பதிப்புகளில்

டிகிரி முதல் பி.எச்.டி வரை திருநங்கைகளுக்கு கட்டணமில்லா அனுமதி: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவிப்பு!

YS TEAM TAMIL
21st Apr 2017
Add to
Shares
8
Comments
Share This
Add to
Shares
8
Comments
Share

நாட்டிலே முன்னோடியாக, தமிழகத்தைச் சேர்ந்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தங்களிடம் உள்ள எல்லா பாடத்திட்டத்திற்கான கட்டணத்தையும் திருநங்கைகளுக்கு இலவசமாக்கி அறிவித்துள்ளது. இந்த சலுகை, பட்டப்படிப்புகள் முதல் முனைவர் பட்டம் வரையிலும் நீடிக்கும் என தெரிவித்துள்ளனர். இது இந்த கல்வி ஆண்டு முதல் அமலுக்குவரும் என்றும் கூறியுள்ளனர். மூன்றாம் பாலின சமூகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல அவர்களின் பொருளாதார நிலை உயர, கல்வி பெரும் உதவியாக இருக்கும் என்ற அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

image


மனோன்மணியம் பல்கலைகழகம், 1990 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு சுமார் 65000 மாணவர்களை கொண்டுள்ளது. LGBTQ Nation பத்திரிகையின் படி, அப்பல்கலைகழகத்தின் துணை வேந்தர் கே.பாஸ்கர் இந்த முயற்சி பற்றி தெரிவிக்கையில்,

“சமூகம் மற்றும் பெற்றோர்களால் ஒதுக்கப்பட்ட மூன்றாம் பாலின மக்கள் பலர் தெருக்களில் பிச்சை எடுக்கும் அளவிற்கு தள்ளப்படுகிறார்கள். நம்மால் அவர்களுக்கு ஒரு சிறந்த கல்வி வாய்ப்பை ஏற்படுத்தித் தரமுடியும் என்றால், அவர்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிய வழி கிடைக்கும். இதை மனதில் கொண்டே எம்.எஸ்.யூ. இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது,” என்றார்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளுக்கும் இது குறித்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தேவையான ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளது. திருநங்கை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான தனி பாத்ரூம் வசதிகள் செய்து தரவும் கல்லூரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர். 

திருநங்கைகள் முன்னேற்றத்திற்கு பல திட்டங்களை வகுத்துவரும் தமிழக மாநிலம், கல்வித்துறையில் எடுத்துள்ள இந்த முடிவு நல்ல உதாரணமாக விளங்கும். அண்மையில் நாட்டின் முதல் திருநங்கை காவல்துறை அதிகாரியாக ப்ரீத்திக்கா யாஷினியை பணியிலமர்த்தி எல்லாருடைய பாராட்டையும், வாழ்த்துக்களையும் தமிழகம் பெற்றது. அதே போல் 2009-ல் நாட்டின் முதல் மூன்றாம் பாலின பரேட் ஒன்றை நடத்தியும் சம உரிமைகள் குறித்த விழிப்புணர்வை தமிழ்நாடு ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

பின்க் நியூஸ் செய்தியின் படி, கே.பாஸ்கர் கூறுகையில்,

“சேலத்தை சேர்ந்த திருநங்கை தமிழ்நாட்டின் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியுள்ளார். இதன் மூலம் சம உரிமையின் முக்கியத்துவம் வெளிப்பட்டுள்ளது. நாங்கள் இலவசமாக கல்வி வாய்ப்புகளை அளிப்பதால் மூன்றாம் பாலினத்தை சேர்ந்த பலரும் இதன் மூலம் பயன்பெற்று மரியாதையான வாழ்க்கையை பெற உதவியாக இருக்கும்,” என்றார். 

பல்கலைகழகத்தின் முயற்சி சரியான பாதையை நோக்கி உள்ளதாக பலரும் கருதுகின்றனர். கல்வி வாய்ப்புகள் மூலம் மட்டுமே ஒடுக்கப்பட்ட சமுதாயம் மேலே வர வாய்ப்புகள் அதிகம் என்பதை மறுப்பதற்கு இல்லை. 

கட்டுரை: Think Change India

Add to
Shares
8
Comments
Share This
Add to
Shares
8
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக