பதிப்புகளில்

Freshworks அனைவருக்கும் மார்க்கெட்டிங் தீர்வை அளிக்க Zarget நிறுவனத்தை கையகப்படுத்தியது!

29th Aug 2017
Add to
Shares
127
Comments
Share This
Add to
Shares
127
Comments
Share

கிளவுட் அடிப்படையிலான வணிக மென்பொருள் வழங்குநரான ’ஃப்ரெஷ்வொர்க்ஸ்’ (Freshworks) நிறுவனம் கடந்த செவ்வாய் அன்று 'ஜார்கெட்' (Zarget) நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்தது. ஜார்கட் ஒரு மார்க்கெட்டிங் மென்பொருள் நிறுவனம்; இது மார்கெட்டர் மற்றும் வடிவமைப்பாளர்களுக்கு conversion rate optimisation (CRO) கருவிகளுடன் பயனாளர்கள் எவ்வாறு தங்கள் வலைத்தளங்களை தொடர்புகொள்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. ஃப்ரெஷ்வொர்க்ஸ் இன்னும் கையகப்படுத்துதலின் விதிமுறைகள் மற்றும் அதன் மதிப்பை வெளியிடவில்லை.

கடந்த இரண்டு ஆண்டுகளில், இது ஃப்ரெஷ்வொர்க்ஸ் இன் ஒன்பதாவது கையகப்படுத்தல் ஆகும். வணிகத்திற்கான அனைத்து மார்க்கெட்டிங் தீர்வுகளை கட்டமைப்பதில் கவனம் செலுத்த ஜார்கெட் உதவும் என்று இந்நிறுவனம் நம்புகிறது.

இதுவரை நடந்தவை:

Zarget கடந்த 2015 ஆம் ஆண்டு அரவிந்த் பார்த்திபன், நவீன் வெங்கட் மற்றும் சந்தோஷ் குமாரால் நிறுவப்பட்டது. இவர்கள் தங்களது நண்பரான கிரிஷ் மாத்ருபூதம், ஃப்ரெஷ்வொர்க்ஸ் நிறுவனரிடமிருந்து இதற்கான முதலீட்டை பெற்றனர். அதன் பின் அடுத்த இரண்டு வருடத்தில் ஜார்கெட் பன் மடங்கு உயர்ந்தது. அர்கெல் பார்ட்னர்ஸ், மேட்ரிக்ஸ் பார்ட்னர்ஸ் இந்தியா மற்றும் செக்கோயா கேபிட்டல் இந்தியா ஆகியவற்றிலிருந்து இரண்டு சுற்றுகளில் ($ 6M, $ 1.5M) மூலதனம் பெற்று 7.5 மில்லியன் டாலர்களை உயர்த்தியது.

இடதிலிருந்து: நவீன் வெங்கட் (CPO), அரவிந்த் பார்த்திபன் (CEO) மற்றும் சந்தோஷ் குமார் (CTO).

இடதிலிருந்து: நவீன் வெங்கட் (CPO), அரவிந்த் பார்த்திபன் (CEO) மற்றும் சந்தோஷ் குமார் (CTO).


ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஆரம்ப முதலீடுகளை மட்டுமே ஏஞ்சல் முதலீட்டாளர்கள் பெற்றுள்ளதாக ஃப்ரெஷ்வொர்க்ஸ் தரப்பில் கூறப்பட்டது. அதனால் ஃப்ரெஷ்வொர்க்ஸ் கையகப்படுத்துதலின் மதிப்பைக் கூற மறுத்தனர். ஆனால் நம்முடன் பேசிய அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் அனைத்து நிறுவன முதலீட்டாளர்களும் தங்கள் நிறுவனங்களின் பங்குகளை ஜார்கெட் சார்பாக ஃப்ரெஷ்வொர்க்ஸ் இடம் இருந்து பெறுவார்கள் என்று கூறினார்.

Zarget CRO கருவி வணிக அளவீடுகள் மற்றும் தரவு உந்துதல் நுண்ணறிவுகளை வழங்குவதன் மூலம் நிறுவனத்தின் ஆர்டர்களை அதிகரிக்க உதவுகிறது. மேலும் வாடிக்கையாளருடன் தொடர்பு கொள்ளவும் மற்றும் வலையத்தளத்தில் இணையவும் உதவுகிறது. சந்தையாளர்கள் A/B டெஸ்டிங், ஹீட்மாப்ஸ், அமர்வு பதிவேடு, வாக்களிப்பு, கருத்துகள் மற்றும் பிற அம்சங்கள் மூலம் பெறப்பட்ட நுண்ணறிவு அடிப்படையில் முடிவுகளை எடுக்கலாம்.

இந்த கையகப்படுத்தல் மூலம், ஃப்ரெஷ்வொர்க்ஸ் மேலும் ஜார்கெட்டின் விற்பனைத் திறன் மற்றும் அக்குழுவின் நிபுணத்துவம், தொழில்நுட்பம் மற்றும் செயல்பாட்டையும் அதிகரித்து 100,000 மேலான வாடிக்கையாளர்களுடன் இணைக்க உள்ளனர்.

அக்டோபர் 2010 இல் நிறுவப்பட்ட ஃப்ரெஷ்வொர்க்ஸ் நிறுவனம், அக்செல், டைகர் குளோபல் மேனேஜ்மென்ட், கேபிடல்ஜி மற்றும் செக்கோயா கேபிட்டல் இந்தியா ஆகியவற்றால் ஆதரிக்கப்படுகிறது. செக்கோயா கேபிட்டல் இந்தியா; ஜார்கெட் மற்றும் ஃப்ரெஷ்வொர்க்ஸ் ஆகிய இரு நிறுவனத்திற்கும் பொதுவான முதலீட்டாரளர் ஆகும்.

Freshworks நிறுவனர்கள்

Freshworks நிறுவனர்கள்


கிளவுட் அடிப்படையிலான வாடிக்கையாளர் மென்பொருளின் முன்னணி வழங்குனரான ஃப்ரெஷ்டெஸ்க் தயாரிப்புகள் இவை:

1. ஃப்ரெஷ்டெஸ்க்: மின்னஞ்சல், தொலைபேசி, வலைத்தளங்கள், மன்றங்கள், மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் வாடிக்கையாளர்களை உதவும் ஒரு மேகக்கணினி சார்ந்த மென்பொருள் தீர்வு.

2. ஃப்ரெஷ்சர்வீஸ்: ஒரு கிளவுட் அடிப்படையிலான சேவை மேசை மற்றும் IT சேவை மேலாண்மை தீர்வு

3. ஃப்ரெஷ்காலர்: சிறு அணிகளுக்கான கால் சென்டர் மென்பொருள்

4. ஃப்ரெரஷ்சேல்: உயர்-வேகம் விற்பனை அணிகளுக்கான ஒரு CRM தீர்வு மற்றும் விற்பனை அமைப்பு

5. ஃப்ரெஷ்டீம்: ஒரு விண்ணப்பதாரர் கண்காணிப்பு மென்பொருள்.

ஜார்கெட் சிறிது காலத்திற்கு ஒரு தனி நிறுவனமாக செயல்படுமா அல்லது ஃப்ரெஷ்வொர்க்ஸ் இன் ஐந்து பிரிவுகளின் ஒன்றாக உட்செலுத்தப்படுமா என கேட்டப்போது,

நாங்கள் ஜார்கெட்டை ஃப்ரெஷ்வொர்க்ஸ் இல் ஒன்றாக ஒருங்கிணைத்து, மார்க்கெட்டிங் மென்பொருள் டொமைனில் ஒரு புதிய தயாரிப்பை உருவாக்குவோம்.

கலிபோர்னியாவின் சான் புரூனோவில் ஃப்ரெஷ்வொர்க்ஸின் தலைமையகம் உள்ளது. மேலும் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனியில் அலுவலகங்கள் உள்ளது. ஹோண்டா, பிர்ட்ஜ்ஸ்டோன், ஹ்யூகோ பாஸ், பென்சில்வேனியா பல்கலைக்கழகம், தோஷிபா மற்றும் சிஸ்கோ உட்பட உலகெங்கிலும் 100,000 க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் ஃப்ரெஷ்வொர்க்ஸின் கிளவுட் அடிப்படையிலான SaaS தயாரிப்புகளை பயன்படுத்தி வருகின்றனர்.

ஃப்ரெஷ்வொர்க்ஸ் CEO மற்றும் நிறுவனர் கிரிஷ், அதன் குறிக்கோள், அனைத்து அளவிலான வணிகங்களுக்கும் கிளவுட்-அடிப்படையிலான வணிக மென்பொருள் தளமாக இந்நிறுவனம் இருக்க வேண்டும் என்பதே ஆகும் என்கிறார். வளர்ந்து வரும் அவர்களின் வாடிக்கையாளர்கள் சந்தைப்படுத்துதலுக்காக அவர்களை நாடி வருகின்றனர். ஆனால் ஃப்ரெஷ்வொர்க்ஸ் அதற்காக ஜார்கெட்டிடம் செல்ல நேர்கிறது. ஒரு அறிக்கையில், கிரிஷ் கையகப்படுத்தல் பின்னால் உள்ள சிந்தனை செயல்முறை விளக்கினார்,

இன்று, எங்கள் மென்பொருள்; வாடிக்கையாளர் பயணத்தின் ஒவ்வொரு அம்சத்திற்கும் அதாவது வாடிக்கையாளர் ஈடுபாடு, வாடிக்கையாளர் கையகப்படுத்தல் என அனைத்திற்கும் உதவுகிறது. ஜார்கெட்டை பெறுவது மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஆதரவு அளிக்கும், எங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் மற்றும் வருங்காலத்தில் இன்னும் பல வாடிக்கையாளர்கள் ஈடுபட வழி செய்யும். மேலும், பல ஆண்டுகளாக எனக்கு ஜார்கெட் குழுவை தெரியும் அதனால் அவர்கள் ஃப்ரெஷ்வொர்க்சுடன் இணைவது எனக்கு தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சி என்கிறார்

துறை கண்ணோட்டம் மற்றும் எதிர்கால திட்டங்கள்

கார்ட்னர் கூற்றுப்படி, மார்க்கெட்டிங் தலைவர்கள் தங்கள் செலவின செலவில் 27 சதவிகிதத்தை தொழில்நுட்பத்திற்கு ஒதுக்குகின்றனர், அது மொத்த வருவாயில் 3.24 சதவிகிதமாகும், CIO தொழில்நுட்பத்துடன் ஒப்பிடும்போது 3.4 சதவீத வருவாய் செலவீடாகும். 2017 ஆம் ஆண்டின் இறுதிக்குள் CMO க்கள் CIO க்களை விட தொழில்நுட்பத்தில் அதிகம் செலவிடுவார்கள் என்று கார்ட்னர் கணித்துள்ளார்.

ஜார்கெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி அர்விந்த் பார்த்திபன்,

ஜார்கெட் உருவானதற்கானக் காரணம், சந்தையாளர்கள் ஆழ்ந்த தொழில்நுட்ப வளங்கள் மற்றும் அதிக செலவினம் இல்லாமல் ஆன்லைன் தீர்வுகளை மேற்கொள்ளவே. ஃப்ரெஷ்வொர்க்சுடன் இணைந்து டிஜிட்டல் மார்க்கெட்டிங் பரிணாமத்தை அதிகப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கிறோம்; இதன்மூலம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இன்னும் அதிக பயனை தருவோம் என நம்புகிறோம்,” என்றார்.

பாதிப்புகளை பற்றி பேசுகையில், இதன்மூலம் ஃப்ரெஷ்வொர்க்ஸால் ஜார்கெட் வாடிக்கையாளர்களுக்கு எந்த தாக்கமும் இல்லை என்று தெளிவுப்படுத்தினர் மற்றும் அவர்களுக்கு ஆதரவு தொடரும் என்கிறார். 43 ஜார்கெட் பணியாளர்கள் ஃப்ரெஷ்வொர்க்ஸ்-க்கு பணி மாற்றம் செய்யப் பட்டுள்ளனர், எஞ்சிய பணியாளர்கள் மற்ற நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர், இன்னும் சிலரைப் பணி நீக்கம் செய்தனர்.

ஃப்ரெஷ்வொர்க்ஸ் கடந்த மாதம் Joe Hukum-ஐ கையகப்படுத்தியது, தற்போது ஜார்கெட்டை கையகப்படுத்தியுள்ளது. 

Add to
Shares
127
Comments
Share This
Add to
Shares
127
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக