ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங்கை விட ஐகியூ அதிகம்: கவனம் ஈர்க்கும் 8 வயது சிறுமி!

மெக்சிகோ நாட்டின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் இடம்!
12 CLAPS
0

உலகின் புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர்கள் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்கினை விட அதாரா பெரெஸ் என்ற சிறுமிக்கு 162 ஐக்யூ அளவு உள்ளது சமீபத்தில் தெரிய வந்தது.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங் ஐக்யூ 160 மட்டுமே உள்ள நிலையில், அடாராவிற்கு 162 இருக்கிறது தெரியவந்துள்ளது. ஆனால் சிறுமிக்கு ஆஸ்பெர்கர்ஸ் நோய்க்குறி (ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம்) இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நோய் அறிகுறி அவர் 3 வயதாக இருக்கும்போது கண்டறியப்பட்டது.

இந்த நோய் ஆனது ஒரு வளர்ச்சி கோளாறு ஆகும். இந்த நோய் உள்ள நபர்கள் சமூக தொடர்புகள் அல்லது சொற்கள் புரிவதில் கஷ்டப்படுவார்கள். இந்த நோய் காரணமாக சிறுமி பள்ளிக்கூடம், விளையாடும் போது நண்பர்கள் போன்றவர்களிடம் இருந்து பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டுள்ளார். இதனால் பள்ளி செல்வதில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளார்.

என்றாலும் சிறுமியின் புத்திசாலித்தனத்தை கண்காணித்த அவரின் தாய் சான்செஸ், சிறுமி அதாராவை சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார். அதன்படி, மனநல மருத்துவரிடம் சோதனை செய்தபோதுதான் சிறுமி அதாராவிற்கு IQ லெவல் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டது.

இதன்பின், தனித்துவமாக திறன்களைக் கொண்ட மாணவர்கள் கற்கும் வகுப்பில் சேர்ந்து சிறுமி அதாரா தனது படிப்பைத் தொடர்ந்தார்.

அந்த சிறப்பு பள்ளியிலேயே உயர்நிலைக் கல்வி வரை முடித்த அதாராவுக்கு அப்போது எட்டு வயது. தொடர்ந்து இரண்டு ஆன்லைன் பட்டங்களையும் முடித்ததுடன் ‘Do Not Give Up’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றையும் எழுதியுள்ளார். இதற்கிடையேதான் ஃபோர்ப்ஸ் மெக்ஸிகோவின் 100 சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் அதாரா இடம்பெற்று இருக்கிறார்.

தனது ஐகியூ திறனால் அறியப்படும் அதாரா, தனது புத்திசாலித்தனத்தால் மாற்றுத் திறனாளிகளின் உணர்ச்சிகளைக் கண்காணித்து விளைவுகளை முன்கூட்டியே தடுக்கும் ஒரு புதிய ஸ்மார்ட் பிரேஸ்லெட்டை ஒன்றை கண்டுபிடித்து வருகிறார். இது தற்போது இறுதிக்கட்டத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

மேலும், மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர் என்றாலும் தனது கல்விக்காக அமெரிக்கா செல்ல இருக்கிறார். அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தேர்வுக்குத் தயாராகும் வகையில் தற்போது ஆங்கிலம் பயிற்சி எடுத்தும் வருகிறார் சிறுமி அதாரா. தனது கனவாக வானியல் இயற்பியல் ஆராய்ச்சியை தேர்ந்தெடுக்க விரும்பும்பவதாக தெரிவித்துளளார்.

தொகுப்பு: மலையரசு