பதிப்புகளில்

இந்தியா ஏன் ஆசிரியர்களை தனிமைப்படுத்தக்கூடாது?

YS TEAM TAMIL
16th Feb 2016
Add to
Shares
4
Comments
Share This
Add to
Shares
4
Comments
Share

முரகாமியின் புதிய பரிசோதனை முயற்சியான நார்வேஜியன் வுட் புதினத்தில் வரும் ஆசிரியை தன்னைப் பற்றி சொல்வார், “(…) என்னிடம் இருந்து சிறந்தவற்றை பெறுவதைவிட மற்றவர்களிடம் இருந்து பெறுவதில் நான் சிறப்பானவள். நான் தீப்பெட்டியின் சொரசொரப்பான பக்கம்(…).” இதுதான் ஆசிரியர்களின் திறமையா என்று வியந்திருக்கிறேன். கற்பித்தல் என்பது வெளிச்சத்தைப் பரவலாக்குவது, ஆசிரியர்கள் எப்போதும் உரசினால் நெருப்பு வரும் சொரசொரப்பான பக்கத்தைப் போன்றவர்கள்.

குழந்தைகளின் சேர்க்கை 96 சதவீதமாக இருந்தபோதிலும், கல்வி பெறும் உரிமையின் (ஆர்டிஇ) பணி மிக அதிகமாக இருக்கும். இதுவொரு தொடக்கம் என்றுதான் கூறுவேன். கற்பித்தல் மற்றும் கற்றலின் சந்தேகத்திற்குரிய திறனை ASER தகவல் பிரதிபலிக்கிறது. 75 சதவீத ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் இரண்டாம் வகுப்பு புத்தகத்தை வாசிக்கமுடியாதவர்களாக இருக்கிறார்கள். ஆசிரியர்களுக்குத் தகுதித் தேர்வு, சிபிஎஸ்இயால் நடத்தப்படும் ஆசியர்களுக்கான தேர்வில் சராசரியாக 14 சதவீதம் அல்லது அதைவிடதேர்ச்சி விகிதத்தில் குறைவு.

விஷய ஞானம் இல்லை மற்றும் ஆழமான அறிவு இல்லாமையும் ஆசிரியர்களின் நிலையைக் காட்டுகிறது. ஆசிரியர்களை தகுதியுடையவர்களாக மாற்றவேண்டிய ஆசிரியர் தொழில் வளர்ச்சிக்கான சாத்தியம் இருக்கிறது.

image


உலகம் முழுவதும் கொள்கை வகுப்பாளர்கள், ஆய்வாளர்கள், ஆசிரிய கல்வியாளர்கள், பள்ளித் தலைவர்கள் மற்றும் பலர் ஆசிரியர் தொழில் வளர்ச்சிக்கான சவாலை எதிர்கொள்ள முயற்சிக்கிறார்கள். சேவை பயற்சி மற்றும் அர்த்தமுள்ள முன் சேவையில் தொடங்கி, வரையறுக்கப்பட்ட வேலை வளர்ச்சி, ஆதாரம் சார்ந்த கொள்கை மாற்றங்கள் எல்லாம் கற்பித்தல் மற்றும் ஆசிரியர் வளர்ச்சியில் செய்யப்பட்டுள்ளன.

இங்கே இந்தியா விரைவாக கவனிக்கவேண்டிய சில தேவைகள்.

மேம்பட்ட பயிற்சியின் தரம்

தரமான ஆசிரியர் பயிற்சியின் முக்கியத்துவம் பற்றி வளரும் கருத்துகள் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன. ஆனால் வேகமாக அல்ல. தற்போதுள்ள பிஎட் படிப்புக்கான பாடத்திட்டம் 21ம் நூற்றாண்டின் தேவையைப் பூர்த்தி செய்வதாக இல்லை. அவை ஏறக்குறைய வரலாற்றுக் காலத்தைச் சார்ந்தவையாக இருக்கின்றன. பணிக்கு முன்பான பயிற்சியைத் தவிர, தொடரும் பணியில் கிடைக்கும் பயிற்சிகள் முக்கியமான திறன்களை நோக்கமாகக்கொண்டவை.

பணியில் கிடைக்கும் பயிற்சிகள் ஆசிரியர்களின் சொந்த பாட அறிவு மற்றும் வழிகாட்டும் அணுகுமுறைகளை உயர்த்துகின்றன. பயற்சியின் முக்கியமான அம்சங்களாக தேவைப்படுவது, வகுப்பறை மேலாண்மை, நடத்தை மேலாண்மை கூறுகல், தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் விழிப்புணர்வு, அறிவுறுத்தல்கள், பெற்றோர் மற்றும் சமூகப் பங்களிப்பு.

வழிகாட்டுதலும் ஆதரவும்

விரைவான தீர்வுகளில் ஒன்றான ஆசிரியர் வளர்ச்சியை ஆதரிப்பதும், மேம்படுத்துவதும் என்பது சிறந்த கிரகித்தல் மற்றும் கருத்து அறியும் முறை. முறையான வகுப்புகளை கண்காணிக்கும் திட்டம் இல்லாமை மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சி, வளர்ச்சிக்கான வாய்ப்புகள் எல்லாம் மறைந்துவிட்டன.

ஆசிரியர்களின் திறனை அளவிடும் மெட் ஆய்வு அதிகபட்ச விளைவுகளை பட்டியலிடுகிறது, குறைந்த செலவு, ஆசிரியர் பயிற்சியில் பிரதிபலிக்கும் நுட்பங்கள், ஆசிரியர்கள் வகுப்பெடுக்கும் 10 நிமிட காணொலிக் காட்சி உள்பட. கவனம், வழிகாட்டுதல் மற்றும் குறிக்கோளுடன் கூடிய பயிற்சி எல்லாம் கட்டாயமானவை. அவை ஆசிரியர்களின் திறனை கடுமையான முறையில் மேம்படுத்துபவை.

சிறந்த பயிற்சிகளைக் கவர்தல்

கற்பித்தல் என்பது தனிமைப்படுத்தப்பட்ட வேலை. நல்ல ஆசிரியர்கள் எளிதாக மனம் நொந்துவிடக்கூடும். அறிவைப் பகிர்தல் இல்லாமையும், பலவிதமான சிறந்த பயிற்சிகளின் மரணமும் மாற்றதை தனிமைத் தீவாக மாற்றிவிடுகின்றன. இந்தப் பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்கான வழிகளில் ஒன்று தொழில் கற்றல் சமூகங்களை (PLC Professional Learning Communities பிஎல்சி) உருவாக்குதல். உலகம் முழுவதும் கல்வியாளர்கள் பிஎல்சிக்களை மேம்படுத்துகிறார்கள். சிங்கப்பூர் மற்றும் ஷாங்காய் நகரங்களில் ஆசிரியர்கள் சார்ந்த பிஎல்சிக்கான பிஸா (பிஐஎஸ்ஏ) தேர்வுகளில் வெற்றிப்பெற்றுள்ளனர்.

அருகருகே வசிக்கும் ஆசிரியர்கள் அவ்வப்போது சந்தித்து கற்றல் மற்றும் கற்பித்தல் அனுபவங்களை பகிர்ந்துகொள்வதன் மூலம், வகுப்பறைகளில் அதன் நேர்மறையான விளைவு தெரியவரும். பிஎல்சிக்கள் ஆசியர்கள் வலைப்பின்னலுக்கு உதவுகிரது, உரிமை எடுக்க, உள்ளூர் முடிவுகளை உற்சாகப்படுத்த, சிறந்த பயிற்சியை அளவிட மற்றும் ஆசிரியர்கள் பிரதிபலிக்க மற்றும் முன்னேறுவதற்கான வெளியை உருவாக்குகிறது.

வாழ்க்கையின் பாதை

நல்ல தனித்துவமான ஆசிரியர் பயிற்சியும் கற்றல் முறையும் ஒரு சிறந்த ஆசிரியரை இரு ஆண்டுகளில் உருவாக்கிவிடும். நல்ல ஆசிரியர்களை அந்தச் சூழலில் இருந்தே உற்சாகப்படுத்துவது என்பது மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக இருக்கிறது. சிங்கப்பூர் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆசிரியர்களின் தகுதியை பரிசோதிக்கும் தேர்வை நடத்தி வருகிறது. அந்தப் பாடத்திட்டம், மூத்த ஆசிரியர்கள் மற்றும் பள்ளியின் தலைமையிடம் இருந்தும் அவருடைய பணிக்கான பாதையை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். ஆசிரியர்களின் தகுதியை மேம்படுத்துவதற்கான அனைத்து வசதிகளையும் செய்கிறார்கள். இதுபோன்ற வசதிகளை அளிப்பதால் ஆசிரியர்கள், தங்கள் திறனை மேம்படுத்திக்கொள்வதுடன், ஆசிரியப் பணியிலும் நீடிக்கலாம்.

திறனை மதிப்பிடுதல்

“எதை அளவிடுகிறார்கள், எதை மதிப்பிடுகிறார்கள்” என்று அவர்கள் கூறுகிறார்கள். பயிற்சி மற்றும் பாடத்திட்டதை வகுப்பறையில் மாணவர்களுக்கு எப்படி வலிமையாக ஆசிரியர்கள் கடத்துகிறார்கள் என்பதை உறுதிசெய்யும் பொருட்டு, அதனை வெற்றிக்கான குறியீடுகள் துல்லியமாக காட்டும். ஆசிரியர்களின் பணிகள் பற்றி அவ்வப்போது நடைபெறும் பரிசீலனைகள் அவர்களுடைய பயிற்சியை மேம்படுத்தும்.

சத்தம் நிறைந்த சிக்கலான இடத்தில் ஒரு சிறிய அடிகூட மிகப்பெரிய பனிபந்துபோலத் தெரியும். எப்போதும் ஆசிரியர்கள் சோம்பலானவர்கள், திறமையற்றவர்கள் என்று சிலர் சொல்லக்கேட்டிருக்கலாம். நான் அப்படி நினைக்கவில்லை. நான் 15 ஆண்டுகளாக ஆசிரியையாக பணியாற்றும் ராஷியா பானுவின் கதையைச் சொல்ல தூண்டப்பட்டேன். சில மாதங்களுக்கு முன்பு நான் கர்நாடாக மாநிலத்தின் குனிகல் வட்டத்திற்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன்.

பள்ளியில் இருந்து 30 கிமீ தூரத்தில் இருந்த ராஷியா, தினமும் அருகிலுள்ள நகரத்திற்கு பேருந்தில் சென்றுவிடுவார். அதற்கடுத்து ஆறு பேர் அமரும் ஆட்டோவில் ஏறி மலையடிவாரம் செல்வார். பின்னர் ஒரு பைக்கில் அவருடைய பள்ளிக்குச் செல்வார். அங்கு ஆறு மாணவர்கள் அவருக்காக காத்திருப்பார்கள்.

இப்படித்தான் அவர் 15 ஆண்டுகளைக் கடந்திருக்கிறார். ஆனால் அவரது வகுப்பில் 14 மாணவர்களுக்கு அதிகமாக இருந்ததில்லை. அவருடைய ஊக்கத்தைக் கண்டு நான் பெருமைகொண்டேன். அந்தப் பள்ளிக்கூடத்துக்கு பள்ளித் தலைவர் தொடங்கி நிர்வாகம் முதல் ஆசிரியையாக இருந்தது எப்படி என்று விரிவாக பகிர்ந்துகொண்டார். பத்து ஆண்டுகளாக எந்த பயிற்சியும் அவர் பெறவில்லை. தனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் குழந்தைகளுக்கு ராஷியா கொடுத்தார்.

ராஷியாவைப் போன்ற ஆசிரியர்கள் நம்மைச் சுற்றி நிறைய பேர் இருக்கிறார்கள். இதுபோன்ற ஆசிரியர்களை நாம் ஆதரித்து அவர்களை கற்பிப்பதற்கான உத்வேகத்தை அளிக்கவேண்டும். வகுப்புகளில் மாணவர்கள் ஒவ்வொருவரிடமும் சிறந்த திறனை வெளிக்கொணரவேண்டும், அதுபோலவே ராஷியா போன்ற ஆசிரியர்களிடமும் இருக்கும் சிறந்த திறமைகளையும் வெளிப்படுத்தவேண்டும்.

ஆசிரியர்களை தனிமைப்படுத்தாதீர்கள்!

கட்டுரையாளர் பற்றி

பொறியாளரான ஸ்ருதி ரெங்கநாத் அய்யர், இதயபூர்வமான ஓர் ஆசிரியை. இன்போஸிஸ் சில காலம் வேலை செய்துவிட்டு, டீச் பார் இந்தியா ஃபெலோஷிப் பெற்றார். தற்போது அவர் Hippocampus Learning சென்டர்களில் ஆசிரியர் பயிற்சியில் மும்முரமாக இருக்கிறார். இந்த அமைப்பு கிராமப்புற இந்தியாவில் குழந்தைப் பருவக் கல்வியில் கவனம் செலுத்துகிறது.

ஆக்கம்: GUEST AUTHOR தமிழில்: தருண் கார்த்தி

(இக்கட்டுரையில் வெளியிட்டுள்ள கருத்துக்கள் ஆசிரியருடைய சொந்த கருத்து. யுவர்ஸ்டோரி அதற்கு பொறுப்பேற்காது)

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்இது போன்ற கல்வி தொடர்பு கட்டுரைகள்:

பள்ளிக் கல்விக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த ஆசிரியை 'சீமா காம்ப்ளே'வின் கதை!

கல்வி கற்பித்தலில் பிசித்ரா பாத்சாலாவின் தனித்துவமான அனுகுமுறை!

Add to
Shares
4
Comments
Share This
Add to
Shares
4
Comments
Share
Report an issue
Authors

Related Tags