பதிப்புகளில்

1200 திருமண மையம் மற்றும் தரகர்களை ஒன்றிணைக்கும் மேட்ரிமோனியல் தளம் அமைத்துள்ள பொறியாளர்!

YS TEAM TAMIL
5th Oct 2017
Add to
Shares
11
Comments
Share This
Add to
Shares
11
Comments
Share

இணையதளத்தில் உள்ள திருமண சேவை மையங்கள் இன்றைய தலைமுறையினருக்கு வசதியாக இருந்தாலும் மணமக்களை பற்றிய உண்மை தகவல்கள் அனைத்தும் சரியாக இருக்குமா..? என்பது பொதுவாக அனைவருடைய சந்தேகமும் தான். மணமக்களின் விவரங்களை ஆராய்ந்து சரிபார்த்து பொருத்தமான வரனை அமைத்துக் கொடுப்பது திருமண தகவல் மைய அமைப்பாளர்கள் மற்றும் தரகர்கள் தான் என்பது பெரும்பாலான பெற்றோர்களின் நம்பிக்கை. அது உண்மையும் கூட.

தமிழ் நாட்டிலும் பிற மாநிலங்களிலும் உள்ள திருமண தகவல் மைய அமைப்பாளர்களை, ’வீ மேட்ச்’ (www.WeMatch.info) மூலமாக ஒன்றிணைத்துள்ளார் சாம்சன் மாணிக்கராஜ்.

image


‘‘பூர்வீகம் சென்னைதான். அமெரிக்காவில் கணினி எஞ்சினியரிங் படித்தேன். தொடர்ந்து அங்கேயே சில காலம் வேலையும் செய்தேன்,” என்று தொடங்கினார்.

திருமண அமைப்பாளர்களை இணைக்கும் ஐடியா எப்படி கிடைத்தது என்று கேட்டப்போது?

எனது திருமணத்தின் போது வரன் தேடி சற்று சிரமப்பட்டேன். செய்தித்தாள் இணையதளம். திருமண அமைப்பாளர்கள் என கலவையாக இருந்தனர். கணினி படித்த நாம் இதை எளிதாக்க ஒரு டாஷ்போர்டு செய்யலாம் என்று உருவாக்கியதுதான் www.WeMatch.info.

இதை திருமண அமைப்பாளர்களுக்கு முற்றிலும் இலவசமாக கொடுக்கின்றோம். சாப்ட்வேர் என்பதால் துவங்கிய சிலமாதங்களுக்குள் நூற்றுக்கணக்கான திருமண அமைப்பாளர்கள் இதில் இணைய ஆரம்பித்து இன்று 1200 பேர் இதில் ஒன்றிணைந்துள்ளனர்.

வீமேட்ச் மேலாளர் மோஹன பிரியா கூறுகையில்,

"ஒரு திருமண தகவல் மையம் நடத்துபவர் பொதுவாக தனக்குத் தெரிந்த குறைவான திருமண தகவல்மையங்களுடன் தொடர்பில் இருப்பார், மணமக்கள் வரன் பொருத்தங்களையும் பரிந்துரைப்பார். ஒரு திருமண தகவல்மையத்தில் இருந்து 5 வரன்கள் வந்தாலும் மொத்தமாகவே 50 வரன்கள் தான் கிடைக்கும். ஒரு குறுகிய வட்டத்தில் தான் இருப்பார்கள்.”

உங்களுடைய வரன் பொருத்தம் உங்கள் வீட்டில் இருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தாலும், அவர் திருமண மையமும் நீங்கள் பதிவு செய்த திருமண தகவல் மையமும் இணைந்திருந்தால் தான் அந்தபொருத்தம் உங்களுக்கும் கிடைக்கும். ஆனால், www.WeMatch.info இல் அந்த இரண்டு மையங்களும், அத்துடன் திருமண அமைப்பாளர்களும் இணைந்திருப்பதால் உங்களுக்கு அன்றைக்கே அந்தபொருத்தம் கிடைத்துவிடும். அதுதான் எங்களோட சிறப்பு, என்கிறார் பிரியா.

சமீபத்திய கல்லூரி மாணவர்கள் புள்ளிவிவரப்படி, 85% திருமணங்கள் திருமண அமைப்பாளர்கள் மூலமாக தான் முடிவாகின்றது. கிராமப்புற, சிறு நகரங்களில் வசிக்கும் மக்களின் தேடல் அதிகம் தரகர்களிடம் சொல்லித்தான் வரன் பார்க்கின்றனர். ஆனால் சென்னை, கோவை பெங்களூர் போன்ற பகுதியில் நடக்கும் திருமணங்கள் அதிகம் மேட்ரிமோனியல் தளங்கள் மூலமாகத் தான் நடக்கிறது. அதேப் போல அதிகம் விவாகரத்து கேட்டு நீதிமன்றங்களில் முறையிடுபவர்களும் இந்த பகுதியை சேர்ந்தவர்கள் தான்.

சிறந்த வரன்கள் இணையதள மேட்ரிமோனியலில் கிடைக்கும் வாய்ப்பு குறைவுதான். பெரும்பாலும் திருமண அமைப்பாளர்களிடம் தான் அவை இருக்கும். ஏனென்றால், அவர்கள் அலசி ஆராய்ந்து வரன்களின் உண்மைத் தன்மையுடன் தரவாக்கி வைத்து இருப்பார்கள். சம்மந்தபட்ட மணமகனோ, மணமகளோ சொல்லும் தகவலைத் தாண்டி அவராக விசாரித்து ஒரு புரஃபைலை வைத்திருப்பார் என்று விளக்கினார் வீ மேட்ச் நிறுவனர்.

கிராமமோ, நகர்புறமோ, மணமக்கள் இருவரின் எதிர்பார்ப்புமே ஒரேமாதிரியாகத்தான் இருக்கிறது. இன்றைய இளைஞர்கள் ஒத்தகருத்துடைய துணையைத்தான் அதிகம் தேடுகிறார்கள். அவர்களின் பொழுது போக்கு, ஆர்வம் போன்ற பரஸ்பர விருப்பத்திற்கு ஏற்ற தகவல்கள் திருமண அமைப்பாளர்களிடம் முழுமையாக இருக்கும்.

வீமேட்ச் பிரீசாப்ட்வேர் திருமணமையங்களுக்கு கொடுக்கப்பட்டு வருகின்றது. வீமேட்ச்சில் சேர விரும்பும் சிலர், வரன்கள் தேடுபவர்களுக்கு திருமண அமைப்பாளர்களை தொடர்பு கொள்ள நேரம் இல்லாததால், சென்றவாரம், www.WeMatch.info -ல் நேரடியாக பதிவு செய்கின்ற வசதியை ஏற்படுத்தியுள்ளனர். இதில் பதிவாகின்ற ஒவ்வொரு வரனையும் 1200 திருமண தகவல் மைய அமைப்பாளர்களுமே அனுப்பி வைக்கின்றனர். 

ஒரு திருமண அமைப்பாளரிடம் தோராயமாக 50 சிறந்த வரன்கள் உள்ளது என்றால் அவர் அதைமட்டுமே வைத்துதான் தேடிக்கொண்டு இருப்பார். ஆகையால் வீமேட்ச், இந்தியா முழுவதும் உள்ள திருமண அமைப்பாளர்களை ஒன்றிணைத்துள்ளது . திருச்சியில் உள்ள ஒரு திருமண அமைப்பாளரும் கன்யாகுமாரியில் உள்ள திருமண அமைப்பாளரும் வீமேட்ச் மூலம் பதிவு செய்து ஒன்றிணைந்து செயல்படமுடியும்.

Stop The Dowry - வரதட்சணையை நிறுத்துங்கள்

நிறுவனர் சாம்சன் மாணிக்கராஜ்

நிறுவனர் சாம்சன் மாணிக்கராஜ்


இன்றைய காலகட்டத்தில் வரதட்சணை தந்து திருமணம் செய்ய வேண்டிய கட்டாயம் பெண்களுக்கு இல்லை. பெரும்பாலும் அனைவரும் படித்துள்ளார்கள் என்பதால் யாரும் யாரையும் நம்பி வாழ வேண்டிய அவசியம் இல்லை.

கல்வி அறிவுள்ள சமூகம் வரதட்சணை கொடுத்து ஏன் திருமணம் செய்ய வேண்டும். பெண்ணின் குணமும் கல்வி அறிவும் தான் ஒரு ஆண் எதிர்பார்க்கும் வரதட்சணையாக இருக்க வேண்டும்.

"ஆணுக்கு பெண் சரிசமம் என்கிற இந்த காலகட்டத்தில் பெண் மட்டும் எதற்கு லஞ்சம் குடுத்து திருமணம் செய்வது போல வாழ்க்கையை துவங்க வேண்டும்,?”

 என்பது வீ மேட்ச் –நிறுவனர் சாம்சன் மாணிக்கராஜ் உடைய எண்ணம். இந்த நோக்கத்துடன் துவங்கப்பட்டது தான் #StopTheDowry.

ஆரம்பித்த சில நாட்களிலேயே 10,000-க்கும் மேற்பட்டோர் ’நானும் டவுரி வாங்க மாட்டேன்’ என பதிவு செய்தார்கள். இதுவரை 30,000 பேர் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு எண்டோஸ்ட்மென்ட் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. வரதட்சணை வாங்க மாட்டேன் என்ற தகவலை திருமண அமைப்பாளர்கள் முதன்மை படுத்தி வரன்களிடம் எடுத்து கூர்வார்கள்.

”மதம், ஜாதி, வயது, இருப்பிடம், உயரம், கல்வித்தகுதி, வேலை ஆகியவைகளை பொருத்தமாக பார்ப்பதை தாண்டி வரதட்சணை வாங்கமாட்டேன் என்பதுதான் ஒரு ஆணுக்கு மிகச் சிறந்த தகுதியும் சுயமரியாதையும் ஆகும்," என்கிறார் தீர்க்கமாக சாம்சன் மாணிக்க ராஜ்.

இணையதள முகவரி: Wematch

கட்டுரையாளர் -வெற்றிடம்


Add to
Shares
11
Comments
Share This
Add to
Shares
11
Comments
Share
Report an issue
Authors

Related Tags