பதிப்புகளில்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் வெற்றிக்கு உறுதுணைபுரியும் 6 எளிய குணநலன்கள்!

Induja Raghunathan
14th Jun 2016
Add to
Shares
8
Comments
Share This
Add to
Shares
8
Comments
Share

தனது நடிப்புப் பயணத்தை 6 வயதில் தொடங்கிய சிவாஜி ராவ் கெயிக்வாட், மகாபாரத நாடகத்தில் ஏகலைவனின் தோழனாக நடித்து நாடக அரங்கேறினார். மராட்டியரான தாம் ஒருநாள் இந்திய அளவில் புகழ்பெற்ற சூப்பர் ஸ்டார் நடிகராவார் என அவரே எதிர்பார்த்திராத ஒன்று.

ஆம், ரஜினிகாந்த் என்று அனைவராலும் அறியப்பட்ட சிவாஜி ராவ், கர்நாடக மாநிலத்தில் 1950-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி மராத்தி குடும்பத்தில் பிறந்து இன்று தமிழ் மற்றும் உலக ரசிகர்களை தன் வசப்படுத்தி தமிழ் திரையுலகை ஆண்டு வரும் மனிதராக உயர்ந்து நிற்கிறார்.

ஏழ்மையான குடும்பத்தில் இளைய மகனாக பிறந்த ரஜினிகாந்த், தன் சிறுவயது முதலே கூலி வேலை உள்ளிட்ட பல சிறிய வேலைகளை செய்து குடும்பத்துக்கு வருமானத்தை ஏற்படுத்திய பொறுப்பாளி. ஆனால், அதேசமயம் பள்ளி நாடகங்களில் கலந்துகொண்டு தனது நடிப்பாற்றலையும் பட்டைத்தீட்டிக் கொண்டே வந்தார். சிறுவயதில் குருக்ஷேத்திர நாடகத்தில் துரியோதனாக ரஜினி நடித்த பாத்திரம் இன்றும் அவரது மறக்கமுடியாத ஒன்றாக இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

பின்னர், பெங்களூரில் பஸ் கண்டக்டராக இருந்தபோதும் மேடை நாடகங்களில் நடிப்பை தொடர்ந்த ரஜினிகாந்த், சென்னை பிலிம் இன்ஸ்டிடூட்டில் நடிப்பில் டிப்ளோமா பெற்று, இயக்குனர் கே.பாலசந்தரால் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் என அனைவரும் அறிந்த கதை.

கடந்த 1975-ம் வருடம் 'அபூர்வ ராகங்கள்' என்ற அற்புத படைப்பில் அறிமுகமான ரஜினிகாந்த் இன்று வரை சுமார் 160 திரைப்படங்களில் நடித்து எல்லார் இதயத்திலும் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் ஓர் அற்புத மனிதர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் என பல மொழிப் படங்களில் வெற்றிப்படங்களை தந்த ரஜினி, 2000-ம் ஆண்டு பத்ம் பூஷன் விருதும், 2016-ல் பத்ம விபூஷன் போன்ற இந்திய அரசின் உயரிய கவுரவங்களைப் பெற்ற பெருமையுள்ளவர். 

65 வயதாகியும் துள்ளல் நடையுடன் குறைவில்லாத ஸ்டைலுடன் நடித்துவரும் ரஜினிகாந்தின் வரவுள்ள கபாலி திரைப்படத்தின் டீசர் வெளியாகி இன்றுவரை, கிட்டத்தட்ட 20 மில்லியன் பார்வையாளர்களைக் கொண்டு இதுவரை இருந்த இந்திய சினிமா டீசர்களுக்கான சாதனைகளை உடைத்தெறிந்து சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை தக்கவைத்துள்ளது. 

கபாலி படம் ரிலீஸுக்கு முன்பே ரூ.200 கோடி பிசினஸ் செய்துள்ளதாக வெளியாகி உள்ள தகவல் ரஜினி ஒரு மாஸ் என்றும், அவர் வணிகரீதியாக லாபத்தை ஏற்படுத்தும் 'ப்ராண்ட்' என்ற கருத்தும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சினிமா உலகில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள், தொழில்நுட்ப முன்னேற்றம், இளம் நடிகர்களின் பிரவேசம் இது எதுவுமே இவரின் மவுசை கொஞ்சமும் குறைக்கவில்லை என்பது நாம் புரிந்துகொள்ளவேண்டிய பாடம். ரஜினியின் இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் 6 எளிய குணநலன்கள் இதோ...

1. பின்புலம் பெரிதல்ல: ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாலும் விரும்பிய துறையில் முன்னேறி வெற்றி காண நினைத்தால் பின்புலம் என்பது பெரிதல்ல. அதேசமயம் செல்ல நினைக்கும் துறைக்குத் தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொண்டு அதில் தீவிரமாக ஈடுபட்டால் மட்டுமே நினைத்ததை அடையமுடியும்.

2. தன்னடக்கமும் கடந்து வந்த பாதையை மறவாத குணமும்: கோடிகளில் வணிகமாகக் கூடிய சூப்பர் ஸ்டாராக உயர்ந்திருந்தாலும் ஒரு கணமும் தலைகனம் இல்லாது, எத்தகைய இடத்திலும் தான் கடந்துவந்த பாதையைப் பற்றி வெளிப்படையாக இன்றும் பேசுவது ரஜினிகாந்தின் சிறப்பம்சம். இதுவே அவரது நிலையான வெற்றிக்கு காரணம் என்றும் சொல்லலாம்.

3. விடாமுயற்சியும் கடின உழைப்பும்: வெற்றி, தோல்விகளை சகஜமாக கையாளுவது ஒரு கலை. அதேபோல் வாழ்க்கையில் சறுக்கல் நேர்ந்தாலும் அதிலிருந்து மீண்டெழுந்து விட்டுச்சென்ற வெற்றி இடத்தைப் பிடிப்பது அசாத்தியமானது. 2011-ல் ரஜினி கடுமையான உடல்நல பாதிப்பால் சிகிச்சை பெற்றுவந்தபோது பலரும் அவர் சினிமா உலகில் முடிந்த சகாப்தம் என்றே நினைத்தனர். 61 வயதிலும் விடாமுயற்சியுடன் போராடி, உடல் உபாதைகளைப் பொருட்படுத்தாமல் மீண்டும் வெற்றிநடை போடத்தொடங்கினார்.

4. இயல்பு மீறாத அணுகுமுறை: திரையில் அனல் தெறிக்க நடப்பதும், பன்ச் பேசி அசுதுவதும் ரஜினியின் ஸ்டைல். ஆனால் அதற்கு மாறாக வேட்டி, குர்தா என்று இயல்பான தோற்றத்துடன் வெளியுலகில் இயல்பான மனிதராக தோன்றுவதால், இவரை ரசிகர்கள் பெரிதும் நேசிக்கின்றனர்.

5. மதிப்பும் நட்பும்: ஊர்விட்டு ஊர் வந்து சினிமாத் துறையில் நுழைந்து மாபெரும் இடத்தை பிடித்திருந்தாலும், தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் குருநாதர் கே.பாலசந்தர் மீதான மரியாதையை என்றென்றும் மறவாதவர் ரஜினிகாந்த். அதேபோல் ஆரம்ப நாட்களில் பஸ் கண்டக்டராக தன்னுடன் இருந்த நண்பர்கள், சென்னை வந்த புதிதில் அவருடன் தங்கிய நண்பர்கள், நடித்த நடிகர்கள் என்று பலரையும் இன்றளவும் நினைவில் கொண்டு நட்புறவாடுவது இவரின் சிறப்பு.

6. ஆன்மிகமும் குடும்பமும்: நிழல் வாழ்விற்கு நேர் எதிரான மனிதராக நிஜ வாழ்வில் இருக்கும் ரஜினிகாந்த், ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர் என்பதை அனைவரும் அறிவர். தன்னுடைய சுய நிம்மதிக்கும், ஆரோக்கியத்துக்கும் ஆன்மிகப் பயணம் செல்வது இவரது வழக்கம். அதே சமயம் குடும்பப் பொறுப்புக்களையும் ஒரு கணவராக, தந்தையாக, தாத்தாவாக சரிவர ஏற்று நடந்து கொள்வதிலும் இவரை மிஞ்ச ஆளில்லை.

இணையத்தை அதிரவைத்த 'கபாலி' டீசர்!

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரை:

கிளாஸ்... மாஸ்..? - எந்த நெருப்பைப் பற்றப் போகிறான் கபாலி?

Add to
Shares
8
Comments
Share This
Add to
Shares
8
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக