பதிப்புகளில்

உலக இணையவாசிகள் பட்டியல்: டிச.15-ல் இந்தியா 2-ம் இடத்தை எட்டும்!

20th Nov 2015
Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share

டிசம்பர் மாதவாக்கில் அமெரிக்காவை பின்னுக்குத்தள்ளி, இந்தியா உலகில் அதிக இணைய பயனாளிகளை கொண்ட நாடுகளில் இரண்டாவது இடத்தை பிடிக்க உள்ளது. இண்டெர்நெட் அண்ட் மொபைல் அசோசியேஷன் ஆப் இந்தியா (ஐ.ஏ.எம்.ஏ.ஐ) மற்றும் ஐ.எம்.ஆர்.பி இண்டர்நேஷனல் வெளியிட்டுள்ள ’2015 ல் இந்தியாவில் இணையம் “ அறிக்கையில் இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்கள் இடம் பெற்றுள்ளது.

இந்த அறிக்கையின் படி 2015 டிசம்பரில் இந்தியாவின் இணைய பயனாளிகள் எண்ணிக்கை 402 மில்லியனாக இருக்கும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 49 சதவீதம் அதிகமாகும். அக்டோபரில் 317 மில்லியன் இந்திய பயனாளிகள் இணையத்தை அணுகினர். 600 மில்லியன் இணைய பயனாளிகளுடன் சீனா முதலிடத்தில் உள்ளது.

image


இந்த வளர்சிக்கு மொபைல் தான் முக்கிய காரணம் என்பதில் எந்த வியப்பும் இல்லை. நகர்புற இந்தியாவில் கடந்த ஆண்டைவிட மொபைல் இணைய பயனாளிகள் பரப்பு 65 சதவீதம் அதிகரித்து 2015 அக்டோபரில் 197 மில்லியனாக இருந்தது. கிராமப்புற இந்தியாவில் 2105 டிசம்பரில் இணைய பயனாளிகள் எண்ணிக்கை 87 மில்லியனாகவும் 2016 ஜூனில் 109 மில்லியனாகவும் உயர உள்ளது.

நகர்புற இந்தியாவில் 94 சதவீத பயனாளிகள் மொபைல் மூலம் இணையத்தை அணுகுகின்றனர். எனினும் 64 சதவீதம் பேர் டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப்பையும் பயன்படுத்துகின்றனர். ஆனால் மொபைல் மூலம் இணையத்தை அணுகுபவர்கள் அதையே பிரவுசிங்கிற்கான பிரதான சாதனமாக கருதுகின்றனர்.

தொழில்துறையின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப இந்த வளர்ச்சி அமைந்துள்ளது. வரத்தகம் முதல் சுகாதாரம், நிதி ஆகிய துறைகளில் தொழில்நுட்பம் சார்ந்த நுகர்வோர் நிறுவனங்களுக்கு இது நல்ல செய்தியாகும். உதாரணமாக மொபைல் வாலெட் மற்றும் இ-காமர்ஸ் நிறுவனமான பேடிஎம் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ விஜய் சேகர் சர்மா, டெக்ஸ்பார்க்ஸ் 2015 அறிக்கை-டெக் ஃபார் ஏ பில்லியன் - ல் எழுதிய பிரத்யேக கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார். “அடுத்த ஐந்தாண்டுகளில் மொபைல் தளத்தில் முழு அளவிலான பிரத்யேக வங்கிச்சேவைகள் அல்லது வங்கி சேவைகளை பெற்றிருக்கும். இந்தியா இளம் நாடு - 50 சதவீத மக்கள் தொகை 24 வயதுக்குட்பட்டவர்கள்- மற்றும் ஒவ்வொரு நாளும் ஸ்மார்ட்போன் மேலும் வலுவானதாகி கொண்டிருக்கும் நிலையில் இது போன்ற புதுமைகளுக்கு ஏற்ற களமாக இந்தியா இருக்கிறது”.

நுகர்வோர் இணைய ஸ்டார்ட்அப்களுக்கு அதிலும் குறிப்பாக பெண்களை இலக்காக கொண்ட நிறுவனங்கள் இந்த அறிக்கையில் கவனிக்க வேண்டிய தகவலாக நகர்புறத்தில் இணையத்தை அணுகும், வேலைக்கு செல்லாத பெண்களில் 77 சதவீதம் பேர் மொபைல் மூலம் அணுகுகின்றனர் என்பதாகும்.

எட்டு மெட்ரோக்கள் அதிக பயனாளிகளை கொண்டிருக்கின்றன. மொத்த பயனாளிகளில் 31 சதவீதத்தை பெற்றுள்ளன. மும்பை மற்றும் தில்லியில் அதிக இணைய பயனாளிகள் உள்ளனர். ஜெய்புர், சூரத் மற்றும் லக்னோ போன்ற சிறிய நகரங்கள் கடந்த ஆண்டைவிட மாதாந்திர தீவிர இணைய பயனாளிகளில் (மாதம் ஒரு முறையேனும் இணையம் பயன்படுத்துபவர்கள் ) 60 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது.

இணைய பயன்பாட்டில் உள்ள பாலின வேறுபாடு கவலை அளிப்பதாக இருக்கிறது. இணைய பயனாளிகளில் 71 சதவீதம் பேர் ஆண்களாகவும் 29 சதவீதம் பேர் பெண்களாகவும் உள்ளனர். நகர்புற இந்தியாவில் இந்த இடைவெளி குறைவாக உள்ளது. ஆண்கள் 62 சதவீதமாகவும் பெண்கள் 38 சதவீதமாகவும் உள்ளது. கிராமப்புற இந்தியாவில் இது 88:12 சதவீத விகிதமாக இருக்கிறது.

இந்த அறிக்கை சில சுவாரஸ்யமான போக்குகளை சுட்டிக்காட்டுகிறது. கிராமப்புற இந்தியாவில் 75 சதவீத பயனாளிகள் 18-30 வயது பிரிவினர். 11 சதவீதம் பேர 18 வயதுக்கு குறைவானவர்கள் 0.8 சதவீதம் பேர் 31 முதல் 45 வயது பிரிவினர். நகர்புற இந்தியாவில் மாதாந்திர தீவிர இணைய பயனாளிகளில் 32 சதவீதம் பேர் கல்லூரி மாணவர்கள்.

இணைய தகவல் தொடர்பு, சமூக வலைப்பின்னல், பொழுதுபோக்கு ஆகியவை இணையத்தை பயன்படுத்த பிரதான காரணங்களாக இருக்கின்றன. நகர்ப்புற பயனாளிகளில் 24 சதவீதம் மற்றும் கிராமப்புறங்களில் 5 சதவீத பயனாளிகள் மட்டுமே ஆன்லைன் ஷாப்பிங் செய்ய இணையத்தை பயன்படுத்துகின்றனர்.-

image


ஆக்கம்; ராதிகா.பி.நாயர்

தமிழில்; சைபர்சிம்மன்

Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share
Report an issue
Authors

Related Tags