அச்சுறுத்தப்பட்டு காவலில் இழுத்து செல்லப்பட்ட ஸ்டேசில்லா யோகேந்திர வசுபாலின் விளக்கம்!

  21st Apr 2017
  • +0
  Share on
  close
  • +0
  Share on
  close
  Share on
  close

  யோகேந்திர வசுபால் இறுதியாக சிறையிலிருந்து வெளியே வந்துவிட்டார். ஒரு சிவில் குற்றத்திற்காக ஒரு நிறுவனர் கிரிமினல் குற்றவாளி போல நடத்தப்பட்ட சம்பவம் அரங்கேறி கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. அதிலிருந்து விற்பனையாளர் (Vendor) தரப்பு, நிறுவனர் தரப்பு என இரண்டு பக்கங்கள் இருந்து வருகிறது. விற்பனையாளர்கள் தங்கள் தரப்பு நியாயம் குறித்து பேசிவரும் நிலையில் இதுவரை யோகேந்திராவால் எதையும் பகிர்ந்துகொள்ள முடியவில்லை.

  “என்னுடைய வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளதுபோல நீங்கள் தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு தொழில்முனைவர் என்றால் எப்போதும் உங்களுக்கு பிடித்தமான டூத்பிரஷ்ஷை கையில் வைத்திருங்கள். தீடீரென்று ஒருநாள் கண்விழித்துப் பார்க்கும்போது நீங்கள் இருப்பது சிறையாகக்கூட இருக்கலாம்,”

  என்று யுவர்ஸ்டோரியுடனான உரையாடலில் ஸ்டேசில்லா நிறுவனத்தின் நிறுவனரான யோகேந்திர வசுபால் குறிப்பிட்டார். உயர்நீதிமன்றம் யோகேந்திராவிற்கு பிணை வழங்கியுள்ளது. ஒரு மாதமாக யோகேந்திராவிற்கும் ஜிக்சாவின் நிறுவனரான ஆதித்யாவிற்கும் இடையில் நிலவிய ஒரு இக்கட்டான சூழல் முடிவிற்கு வந்துள்ளது.

  image


  மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாடு சற்றே மாறுபட்டது என்கிறார் யோகேந்திரா. காவல்துறை, மத்திய புலனாய்வுத் துறை மற்றும் அங்கிருக்கும் கமிஷனர் ஆகியோருக்கு காவலில் வைப்பதற்கான அதிகாரம் உள்ளது.

  ”நீதிபதி உத்தரவில் கையொப்பமிடவில்லை என்கிற பேச்சுக்கே இடமில்லை. தமிழக காவலர்களுக்கு கூடுதல் அதிகாரம் உள்ளது. இப்படிப்பட்ட சூழல் பெங்களூருவில் இருந்தால் நான் சிறைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. இது சிவில் வழக்காகவே கையாளப்பட்டிருக்கும்.” என்றார் யோகேந்திரா.

  ஒவ்வொருவரும் கைதிதான்

  ஆனால் யோகேந்திரா காவல் துறையையோ அல்லது அரசாங்கத்தையோ குற்றம் சாட்டவில்லை. “இதுதான் நாம் உருவாக்கிய அமைப்பு” என்கிறார். மேலும் காவல்துறை அவர்களுக்கு அளிக்கப்படும் உத்தரவையும் கட்டளைகளையும் பின்பற்றவேண்டும் என்றார். காவல்துறை உண்மையான நிலவரத்தை அறிந்திருந்தாலும் அவர்கள் சூழ்நிலைக்கு கட்டுப்படவேண்டியுள்ளது என்றார் யோகி.

  ”காவலர் ஒருவர் என்னிடம் தமிழில் சொன்னார், ‘நானும் ஒருவிதத்தில் கைதிதான். இந்தச் சூழலில் என்னால் பெரிதாக எதுவும் செய்யமுடியவில்லை. எதிர்காலத்தில் நல்லதே நடக்கும் நான் ஒரு பொறுமைசாலி. 20 நாட்களோ, 60 நாட்களோ சிறைவாசம் இருப்பினும் நான் களங்கமற்றவன் என்று நிரூபிப்பேன் என்று திடமாக நம்பினேன். மேலும் நான் பாதுகாப்பாக இருப்பதாகவே என் உள்ளுணர்வு உணர்த்தியது.”

  பிப்ரவரி மாத இறுதியில் மைலாப்பூர் காவல் நிலையத்திலிருந்து யோகிக்கு அழைப்பு வந்தது. உடனே தனது வழக்கறிஞரிடம் காவலர்களை தொடர்புகொள்ளச் சொன்னார் யோகி. அதன்பிறகு வழக்கறிஞர்கள் தேவையான ஆவணங்களை காவல்துறையிடம் ஒப்படைத்துவிட்டதாக யோகியிடம் தெரிவித்தனர். இது ஒரு சிவில் கேஸ் என்று இன்ஸ்பெக்டர் மூலமாக உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும் யோகியிடம் தெரிவிக்கப்பட்டது.

  ஒரு கடிதம் எழுதி மயிலாப்பூர் காவல்நிலையத்தில் கொடுத்துவிட்டதாக வழங்கறிஞர்கள் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் விடுமுறையில் இருந்ததாகவும் யோகியிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஹெச்எஸ்ஆர் லேஅவுட் காவல் நிலையத்திலிருந்து காவலர்கள் யோகியின் வீட்டிற்கு வந்தபோது சென்னையிலிருந்து காவலர்கள் யோகியைத் தேடி வந்திருப்பதாகத் தெரிவித்தனர்.

  செல்லும் வழியில் காவலில் இழுத்து செல்லப்பட்டார் சம்மனோ அல்லது வாரண்டோ இல்லாத போதும் யோகி தன்னுடைய வழக்கறிஞருடன் வருவதற்கு சம்மதித்தார். வழக்கறிஞர் ஒருவரை பெங்களூரு காவல் நிலையத்திற்கு அனுப்பினார். அப்போதும் இது ஒரு சிவில் வழக்காகவே இருந்தது. குழப்பமான அதே சமயம் ஒரு மர்மமான சூழல் உருவானது. பெங்களூருவைச் சேர்ந்த காவலர்கள் எதற்கு இதில் தலையிடுகிறார்கள் என்று சென்னை வழக்கறிஞர்கள் கவலையுற்றனர்.

  யோகி கூறுகையில்,

  ”இங்கு குழப்பம் நீடிப்பதால் நாம் சென்னை சென்று முன்ஜாமீனுக்காக விண்ணப்பிக்கலாம் என்று என்னுடைய வழக்கறிஞர்கள் கூறினர். வழக்கறிஞரின் அலுவலகத்திற்கு செல்லும் வழியில் காரிலிருந்து வலுக்கட்டாயமாக இழுக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டேன். அவர்கள் மிகப்பெரிய குழுவாக மூன்று நான்கு நாட்களாகவே என்னைபின் தொடர்ந்து வந்ததால் நான் வழக்கறிஞரின் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தேன் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.”

  ஜிக்சா நிறுவனம் கோரியபோது சென்னை உயர்நீதிமன்றம் இது இரு நிறுவனங்களுக்கு இடையேயான ஒரு வணிக பரிவர்த்தனை தொடர்பான பிரச்சனை என்பதால் மத்தியஸ்தம் செய்ய ஜிக்சா தரப்பு கேட்டபோது, ஆணையிட மறுத்துவிட்டது. இதன் மூலமாகவே இது ஒரு க்ரிமினல் வழக்கு அல்ல என்பதும் சிவில் வழக்கு என்பதும் உறுதியாகிறது. உத்தரவில் பிணைக்கான ஷ்யூரிட்டி பத்திரம் தவிர வேறு எந்த நிபந்தைனைகளும் இணைக்கப்படவில்லை என்று ஸ்டேசில்லா நிறுவனத்தின் இணை நிறுவனரான யோகேந்திராவின் மனைவி ரூபல் யோகேந்திரா உறுதி செய்தார்.

  அவமரியாதை செயல்

  யோகேந்திரா கடினமான காலகட்டத்தை கடந்து வந்திருந்தபோதிலும் புன்னகையுடனேயே பேசினார். அவர் கூறுகையில், 

  “இந்த நாட்கள் அரசாங்கம் சம்பளத்துடன் எனக்கு அளித்த விடுமுறைநாட்கள் எனலாம். நடந்த சம்பவத்தை அப்படிப்பட்ட ஒரு மனநிலையிலேயே பார்க்க விரும்புகிறேன். எனினும் நிச்சயமாக இது எனது வாழ்க்கையின் மோசமான நாட்கள். ஒவ்வொரு மனிதனும் மரியாதையுடன் நடத்தப்படவேண்டும் என்பதையே நான் குறிப்பிட விரும்புகிறேன்.” 

  யாராக இருப்பினும் உறவு என்பது முக்கியம். இந்தப் பிரச்சனை இவ்வாறு பெரிதாகப்பட்டதை நான் விரும்பவில்லை. ஒவ்வொரு தொழிலிலும் பிரச்சனைகள் இருக்கும். அதைத் தீர்ப்பதற்கு முறையான வழிகள் உள்ளது. அப்படிப்பட்ட வழிகளைத் தேர்ந்தெடுக்காதது ஒரு துரதிர்ஷ்டவசமான விஷயமாகும்.

  ஜிக்சா அட்வர்டைசிங் நிறுவனத்துடனான ஸ்டேசில்லாவின் உறவு 2014-ம் ஆண்டிலிருந்தே நீடித்துவருகிறது. ஜிக்சாவுடனான மெயில் உரையாடல்களை யோகேந்திரா தனது வலைப்பதிவில் பகிர்ந்துகொண்டார். யோகேந்திரா ஒரு மாதத்திற்கும்மேல் காவலில் இருந்தபோது உண்மை நிலவரம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. ஸ்டேசில்லாவும் யோகேந்திராவும் எப்படி ஜிக்சா குழுவை ஏமாற்றினார்கள் என்று ஆதித்யா விவரித்தார். இதற்கு யோகேந்திரா,

  ”நான் சிறையில் இருந்து கொண்டிருக்கிறேன். என்னுடைய தரப்பு நியாயத்தை சொல்வதற்கான வாய்ப்பே இல்லை. என்னுடைய சகோதரியும் மனைவியும் ஒரு வலைப்பதிவிட்ட காரணத்தால் மட்டுமே விவாதம் ஏற்பட்டது. முதல் வலைப்பதிவை வெளியிடாமல் இருந்திருந்தால் நான் நிச்சயமாக ஒரு குற்றவாளியாகவே பார்க்கப்பட்டிருப்பேன்.” 

  மார்ச் மாதம் 15-ம் தேதி இரவு 11 மணியளவில் நான் என்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட்டதாக முதலில் செய்தி வெளி வந்தது. வலைப்பதிவு மட்டும் வெளியிடப்படாமல் இருந்திருந்தால் இந்தச் செய்தி மட்டுமே நிகழும் சம்பவத்தின் விளக்கமாக பார்க்கப்பட்டிருக்கும்.”

  பல்வேறு விதத்தில் அழுத்தம்

  யோகேந்திராவிற்கு ஜாமீன் கிடைக்க எடுத்துக் கொள்ளப்பட்ட கால அவகாசம் ஸ்டார்ட்அப் உலகைச் சேர்ந்தவர்களுக்கு அதிக கவலை அளிப்பதாக இருந்தது. அவருக்கு ஜாமீன் அளிப்பதை மறுப்பதற்கு அரசுதரப்பில் தேவையற்ற அழுத்தம் கொடுக்கப்பட்டதாக யோகி தெரிவித்தார். யோகி சிறையில் இருந்தபோது பிரச்சனைக்கு தீர்வுகாண அவரது குடும்பத்தினருக்கும் அழுத்தம் தரப்பட்டது. ரூபல் மற்றும் அவரது குடும்பத்தினரைச் சம்மதிக்க வைப்பதற்காக செட்டில்மெண்ட்டிற்கு ஒத்துழைக்க மறுத்தால் அவருக்கு ஜாமீன் கிடைக்காது என்றுகூட தெரிவித்துள்ளனர்.

  ”ஜாமீன் மறுக்கப்பட்டால் நான் செட்டில்மெண்ட்டிற்கு சம்மதிப்பேனா என்று ஒரு நிருபர் எனது வழக்கறிஞரிடம் கேட்டுள்ளார். நீதிபதி உத்தரவைப் பிறப்பிக்காத நிலையில் எனக்கு ஜாமீன் கிடைக்கவில்லை என்று எப்படி நிருபருக்குத் தெரியும் என்று என்னுடைய வழக்கறிஞர் கேட்டுள்ளார்,” என்றார் யோகி.

  தற்போது யோகி தனது வலைப்பதிவில் வெளியிட்டுள்ள உண்மைகள், ஆதாரங்கள் எதுவும் வழக்கில் ஈடுபட்டிருக்கும் வழக்கறிஞர்கள் மற்றும் மூத்த ஆலோசகர்களுக்குக்கூட தெரியாது. அவர் சிறையிலிருப்பதால் ஆதாரங்களையோ உண்மையையோ அவரால் பகிர்ந்துகொள்ள முடியவில்லை. நிறுவனம் இத்தனை ஆண்டுகளாக இயங்கி வந்தது. மூன்றாண்டுகளுக்கு மேல் விற்பனையாளர்களுடன் நல்லுறவில் இருந்து வந்தது. நிறுவனம் நடந்துகொண்ட விதம் மற்றும் கையாண்ட விதம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே ஒரு தீர்மானம் எடுக்கப்படவேண்டும் என்று இந்த பிரச்சனை குறித்து தெரிவித்தார் யோகி. 

  அதாவது ஸ்டேசில்லாவிலிருந்து நீண்ட நாட்களுக்கு முன்வெளியேறிய ஊழியர்களைகூட விசாரிக்கலாம் என்றார் யோகி. தாமதமாகும் தீர்வுகள் சிறையிலிருந்ததனால் அவருடைய தரப்பு விளக்கத்தை அளிப்பதற்கும் அடுத்தகட்ட நடவடிக்கைக்கும் இடையூறு ஏற்பட்டது. 

  “அதுதான் நோக்கமாக இருக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன். தற்போது உரையாடுவதுபோல என் தரப்பு நியாயத்தை விவரித்து தற்காத்துக் கொள்ளக்கூடாது என்றே அவர்கள் நினைத்திருக்கவேண்டும். நானும் சச்சித்தும் (ஸ்டேசில்லாவின் இணைநிறுவனர் மற்றும் சிஎஃப்ஓ) தலைமறைவாகி விட்டாலோ அல்லது சிறையிலிருந்தாலோ தீர்வுகாணும் முறை தாமதமாகலாம்.” என்றார் யோகி.

  மேலும் ஜிக்சா முன்வைத்த வாதம் தவறானது என்பதற்கான ஆதாரம் யோகியின் குழுவினரிடம் உள்ளது. இருந்தும் பிரச்சனை உள்ளதாகவும் சேவைகளில் குறைபாடு உள்ளதாகவும் அவர்கள் தொடர்ந்து சொல்லிவருகின்றனர். ”இது மிகவும் வேதனையை அளிக்கிறது. ஏனெனில் அவர் என்னை தனது ஆலோசகர் என்றே அழைத்து வந்தார். நிலைமையைச் சற்று மரியாதையான முறையில் அணுகியிருக்கலாம். நான் செய்யாத குற்றத்திற்காக மிகப்பெரிய விலையை அளித்துள்ளேன்.

  மற்ற விளம்பரங்களின் நம்பகத்தன்மையும் கேள்விக்குறியாகவே உள்ளது என்றார் யோகி. பல படங்கள் ஃபோட்டோஷாப் செய்யப்படுவதால் அவற்றை சேவைக்கான ஆதாரமாக எடுத்துக்கொள்ளமுடியாது என்றார் யோகி. மேலும், 

  ”எந்தத் துறையாக இருந்தாலும் ஒப்பந்தம் மற்றும் ஆதாரம் கேட்பதற்கு ஒருவழிமுறை உள்ளது. சில பகுதிகளில் ஹோர்டிங்குகளின் விலை 75,000 ரூபாய்க்குமேல் இருக்காது. ஆனாலும் 3.5 லட்சரூபாய்க்கு பில் கொடுப்பார்கள். அந்த சமயம் நாங்கள் அதிகப்படியான நிதியை உயர்த்தியிருந்தோம். 2016-ல் இந்தியா முழுவதுமுள்ள விற்பனையாளர்களுக்கு 50 கோடிரூபாய் செலுத்தியுள்ளோம். இந்த நிலையில் நாங்கள் அவரது பில் தொகையை மட்டும் ஏன் செலுத்தாமல் விடப்போகிறோம்.” என்றார் யோகி.

  ஆரம்பத்திலிருந்து ஆவணங்கள் குறித்து பரிசீலிக்கவேண்டும் என்று சச்சித் வலியுறுத்தினார். ஏற்கெனவே 2016-ம் ஆண்டு மார்ச்-ஏப்ரல் மாதம் சில சர்ச்சைகள் ஏற்பட்டது. இருந்தும் அவர்களுடனான நல்லுறவை தொடர்ந்தோம். அவர்கள் இவ்வாறு செயல்படுவார்கள் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை என்றார் யோகி.

  ஸ்டேசில்லா பிரச்சனை தற்போது ஒரு பாடமாக அமைந்துள்ளது. இணக்கம் சார்ந்தோ அல்லது சட்டரீதியாகவோ பல்வேறு பிரச்சனைகளை ஸ்டார்ட்அப் தற்போது சந்தித்துவருகிறது. நம்மிடம் இருக்கும் கேள்விகள் இதுதான்: 

  அச்சுறுத்தல்களுடன் வாழவேண்டியநிலை தொடருமா? நிறுவனங்கள் தங்களது செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ள முடிவெடுத்தால் அதை எப்படிச் செய்வது? அப்படிப்பட்ட சூழ்நிலையில் நிறுவனர்களுக்கு எப்படிப்பட்ட உதவிகள் கிடைக்கும்?

  ஆங்கில கட்டுரையாளர் : சிந்து காஷ்யப்

  • +0
  Share on
  close
  • +0
  Share on
  close
  Share on
  close

  எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக

  Our Partner Events

  Hustle across India