பதிப்புகளில்

அலைகளின் கரங்களில் நீந்தும் பக்தி ஷர்மா

sneha belcin
29th Sep 2015
Add to
Shares
1
Comments
Share This
Add to
Shares
1
Comments
Share

ஒரு குழந்தை தத்தித் தத்தி நடக்கத் தொடங்கும் வயதில் பக்தி ஷர்மா நீந்தத் தொடங்கியிருந்தார். மும்பை நகரில் பிறந்த பக்தி ஷர்மா வளர்ந்தது உதைப்பூரில். பக்தி ஷர்மாவின் ரத்தத்திலேயே நீச்சல் ஊறியிருந்தது. காரணம் பக்தி ஷர்மாவின் தாய் ஒரு தேசிய நீச்சல் வீரர். தன் குழந்தை பக்திக்கு இரண்டரை வயதான போதே, அவருக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க தொடங்கி விட்டார்.

“நீச்சல், தண்ணீர் எல்லாம் எனக்கு முதலில் பயமாக இருந்தது. ஆனால் இரண்டரை வயதிலேயே நீந்தத் துவங்கி விட்டேன். அப்போது நான்கடி, ஆறடி ஆழம் எல்லாம் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே ஆழமாகத்தான் தெரிந்தது.எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து நான் நீந்திக் கொண்டிருக்கிறேன். ”

ஆனால் எதுவும் எளிதாக இருக்கவில்லை. முதலில் நீந்தப் பழக சுற்றுவட்டாரத்தில் எங்கும் நீச்சல் குளம் இல்லை. மேலும். ஒரு பெண்ணாக இருப்பதால் உருவாகும் சமூகத் தடைகள் இன்னொரு காரணமாக இருந்தது.

ஒரு கட்டத்தில் அவர் நீச்சலை விட வேண்டியிருந்தது. எளிதில் சமரசம் ஆகாத பக்தி, கராத்தே கற்றுக் கொள்ள ஆரம்பித்தார். ஆனால், கராத்தே வாத்தியார் ஊரை விட்டு போன நிலையில் அதையும் முழுதாக கற்றுக் கொள்ள முடியாமல் போனது. இரண்டு முயற்சிகளும் தடைபட்டு முழுமையடையாத நிலையில், தன் தாய் மட்டும் ஊக்கமளிக்கவில்லை என்றால், அப்பொழுதே நம்பிக்கை இழந்திருப்பேன் என்னும் பக்தி, “ ஒரு விஷயத்தை செய்வது என்றால் நூறு சதவிகிதம் உறுதியாகச் செய்ய வேண்டும், இல்லையெனில் செய்யவேக் கூடாது என்பதில் என் தாய் உறுதியாக இருந்தார். அதுதான் உத்வேகமாக இருந்தது’’ என்கிறார்.

அதன் பின்னர் விடா முயற்சியுடன் மீண்டும் நீந்தத் தொடங்கினார். மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றார். அவருக்கு படிக்க வேண்டிய கட்டாயம் இல்லை அதனால் நீச்சலில் கூடுதலான கவனம் செலுத்துவார் என்று நாம் சுலபமாகச் சொல்லி விடலாம் ஆனால் அவர் பத்தாம் வகுப்பில் 84%, பன்னிரெண்டாம் வகுப்பில் 87% மதிப்பெண்ணும் பெற்றார். “ படிப்பையும் நீச்சல் பயிற்சிகளையும் ஒரே நேரத்தில் சமாளிப்பது கடினமாகத் தான் இருந்தது. ஆனால் படிக்காமல் இருக்க நீச்சலையோ, நீந்தாமல் இருக்க படிப்பையோ ஒரு காரணமாக நான் சொன்னதே இல்லை” என்கிறார்.

பக்தி ஷர்மா பலப் பல முதலிடங்களுக்குச் சொந்தக்காரர். தான் பங்கேற்ற அநேக போட்டிகளில் இளம் பங்கேற்பாளரும் இவரே. அப்படியான போட்டி ஒன்றைப் பற்றி நினைவு கூறுகிறார் ; “மாவட்ட அளவிலான போட்டி ஒன்றில் வென்றதால் மாநில அளவிற்கு தகுதி பெற்றேன். முதல் நிகழ்வுக்காக நின்றுக் கொண்டிருந்த போது என்னைப்பார்த்த டைம்கீப்பர் அம்மாவிடம் “இவள் முழு ரேசையும் முடித்து விடுவாளா?’ என்று பரிதாபப்பட்டு கேட்டார். ஆனால் அந்த போட்டியை அவர் கொடுக்கப்பட்ட நேரத்தில் நிறைவு செய்தார்.

image


திறந்த வெளி நீச்சல்

தனது பதினான்கு வயதில் திறந்தவெளிகளில் நீந்தத் தொடங்கினார் பக்தி ஷர்மா. ஊரன் போர்ட்டிலிருந்து ‘கேட் வே ஆஃப் இந்தியா’ வரை நடைபெற்ற கடல் நீச்சல் போட்டி பற்றி அவருடைய அம்மா கூறினார். குளங்களில் மட்டுமே நீந்திக் கொண்டிருந்தவருக்கு அது ஒரு பெரிய சவாலாக இருந்தது. அவர் நீண்ட நேரம் குளங்களில் பயிற்சி எடுக்கத் தொடங்கினார்.

“ நான் பனிக்காலத்தில் பயிற்சி எடுக்கத் தொடங்கினேன். இங்கு தட்பவெப்பம் நான்கிலிருந்து ஐந்து டிகிரி வரை இருக்கும். நான் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த குளத்தின் நிர்வாகிகள் நான் பனிக்காலத்தில் பயிற்சி செய்ய அனுமத்தித்தனர். அவர்கள் குளத்தை மூடாமல் சென்று விடுவார்கள். நானும் என் அம்மாவும் கதவை திறந்து உள்ளே வந்து பின் தாழிட்டுக் கொள்வோம் அந்த கேம்பஸில் நாங்கள் மட்டும் தான் இருப்போம். பிறகு நான் மூன்றிலிருந்து நான்கு மணிநேரங்கள் தொடர்ந்து நீந்துவேன்.” என்கிறார் பக்தி.

முறையான பயிற்சியாளர் இல்லாத ஒருவருக்கு பல சவால்கள் இருக்கும். உங்களின் மிகப் பெரிய ஊக்கம் நீங்களே தான். பக்தி ஷர்மாவுக்கு இந்த பயணம் இனிமையானதாக இல்லை, பல தோல்விகளை சந்தித்திருக்கிறார். தடைகளை எதிர்த்து நீச்சல் போட்டு வென்றும் இருக்கிறார் அதுதான் பக்தி ஷர்மாவின் ரகசியம்.

“போட்டிகளில் பங்கேற்றுக் கொண்டிருந்த போதெல்லாம், நீச்சலை விட்டுவிடலாம் என நினைத்திருக்கிறேன். நான் எவ்வளவு முயற்சி செய்துமே மஹாராஷ்டிரா மற்றும் தென்னிந்திய வீரர்கள் போல நீந்த முடியவில்லை. நான் மிகப் பெரிய தோல்வியைப் போல உணர்ந்தேன். என்னுடைய ஆற்றலை ஒரு வழக்கதிற்கு மாறான வழியில் கட்டமைத்தேன். தொலை தூர நீச்சலுக்கு எப்பொழுதுமே பயிற்சியாளர் வைத்தது இல்லை. அதை தர்க்க ரீதியாக அணுகினோம். ஒரே ஸ்ட்ரெச்சில் என்னால் அதிகபட்சம் முடிந்தவரை நீந்திவிட்டு, அதை விட கொஞ்சம் நீட்டிப்பேன், ஒவ்வொரு முறையும்” என்கிறார்.

திறந்தவெளி நீச்சலின் சுதந்திரத்தை உணர்ந்த பின்னர், அவருக்கு வானம் தான் எல்லை. தற்போது, பக்தி ஷர்மா எட்டு சானல்களை உள்ளடக்கிய நான்கு பெருங்கடல்களையும் நீந்திய ஆசியாவின் முதல் நீச்சல் வீரர் மற்றும் உலகின் இளம் நீச்சல் வீரர்.

இங்கிலீஷ் சானலை கடந்த திறமை

இங்கிலீஷ் சானலை கடந்த முதல் தாய்-மகள் கூட்டணியும் இவர்கள் தான். இங்கிலீஷ் சானலைக் கடந்த அந்த சுவார்சியமான கதையை சொல்கிறார்:

“தாய்-மகள் கூட்டணி மிக இயல்பாக நடந்தது. ஜோத்பூரை சேர்ந்த பெண் ஒருவர், இங்கிலீஷ் சானலைக் கடக்க பயிற்சி கொடுக்குமாறு என்னையும் அம்மாவையும் கேட்டார். தனித்து நீந்துவதற்கு முன்னர் அவரை ரிலே நீச்சலில் பயிற்சி எடுக்க அறிவுரைத்தோம். அந்த குழுவிற்கு ஆட்களை சேர்ப்பதில் சில பிரச்சனைகள் இருந்தது. எனவே நான் முன் வந்தேன். அதற்கு பிறகும் இரண்டு பேர் தேவை இருந்தது. என் அம்மாவிடம் கேட்டேன்.

நான் படகில் அமர்ந்தபடி அம்மாவை ஊக்கப்படுத்தி கத்துவதை நினைத்தாலே அற்புதமாக இருந்தது. அவர் பல வருடங்களாக எனக்கு அதை செய்து வருகிறார்.

இப்படித்தான் அந்த மூன்று பெண்களைக் கொண்ட கூட்டணி அமைந்தது. அம்மாவிற்கு அப்போது நாற்பத்தைந்து வயதாகியிருந்தது. முதலில் எங்கள் உடல்நிலையை சோதனை செய்ய ஒரு டிசம்பர் மாதத்தில், குளத்தில் இருபத்தி நான்கு மணி நேரம் நீந்திப் பார்த்தோம். பிறகு சானலில் நீந்துவதற்கு முன்னர் ஒரு முறை மும்பையில் நீந்தினோம். உண்மையில் முதல் முயற்சியில் ஒன்பது மணி நேரம் நீந்தி, தோல்வியில் தான் முடிந்தது. நான் ஒரு போட்டியில் இருந்து விலகிய முதலும் கடைசி முறையும் அது தான். சீதோஷணம் மோசமாக இருந்தது. கடலும் அலைமோதலாக இருந்தது. எங்களுக்கு குமட்டலாக இருந்துக் கொண்டே இருந்தது.

இது நடந்தது அவர் இரண்டாவது முறையாக இங்கிலீஷ் சானலைக் கடந்த போது. அதற்கு முன்னரே, பதினாறு வயதில், தனியாக நீந்தி இங்கிலீஷ் சானலை கடந்திருக்கிறார்.

குடியரசுத் தலைவர் அளித்த விருது

2012 ல் குடியரசுத் தலைவரிடம் இருந்து டென்சிங் நோர்கே (Tenzing Norgey)vவிருது பெற்றார்.

“ அது ஒரு கலவையான உணர்வு. விருது வழங்கும் தினத்திற்கு முந்தைய தினம் ஒத்திகை பார்க்கப்படும். பாதி உற்சாகத்தை அன்றே அனுபவித்து விடுவீர்கள். விருதை எப்படி பெற்றுக் கொள்வது என்று சொல்லிக் கொடுப்பார்கள், அதனால் அன்றே விருதை கையில் தொட முடியும், பின்னர், திருப்பி வாங்கிக் கொள்வார்கள்.
அதே நிகழ்வின் போது தான், யுவராஜ் சிங்கிற்கும் அர்ஜுனா விருது வழங்கினார்கள். அன்றைய தினத்தின் சிறப்பாக எனக்கு இருந்தது, விருது வழங்குவதற்கு முன் படிக்கப்படும் அறிமுகத்தில் அவருடைய சாதனைகளையும் சொல்வார்கள். அப்படி, என்னுடைய நீச்சல்களை எல்லாம் படித்த உடனே, கூட்டத்தில் இருந்து ‘ஓ..’ என்று ஒரு சத்தம் வந்தது.”
image


பனிக்கட்டியில் நீச்சல்

பக்தி ஷர்மாவின் தற்போதைய லட்சியம், அண்டார்டிகாவின் பனிக்கட்டிகளுக்கு மத்தியில் நீந்துவது. அதற்காக நிதி திரட்டிக் கொண்டும், ராஜஸ்தானில் உள்ள ஒரு அரசு சாரா அமைப்பிற்கு ஆதரவு அளித்துக் கொண்டும் இருக்கிறார். மேலாளரோ , முறையான பயிற்சியாளரோ இல்லாத பக்தி தன் கனவுகளை நனவாக்க தனித்துப் போராடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு இருக்கும் ஒரே ஆதரவு அவருடைய பெற்றோர் தான்.

அவரது ஒரு நாள் அட்டவணைக் குறித்து “ இப்போது நீச்சலுக்கு தயாராகிக் கொண்டிருப்பதால், காலையில் இரண்டு மணி நேர பயிற்சியோடு தான் தினம் தொடங்கும். பின், தோள்பட்டை காயங்களுக்காக பிசியோதெரபி. அதன் பின், நாள் முழுக்க படிப்பேன், ஸ்பான்சர்களுக்கு நிறைய மெயில் அனுப்ப வேண்டி இருக்கும், மாலையில் ஜிம். தற்போது நான் தான் தடகள வீரர், நீச்சலை ஏற்பாடு செய்யும் மேனேஜர், மக்கள் தொடர்பாளர் மற்றும் ஸ்பான்சர்கள் தேடும் ஏஜெண்ட்” என்கிறார்.

மற்ற தடகளங்களில் இருந்து மிகவும் மாறுபடும் நீச்சலில், பெண்களுக்கு எண்ணிலடங்கா சவால்கள் உள்ளது. பக்தி ஷர்மா ஒரு முறை இதிலிருந்து வெளியேற வேண்டி இருந்தது, ஆனால், அவர் தைரியத்தை இழக்கவில்லை.அனைவரும் அவரைப் போல வலுவானவர்கள் இல்லை.


“ நீச்சல் இங்கு கொண்டாடப்படும் தடகளம் இல்லை தான். என்னுடன் நீந்தும் பிற பெண்கள், வளர வளர நீச்சல் உடை பிரச்சினையினால் இதிலிருந்து வெளியேறுவதை பார்த்திருக்கிறேன், அரசு பள்ளிகளில் இருந்து இதற்கு தேவையான உடை இல்லாமல் வரும் பெண்களுக்கு அது எவ்வளவு கடினமாக இருந்திருக்கும் என்பதையும் பார்த்திருக்கிறேன்” எனும் பக்தியின் திறந்தவெளி நீச்சல், அதன் தகுதிக்கேற்ற வெளிச்சத்தை பெற வேண்டும் என்பதே. 

அவருடைய வாழ்க்கை திரைப்படமாக எடுக்கப்படும் பட்சத்தில், அதில் தான் மிகவும் ரசிக்கும் காட்சி, “கடலிலோ, குளத்திலோ பத்து இந்திய பெண்களுடன் நீந்திக் கொண்டிருப்பது போல், அலைகள் என்னைத் தாலாட்ட நான் அப்படியே அதில் மிதந்துக் கொண்டிருப்பேன்” என அழகாக விவரிக்கிறார்.

Add to
Shares
1
Comments
Share This
Add to
Shares
1
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக