-ம் தேதி பெண் காவலர்களால் எங்களது குருகுலத்தில் அனுமதிக்கப்பட்டார். Zipnet.in உதவியுடன் குருகுலத்தால் பிரத்தேயமாக அமைக்கப்பட்ட குழு தொலைந்துபோன அவரது குடும்பத்தை கண்டறிந்தது,” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

குருகுலம் TESF-ஆல் நடத்தப்படும் தங்குமிடம் ஆகும். Edex உடனான உரையாடலில் ரவி கூறுகையில், 

“ஆரம்பத்தில் நாங்களே சென்று இவர்களை மீட்டுக் கொண்டுவந்தோம். தற்போது இதில் காவலர்களும் ஈடுபட்டுள்ளனர்,” என்றார்.

200 நபர்களுக்காக உருவாக்கப்பட்ட தங்குமிடத்தில் தற்போது 450 பேர் உள்ளனர். ரவி உலகின் மிகப்பெரிய அறநிலைய கோவிலை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதில் மருத்துவமனை, காவல்துறை கட்டுப்பாட்டு அறை ஆகியவை இருக்கும். ஆயிரம் நபர்கள் இருக்கும் வகையில் அமைந்திருக்கும் என ’தி பெட்டர் இண்டியா’ குறிப்பிடுகிறது.

கட்டுரை : THINK CHANGE INDIA

Add to
Shares
66
Comments
Share This
Add to
Shares
66
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக