பதிப்புகளில்

கூட்டுப்பண்ணை மூலம் விவசாயத்தை உயிரூட்ட திட்டமிட்டுள்ள இந்திரா அக்ரோடெக்!

நகரவாசிகள் விவசாயத்தை தொழிலாக்கிக் கொள்ள, புதிய முறைகளை அறிமுகப்படுத்தியுள்ள சென்னை நிறுவனம்.

3rd Nov 2017
Add to
Shares
10.5k
Comments
Share This
Add to
Shares
10.5k
Comments
Share

விவசாயிகளின் சமீபத்திய ஆர்பாட்டங்கள், சத்தான உணவுக்கு பெருகி வரும் விழிப்புணர்வு, விவசாயத்தின் மீது இளைஞர்கள் கொண்டுள்ள நாட்டம் ஆகியவை இத்துறையின் மீது முன் எப்போதுமில்லாத ஆர்வத்தை தூண்டியுள்ளது. 

நீர் மேளான்மை இல்லாதது, விவசாய நிலங்களில் வேலைக்கு ஆட்கள் இல்லாதது, போதிய வருமானம் இல்லாதது என பல சிக்கல்களில் சிக்கித் தவிக்கும் நிலையில் பல விவசாய நிலங்கள் ப்ளாட் ஆகவும் மாறிவிட்டன. இதை பற்றி பல சமயங்களில் நாம் விவாதித்தாலும், களத்தில் இறங்கி தீர்வு காண்பது வெகு சிலரே.  

விவசாய நிலங்களில் வருடம் முழுவதும் விவசாயம் செழிக்க வைக்கும் நோக்கத்திலும், பெரு நகரத்தில் உள்ளவர்கள் சிறிய அளவிலாவது விவசாய நிலத்தை சொந்தமாக்கி அதில் பயிரிடவும் ஏதுவாக சென்னையைச சேர்ந்த இந்திரா அக்ரோடெக் நிறுவனம் கூட்டுப்பண்ணை முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. 

image


"விவசாயம், விவசாயி, பொதுமக்கள் மூவரையும் இணைத்து இந்திரா அக்ரோடெக் நிறுவனம் மூலம் நிலையான தரமான உணவுச்சங்கலியை அமைப்பதே எங்கள் நோக்கம்," என்கிறார் துணை நிறுவனர் பூபேஷ் நாகராஜ்.

இயற்கை மீது பற்றுள்ள ஒத்த கருத்துடைய ஆயிரத்திற்க்கும் மேற்பட்டவர்களை ஒருங்கிணைத்து பாரம்பரிய கூட்டுறவுப் பண்ணை முறையில் நவீன தொழில்நுட்பத்தை புகுத்தி எதிர்கால சந்ததியினருக்கு நலன் பயக்கும் அதே வேளையில் விவசாயிகளோடு கைகோர்த்து விவசாய பண்ணையை சிறுசிறு பகுதிகளாக விற்று அதில் அறுவடை செய்யப்படும் அரிசி, பருப்பு மற்றும் பிற தானியங்களை ஒரு பகுதியை வருடந்தோறும் அந்த நிலத்தை வாங்கியவர்களுக்கு அளிப்பதாகக் கூறுகிரார் பூபேஷ்.

முதல் தலைமூறை தொழில்முனைவரான பூபேஷ் 2007-ஆம் ஆண்டு மதுரையிலிருந்து சென்னைக்கு வேலை தேடி வந்ததாக பகிர்ந்தார். ராமநாதபுரம் மாவட்டதை பூர்வீகமாகக் கொண்டவருக்கு அங்கு விவசாய நிலங்கள் கார்பரேட் மயமாவது நெருடலாக இருந்ததாக கூறுகிறார். 

"விவசாயத்தை ஒரு சேவை என்று பார்ப்பதை தவிர்த்து நல்ல ஒரு வர்த்தகமாக முன்னெடுத்து செல்ல இயலும் என்பதே என் எண்ணம். விவசாயம் ஒரு உன்னதமான ப்ரொஃபெஷன்," 

என்று கூறும் பூபேஷ் இது சாத்தியப்படும் என்பதற்கான தொடக்கமாகவே இம்முயற்சி என்றார். திண்டிவனம் அருகில் ஆவனிபூர் என்ற இடத்தில் 60 ஏக்கர் பரப்பளவில் கூட்டுறவு பண்ணை முறையில் அங்குள்ள விவசாயிகளைக் கொண்டே விவசாயம் மேற்கொண்டுள்ளனர். இதில் சென்னையைச் சேர்ந்த பலதரப்பட்ட நிலையில் உள்ள 190 பேர் நிலத்தை வாங்கியுள்ளனர். இதில் விளையும் விளைச்சலை சொந்த தேவை போக சந்தைப்படுத்தும் வகையில் ப்ராசஸிங் மையமும் திறக்கவுள்ளதாக கூறுகிறார் பூபேஷ்.

இந்திரா அக்ரோடெக் துணை நிறுவனர் திரு. பூபேஷ் நாகராஜன்

இந்திரா அக்ரோடெக் துணை நிறுவனர் திரு. பூபேஷ் நாகராஜன்


இவர்களின் இந்த முயற்சிக்கு வலு சேர்க்கும் விதமாக விவசாய விஞ்ஞானியும் ADISIL நிறுவனருமான பாமயன் உள்ளார். இவர் கூறுகையில்,

"ஒரு கிலோ ப்ளாஸ்டிக் நமக்கு ஒன்றும் தரப்போவதிலை, ஆனால் ஒரு நெல் போகம் விளைவிக்கும் சக்தி கொண்டது. மற்ற தொழில்களை போல் விவசாயமும் ஆண்டு முழுவதும் வேலை தரக்கூடிய தொழிலாக மாற வேண்டும். ஒரு மென்பொருள் வேலையில் ஈட்டக்கூடிய அளவு விவசாயத்திலும் மாதம் ஈட்ட முடியும்," என்றார்.

விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலன் சார்ந்து இயங்கும் இந்நிறுவனம் வருடந்தோறும் டிசம்பர் 23-ம் தேதியன்று கொண்டாடப்படும் இந்திய விவசாயிகள் தினத்தை இவ்வருடம் முதல் விவசாயிகளைக் கொண்டாடும் வகையில் ’உழவே தலை’ என்ற பெயரில் மாபெரும் திருவிழாவாக கொண்டாடப்போவதாகவும் கூறுகிறார் பூபேஷ்.

நம் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் எந்த முயற்சியும் வரவேற்கத்தக்கதே என்ற அடிப்படையில் விவசாயத்தின் நலனை பேணும் இந்த முயற்சி போற்றத்தக்கதே!

Add to
Shares
10.5k
Comments
Share This
Add to
Shares
10.5k
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக