பதிப்புகளில்

15 வயதில் கடத்தப்பட்டு விபச்சார விடுதியில் தள்ளப்பட்ட ரமாதேவி, இன்று பல பெண்களை பாலியல் கொடுமையில் இருந்து காக்கிறார்!

4th Apr 2018
Add to
Shares
664
Comments
Share This
Add to
Shares
664
Comments
Share

இவரது வாழ்க்கை ஒரு சாதாரண வாழ்க்கை அல்ல. அது அசாதாரண சூழல்கள் நிறைந்த வாழ்க்கை. இவரது உலகம் தலைகீழாக மாறியுள்ளது. ஆனாலும் அவர் மீண்டு எழுவதற்கான வலிமையைக் கண்டறிந்து அவர் காண விரும்பிய மாற்றமாக அவரே மாறினார்.

image


Change.org சேஞ்ச் மந்திராஸ், தி நியூஸ் மினிட் ஆகிய நிறுவனங்கள் ஏற்பாடு செய்திருந்த ’வணிக ரீதியான பாலியல் சுரண்டல்கள்’ எனும் தலைப்பில் நடந்த பட்டறைக்குச் சென்றபோது என்னுள் ஆயிரக்கணக்கான கேள்விகள் எழுந்தன.

குழந்தை கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது எவர் ஒருவருக்கும் துன்பத்தை அளிப்பதாகும். 27 வயதான ஒருவர் 16 வயது முதல் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை விவரித்தது மிகவும் வருத்தத்தை அளிப்பதாக இருந்தது.

ரமா தேவி தனக்குக் குழந்தைப் பருவத்திலேயே திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது குறித்தும் பாலியல் தொழிலாளியாக மாற்றுவதற்காக ஏமாற்றப்பட்டு எவ்வாறு கடத்தப்பட்டார் என்பது குறித்தும் விவரித்தார்.

”எனக்கு ஏற்பட்ட சம்பவம் வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது என்பதற்காகவே என்னுடைய கதையை நான் பகிர்ந்துகொள்கிறேன். மக்கள் இது குறித்து தெரிந்துகொண்டு எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கடத்துபவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அது பெண்களாகவேகூட இருக்கலாம்,” என்று தனது அனுபவங்களை பகிர்ந்துகொள்ளத் துவங்கினார்.

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் மூன்று மில்லியன் பெண்களும் குழந்தைகளும் கடத்தப்படுவதாக மதிப்பிடப்படுகிறது. இதில் 40 சதவீதம் பேர் சிறுமிகள். 1.2 மில்லியன் குழந்தைகள் விபச்சாரத்திற்கு கட்டாயப்படுத்தப்படுவதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் 2014-ம் ஆண்டின் அறிக்கை தெரிவிக்கிறது.

அவ்வாறு கடத்தப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட நூற்றுக்கணக்கான குழந்தைகளில் ரமாதேவியும் ஒருவர். இவர் இன்று ஆந்திரப்பிரதேசத்தின் அனந்தாபூர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த நகரமான கதிரி பகுதியில் 10 பெண்களுடன் இணைந்து கடத்தல் மற்றும் பாலியல் சுரண்டல்களின் ஆபத்துகள் குறித்து விழுப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

ஆரம்பகட்ட போராட்டங்கள்

ரமாவிற்கு அவரது பெற்றோர் திருமணம் செய்துவைத்தபோது அவரது வயது பதினான்கு மட்டுமே. ஓரு வருடத்தில் அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. திருமணத்திற்குப் பிறகு அவரது வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாகவே இருந்தது. தொடர்ந்து துன்புறுத்தப்பட்டார். அவரது புகுந்த வீட்டில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினர். அவரது கணவர் அவரை ஆதரிக்கவும் இல்லை கர்ப்ப காலத்தில் அவரை பராமரிக்கவும் இல்லை.

ரமா கருவுற்ற பிறகு சிறப்பான பரமாமரிப்பைப் பெறுவதற்காக பிறந்த வீட்டிற்குச் சென்றார். குழந்தை பிறந்ததும் அவரது கணவர் அவரது தாய் வீட்டிற்கு வந்து அவரை திரும்ப அழைத்து சென்றுவிட்டார். வன்முறைகள் தொடர்ந்தது.

ரமா மற்றும் அவரது குழந்தை இருப்பதால் வீட்டு வேலைகளை அதிகமாக செய்யவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதாக அவரது மாமியார் தொடர்ந்து புகார் செய்து வந்தார். அவரது கொடுமைகளை சகித்துக்கொள்ள இயலாததால் ரமா ஐந்து மாதங்களில் திரும்ப பிறந்த வீட்டிற்கே சென்றுவிட்டார்.

அந்த சமயத்தில் அவரது பெற்றோர் கடப்பா மாவட்டத்தில் உள்ள இரு செங்கல் சூளையில் தினக்கூலிகளாக பணிபுரியத் துவங்கியிருந்தனர். இதனால் ரமாவும் அவரது குழந்தையும் வீட்டில் தனியாக இருக்க நேரிட்டது. விரைவிலேயே அவரது வீட்டிற்கு அருகில் வசித்த ஒரு மாற்றுத்திறனாளியான புஷ்பாவுடன் நட்பு ஏற்பட்டது.

அதன் பிறகு இவ்விருவருக்கும் இரண்டு பெண்களுடனும் ஒரு ஆணுடனும் நட்பு ஏற்பட்டது.

”என்னுடைய பெற்றோர் வெளியே வேலைக்குச் சென்றதும் அவர்கள் எங்களுடன் வந்து பேசுவார்கள். அந்த இரண்டு பெண்களுக்கும் என் அம்மாவின் வயதிருக்கும். நான் அவர்களை நம்பினேன். ஒரு நாள் அவர்களுடன் திரைப்படத்திற்கு வருமாறு எங்களை அழைத்தனர். விரைவாக திரும்பிவிடுவோம் என உறுதியளித்தனர். நான் குழந்தையை வீட்டிலேயே விட்டுச் சென்றேன்,” என்ற ரமாவிற்கு இந்தச் சம்பவம் நடந்தபோது பதினைந்து வயதிருக்கும்.

இது மிகப்பெரிய துன்பத்தின் ஆரம்பப்புள்ளியாக இருக்கும் என்றோ அவரது குடும்பத்தை விட்டு பிரித்துவிடும் நிலை ஏற்படும் என்றோ அவர் அப்போது அறியவில்லை.

திரைப்பட இடைவேளையின் போது அவர்களுக்கு கொடுக்கப்பட்ட குளிர்பானத்தை அருந்தினர். அது மட்டுமே அவருடைய நினைவில் இருந்தது. சில நாட்களுக்குப் பிறகே இருவருக்கும் நினைவு திரும்பியது. அவர்கள் கண் விழித்தபோது மஹாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள பிவாண்டியில் இருந்த ஒரு விபச்சார விடுதியில் இருந்தனர்.

”புஷ்பாவும் நானும் ஒரு லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்டது எனக்கு பின்னர் தெரியவந்தது,” என்றார் ரமா.

கடத்தப்படுதல்

அதிர்ச்சியடைந்த ரமாவும் புஷ்பாவும் விபச்சார விடுதியில் இருந்த மேலாளர்களிடன் வீட்டிற்கு செல்ல அனுமதிக்குமாறு மன்றாடினர். ரமாவின் பெற்றோர் அவர்களை விற்றுவிட்டதாக அவர்களிடம் தெரிவித்தனர்.

இருவரும் விபச்சார விடுதி மேலாளர்கள் கூறியதை நம்ப மறுத்தனர். தங்களை வீட்டிற்கு அனுப்பிவிடுமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். அங்குள்ள பல சிறுமிகளிடமும் இதே போன்ற கதைகள் இருந்ததை இவர்கள் தெரிந்துகொண்டனர். அவர்களில் பெரும்பாலானோர் கடத்தப்பட்டு விபச்சாரத்திற்கு கட்டாயப்படுத்தப்பட்டிருந்தனர்.

”எங்களை அடித்தார்கள். சிறைப்படுத்தினார்கள். உணவு கொடுக்கவில்லை. என் குழந்தை பற்றியும் என் பெற்றோர்கள் பற்றியுமே என் சிந்தனை இருந்தது. அவர்களை எப்படியாவது சந்திக்க வேண்டும் என நினைத்தேன்,” என்று விவரித்தார் ரமா.

விடுதியின் மேலாளர்கள் ரமா மற்றும் புஷ்பாவின் நம்பிக்கையை தகர்த்த முயற்சித்தனர். அவர்களை துன்புறுத்தினர். இருந்தும் அவர்கள் மனம் தளரவில்லை. இருவரும் அங்கிருந்து தப்பித்துச் செல்வது குறித்து மற்ற சிறுமிகளுடன் பேசினர். இவர்களது திட்டத்தை மறைந்திருந்து கேட்ட ஒரு சிறுமி விடுதியின் மேலாளரிடம் இது குறித்து புகாரளித்தார்.

”என்னுடைய கண்களில் மிளகாய் விழுதை பூசினார்கள். என்னை சித்திரவதை செய்தனர்,” என்று நினைவுகூர்ந்தார்.

அத்தகைய மோசமான அனுபவம் ஓராண்டு வரை நீடித்தது. இறுதியாக அவர்கள் தொடர்ந்து போராடியதால் வேறு வழியின்றி அவர்களை சொந்த ஊரான அனந்தபூருக்கு திருப்பி அனுப்ப விடுதி மேலாளர்கள் தீர்மானித்தனர். இவர்கள் இருவரும் சேர்ந்து மற்றவர்களையும் போராட்டத்திற்கு தூண்டுவார்கள் என அஞ்சினார்கள்.

கடுமையான சூழலை எதிர்த்து போராட முன்வருதல்

ரமா வீடு திரும்பினார். அவரது பெற்றோருக்கு 1.25 லட்ச ரூபாய் கடன் சுமை ஏற்பட்டிருந்தது. அவரது மகளால் தனது தாயை அடையாளம் காண முடியவில்லை.

”என்னைத் தேடுவதற்காக என் பெற்றோர் அதிக பணம் கடன் வாங்கியிருந்தனர். என் மகளை சந்தித்தபோது நான் யார் என அவர் கேட்டார்,” 

என்று வருத்தம் தெரிவித்தார் ரமா. ரமா கடத்தப்பட்டபோது அவரது மகள் ஐந்து மாத குழந்தையாக இருந்தார். 

image


ரமா மெல்ல மெல்ல தனது மோசமான சூழலில் இருந்து வெளிவந்தார். பின்னர் கிராமப்புற மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு சங்கம் (REDS) என்கிற ஆந்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த அரசு சாரா நிறுவனத்தின் தொடர்பு கிடைத்தது. அவர்களது உதவியுடன் தன்னை கடத்தியவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்தார். ஆரம்பத்தில் போலீஸ் இந்த வழக்கில் கவனம் செலுத்தாததால் வழக்கு பதிவு செய்யப்படாமலேயே இருந்தது.

”என்னுடைய பகுதியில் என்னைப் போன்றே பல சிறுமிகள் கடத்தப்பட்டனர். சிறப்பான வாழ்க்கை, பணம், பணி போன்றவற்றை வழங்குவதாக வாக்களிப்பதைக் கண்டு சிலர் ஈர்க்கப்படுகின்றனர். இவர்கள் பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்தப்படுகின்றனர். வெளிநாடுகளுக்குக்கூட கடத்தப்படுகின்றனர்,” என்று ரமா விவரித்தார்.

ஒரு நேர்காணலுக்காக டிவி9 என்கிற பிராந்திய செய்தி தொலைக்காட்சியை அணுகினார். ஊடகங்களின் ஆதரவுடன் இறுதியில் போலீஸ் வழக்கு பதிவு செய்தது. நீதிமன்றத்தில் வழக்கு நான்காண்டுகள் வரை நீடித்தது. ஒரு தொகையை கொடுத்து சமரசம் செய்துகொள்ளவும் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர் பணத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.

“இந்த வலையில் பல பெண்கள் சிக்கிக்கொள்வதை நான் விரும்பவில்லை. எனக்கு நீதி கிடைக்கவேண்டும். கடத்தப்பட்டவர்களுக்கு தண்டனை கிடைக்கவேண்டும்.”

2016-ம் ஆண்டு அவர்கள் மூவரும் குற்றவாளிகள் என தண்டிக்கப்பட்டு ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

மாற்றத்தை ஊக்குவிப்பவர்

ரமாவின் போராட்டம் இத்துடன் முடியவில்லை. REDS-ன் தலைமை நிர்வாக அதிகாரியான (Chief Functionary Officer) சி பானுஜா மற்றும் போலீஸ் அதிகாரிகளின் உதவியுடன் பிவாண்டி சென்று 30 சிறுமிகளை மீட்டார்.

”நான் புர்கா அணிந்து பானுஜா அவர்களுடன் விபச்சார விடுதிக்குச் சென்றேன். நான் ஒரு குழந்தையை விற்க விரும்புவதாக பேச்சுவார்த்தையைத் துவங்கினேன். நாங்கள் மெல்ல அவர்களின் நம்பிக்கையைப் பெற்றோம். நாங்கள் போலீஸுடன் விபச்சார விடுதிக்குச் சென்று கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 30 பெண்களை மீட்டோம்,” என்றார் ரமா.

முறையான கல்வியும் வேலை வாய்ப்புகள் இல்லாததால் ஏழை மக்கள் எளிதாக பாதிக்கப்படுகின்றனர். மற்ற பெண்களுக்கு அதிகாரமளித்து கடத்தல் மற்றும் பாலியல் சுரண்டல்களின் ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுமே அவரது வாழ்க்கையின் நோக்கமாகும்.

அவரும் அவரது நோக்கமும் வெற்றியடைய வாழ்த்துவோம்!

ஆங்கில கட்டுரையாளர் : ஸ்ருதி கேடியா | தமிழில் : ஸ்ரீவித்யா

Add to
Shares
664
Comments
Share This
Add to
Shares
664
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக