தொழில்முனைவோருக்கு புதிய அனுபவம் தரும் ’இண்டெர்சிட்டி ஸ்டார்ட் அப் பயணம்’

  23rd Jun 2017
  • +0
  Share on
  close
  • +0
  Share on
  close
  Share on
  close

  கோயம்புத்தூரைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் குழுக்கள் இணைந்து, தொடக்க நிறுவன நிறுவனர்களுடன் அனுபவங்களை பகிந்து கொள்ளும் ’ஸ்டார்ட் அப் பயணம்’ (Startup Payanam) எனும் மூன்று நாள் பேருந்து பயணத்தை கோவையில், தொடங்கி ஈரோடு, சேலம், சென்னை வழியே திருச்சியில் முடிக்கின்றனர்.  

  இப்பயணம், முழுக்க முழுக்க மாணவ மற்றும் தொழில் முனைவோர்களுக்காகவே தொடங்கப்பட்ட விழிப்புணர்வு முயற்சியாகும். இன்றைய காலகட்டங்களில் ஆர்வமுள்ள பல தொழில்முனைவர்கள், சமூக வளைதளங்கள் மற்றும் ஆன்லைன் வெளியீடுகளில்தான் அதிக அளவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களைப் பற்றி கேட்டும், படித்தும் தெரிந்து கொள்கிறார்கள். உண்மையான ஸ்டார்ட் அப் பற்றிய முழு விவரங்களை அவர்களுக்கு அனுபவம் மூலமாக பெற்றுத்தருவதே இப்பயணத்தின் லட்சியம் ஆகும். தேசிய அளவில் வருடாவருடம் நடைப்பெறும் ‘ஜாக்ரிதி யாத்ரா’ ஐடியாவை பின்பற்றி உருவாக்கியதே ‘ஸ்டார்ட்-அப் பயணம்’ திட்டமாகும்.

  image


  கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஸ்டார்ட்-அப் பயணத்தின் முதல் பதிப்பை கோவையில் நடத்தினர். அது கோவைக்குள் இருக்கும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை பார்வையிடும் வாய்ப்பை அளித்தது. பின்னர் 2016 மே மாதம் ஊர்களுக்கிடையே ஆன ‘இண்டெர்சிட்டி பயணம்’ கோவையில் இருந்து பெங்களுருக்கு ஏற்பாடு செய்யப்பட்டு பல தொழில்முனைவோர்கள் அதில் கலந்து கொண்டனர். அதை அடுத்து ஜூலை மாதம் மதுரையில் ஸ்டார்ட்-அப் பயணம் நடந்தது. இதில் தொடக்க நிறுவன நிறுவனர்கள் மற்றும் சிஇஒ’க்கள் கலந்து கொண்டனர். 

  3 நாட்கள் | 6 வீல்கள் | 35 ஸ்டார்ட்-அப் தொழில்முனைவோர் | 45 பயணிகள்

  இந்த ஆண்டின் ‘இண்டெர்சிட்டி ஸ்டார்ட் அப் பயணம்’ 22-ம் தேதி கோவையில் தொடங்கி, 23 சென்னை அடைந்து, 24-ம் தேதி திருச்சியில் முடிவடைகிறது. பயண அட்டவணை:

  முதல் நாள்: 22.06.2017

  06:00 - ‘பட்டீஸ் கபே’, லட்சுமி மில்ஸ் ஜன்க்ஷன் 

  06:30 - தேநீர் அருந்தியவுடன் பயண புறப்பாடு 

  06:30 - 09:00 - கோவையில் இருந்து ஈரோடு பயணம்

  பயணத்தின் போது கலந்துரையாடல்

  1. அறிமுகம், பின் கோக்கோமேன் தலைவர் கெளதமன் உரை. 

  09:00 - 09:45: ஈரோடு அடைந்தவுடன் கொங்கு பொறியியல் கல்லூரி ட்ரஸ்டீ வெங்கடேஸ்வரனுடன் சந்திப்பு

  10:00-13:00 - ஈரோடில் இருந்து சேலம் பயணம் 

  பயணத்தில் NoFoodNoWaste நிறுவனர் பத்மனாபன் தன் அனுபவங்களை பகிர்தல்

  13:00-14:30 - சமூக ஆர்வலர் பியூஷ் மனீஷ் உடன் சந்திப்பு 

  14:30: பயணம் தொடரும்

  16:00-17:30- வசிஸ்டா தலைவர் ஜெயராமன் உடன் சந்திப்பு 

  17:30-23:00 - வலபாடியில் இருந்து சென்னை பயணம்

  பயணத்தில் கலந்துரையாடல், திரைப்படம் மற்றும் கேளிக்கை

  image


  இரண்டாம் நாள் : 23.06.2017

  07.00 - தேநீருடன் அன்றைய நாளின் துவக்கம்

  07.30 – 08.00 - ஸ்நாக் எக்ஸ்பெர்ட் சிஇஓ அருள் முருகனுடன் கலந்துரையாடல்

  08.00 – 08.30 - ஆய்வாளர் ஒரிசா பாலுவுடன் கலந்துரையாடல்

  08.30 – 09.30 - குறைந்த பட்ஜெட்டிலான ஒருங்கிணைந்த விவசாயம் மற்றும் கெனோவா ஃபார்ம்ஸ் பயணம் குறித்து கெனோவா இகோ ஃபார்ம்ஸின் ஸ்டாலின் காலிதாஸுடன் கலந்துரையாடல்.

  மைஹார்வெஸ்ட் நிறுவனரான அர்ச்சனா ஸ்டாலினுடன் கலந்துரையாடல்

  09.30 – 10.00 - ராஜாமோஹன் அவர்களுடன் ’புட்சட்னி’ பயணம், ஊடகத்துறையின் செயல்பாடு மற்றும் யூடுயூப் செயல்பாடு ஆகியவை குறித்த கலந்துரையாடல்

  10.00 – 10.30 - ஆசம் செஃப் தரப்பிலிருந்து காலை உணவு

  10.30 – 11.30 - EDI கிண்டியிலிருந்து வளசரவாக்கத்திலுள்ள அகரம் ஃபவுண்டேஷன் பயிற்சி மையத்திற்கு பயணம்

  பயணத்தின் போது: திட்டம் சரிபார்த்தல் மற்றும் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுதல், ஆசம் செஃப் நிறுவனர் ப்ரவீன் அவரது அனுபவம் குறித்து பேசுவார்

  11.30 – 13.30 - 1. சமூக நிறுவனங்கள் குறித்து அகரம் ஃபவுண்டேஷனின் ஜெயஸ்ரீயுடன் கலந்துரையாடல்

  2. சாய்கிங் நிறுவனத்தின் சுரேஷ் ராதாகிருஷ்ணனின் பயணம் குறித்த கலந்துரையாடல்

  3. லஞ்ச்பாக்ஸ் நிறுவனத்தின் மயில்வாகனம் அனுபவம் பகிர்தல்

  4. சர்ப்ரைஸ் ப்ளானர்ஸான the6.in நிறுவனத்தின் சக்திவேல் பயணம் குறித்த கலந்துரையாடல்

  5. கொலப்பசி நிறுவனத்தின் சந்தோஷ் பயணம் குறித்த கலந்துரையாடல்

  13.30 – 14.30 - வளசரவாக்கத்திலிருந்து நுங்கம்பாக்கத்திலுள்ள நேச்சுரல்ஸ் கார்ப்பரேட் அலுவலகத்திற்கு பயணம். பயணத்தின் போதே புத்துணர்ச்சிக்கான நேரம்.

  14.30 – 15.45 - நேச்சுரல்ஸ் கார்ப்பரேட் அலுவலகம்

  1. க்ரூம் சலூன் (நேச்சுரல்ஸ் சலூன், பேஜ்3, ஐயூர்) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ சிகே குமாரவேல் தொழில்முனைவு குறித்த கலந்துரையாடல்

  2. ப்ராண்ட் அவதார் & CBL சிஇஓ ஹேமசந்திரன் உடன் கலந்துரையாடல்

  3. டெலிபோர்ட் 360 சிஇஓ தரனீதரன் அனுபவங்களை பகிந்துகொள்வார்

  15.45 – 16.15 - நேச்சுரல்ஸ் கார்ப்பரேட் நுங்கம்பாக்கத்திலிருந்து கீழ்பாக்கத்திலுள்ள பால்சன்ஸ் க்ரூப்பின் கார்ப்பரேட் அலுவலகத்திற்கு பயணம். பயணத்தின் போதே வழிகாட்டுதல்.

  16.15 – 17.00 - ஃப்ரான்சைஸ் எக்ஸ்பெர்ட் மற்றும் க்ரூப் சிஇஓ பால்சன்ஸ் க்ரூப்பின் ப்ளெசிங்ஸ் மணிகண்டனுடன் கலந்துரையாடல். 

  17.00 – 17.30 - கீழ்ப்பாக்கத்திலிருந்து வேளர்ச்சேரி குப்பைக் கிடங்கிற்கு பயணம். Noise & Grains இணை நிறுவனர் மஹாவீர் பயணம் குறித்து பகிர்ந்துகொள்ளுதல்

  17.30 – 18.30 - க்ரீன் மேன் ஆஃப் இந்தியா –அப்துல் கனியுடன் சமூக தொழில்முனைவு மற்றும் கழிவு மேலாண்மையிலுள்ள வாய்ப்புகள் குறித்த கலந்துரையாடல்

  18.30 – 20.00 - பயணத்தின் போதான கற்றல்கள் :

  1. NASSCOM திரு. உதய் சங்கர் ஆலோசனை பகிர்ந்துகொள்ளுதல்

  2. சுஜித் குமார், தலைவர் மனிதவளம் இன்ஃபோசிஸ் மற்றும் ட்ரஸ்டீ மாற்றம் ஃபவுண்டேஷன் பயணங்களை பகிர்ந்துகொள்ளுதல்

  3. டீம் ஸ்மைல் சேட்டை அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுதல்

  4. ராதா மணாளன் தனது தொழில் பயணம் குறித்தும் ஊடகத் துறையில் இருக்கும் வாய்ப்புகள் குறித்தும் பகிர்ந்துகொள்ளுதல்

  5. ஊடகத் துறை குறித்து அபிஷேக் ராஜா உடன் கலந்துரையாடல்

  20.00 – 22.00 - சாம் பால் – பிரபலர், பால்சன்ஸ் குரூப்பின் எம்டி, ஆர்வலர் – கலந்துரையாடல். 

  22.00 – திருச்சிக்கு பயணித்து அதிகாலை வந்தடையும்.

  image


  மூன்றாம் நாள் : 24.06.2017

  08.00 - தேநீருடன் அன்றைய நாளின் துவக்கம்

  08.30 – 9.30 - தொழிலதிபர் மற்றும் கேர் க்ரூப் நிறுவனங்களின் நிறுவனர் ப்ரிதிவ்சந்துடன் கலந்துரையாடல்

  09.30 – 10.00 - காலை உணவு

  10.30 – 11.00 - கேர் கல்லூரியிலிருந்து அன்சா ஹெர்ப்ஸ் மற்றும் ஜங்கிள் ஜுவல்ஸிற்கு பயணம் துவங்கும்

  11.00 – 12.00 - அன்சா ஹெர்ப்ஸ் மற்றும் ஜங்கிள் ஜுவல்ஸ் பயணம் குறித்து பாலா முரளி மற்றும் ஜானியுடன் கலந்துரையாடல். புத்துணர்ச்சிக்கு ஹெர்பல் தேநீர்.

  12.30 – 13.00 - அன்சா ஹெர்ப்ஸிலிருந்து ஹேப்பி ஹென்ஸ்க்கு பயணம். பயணம் செய்துகொண்டே வழிகாட்டுதலும் நடைபெறும்.

  13.00 – 14.30 - நிலத்தை பார்வையிட்டவாறே ஹேப்பி ஹென்ஸைச் சேர்ந்த அஷோக்குடன் கலந்துரையாடல் மற்றும் புத்துணர்ச்சிக்கான நேரம்

  14.30 – 17.30 - ஹேப்பி ஹென்ஸிலிருந்து சேனாதிபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்திற்கு பயணம். 

  1. பயணத்தின் போதே வழிகாட்டுதல்

  2. திட்டத்தை சரிபார்த்தல்

  3. அனுபவங்களை பகிந்துகொள்ளும் வீடியோக்கள்

  17.30 – 18.30 - கால்நடை வளர்ப்பு மற்றும் எவ்வாறு அது விவசாயத்துடன் தொடர்புடையது என்பது குறித்து SKCRF ட்ரஸ்டீ கார்த்திகேய சிவசேனாபதி பண்ணையில் பயணித்தவாறே கலந்துரையாடல்

  18.30 – 20.30 - SKCRF-லிருந்து கோயமுத்தூர் காந்திபுரத்திற்கு பயணம்

  20.30 - புகைப்படம் எடுத்தல் மற்றும் நன்றியுரையுடன் இந்த எடிஷனின் நிறைவுப் பகுதி  • +0
  Share on
  close
  • +0
  Share on
  close
  Share on
  close
  Report an issue
  Authors

  Related Tags

  Our Partner Events

  Hustle across India