பதிப்புகளில்

சிறு வணிகங்கள் பின்பற்ற வேண்டிய மார்கெட்டிங் உத்திகள்!

13th Oct 2017
Add to
Shares
200
Comments
Share This
Add to
Shares
200
Comments
Share

விளம்பரங்கள் அதிகரித்து வரும் இன்றைய சூழலில் சிறு வணிகங்கள் இவற்றைத் தாண்டி தங்களை சந்தைப்படுத்திக்கொள்வது சிரமமான காரியமாகவே உள்ளது. டிவிக்களில் விளம்பரம் செய்யப்படுவது போதாதென்று இன்று சமூக ஊடகங்களில் விளம்பரங்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் சாதாரணமாக உருவாக்கப்படும் விளம்பரம் தனித்துத் தெரியாமல் போய்விடுவதற்கான வாய்ப்புகளே அதிகம்.

சமூக ஊடக தளங்களின் சமீபத்திய அம்சங்களையும் வாடிக்கையாளர்களுடன் தொடர்ந்து இணைப்பில் இருக்க பின்பற்றப்படும் புதிய மாதிரிகளையும் மனதில் கொண்டு சிறு வணிகங்கள் தற்போதைய சூழலில் பின்பற்றக்கூடிய சிரமமில்லாத சில மார்க்கெட்டிங் உத்திகளை பார்க்கலாம்:

image


காட்சிப்படுத்தும் உத்தியை சீரமைக்கவும்

சமூக ஊடகங்களில் அற்புதமான காட்சிகளைக் கொண்டுதான் கவனத்தை ஈர்க்க முடியும். நிலையாக படங்களை காட்சிப்படுத்துவதிலிருந்து மாறவேண்டும். தினமும் 500 மில்லியன் பயனர்கள் ஃபேஸ்புக் வீடியோக்களை பார்ப்பதாகவும் ஒவ்வொருநாளும் ஒட்டுமொத்தமாக 100 மில்லியன் மணிநேரம் வீடியோக்கள் பார்க்கப்படுவதாகவும் ஃபேஸ்புக் தெரிவிக்கிறது. ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் லைவ் ஒளிபரப்புகளும் உங்களது தகவல் தொகுப்பை சிறப்பாக முன்னிலைப்படுத்திக் காட்டும். Gif மற்றும் meme நம்பமுடியாத அளவிற்கு பகிர்ந்துகொள்ளப்படுகிறது. ஒரு நிலையான காட்சிப்படுத்தும் உத்திதான் உங்களது வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் என்பது தெளிவாகிறது.

மொபைல் வாயிலாக நுகர்வோருடன் தொடர்பில் இருக்கிறீர்களா?

நுகர்வோர், குறிப்பாக வளர்ந்து வரும் பொருளாதார சூழலில் இருக்கும் நுகர்வோர் பெரும்பாலும் தங்களது ஸ்மார்ட்ஃபோன் வாயிலாகவே உங்களது ப்ராண்டுடன் தொடர்பில் இருப்பார்கள். உங்களது வலைதளம், சமூக ஊடகம், ப்ளாக், பாட்கேஸ்ட்ஸ் (podcasts) போன்றவை மொபைல் வாயிலாக தொடர்பில் இருக்கும் விதத்தில் அமைக்கப்படவில்லை யெனில் நீங்கள் பல வாடிக்கையாளர்களைக் கவரும் வாய்ப்பை இழக்கிறீர்கள் எனலாம்.

தற்போது மொபைல் மார்கெட்டிங் அதிக பயனுள்ளது என்பது நிரூபனமான ஒன்று. ”பயனர்களின் தலையீடு அதிகமின்றி தானாவே செயல்படும் விதத்திலான மொபைல் அனுபவம், சுவாரஸ்மான அனிமேட் செய்யப்பட்ட காட்சிகள், நுகர்வோரின் இருப்பிடம் அல்லது நடவடிக்கைகள் சார்ந்த விளம்பரங்கள் போன்ற யோசனைகள் நுகர்வோரை அணுகுவதற்கான புதிய வழிமுறைகளாக பார்க்கப்படுகிறது. மொபைல் வீடியோ விளம்பரங்களுக்காக செலவு செய்யப்படும் தொகை 2017-ம் ஆண்டு இறுதிக்குள் 6 பில்லியன் டாலரைவிட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 2017-ம் ஆண்டில் ஊடகங்கள் வாயிலான மார்கெட்டிங்கில் மொபைல் மார்க்கெட்டிங்கின் பங்கு அதிகரிக்கக்கூடும்," என Adage India தெரிவிக்கிறது.

ப்ளாக் சிறப்பான தேர்வுதான்

எண்ணற்ற பயனர்களில் குறைவானவர்களின் கவனத்தையே ஈர்க்கமுடியும் என்று சொல்லப்பட்டாலும் ப்ளாக்கை முற்றிலும் ஒதுக்கவேண்டிய அவசியமில்லை. உங்களது ப்ராண்ட் குறித்த சிறப்பம்சங்களை உங்களுக்கு சொந்தமான தளத்தில் வெளியிட ப்ளாக் உதவும். ஏற்கெனவே இணைப்பில் இருக்கும் ஒரு பார்வையாளரை ஆழ்ந்த நுண்ணறிவு, செய்திகள், கருத்துக்கள் போன்ற பகிர்ந்துகொள்ளக்கூடிய தகவல்கள் வாயிலாக கவனத்தை ஈர்க்கலாம். இதை முறையாகச் செய்தால் வெற்றிகரமான நிபுணத்துவம் பெற்ற ப்ராண்ட் என்கிற அங்கீகாரம் உங்களது ப்ராண்டிற்குக் கிடைக்கும்.

தேடல் தொழில்நுட்பம் மற்றும் கண்டறியும் கண்ணோட்டம் ஆகியவற்றைச் சார்ந்து ப்ளாக் செயல்படுகிறது. தேடல் இன்ஜின் முடிவுகள் சமீபத்திய ஃபரெஷ் தகவல்களுடன் இருக்கும். அடிக்கடி உங்களது புதிய தகவல்கள் பார்வையாளர்கள் கண்ணில் படுவதற்கு வாய்ப்பாக அமையும். மேலும் இவை கீவேர்ட் மார்கெட்டிங்கிற்கான அனைத்து தேவைகளுக்குமான தீர்வாக உள்ளது. இதனால் எளிதாக கவனத்தை ஈர்க்கும்.

நிறுவனத்திற்கு வெளியிலிருந்து சேவையை பெற்றுக்கொள்ளுதல்

புதிய தொழிநுட்பங்கள் மற்றும் திறன்களுடன் இன்று மார்கெட்டிங் என்பது ஒரு இக்கட்டான சூழலில் உள்ளது. ஒவ்வொன்றிற்கும் சிறப்புத் திறன்களும் தொழில்நுட்பப் புரிதலும் தேவைப்படுகிறது. இன்றைய சந்தையில் காணப்படும் ஒவ்வொரு மார்கெட்டிங் உத்திகளையும் கவனிக்க ஒரு தனிப்பட்ட முழு நேர ஊழியரை சிறு வணிகங்கள் பணியிலமர்த்துவது சாத்தியமில்லாத ஒன்று. நிறுவனர்களும் தலைவர்களும் மார்கெட்டிங் பின்னணி இல்லாதவர்களாக இருக்கும் பட்சத்தில் இதைக் கையாள்வது மிகவும் கடினமான செயலாக இருக்கும். இதனால் முக்கியத் தகவல்களை வழங்குவது தகுதியற்ற அல்லது சீரற்ற முறையில் செயல்படுத்தப்பட வழிவகுக்கிறது.

சமீப காலமாக மார்க்கெட்டிங்கை நிறுவனங்களுக்குள்ளாகவே கையாள முயற்சிப்பதால் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. சுவாரஸ்யமற்ற மந்தமான தகவல்களும் செயல்படுத்தும் முறைகளும் மக்களின் கவனத்தை ஈர்க்காது. மார்க்கெடிங் குழுவைப் பொருத்தவரை அனுபவமற்ற திறமையுள்ள ஊழியர்கள் செயல்பாடுகள் சார்ந்த நடவடிக்கைகளில் உதவமுடியும். ஆனால் முக்கிய உத்தி மற்றும் தள தேர்வு போன்றவற்றிற்கு வலுவான திறமையுள்ள அனுபவமுள்ள நிபுணர்கள் அவசியம். அதே நேரத்தில் விளம்பர நிறுவனங்களும் மார்கெட்டிங் ஆலோசகர்களும் அதிகளவு கட்டணம் வசூலிப்பதால் சிறு வணிகங்கள் அவற்றை எளிதாக அணுகமுடிவதில்லை.

இங்குதான் நிறுவனத்திற்கு வெளியில் செயல்படும் ஆலோசகர்களும் பகுதி நேர பணியாளர்களும் (freelancers) உதவிக்கு வருகின்றனர். முக்கியமற்ற நடவடிக்கைகளை நிறுவனத்திற்கு வெளியிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். ஆனால் மார்க்கெட்டிங் போன்ற இக்கட்டான செயல்பாடுகளை ஒப்பந்த அடிப்படையில் நிபுணர்களிடமிருந்து பெற்றுக்கொண்டு நீங்கள் தொடர்ந்து வணிகத்தில் கவனம் செலுத்தலாம்.

தொழில்நுட்பத்திற்குப் பிறகு மார்க்கெட்டிங்தான் வணிக நடவடிக்கைகளில் சக்தி வாய்ந்ததாகும். அது தொடர்ந்து வளர்ச்சியடைந்துகொண்டே இருப்பதால் இன்று சரியாக இருப்பது நாளை சரியாக இருக்கவேண்டும் என்கிற அவசியமில்லை. எனவே உங்களது ப்ராண்ட் மற்றும் மார்க்கெட்டிங்கின் நோக்கத்தில் தெளிவு அவசியம். செயல்படுத்தும் முறைகளும் டூல்களும் மாறினாலும் ப்ராண்ட் மற்றும் அங்கீகாரம் நிலையாகவே இருந்து வருகிறது. அதிகளவு விரும்பத்தக்க விதம் மற்றும் வெளிப்படைத்தன்மை, கவனத்தை ஈர்க்கும் விதம், ஃப்ரெஷ் டூல்கள், யோசனைகள், மாதிரிகள், கண்ணோட்டங்கள் ஆகியவற்றை விரும்பி ஏற்றுக்கொள்ளுதல் போன்றவற்றைச் சார்ந்துதான் மார்கெட்டிங் எப்போதுமே சிறப்பிக்கிறது.

ஆங்கில கட்டுரையாளர் : தமன்னா மிஷ்ரா

Add to
Shares
200
Comments
Share This
Add to
Shares
200
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக