அலுவலகம் வரச் சொன்ன நிறுவனம்: ஒரேநேரத்தில் 800 ஊழியர்கள் ராஜினாமா!

By Durga
நிறுவனம் ஊழியர்களை அலுவலகத்துக்கு அழைத்த காரணத்தால் ஒரே நேரத்தில் சுமார் 800 ஊழியர்கள் தங்கள் பணியை ராஜினாமா செய்தனர்.
2 CLAPS
0

கொரோனா தொற்று பரவல் என்பது பல்வேறு புதிய முறைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த காலக்கட்டத்தில் மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் வகுப்பு என்ற முறை தொடங்கப்பட்டது.

இன்றளவும் இந்த ஆன்லைன் வகுப்பு நடைமுறையில் இருக்கிறது. குறிப்பாக கூடுதலாக கல்வி மற்றும் பிற மொழி கற்றுக் கொள்ள விரும்புபவர்களுக்கு ஆன்லைன் கல்வி வகுப்பு என்பது பெரிதளவு கைக்கொடுக்கிறது. இதில் பிரதான ஒன்று என்றால் வீட்டில் இருந்தே வேலை (வொர்க் ஃப்ரம் ஹோம்) திட்டமாகும். ஆண்டுக் கணக்கில் பல்வேறு நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே வேலை என்ற திட்டத்தை வழங்கி வந்தது.

கொரோனா தொற்று முடிவுக்கு வரும் இந்த நிலையில், ஊழியர்களை அலுவலகத்துக்கு நிறுவனங்கள் அழைக்கத் தொடங்கியுள்ளது. இருப்பினும், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றியதால் பெரும்பாலானோர் அலுவலகத்துக்குச் செல்ல விருப்பம் காட்டவில்லை.

கூகுள், ஃபேஸ்புக், ஆப்பிளில் தொடங்கி பல்வேறு நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை அலுவலகத்துக்கு திரும்ப அழைத்து வருகிறது. ஊழியர்கள் அலுவலகத்துக்கு வருவதற்கு பல்வேறு சலுகைகளையும் நிறுவனங்கள் வழங்குகிறது. இருப்பினும் பெரும்பாலான ஊழியர்கள் அலுவலகத்துக்கு வந்து வேலை பார்ப்பதில் விருப்பம் காட்டவில்லை.

இதை பிரதபலிக்கும் நிகழ்வு ஒன்று அரங்கேறி இருக்கிறது. WhiteHat Jr என்ற நிறுவனம் தங்களது ஊழியர்களை "ரிட்டர்ன் டூ ஆஃபிஸ்" (Return To Office) அதாவது அலுவலகத்துக்கு திரும்பும்படி கேட்டுக் கொண்டுள்ளது.

WhiteHat Jr அலுவலகங்கள் குருகிராம், மும்பை மற்றும் பெங்களூருவில் உள்ளன. மார்ச் 18 ஆம் தேதியன்று ரிட்டர்ன் டூ ஆஃபிஸ் திட்டத்துக்கான கொள்கையை நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியது. மேலும், அதில் ஒருமாத காலத்துக்குள் ஊழியர்கள் அலுவலகத்துக்கு திரும்ப வேண்டும் என அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து,

கடந்த இரண்டு வாரத்தில் சுமார் 800 ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற முடியாது என தங்களது பணியை ராஜினாமா செய்துள்ளனர்.

'ரிட்டர்ன் டு ஆஃபிஸ்' திட்டமானது நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதால் செலவுக் குறைப்பு நடவடிக்கையாக இது இருக்கலாம் என முன்னாள் ஊழியர் குறிப்பிட்டுள்ளார்.

நிறுவனத்தின் பெயருக்கு கலங்கம் விளைவிக்காமல் "ரிட்டரன் டூ ஆஃபிஸ்" என்ற திட்டத்தை செயல்படுத்தி பலரை ராஜினாமா செய்ய நிறுவனம் வழிவகை செய்ததாக கூறப்படுகிறது.

சேல்ஸ், கோடிங், கணிதக் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள ஊழியர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இந்த ராஜினாமாக்கள் தொடரும் என கணிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

ராஜினாமா செய்த ஊழியர்களில் ஒருவர் Inc42 மூலம் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். அதில்,

சிலருக்கு குழந்தைகள் உள்ளனர், சிலருக்கு வயதான மற்றும் நோய்வாய்ப்பட்ட பெற்றோர்கள் உள்ளனர், மற்றவர்களுக்கு வேறு பொறுப்புகள் உள்ளன. இவ்வளவு குறுகிய காலத்தில் ஊழியர்களை திரும்ப அழைப்பது சரியல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு ஆண்டுகளாக சொந்த ஊரில் இருந்து வேலை பார்க்கும் போது ஊதியம் சரியாக இருந்திருக்கும் எனவும் திடீரென வேறு மாநிலங்களில் உள்ள அலுவலகத்துக்கு அழைக்கும் பட்சத்தில் நிறுவனங்கள் ஊழியர்களின் வாழ்க்கை செலவுக்கு ஏற்றபடி ஊதியத்தை திருத்த வேண்டும் என்ற எண்ணம் ஊழியர்களிடம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

Latest

Updates from around the world