பதிப்புகளில்

வெப்ப அலை எச்சரிக்கை! சுட்டெறிக்கும் சூரியனை எதிர்கொள்வது எப்படி?

YS TEAM TAMIL
15th Apr 2016
Add to
Shares
7
Comments
Share This
Add to
Shares
7
Comments
Share

இந்த ஆண்டு கோடை தொடங்கிய சில தினங்களிலேயே சுட்டெறிக்கும் வெயில் அனைவரையும் வாட்டி வதைக்கிறது. இந்திய வானிலை மையத்திலிருந்து வெப்ப அலை எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. எச்சரிக்கை வந்தாலும், வெப்பத்தைப் பற்றிய தகவலை சரியாகத் தெரிந்து கொண்டு அதை எப்படி சமாளித்து, பாதுகாப்பாக்காக நம்மைக் காத்துக்கொள்ளவேண்டும் என்பதை தெரிந்து கொள்வதும் மிகவும் அவசியம். வெப்ப அலை பற்றியும் அதை சமாளிப்பது எப்படி என்பது பற்றியும் சில குறிப்புகள் இதோ...

வெப்ப அலை என்றால் என்ன?

இந்திய தேசிய பேரழிவு நிர்வாக ஆணையத்தின்படி வெப்ப அலை என்பது ஒரு அசாதாரணமான அதிகபட்ச வெப்பநிலையாகும். வழக்கமான கோடை நாட்களில் காணப்படும் வெப்பநிலையைவிட அதிகபட்சமான வெப்பநிலை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் காணப்படும். மார்ச் மாதம் தொடங்கும் இந்த கோடைக்காலம் ஜூன் மாதம் வரை இருக்கும். சில சமயங்களில் ஜூலை வரையும் நீடிக்கும்.

படம் : நிஷாந்த் க்ருஷ்

படம் : நிஷாந்த் க்ருஷ்


வெப்ப அலையினால் ஏற்படும் உடல் உபாதைகள்

உடலில் நீர்குறைந்து வறட்சி ஏற்படுதல் (dehydration) வெப்பத்தினால் ஏற்படும் பிடிப்புகள், சோர்வு மற்றும் ஸ்ட்ரோக் போன்றவை வெப்பநிலை அதிகரிப்பதால் ஏற்படும் சில பொதுவான உடல் உபாதைகளாகும்.

அறிகுறிகள்

வெப்ப பிடிப்புகள் : 102 டிகிரி வரையிலான காய்ச்சலுடன் எடிமா எனப்படும் வீக்கமும் சின்கோப் எனப்படும் மயக்கமும் காணப்படும்.

வெப்ப சோர்வு : சோர்வு, பலவீனம், தலைச்சுற்றல், தலைவலி, குமட்டல், வாந்தி, தசை பிடிப்பு, வியர்வை போன்றவை அறிகுறிகளாக தென்படும்.

ஸ்ட்ரோக் : 104 டிகிரிக்கும் அதிகமான காய்ச்சல் அத்துடன் வலிப்பு, சித்தபிரமை, கோமா போன்ற நோய்தாக்கங்கள் ஏற்படும். அத்துடன் உயிரிழக்க நேரிடும் அபாயமும் உள்ளது.

செய்யவேண்டியவை மற்றும் செய்யத்தகாதவை

அதிகமான வெப்பநிலையில் உடலுழைப்பை அதிகரிப்பதும் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாகும்.

வெயிலின் தாக்கத்தினால் ஏற்படும் உடல் உபாதைகளையும் அதன் விளைவுகளையும் குறைப்பதற்கு கீழ்கண்ட முறைகளை பின்பற்றலாம்:

* வெளியில் செல்வதை முடிந்தவரை தவிர்க்கவும். குறிப்பாக 12 முதல் 3 மணி வரை.

* அடிக்கடி தண்ணீர் குடிக்கவும். தாகமாக இல்லையென்றாலும் நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும்.

* அதிக கனம் இல்லாத சற்றே தளர்வான ஆடைகளை அணியவும். காற்றோட்டம் மிகுந்த காட்டன் ஆடைகளே சிறந்தது.

* வெயிலில் வெளியே செல்லும்போது கண்ணாடி அணியவும். குடை அல்லது கேப் உபயோகிக்கவும். ஷூ அல்லது சப்பல் அணியலாம்.

* டீ, காபி, மது மற்றும் குளிர்பானங்களை தவிர்க்கவும்.

* குழந்தைகளை அடைச்சலாக இருக்கும் வண்டியில் அதிக நேரம் அமர்ந்திருக்க செய்யவேண்டாம். காற்றோட்டமான இடத்தில் இருப்பது நல்லது.

* ஏதேனும் உபாதை இருப்பதாக உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

* வீட்டில் தயாரிக்கும் எலுமிச்சை ஜூஸ், லஸ்ஸி, மோர் போன்ற நீராகாரங்களை உட்கொள்ளலாம்.

* விலங்குகளை நிழல் அதிகமாக இருக்கும் இடத்தில் தங்கவைக்கவும். தண்ணீர் அதிகமாக கொடுக்கவும்.

* வீட்டில் மெல்லிய திரைச்சீலைகளை பயன்படுத்தவும். ஜன்னல்களை திறந்து வைத்து காற்றோட்டமாக வைத்துக்கொள்ளவும்.

* குளிர்ந்த நீரில் அடிக்கடி குளிக்கவும்.

சன்ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டவருக்கு முதலுதவி அளிக்க சில குறிப்புகள்:

* முதலில் பாதிக்கப்பட்டவரை நிழலான இடத்தில் படுக்க வைக்கவும்.

* ஈரமான துணியால் உடலை துடைத்து விடவும்.

* சாதாரண வெப்பநிலையிலுள்ள தண்ணீரை தலையில் மெதுவாக ஊற்றவும்.

* இவை அனைத்தும் உடலின் வெப்பத்தை மெல்ல மெல்ல குறைக்க உதவுவதால் இது அத்தியாவசியமானதாகும்.

* ORS, லெமன் சர்பத் போன்றவற்றை உட்கொள்வதால் உடலின் வறட்சி நீங்கும்.

* உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும்.

* அதிக வெப்பநிலையினால் ஏற்படும் ஸ்ட்ரோக்கின் தாக்கம் உயிரைக்குடிக்கும் அபயாமுள்ளதால் உடனடி மருத்துவ சிகிச்சை அவசியம்.

மாறும் சூழலை எதிர்கொள்ள...

குளிர் பிரதேசங்களிலிருந்து திடீரென்று அதிகமான வெப்பநிலை காணப்படும் பிரதேசங்களுக்கு பயணிப்பவர்களுக்கு ரிஸ்க் அதிகம்.

வெப்ப நிலை அதிகமாக காணப்படும் நாட்களில் அப்படிப்பட்ட பிரதேசங்களிலிருந்து உங்கள் உறவினர் உங்களை சந்திக்க வரக்கூடும்.

மாறுகின்ற சூழலை எதிர்கொள்ள குளிர்பிரதேசங்களிலிருந்து வருபவர்களுக்கு குறைந்தது ஒரு வார காலமாவது பிடிக்கும். அதுவரை வெளியிடங்களுக்கு செல்லாமல் நிறைய தண்ணீர் குடித்து உடலை தற்காத்துக்கொள்வது சிறந்தது.

தமிழில் : ஸ்ரீ வித்யா

(இக்கட்டுரையில் உள்ள குறிப்புகளை வழங்கியவர்- வே. இரா. ஹரி பாலாஜி, தேசிய பேரிடர் மேலாண்மை ஆலோசகர் www.haribalaji.com)

தொடர்பு கட்டுரை:

கோடை வெயிலை சமாளிக்க ஆண்களுக்கான சில டிப்ஸ்!

Add to
Shares
7
Comments
Share This
Add to
Shares
7
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக