பதிப்புகளில்

கருத்து வேறுபாடு காரணமாக ஃபேஸ்புக் நிறுவனத்தை விட்டு விலகிய ஆக்குலஸ் இணை நிறுவனர்!

posted on 26th October 2018
Add to
Shares
7
Comments
Share This
Add to
Shares
7
Comments
Share

ஃபேஸ்புக் நிறுவனத்திலிருந்து பலர் வெளியேறுவதைப் பார்க்கமுடிகிறது. கடந்த இரண்டாண்டுகளில் ஃபேஸ்புக் வாங்கிய ஆறு நிறுவனங்கள் அல்லது ஸ்டார்ட் அப்களின் நிறுவனர்கள் வெளியேறி உள்ளனர். இன்ஸ்டாகிராம் இணை நிறுவனர்களான கெவின் சிஸ்ட்ரோம் மற்றும் மைக் க்ரீகர் இருவரும் வெளியேறிய ஒரு மாதத்திற்குள்ளாகவே ஆக்குலஸ் நிறுவனத்தின் (2012-ம் ஆண்டு ஃபேஸ்புக் இரண்டு பில்லியன் டாலருக்கு வாங்கிய மெய்நிகர் உண்மை ஸ்டார்ட் அப்) இணை நிறுவனர் ப்ரெண்டன் இரிபே வெளியேறப்போவதாக அறிவித்துள்ளார்.

ப்ரெண்டன், ஃபேஸ்புக் பிசி விஆர் குழுவின் தலைமைப் பொறுப்பில் இருந்தபோதும் தான் வெளியேறுவதற்கான காரணத்தை அவர் குறிப்பிடவில்லை. தனது இருபதாண்டுகால பணி வாழ்க்கையில் இவ்வாறு வெளியேறுவது இதுவே முதல் முறை என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளார். அவரது உயர் அதிகாரிகளுடன் இணக்கமான சூழல் இல்லை என்றே கூறப்படுகிறது.

image


ஆக்குலஸ் எதிர்கால செயல்பாடுகள் குறித்த ப்ரெண்டனின் உயர் அதிகாரியின் பார்வை அவரது கண்ணோட்டத்தில் இருந்து அடிப்படையாகவே மாறுபட்டதாக இருப்பதாக ப்ரெண்டன் கருதுகிறார் எனவும் வரவிருக்கும் ப்ராடக்ட் (ரிஃப்ட் 2 ஹெட்செட்) ரத்து செய்யப்பட்டது இந்த இறுதி முடிவை எடுக்க வைத்ததாகவும் டெக் க்ரன்ச் அறிக்கை தெரிவிக்கிறது.

முன்னணி வகிக்கக்கூடிய பிசி சார்ந்த விஆர் ஹார்ட்வேரில் கவனம் செலுத்தாமல் Oculus Go, Oculus Quest போன்ற விலைமலிவான தனித்தியங்கும் ஹெட்செட்களில் ஃபேஸ்புக் அதிக கவனம் செலுத்துவதை ப்ரெண்டன் எதிர்த்தார். இது செயல்திறனில் சமரசம் செய்துகொள்ளும் போக்காக மாறிவிடும் என்பதே அவரது கருத்தாக இருந்தது.

அவர் வெளியேறுவதாக அறிவித்தது குறித்து ஃபேஸ்புக் தெரிவிக்கையில்,

“ப்ரெண்டன் அற்புதமான நிறுவனத்தையும் குழுவையும் உருவாக்கியுள்ளார். மெய்நிகர் உண்மை பிரிவில் காணப்பட்ட எல்லைகளைக் கடந்து செயல்பட்டார். அவரது இலக்கின் காரணமாகவே நாம் அனைவரும் இன்று மெய்நிகர் உண்மை பகுதியில் செயல்பட்டு வருகிறோம். அவரது தலைமைத்துவத்திற்கும் சாத்தியமில்லாததை உருவாக்குவதில் இருந்த அர்ப்பணிப்பிற்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். நிறுவனத்தில் இருந்து அவர் விலகுவது ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தும்,” என்றார்.

ஆக்குலஸ் நிறுவனத்தின் மற்றொரு இணை நிறுவனரான பால்மெர் லெக்கி ஃபேஸ்புக்கால் பதிவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான உறுதியான காரணங்கள் வெளியிடப்படவில்லை. இதனிடையில் மூன்றாவது இணை நிறுவனரான நேட் மிட்செல் ஃபேஸ்புக்குடன் தனது பணியைத் தொடர்கிறார். 

“ரிஃப்ட் எதிர்கால செயல்பாடுகள் குறித்து பல கேள்விகள் உள்ளன. புதிய ஹார்ட்வேர், மென்பொருள், உள்ளடக்கம் ஆகியவற்றுடன் ரிஃப்ட் / பிசி தளத்தை முன்னெடுத்துச் செல்வோம்,” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன்பு வெளியேறிய நிறுவனர்கள் ஃபேஸ்புக் சிஇஓ மார்க் ஜக்கர்பெர்க்கின் நோக்கத்துடன் தங்களது நோக்கத்தை ஒத்துப்போகச் செய்ய போராடியுள்ளனர். தற்போது ப்ரெண்டன் வெளியேறுவதாக அறிவித்துள்ளது இந்த போக்கு தொடர்வதை உணர்த்துகிறது. முதலில் நிறுவனர்கள் தங்களது சுய அதிகாரத்தை இழந்துவிட்டதாகவும் இரண்டாவதாக வருவாய் ஈட்டுவது தொடர்பான அவர்களது திட்டங்கள் ஃபேஸ்புக்கின் உயர்மட்ட அதிகாரிகளின் கருத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டாதகவே இருந்துள்ளது.

வாட்ஸ் ஆப் நிறுவனத்தை 2014-ம் ஆண்டு 19 பில்லியன் டாலருக்கு ஃபேஸ்புக் வாங்கியது. வாட்ஸ் ஆப் வருவாய் ஈட்டும் திட்டத்தில் ஜக்கர்பெர்கின் கருத்துடன் ஒத்துப்போகாத நிலையில் வாட்ஸ் ஆப் இணை நிறுவனர் பிரயன் ஆக்டன், கடந்த ஆண்டு நிறுவனத்தை விட்டு வெளியேறினார். ஃபேஸ்புக் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா மீது குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து பிரயன் இந்த ஆண்டு துவக்கத்தில் #DeleteFacebook என்கிற பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

வாட்ஸ் ஆப்பின் மற்றொரு இணை நிறுவனரான ஜேன் கௌம் இந்த முறைகேட்டின் காரணமாகவே வெளியேறினார். தனது பயனரின் அந்தரங்க தகவல்களை விற்றுவிட்டதாகவும் இந்த சமரசத்துடனே ஒவ்வொரு நாளும் வாழ்ந்து வந்ததாகவும் தாய் நிறுவனமான ஃபேஸ்புக் வாட்ஸ் ஆப் வருவாயை பெருக்குவதற்காக இத்தகைய செயலில் ஈடுபடவைத்ததாகவும் ஊடகங்களுடனான நேர்காணலில் தெரிவித்தார்.

ஃபேஸ்புக் விரைவாக அதிக வருவாய் ஈட்டவேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய இரக்கமற்ற தொழில்நுட்ப நிறுவனமாகவே மக்களால் பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் அதன் பிம்பத்தை சரிசெய்துகொள்ளத் தேவையான முயற்சிகளை எடுத்து வருகிறது. உலகம் முழுவதும் உள்ள அரசாங்க கட்டுப்பாடுகளைக் கையாள சமீபத்தில் சர்வதேச விவகாரங்களுக்கான தலைமைப் பொறுப்பில் முன்னாள் துணை பிரதமரை நியமித்திருப்பது இந்த முயற்சிக்கான சான்றாகும்.

ஆனால் ஃபேஸ்புக் அதன் தற்போதைய நிலையில் இருந்து மீண்டு வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ஆங்கில கட்டுரையாளர் : சோஹினி மிட்டர் : தமிழில் : ஸ்ரீவித்யா

Add to
Shares
7
Comments
Share This
Add to
Shares
7
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக