அந்தோதயாவின் 'பங்குரு': சிறு விவசாயிகளின் அமுதசுரபி
அதுவொரு கொளுத்தும் கோடையாக இருக்கப்போவதாக வானிலை நிபுணர்கள் நம்பினார்கள். மீண்டும் ஒரு வறட்சி ஆண்டு வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், காய்ந்துபோன பூமியையும் மிகக் குறைவான விளைச்சலையும் விவசாயிகள் எதிர்கொள்ளப்போவதாகவும் நம்பப்பட்டது. அப்படி பாதிப்புக்குள்ளாகும் பட்டியலில் குஜராத் மாநிலமும் ஒன்றாக இருக்கலாம். தூசும் சூடும் நிறைந்த அகமதாபாத்தில் வெப்பநிலை 40ஆக உயர்ந்துகொண்டிருந்தது. வழக்கமான வறட்சி கடும் தண்ணீர் பஞ்சத்திற்கு அழைத்துச்சென்றது.
இதே நகரில்தான் திருப்தி ஜெயின் (Trupti jain) பிறந்து வளர்ந்தார். சுடுவெயில் சுட்டெரிக்கும் இந்தியாவின் இரண்டு மாநிலங்களான குஜராத், ராஜஸ்தான் முழுவதும் பயணம் செல்வது வழக்கமாக இருந்தது அவருக்கு. மோசமான பருவநிலையாலும், தண்ணீர் பற்றாக்குறையாலும் பாதிப்புக்குள்ளான, வளர்ச்சியை எட்டிப்பார்க்காத கிராமப்புற பெண்களுடன் அவர் பணியாற்றினார்.
திருப்தி, "நைரீட்டா சர்வீஸஸ்"(Naireeta Services) எனப்படும் சமூக நிறுவனத்தின் நிறுவனரும் இயக்குநரும் ஆவார். அவருடைய குழுவினர் 9 பேருடன் இணைந்து "பங்க்ரூ" திட்டத்தை (Bhungroo என்றால் புதுமையான நீர் தொழில்நுட்பத்தைக் குறிக்கும் குஜராத்தி பெயர்) செயல்படுத்தி வருகிறார். அதனை செயலாக்கும் குழுவின் தலைவராக பிப்லாப் கேத்தன் பால் இருந்தார். அவர் என்எஸ்பிஎல் மற்றும் (NSPL and Ashoka Globalizer) அசோகா குலோபலைசரின் இயக்குநர்.
திருப்தியைப் பொறுத்தவரை, ராக்பெல்லர் பவுண்டேஷன் மற்றும் லீட்ஸில் (LEADs) பயின்றவர், சுற்றுச்சூழல் பொறியியலில் வல்லுநர். வணிக நிபுணர்கள் தொடங்கி எல்லாவகையான பொறியியல் நி்புணர்களும் நிறைந்து அனுபவம் மிக்க குழுவாக நைரீட்டா விளங்கியது. இதுதவிர, பாராட்டுக்குரிய 23 தன்னார்வலர்கள், இந்த பருவநிலையை கண்காணிக்கும் அனைத்துப் பெண் தலைவிகளும் பங்குருவுக்காக யுஎன்எப்சிசிசி 'மொமண்டம் பார் சேஞ்ச்' UNFCCC Momentum for Change எனப்படும் ஐநாவின் பருவநிலை மாற்றத்துக்கான மாநாட்டு விருதைப் பெற்றிருக்கிறார்கள்.
உத்தரப்பிரதேசம், பிகார், மேற்குவங்கம், கர்நாடகா மற்றும் குஜராத் மாநிலங்களில் நைரீட்டா செயல்படுகிறது. மேலும், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநிலங்களில் செயல்பாட்டுக் குழுக்களை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இந்தியாவின் சிறுவிவசாயிகளுக்கு உதவும் எண்ணத்தில் அது யுஎன்இபி மற்றும் ஐஃஎப்ஏடி (UNEP and IFAD) யால் சிறுவிவசாயிகள், உணவு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் தலைப்புகள் முன் நிறுத்தப்பட்டு(Smallholders, food security, and the environment) அதன் 2013 அறிக்கையில் முக்கியத்துவம் தரப்பட்டது. அந்த அறிக்கையில் இருந்து…
உலகில் மதிப்பிடப்பட்ட 500 மில்லியன் சிறு பண்ணைகளை, 80 சதவிகித சிறுவிவசாயிகளே மேலாண்மை செய்கிறார்கள். வளரும் உலகில் எண்பது சதவிகித உணவுத் தேவையை அவை பூர்த்திசெய்கின்றன. வறுமையை குறைப்பதற்கும் உணவுப் பாதுகாப்புக்கும் குறிப்பிடத்தக்க அளவில் அவை பங்காற்றுகின்றன. நிலங்கள் துண்டாடப்படுதல், அத்துடன் இணைந்து குறையும் முதலீட்டு ஆதரவு, பொருளாதார வளர்ச்சிக் கொள்கையால் ஒரங்கட்டப்படும் சிறு பண்ணைகள் எல்லாம் இந்த பங்களிப்பை மிரட்டுகின்றன. சிறு விவசாயிகள் விலகுவது பெரும் பாதிப்பாக இருக்கிறது”.
குஜராத் மற்றும் ராஜஸ்தானில் கிராமப்புற பெண்கள் வறட்சியான எட்டு மாதங்களை சமாளிக்க உடல்ரீதியாக மிகவும் சிரமப்படுகிறார்கள் என்பதை முதல்கட்டமாக திருப்தி அறிந்துகொண்டார். பருவமழை பெய்யத்தொடங்கும்போது நீரால் சூழப்பட்ட பண்ணைகள் மற்றும் சுற்றுப்புறங்களில் இருந்து அவர்கள் மீளவேண்டியிருந்தது. வரும்போது, “இரண்டு சூழ்நிலைகளும் நேர் எதிரானவை” என்கிறார் திருப்தி, “மற்றும் இரண்டு பிரச்சினைகளும் பெண்களால் தலைமையில் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு சீரழிவைத் தரக்கூடியவை.” உணவுப் பாதுகாப்பு இல்லாமல், தீராத கடனில் சிக்கிக்கொண்ட இந்தக் குடும்பங்கள் இடம்பெயர்வதற்கும் கொத்தடிமைத் தொழிலாளர்களாகும் நிலைக்கும் தள்ளப்பட்டனர்.
“இதுதான் நைரீட்டாவின் விலைமதிப்பற்ற நோக்கமாக இருந்தது” என்று கூறுகிறார் திருப்தி. “நாங்கள் அந்தோதயா பற்றிய மகாத்மா காந்தியின் கொள்கையைப் பின்பற்ற முயற்சி செய்தோம் அதாவது நம்மால் முடிந்த அளவுக்கு க்யூவில் உள்ள கடைசி மனிதனுக்கும் உதவி செய்யவேண்டும். அவருடைய பாதையை நாங்கள் பின்பற்றுகிறோம். சர்வோதயாவை செயல்படுத்துவதில் காந்தியின் நம்பிக்கையைக் காப்பாற்றுவோம்” என்கிறார்.
அந்தோதயா மற்றும் சர்வோதயா வட்டத்தின் மத்தியில் பங்குரு இருக்கிறது. பாராம்பரியமான பங்குரு என்பது வெளியில் சமைக்கும் பெண்கள் அடுப்பில் காற்றை ஊதி நெருப்பு பற்றவைக்கப் பயன்படுத்தும் ஊதாங்குழல். இது கிராமங்கள், சிறு நகரங்கள் மற்றும் நகரத்தின் சேரிகளிலும் ஒர் அங்கமாக இருக்கிறது.
“இதேபோல்தான் பங்குரு இல்லாமல் அந்தப் பெண்ணால் அவருடைய குடும்பத்துக்கு உணவூட்ட முடியாது. பங்குரு ஒரு தொழில்நுட்ப செயல்முறை. சிறு விவசாயிகள் குளிர்காலத்தில் நீரைப் பெறுவதற்கும், பேரிடர் காலங்களில் பாதுகாப்பதற்கும் பருவகாலங்கள் மற்றும் மழையற்ற நாட்களில் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் பங்குரு உதவியாக இருக்கிறது. அதன் ஒவ்வொரு யூனிட்டும் 1 மில்லியன் தண்ணீரை சேமித்து ஏழை சிறு விவசாயிகளுக்கு மழையில்லாத காலங்களில் பயிர்களின் பாசனத்திற்கு உதவுகிறது” என்று விவரிக்கிறார் திருப்தி. அவருடைய அமைப்பு 2 லட்சம் ஹெக்டேர் பரப்பு நிலங்களுக்கு நீர்ப்பாச வசதியைத் தருகிறது. பருவமழைக் காலங்களில் உபரியான தண்ணீரை நிலத்தடியில் உள்ள கிணறுகளில் சேகரிக்கிறது. இந்த முறையால் நீர்நிலைகள் செயற்கையாக உயிர்பெறுகின்றன.
கால்வாய்கள் போன்று நீர்ப்பாசனத்திற்கு துணையில்லாமல், ஏழை விவசாயிகள் பருவ காலங்களில் மழையை மட்டுமே நம்பியிருந்தனர். குளிர்காலங்களில் தனியாரிடமிருந்து பாசன வசதி பெற்றனர். முதலீடு இல்லாமல், சிறு விவசாயிகள் நீரை கட்டாயமாக வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். உற்பத்தியில் பாதி அதற்கு போய்விடும். நீருக்கான பணத்தை விவசாயிகளால் கொடுக்கமுடியாதபோது, நீர் விற்பனையாளர்கள் புறக்கணிப்பில் ஈடுபடுவர். இந்த தனியார் நீர் விற்பனை விநியோகஸ்தர்களின் விருப்பத்திற்கு நடந்தது. இது மோசமான நட்புறவு, நம்பிக்கை இழந்த விவசாயிகள் நிலத்தை தண்ணீருக்காக மற்றவர்களுடன் நிலத்தை பகிர்ந்துகொள்ள நேர்ந்தது. ஆண்டுக்கணக்கில் தங்கள் நிலத்தை பலர் இழந்தனர் என்று சுட்டிக்காட்டுகிறார் திருப்தி.
கோடைக்காலம் இந்த விவசாயிகளை பணமற்றவர்களாக, நீரற்றவர்களாக பயிர்கள் அற்றவர்களாக விட்டுச்சென்றது. பருவமழை மட்டும் ஆண்டு முழுவதற்குமான உணவு உற்பத்திக்கான ஆதாரமாகவும் பணத்திற்கான ஆதாரமாகவும் இருந்தது. இப்படி பத்து ஆண்டுகளுக்கு மேல் நகர்ந்தது. ஒவ்வொரு முறையும் இயற்கை விவசாயிகளுக்கு எதிராக இருந்தது. அதற்கு எதிர் பாதையிலேயே விவசாயிகளும் சிக்கிக்கொண்டனர்.
இங்குதான் பங்குரு சமூகப் சாகுபடித் திட்டத்தை செயல்படுத்தியது. அது ஏமாற்றப்படும் விவசாயிகளை மட்டும் பாதுகாக்கவில்லை, பெண்களின் எதிர்காலத்தையும் செழுமைப்படுத்தியது. குறைந்தபட்சம் ஐந்து பெண்கள் சேர்ந்து ஓர் ஓப்பந்த அடிப்படையில் பங்குரு திட்டத்தில் பங்குபெற்றனர். நீர்ப் பாசனத்தை பகிர்ந்துகொண்டதோடு, ஒவ்வொருவருடைய நிலங்களின் விவசாய வேலைகளிலும் ஈடுபட்டனர்.
ஓர் ஆண்டிற்கு பங்குரு யூனிட்டை நிர்மாணிக்க ஆகும் செலவு 9 லட்சம் ரூபாயில் இருந்து தொடங்குகிறது. ஒரு பங்குரு யூனிட் 20 ஆண்டுகள் வரை செயல்படும். இந்து கூட்டுறவு பருவமழைக் காலங்கள் மற்றும் குளிர்காலங்களில் 21 ஏக்கர் நிலங்களின் தண்ணீர்த் தேவையை பூர்த்திசெய்யும். 5 அல்லது 6 பேர் உள்ள குடும்பம் தொடங்கி 30 முதல் 50 தனிநபர் வரையில் இந்த தொழில்நுட்பத்தால் பயன்பெற்றனர். அவர்களுடைய ஆண்டு வருமானம் 12 ஆயிரத்தில் இருந்து 38 ஆயிரம் வரை இருந்தது. அதாவது ஒரு ஏக்கரில் 25 ஆயிரம் ரூபாய் அளவுக்கு( 8 ஆயிரத்தில் இருந்து) பயிர் உற்பத்தி நடைபெற்றது. செயலாக்க கணக்கீடு, நிர்மாணித்தல், அறிவுபூர்வமான கூட்டிணைப்பு, வலிமையை உருவாக்குதல், இணைந்து செயல்படுதல் ஆகியவற்றின் மூலமாக நைரீட்டாவின் பங்குருவுக்கு வருமானம் கிடைத்தது.
ஆரம்பத்தில் பங்குருவை விவசாயிகள் நம்பவில்லை. முதலில் அவர்கள் இப்படியொரு தொழில்நுட்பத்தைு நினைத்துப்பார்க்கவில்லை. இது மற்றுமொரு ஊழலாகப் பார்த்தார்கள். “அவர்களுக்கு அது அதிசயமாக இருந்தது. அப்படியொரு அதிசயத்தை அவர்கள் வாழ்க்கையில் பார்க்கவில்லை“ என்று கூறுகிறார் திருப்தி.
திருப்தி பெரும் எதிர்ப்பையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பங்குரு பெண்களை மையமாக வைத்து இயங்குவதால் கிராமத்து ஆண்கள் எதிர்த்தனர். திருப்தி, “இந்த விஷயத்தில் என்எஸ்பிஎல் பேச்சுவார்த்தைக்கு இணங்குவதாக இருந்தது. ஆண்கள் பெரும்பாலும் வெளியூர் செல்கிறவர்களாக இருந்தார்கள். தங்களுடைய மனைவிகள் தண்ணீருக்காக என்ன செய்கிறார்கள் என்பது சிறிதளவே தெரிந்து வைத்திருந்தார்கள்” என்கிறார்.
அதை அவர்கள் உணர்வதற்கு சில ஆண்டுகள் பிடித்தன. பங்குருவை எதிர்ப்பவர்களிடம் திருப்தி போராட வேண்டியிருந்தது. நிலத்தை ஏகபோகமாக பறிக்கும் திட்டங்களை நைரீட்டா சர்வீசஸ் பாதித்தது. “பல சவால்களை எதிர்கொண்டதில் சற்று செல்வாக்கும் கிடைத்தது. ஆனால் உள்ளூர் சுய உதவிக் குழுக்கள் அந்த இரும்புப் பிடியை உடைத்தெறிந்தன“ என்கிறார்.
இப்போதும்கூட, நைரீட்டாவின் பிர்ச்னைகள் முடியவில்லை. “இந்தப் பணிக்காக ஏழை சிறு விவசாயிகள் ஒரு பைசாவைக்கூட தரவில்லை” என்று கூறுகிறார் திருப்தி. தங்கள் குடும்பத்தினர் சரிகட்டிய பெண்கள், அவர்களை பங்குரு திட்ட செயலாக்கத்தில் பங்கேற்க வைத்தனர்.
“அவர்கள் ஒவ்வொரு அடியிலும் கலந்துகொண்டு எல்லாவற்றையும் கற்றுக்கொண்டார்கள். மேலும் அவர்கள் பம்புகள் வாங்குவதிலும்கூட பங்குபெற்றார்கள். அத்துடன் நிதி தொடர்பான பேச்சுவார்த்தைகளிலும், விற்பனைக்கு முந்தைய ஒப்பந்தங்களிலும் கவனம் வைத்தார்கள். பல செயல்முறை தடைகளை அகற்ற அது முக்கியமான முடிவாக அமைந்தது” என்று அனுபவத்தை விவரிக்கிறார் திருப்தி.
சுற்றுச்சூழலைப் பொறுத்து, அதன் திறனை அதிகரிக்க பங்குரு டிசைனை மாற்ற வேண்டிய தேவை இருந்தது. பனிரெண்டு விதமான சுற்றுச்சூழல் அடிப்படையில் 12 வகையான பங்குரு டிசைன்களை நைரீட்டா வகைப்படுத்தி வைத்திருக்கிறது. இந்த பங்குரு டிசைன்கள் 311 மி.மீட்டர் மழை அளவு கொண்ட பாலைவனத்திலும், 1800 மி.மீட்டர் மழையளவு கொண்ட பாறைமிகுந்த மண் பிரதேசங்களிலும் இயங்கும். “அதற்குத் தேவையான வசதிகளும் நிலைமையும் முறையாக இல்லையென்றால். அங்கே பங்குரு அமைக்கப்படமாட்டாது”
ஒரு சாதகமான விஷயமும் நடந்தது. அரசு நிர்வாகங்கள் இந்த தொழில்நுட்பத்தை அனுமதித்தார்கள். “இந்தியாவின் 12 க்கும் அதிகமான மாநிலங்களில் பங்குருவை நன்றாகவே ஏற்றுக்கொண்டார்கள். சில மத்திய அமைச்சர்கள் இந்த செய்தியை நாடாளுமன்றம் வரை அதாவது நிதி ஆயோக் போல கொண்டு சென்றார்கள். ஆட்சியாளர்கள பங்குருவை மேம்படுத்தும் ஆர்வத்துடன் சார்க் மற்றும் ஆப்பிரிக்காவில் அறிமுகம் செய்தார்கள்” என்று சொல்கிறார் திருப்தி.
பங்குருவின் முழு செயல்முறையும் உள்ளூர் திறன் மற்றும் பொருட்களை சுற்றியே இருந்தது. இது முழுக்க காந்திய கொள்கையை அடிப்படையாகக் கொண்ட செயல்பாடு. ஆனால் அவர்களிடம் இந்த ஒரே வாய்ப்பு மட்டுமே இருந்தது. அதிக செலவை ஏற்படுத்தும் தொழில்நுட்பம் காரணமாக அந்த வாய்ப்பைப் எளிமையாகப் பயன்படுத்த இந்தியா முயற்சி செய்யவில்லை. இந்திய விவசாயிகளின் சமூக பொருளாதா நிலை சுவிஸ், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க விவசாயிகளைவிட அதிக வேறுபாடு உள்ளது.
தேசத்தின் தந்தை உள்ளூர் திறன் மற்றும் பொருட்களே கிராம சுயராஜ்யத்தின் முதுகெலும்பாக நம்பினார் என்று குறிப்பிடுகிறார் திருப்தி. எந்தவித அறிவியல் தியரியும் தெரியாத பாமர விவசாயிகள்தான் இந்த முழு தொழில்நுட்பத்தையும் இயக்கினார்கள். இந்த தீவிரமான சிறுவிவயசாயிகள்தான் அதனை இயக்குவதோடு, அதனை சிறிய அளவில் பராமரிக்கவும் செய்தார்கள். எந்தவித வெளி உபகரணங்களும் இல்லாமல், அதனை அவர்கள் செய்வது மிகக் கடினமான வேலை. இது என்எஸ்பி எல்லை தாண்டி சார்ந்திருக்கிற நிலை, முதலாளித்துவக் கொள்கை அடிப்படையில் பாராட்டக்கூடியதுதான். ஆனால் தியரி ஆப் ஹியூமானிட்டியில் இருந்து முரண்படுகிறது.
பங்குரு தொழில்நுட்பத்தை இந்தியா ஏற்றுக்கொள்ள இன்னும் பத்து ஆண்டுகளாகும். அதன் தயாரிப்பாளரான பிப்லேப், மனிதாபிமான அடிப்படையில் காப்புரிமை வழங்க மறுத்துவருகிறது. குஜராத்தில் உள்ள சிறு விவசாயிகள் நிலையான நீர்ப்பாசனத் திட்டங்களை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்ற நம்பிக்கை திருப்திக்கு இருக்கிறது. “நாட்டுக்கு அவர்கள் ஆண்டுக்கு 800 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டித்தருகிறார்கள்” என்கிறார்.
இந்தியாவின் தண்ணீர் பற்றாக்குறைக்கு விவசாயிகளும் ஒரு காரணமாக இருக்கிறார்கள். அதிகமாக நீரைப் பயன்படுத்துகிறார்கள், அதிகமான ஆழ்துளைக் கிணறுகளும் மானியங்களும் காரணமாக இருக்கின்றன.
குஜராத்தில் பெண்களுக்கு நைரீட்டா செய்துள்ள உதவியை திருப்தியிடம் இப்படித்தான் சொல்கிறார்கள்: “எங்களுக்கு பங்குரு, லட்சுமி தெய்வத்தைப் போன்றது. பங்குரு எங்களுடைய சமூக மதிப்பை உயர்த்தியிருக்கிறது. அதைவிட முக்கியமாய எங்களுடைய சுய மதிப்பீட்டையும், சமூக அங்கீகாரத்தையும் கொடுத்திருக்கிறது”.
“இப்போது பங்குருவின் எதிர்காலத்தைப் பற்றி என்னைவிட நீங்களே புரிந்துகொள்வீர்கள்” என்று விடைகொடுக்கிறார் திருப்தி.