பதிப்புகளில்

'ஸ்மார்ட் நகரங்கள்'- இந்தியா அதற்கு தயாராக இருக்கிறதா?

ஏற்கனவே இருக்கும் நகரங்களை ஸ்மார்ட் நகரங்களாக மாற்றுவதை விட புதிதாக ஸ்மார்ட் நகரங்களை உருவாக்குவதே எளிது!

14th Aug 2016
Add to
Shares
27
Comments
Share This
Add to
Shares
27
Comments
Share

மத்திய அரசின் திட்டங்களில் 'ஸ்மார்ட் நகர' திட்டம் குறிப்பிடத்தக்க ஒன்று. அண்மையில் புனேவில் நடந்த ஸ்மார்ட் நகரங்களின் கண்காட்சி ஒன்று நடந்தது. இங்கு முதல் 20 இடங்களை பெற்ற ஸ்மார்ட் நகரங்களை வெளிப்படுத்தியதன் மூலம், இந்த திட்டம் மேலும் உத்வேகம் அடைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இந்த திட்டம் ஒரு மக்கள் இயக்கம் எனவும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கைய்யா நாயுடு இது ஒரு நகர மறுமலர்ச்சி திட்டம் என்றும் வர்ணித்துள்ளனர். இத்திட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, பெருமளவிலான நிதி ஒதுக்கீடு அறிவிப்புடன், இந்திய நகரங்கள் புதுப்பொலிவுடன் தோற்றமளிக்கச் செய்ய உறுதியுடன் செயல்பட்டுவருகிறது அரசு. 

image


சேரிகளின் புனரமைப்பையும் உட்படுத்தி, ஸ்மார்ட் தெருக்கள் மற்றும் நடைபாதை திட்டங்களுடன், ஒருங்கிணைந்த பயணத் தடங்கள் அவற்றில் சீரான, தடையற்ற போக்குவரத்திற்கான திட்டங்களை விரிவான முறையிலும், பரந்த அளவிலும் அதிக முக்கியத்துவம் கொடுத்து நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. ஏற்கனவே, இத்தகைய திட்டமிடுதல்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் நகரங்களில் அவற்றின் உள்கட்டமைப்புகளை அடுத்தக் கட்டத்திற்கு தரம் உயர்த்த வேண்டிய தேவையுள்ளது.

இத்தகைய சூழலில், ஒரு ஸ்மார்ட் நகரக் கனவை நனவாக்க தேவையான கட்டமைப்புகளையும், அதற்குரிய சவால்களையும் கூடவே, அதனால் கிடைக்கும் புதிய வாய்ப்புகளை பற்றியும் நாம் ஆய்வு செய்யலாம்.

உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்துவதால் மட்டும் ஒரு ஸ்மார்ட் நகரத்தை உருவாக்கிவிட முடியாது. கூடவே, உங்கள் வாழ்க்கை முறையில் ஒன்றிப்போன வழிகாட்டும் கருவிகளை அல்லது தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை மனிதன் மற்றும் மெசின்கள் பரஸ்பரம் தொடர்புக்கொள்ளத்தக்க வகையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதன் மூலம், சமூகத்தில் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு தேவையான வழியை அமைக்க முடியும். ஆம். தொழில்நுட்பக் கருவிகள் நகரக் குடியிருப்புகளின் பொலிவை நிச்சயம் கூட்ட உதவும் என்பதுடன், நிலையான ஸ்மார்ட்டான குடியிருப்புகளை உருவாக்கவும் முக்கிய பங்கு வகிக்கும். அதற்காக, தற்போது நடைமுறையிலிருக்கும் தாறுமாறான நகரமயமாக்கலுக்கு முடிவு கட்டிவிடும் என்று பொருள் கொள்ளத் தேவையில்லை.

ஒரு ஸ்மார்ட் நகரத்தை நிர்மாணிப்பதில் முக்கியமாக எழும் சவால்களை பார்ப்போம்.

ஸ்மார்ட் குடிமக்கள் : ஒரு ஸ்மார்ட் நகரம் செயல்பட ஸ்மார்ட்டான குடிமக்கள் தான் முதலில் தேவை. இன்று, நம்மில் பலரும் அடிப்படை குடிமைப்பண்புகள் கூட இல்லாமல் தகுதியற்றவர்களாகவே இருக்கிறோம். ஒரு நாகரீக சமூகத்திற்கு தேவையான விதிகளை நம்மால் சரிவர பின்பற்ற இயலவில்லை. இந்த விதிகளை மிகச் சுலபமாகவே மீறிவிடுகிறோம். எனவே, குடிமக்கள் ஒரு ஸ்மார்ட் நகர சூழலுக்கு தக்கவகையில் மாறுவதற்கு முன்னர், அவர்களுக்கு இத்தகைய ஒழுக்கங்களை கற்றுக் கொடுத்து, அவற்றை சரிவர பின்பற்றச் செய்வது சவாலான ஒன்றாகவே இருக்கும். நகரங்களில் இருக்கும் மற்ற பிரச்சினைகளை சரிசெய்வதற்கு முன்னர், ஸ்மார்ட் நகர திட்டங்கள் இந்த பிரச்சினையில் போதுமான அளவு கவனம் செலுத்த வேண்டும்.

ஸ்மார்ட் உள்ளாட்சி : நமது உள்ளாட்சி நிர்வாகங்களின் மோசமான உள்கட்டமைப்புகள், எதோ ஒன்று தவறாக இருப்பதை சொல்லிக் கொண்டிருக்கின்றன. உலகில், சில நாடுகளில் இருக்கும் மக்கள்தொகையை விட அதிக மக்கள் வசிக்கும் சில நகரங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு போதியளவு அதிகாரம் இருப்பது மிகவும் தேவையாக உள்ளது. நகரங்களையும் அவற்றின் நிர்வாகத்தையும் அற்பமாக அணுகுவது, இந்த விஷயத்தில் எள்ளளவும் உதவப்போவதில்லை. மேலும், ஒரு ஸ்மார்ட் நகரத்தை கட்டமைத்து அதனை பராமரிப்பது அதிக செலவுமிக்கது. எனவே, தொழில்நுட்பக் கருவிகளையும், சென்ஸார்களையும் ஒரு நகரம் முழுவதும் பொருத்துவதற்கு முன்னர், ஸ்மார்ட் நகரங்களை நிர்வகிக்கவும், பிரச்சினையின்றி நடத்திச் செல்லவும் வசதியாக சிறந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் அமைக்கப்படல் வேண்டும்.

ஸ்மார்ட் நிதிகள் : நகரம் என்றாலே, அவற்றின் நிதியை பற்றி பேசுவது அரிதான ஒன்றாகி விட்ட ஒன்று. மத்திய, மாநில அரசுகளின் வருமானத்தில் நகரங்கள் மிக முக்கிய பங்குவகிக்கின்றன. ஆனாலும், அவைகள் தங்கள் நிர்வாகத்திற்கும், பராமரிப்பிற்கும் போதுமான விகிதத்தில் நிதியை பெறுவதில்லை. நகராட்சிகள், சிறந்த வரி வசூலிப்பு முறைகளையும், சேவைகள் மூலம் தங்கள் வருவாயை மேம்படுத்திக் கொள்ளவும், புதிய வழிவகைகள் மூலம் தங்கள் வருவாயை பெருக்கிக் கொள்ளவும் செய்ய வேண்டியது மிக முக்கியமான தேவையாக உள்ளது.

ஸ்மார்ட்டாக திட்டமிடல் : இந்திய நகரங்கள் எதுவுமே திட்டமிட்டு நிர்மாணிக்கப்பட்டவையல்ல. அவை இயல்பாகவே நகரங்களாக உருவெடுத்தவை. 60 ஆண்டுகள் கடந்த, சண்டிகர் மட்டுமே திட்டமிட்டு நிர்மாணிக்கப்பட்ட நகரமாக உள்ளது. நகரத்திற்காக திட்டமிடுபவர்கள் நீண்டகாலத் தேவைகளையும் மனதில் கொண்டே திட்டமிட வேண்டும். அடுத்து வரப் போகும் 30 முதல் 50 ஆண்டுகளில் உள்ள வளர்ச்சியை கணக்கில் எடுக்க வேண்டும். இதற்கு இடையூறாக வரும் தடைகளையும், எதிர்பாராமல் நேரும் நெருக்கடிகளையும் எதிர்கொள்ளும் வகையில் திட்டமிடல் அமைய வேண்டும். புதிய தொழில்நுட்பங்கள் வரும் போது, அதற்கேற்றவாறு நகர இயக்கம் மற்றும் வாழ்க்கை முறைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப தகவலமைத்துக் கொள்ளும் வகையிலான செயல்திட்டம் வரையப்படல் வேண்டும். இதன் மூலம், இன்னும் கண்டுபிடிக்கப்பட வேண்டிய தொழில் நுட்பத்திற்கு தக்க வகையில் நகர தோற்ற அமைப்பில் மாற்றங்களை கொண்டுவருவது சாத்தியப்படும். இன்னும் சொல்லப் போனால், தொழில்நுட்பம், அழகியல் மற்றும் ஒருங்கிணைந்த இயக்கம் போன்றவற்றில் நன்கு தெளிவுள்ள ஸ்மார்ட் நகர திட்டம் வகுப்பாளர்களே நமக்குத் தேவை. இதனாலேயே, பல தனியார் கம்பெனிகளும் ஸ்மார்ட் நகர திட்டங்களில் நுழைந்துள்ளன. ஆனால் அதற்கு முன்னர், இந்த கனவுத் திட்டத்தை நன்கு புரிந்து கொண்டுள்ள ஒரு குழுவினர் நகர்ப்புற வளர்ச்சித் துறைக்குத் தேவை.

ஸ்மார்ட் அதிகாரமையம் : ஆட்சிமுறைகள் குறித்த தற்போதைய மனநிலைகள் மாற வேண்டும். ஸ்மார்ட் நகரத்தை நடத்திச் செல்ல வேண்டிய முழுப் பொறுப்பும் தங்களுடையது என்ற சிந்தனையுள்ள அரசு அதிகாரிகள் நமக்குத் தேவை. ஸ்மார்ட் நகரம் நிர்மாணிக்கப்பட்டு காலங்கள் பல கடந்தாலும், ஏற்படும் மாற்றங்களை அனுசரித்து அதிகரிக்கும் தரவுகளை கையாளும் வகையிலான தொழில்நுட்பப் பயிற்சிகள் அவர்களுக்கு தரப்படல் வேண்டும்.

இந்த பட்டியல் இன்னும் நீண்டு போகலாம். ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் ஒரு நகரத்தை புனரமைத்து ஸ்மார்ட் நகரமாக உருவாக்குவதை விட புதிதாக ஒரு ஸ்மார்ட் நகரத்தை நிர்மாணிப்பது மிகவும் எளிது. இதற்காக நமது பழைய பழக்கங்களை தூக்கியெறிய வேண்டியிருக்கும். மாற்றங்களும், இடம் பெயர்தலும் கடினமான பணியாக நமக்குத் தெரியக்கூடும். சேரி நிலங்கள், குறைந்த விலையில் வீடுகள், நகரப் போக்குவரத்து, பழைய நகரத்தின் பகுதிகள் மற்றும் கட்டிடங்களை தரம் உயர்த்தல், கழிவு நீர், உள்கட்டமைப்பு வசதிகள், மின்கம்பிகள், என ஒவ்வொன்றையும் மறுசீரமைக்க வேண்டிய சூழல் ஸ்மார்ட் நகரக் கட்டமைப்பின் போது ஏற்படக் கூடும்.

நகரவாசிகளுக்கு, மின்சாரம், பார்க்கிங், தண்ணீர், குப்பைகள் அகற்றுதல் எனப் பல சேவைகள் மானியமாகவோ அல்லது இலவசமாகவோ கிடைத்து வருகிறது. இன்னும் பல சேவைகளுக்கு நாம் முழுமையாக பணம் அளித்து வருகிறோம். ஆனால், இவ்வாறு நம்மால் செலவழிக்கப்படும் பணங்களினால் என்ன பயன் என்பது நமக்குத் தெரியவில்லை. எதற்காக நம்மிடமிருந்து அந்த பணம் வசூலிக்கப்படுகிறதோ, அந்த தேவைக்காக அந்த பணம் முறையாக செலவழிக்கப்படுகிறதா? இதற்கு முன்னர் கல்வி வரி என வசூலிக்கப்பட்ட 12000 கோடி ரூபாய் இப்போதும் பயன்படுத்தப்படாமல் இருந்து கொண்டிருக்கிறது. தூய்மை இந்தியா திட்டத்திற்காக போடப்பட்ட வரி ஏற்கனவே 2000 கோடி ரூபாய் தாண்டிவிட்டது.

எனவே, ஒரு குடிமகனாக, ஒரு ஸ்மார்ட் நகரத்தை வடிவமைக்கும் போது, நான் வரியாக கட்டும் பணத்திற்கு ஈடாக அதற்குரிய பலனை நெரிசலற்ற போக்குவரத்து, கழிவு மேலாண்மை, பார்க்கிங் மற்றும் நடைபாதை வசதிகளை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட சேவைகள் மூலம் எதிர்பார்ப்பேன்.

எனவே, ஸ்மார்ட் நகரத்தை கட்டமைப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. தொழில்நுட்பம் மற்றும் கருவிகளையும் தாண்டி பல முக்கிய பிரச்சினைகளையும் நன்கு உணர்ந்து, ஸ்மார்ட் நகரங்கள் கட்டமைக்கப்பட்டாலே, பல தலைமுறைகள் தாண்டியும் அவை நிலைத்திருக்கும் முடியும்.

ஆங்கில கட்டுரையாளர்: டி.சிட்டிபாபு, அக்ஷயா பிரைவேட் லிமிட்டட் நிறுவனத்தின் சிஇஒ. 

Add to
Shares
27
Comments
Share This
Add to
Shares
27
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக