பதிப்புகளில்

தொண்டு நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கும் ஐஐடியின் முன்னாள் மாணவர்கள்

siva tamilselva
24th Sep 2015
Add to
Shares
1
Comments
Share This
Add to
Shares
1
Comments
Share

மணிப்பூரில் உள்ள கைவினை கலைஞர்களை, மூங்கில்களைப் பயன்படுத்தி சைக்கிள் பிரேம்கள் தயார் செய்யும் வேலையில் ஈடுபடுத்துகிறார் சவுத் ஏசியன் பாம்பூ பவுன்டேஷன் (South Asian Bamboo Foundation -SABF) நிறுவனர் காமேஷ் சலம். சைக்கிள்கள் விற்பனையோடு, சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் பசுமைப் பொருளான மூங்கில் பயன்பாட்டையும் ஊக்குவிக்கிறது எஸ்ஏபிஎப். அதன் செயல்பாடு சிறப்பாக அமைய, சமூக நன்மைக்கான ஆலோசனை அமைப்பு (Consulting for Social Good - CSG) தலையிட்டு உதவுகிறது. சிஎஸ்ஜியின் இணை நிறுவனர் ஷிவா தவான் தங்களது பங்களிப்பு குறித்து பின்வருமாறு விளக்குகிறார்.

உலக அளவில் வெற்றி பெற்ற இது போன்ற மாதிரிகள் (successful models) குறித்து ஆய்வு செய்தோம். மூங்கில் தொழில்நுட்பத்தில் தேர்ந்த நிபுணரான பேராசிரியர் வி.எம்.சாரியார் (பயிற்றுனர், ஊரக மேம்பாடு மற்றும் தொழில் நுட்ப மையம், ஐஐடி டெல்லி) உடன் விவாதித்தோம். மூங்கில் பொருட்களை வைத்து வருமானம் பெறும் வர்த்தகம் ஒன்றை முன்வைத்தோம். சுழற்சி பகிர்மான அடிப்படையில் (cycle sharing basis) இயங்கும் முன்வைப்பு அது. இதற்கான விற்பனை அரங்குகளை அமைக்க தாஜ்மஹால் மற்றும் அது போன்ற தொன்மையான பகுதிகளைத் தேர்வு செய்தோம். இது தொடர்பாக இந்திய தொல்பொருள் துறையிடம் திட்ட முன்வரைவு ஒன்றையும் கொடுத்திருக்கிறோம். இது தொடர்பாக உத்தரப் பிரதேச மாநில அரசுடனும் பேசி வருகிறோம்.

சிஎஸ்ஜி குழு

சிஎஸ்ஜி குழு


“மூங்கில் பொருட்களை விற்பனை செய்வதற்கான இடத்தை கண்டறிய அவர்கள் எனக்கு உதவி செய்கின்றனர். இந்த உலகிலும், உலகைச் சுற்றிலும் நிகழும் விஷயங்களை அறிந்த இளம் அறிவாளிகள் அவர்கள். இன்றைய இளைஞர்கள் என்ன விரும்புகின்றனர் என்பது தொடர்பாக அவர்களால் எங்களுக்கு வழிகாட்ட முடிகிறது. அவர்கள் சொல்வது இதற்கு முன்பு நாங்கள் அறியாதது. தனித்துவமானது. நிதி திரட்டுவதிலும், எங்கள் பொருட்களை நுகர்வோரிடம் கொண்டு சேர்ப்பதிலும் அவர்கள் எங்களுக்கு உதவி இருக்கின்றனர்” என்று தான் பெற்ற அனுபவத்தை எங்களிடம் விளக்குகிறார் காமேஷ்.

அவர்களின் கதை

2014 ஜனவரியில் ஷிவா தவானும், தேவ் பிரியமும் சமூக நன்மைக்கான ஆலோசனை அமைப்பு (Consulting for Social Good –CSG) ஒன்றை நிறுவினர். அப்போது அவர்கள் டெல்லி ஐஐடியில் படித்துக் கொண்டிருந்தனர்.

சிஎஸ்ஜியை தொடங்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி உருவானது என்பது பற்றி ஷிவா சொல்லும் போது, “சிஎஸ்ஜி பற்றிய எண்ணம் எங்களுக்கு வருவதற்கு முன்பு நாங்கள் இருவரும் நிறையத் தொண்டு நிறுவனங்களில் (NGO) பணியாற்றிக் கொண்டிருந்தோம். என்ஜிஓ- மாணவர் கூட்டணி என்பது எப்போதுமே திறனற்றதாகவே இருக்கும் என்று உணர்ந்தோம். இந்த எண்ணத்தை நாங்கள் இருவரும் எங்களுக்குள் அடிக்கடி பரிமாறிக் கொண்டோம். ஒரு மாணவருடைய செயல்பாட்டை குறிப்பான ஒன்றில் செலுத்தும் போதும் அவரது தொழில் நுட்பத் திறனையும் நிபுணத்துவத்தையும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடியும் போதும்தான், சமூகத்திற்கான அவரது பங்களிப்பு முழுமையாக வெளிவரும்.” என்கிறார்.

இதற்கான மற்றொரு காரணத்தையும் சொல்கிறார் தேவ்,

"2012 மற்றும் 2013 கோடையில், என்ஜிஓக்களில் பணியாற்றிய மாணவர்களிடம் உரையாடிய போது, எனக்கு ஒரு விஷயம் புரிந்தது. மாணவர்களின் அனுபவம் செழுமைப்படுத்தப்படவில்லை. இதனால் அவர்களின் பணி, சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறைவுதான் என்று தெரிந்தது. என்ஜிஓக்களின் செயல்பாடுகளில் மாற்றமும், மாணவர்களின் திறன் வளர்ப்பும் ஒரு அவசரத் தேவை என்பதைப் புரிந்து கொண்டேன்."

சிஎஸ்ஜியின் நோக்கம்

பெருநிறுவன ஆலோசகர்கள் மற்றும் மாணவர்களின் நிபுணத்துவம் மற்றும் திறனைப் பயன்படுத்தி ஒரு இலவச இயங்குமுறையை உருவாக்குவதுதான் சிஎஸ்ஜியின் நோக்கம். என்ஜிஓக்கள் மற்றும் சமூக நிறுவனங்களின் செயல்பாட்டை மேம்படுத்துவதன் மூலமும் நிலையான நிதி ஆதாரத்திற்கான உத்தரவாதத்தை ஏற்படுத்துவதன் மூலமும் அவர்கள் இதைச் சாதிக்க விரும்புகின்றனர்.

தேவ் மேலும் விளக்கும் போது, “நாங்கள் அவர்களுக்கு முடிவெடுப்பதில் உதவி செய்கிறோம். தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் புள்ளி விபர ஆய்வுகளின் அடிப்படையில் நிறுவனங்களுக்கு இந்த உதவியை நாங்கள் செய்கிறோம். மற்றொரு திட்டத்தையும் செயல்படுத்தியிருக்கிறோம். நிறுவனத்திற்குத் தேவையான நிதி மற்றும் வர்த்தகத் தொடர்புகளை ஏற்படுத்த மாணவர்களை களத்தில் இறக்கும் திட்டம் அது.”

சிஎஸ்ஜி ஆரம்பித்ததில் இருந்து, அதன் உறுப்பினர்கள், ஏராளமான சமூக நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். டெல்லி ஐஐடியின் மூன்றாமாண்டு சிவில் இன்ஜினியரிங் மாணவரான, பிரியால் மோத்வானி, 'உறவு' என்ற அமைப்புடன் பணியாற்றி வருகிறார். கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பு மற்றும் சம்பாதிப்பதற்குறிய வழி வகைகளை ஏற்படுத்தும் திட்டத்தை ‘உறவு’ செயல்படுத்தி வருகிறது. இதற்காக அந்த அமைப்பு பல்வேறு விதமான சமூகப் பிரமுகர்கள், அரசு மற்றும் வர்த்தக நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. மற்றொரு உறுப்பினர் சுக்ரிதி கோயல். மேலாண்மைப் படிப்பில் இளநிலை மாணவர். வணிகப்படிப்புகளுக்கான சாகீத் சுகதேவ் கல்லூரியில் (Shaheed Sukhdev College of Business Studies - CBS) படிக்கிறார். தற்போது இவர் அரோஹன் லேர்னிங் சென்ட்டர் ஃபவுண்டேஷனுடன் (Aarohan Learning Centre Foundation) ஒரு திட்டப்பணியில் ஈடுபட்டுள்ளார். பீப்பிள் ஃபார் பேரிட்டி (People for Parity), சேவ் தி சில்ட்ரன் (Save the Children), யூத் ஃபார் சேவா (Youth for Seva) ஆகியவை சிஎஸ்ஜி இணைந்து பணியாற்றும் நிறுவனங்களில் ஒரு சில.

தேவ் வயது 23. ஷிவாவுக்கு 22 வயதுதான். இவர்கள் இருவரும் என்ஜிஓக்கள் மற்றும் சமூக நிறுவனங்களுடன் செய்யும் இந்தப் பணியை முழு நேர வேலையாகக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் உள்ள முன்னணி வணிக ஆலோசனை நிறுவனங்களில் ஒன்றாக இவர்களது சிஎஸ்ஜி இடம் பிடித்துள்ளது.

image


தேவ், ஷிவா ஆகிய இருவரும் இனி கல்லூரி மாணவர்கள் இல்லை. கல்லூரி நாட்களைப் போல அவர்களால் தங்களது நேரத்தை சொகுசாகக் கழிக்க முடியாது. அவர்களிடம் சிஎஸ்ஜி இன்னும் பலமாகப் போய்க் கொண்டிருக்கிறதா? என்று கேட்டால், அழுத்தம் திருத்தமாக 'ஆமாம்' என்று சொல்கிறார்கள்.

“சிஎஸ்ஜி யின் முக்கிய அணி, மாணவர்கள்தான். அவர்கள்தான் அமைப்பின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்கின்றனர். சிஎஸ்ஜியின் பணிகளுக்கிடையில் அக்கம்பக்கமாக, ஆளெடுப்பும் நடக்கிறது. ஆளெடுப்புக்கு கண்டிப்பான அணுகுமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் புதிய தலைவர் நியமிக்கப்படுவார். மாணவர்களின் மையக் குழு ஒன்றும் அமைக்கப்படுகிறது. இவர்கள்தான் திட்டங்களை செயல்படுத்துகின்றனர். ஆலோசகர்களுக்கு வழிகாட்டிகளாக செயல்படுகின்றனர். கல்லூரிகளை விட்டு வெளியேறி பெருநிறுவன உலகில் அடியெடுத்து வைத்த மாணவர்கள் ஈடுபாட்டுடன் செயல்படுவதால் ஆலோசகர்கள் குழு மேலும் மேலும் விரிவடைகிறது.” என விவரிக்கிறார் தேவ்.

மாணவர் அணியின் முறையான செயல்பாட்டை நமது பங்களிப்பு உறுதி செய்கிறது. வழிகாட்டிகளின் வெற்றிகரமான ஈடுபாட்டையும், வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்ததை விட திருப்திகரமாக வேலையை முடித்துக் கொடுப்பதையும் அது உறுதி செய்கிறது. இவை அனைத்தும் வார இறுதிக் கூட்டங்களிலும், ஒரு வாரம் விட்டு ஒருவாரம் நடைபெறும் வாடிக்கையாளர்களுடனான சந்திப்புகளிலும் முடிவு செய்யப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன.

வளங்களும் சவால்களும்

”நிதியைப் பொருத்தவரையில் இப்போது வரையில் நாங்களேதான் திரட்ட வேண்டியிருக்கிறது” என்கிறார் தேவ். தங்களது நிறுவனத்தை போதுமான நிதி பலமுள்ள நிறுவனமாக மாற்ற வேண்டுமெனில், நிதி வழங்கும் பங்குதாரர்கள் தேவைப்படுவதாக அவர் கூறுகிறார். ஆனால் சிஎஸ்ஜி தனது சொந்த பலத்தில் நிற்க வேண்டும் என்பதுதான் நீண்ட கால திட்டம்" என்கிறார் ஷிவா.

மாணவர் குழுவுக்கு பயிற்சி அளிப்பதும், திறனை மேம்படுத்துவதும்தான் தங்களுக்கு மிகப்பெரிய சவாலான விஷயம் என்கிறார் தேவ். ஆண்டுதோறும் புதிய ஆளெடுப்பு நடக்கிறது. பட்டப் படிப்பை முடித்த மாணவர்கள் வேலைக்கு வருகிறார்கள். அந்தக் கூட்டத்திற்கும் அறிவுப் பரிமாற்றம் மற்றும் திறன் மேம்பாட்டு அமர்வுகளை உறுதி செய்வதற்கும் இடையே ஒரு சமநிலையை ஏற்படுத்த வேண்டியது அவசியமாயிருக்கிறது.

ஆலோசனை வழங்குவது மற்றும் உலகின் உண்மையான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது போன்ற அனுபவங்கள் பொதுவாக மாணவர்கள் மத்தியில் ஒரு உற்சாகத்தைக் கொடுப்பதாக தேவும், ஷிவாவும் கூறுகின்றனர். உலகை உச்சியில் இருந்து பார்ப்பது அவர்களின் கண்களைத் திறக்கிறது. அவர்களுக்கு எந்த தொழிலைத் தேர்வு செய்யலாம் என்பதற்கான தகவல்களும் கிடைக்கின்றன. தங்களது பணியில் மேலும் நிறைய தன்னார்வத் தொண்டர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என தேவும் ஷிவாவும் விரும்புகின்றனர். அந்தத் தன்னார்வத் தொண்டர்கள் சமூக மற்றும் பெரு நிறுவன வெளியில் நல்ல அனுபவம் பெற்றவர்களாக இருப்பது அவசியம்.

சின்னச் சின்ன என்ஜிஓக்கள் மற்றும் புதிதாகத் தொடங்கும் சமூக அமைப்புகளுக்காகவே ‘டால்பெர்க்’ (Dalberg) ஒன்றை உருவாக்குவதுதான் இந்த இரட்டையர்களின் மிகப்பெரிய கனவு. இந்தியாவின் முன்னேற்றம் தொடர்பான பிரச்சனைகளை கையாளும் அந்த அமைப்பில் நிபுணர்களும் மாணவர்களும் இணைந்திருப்பார்கள்.

Add to
Shares
1
Comments
Share This
Add to
Shares
1
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக